بسم
الله الرحمن الرحيم
அண்ணலாரின் சாதனைகள்.
***********
இப்பூவுலகில் பல தத்துவஞானிகளும்
தத்துவவாதிகளும் கம்யூனிசம் நாத்திகம் என பல இசவாதிகளும் தோன்றினார்கள் அவர்கள் பல
போதனைகளையும் தத்துவங்களையும் போதித்தார்கள். ஆனால் அவை செயல்படுத்த முடிந்ததா ?
அவை நிலைத்து நின்றதா? என்றால் அதற்கான பதில் எழுத வேண்டிய இடம் வெற்றிடமாக
இருக்கின்றது . பெரும்பாலும் அவர்கள் இறந்ததுடன் அவர்களோடு சேர்ந்து அவர்களின்
போதனைகளும் சித்தாந்தங்களும் புதைந்து விட்டன. அல்லது எரிந்து விட்டன.
அந்த வரிசையில் நீங்கா இடம்பெற்ற மிகப்பெரும்
சாதனையாளராக நிலைத்து இரும்பு மனிதராக நிற்பவர் ஒரே ஒரு மனிதர் தான் அவர் தான்
நபிகள் நாயகம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆவார்கள் .
அன்னவரின் கால் பாதம் பூவுலகில் பதிந்தது
கிபி 571.
அன்னாரின் நாற்பதாம் வயதில் முதல் முறையாக
வஹ்யி-இறைச் செய்தி கிடைத்தது .
அறுபத்தி மூன்றாம் வயதில் இப்பூவுலகம்
இழந்தது.
ஆக வெரும் இருபத்தி மூன்றே ஆண்டுகளில்
மாபெரும் சாதனைகளை சாதித்த வல்லராக உலகம் அறிந்துக் கொண்டது.
அவர் படைத்த சாதனைகளில் சிற்சில துளிகளை
காண்போம் .
اَ لَّذِيْنَ يَتَّبِعُوْنَ الرَّسُوْلَ
النَّبِىَّ الْاُمِّىَّ الَّذِىْ يَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِى التَّوْرٰٮةِ
وَالْاِنْجِيْلِ يَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَيَنْهٰٮهُمْ عَنِ الْمُنْكَرِ
وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبٰۤٮِٕثَ وَيَضَعُ
عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِىْ كَانَتْ عَلَيْهِمْ
فَالَّذِيْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَ اتَّبَـعُوا النُّوْرَ
الَّذِىْۤ اُنْزِلَ مَعَهٗ ۤ ۙ اُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْن⭕َ
(ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத (நம்) தூதராகிய இந்த நபியைப்
பின்பற்றுகிறார்களோ அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் இவருடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். (இத்தூதரோ)
அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான
காரியங்களிலிருந்து விலக்குவார். நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார்.
கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். அன்றி, அவர்களது சுமையையும்
அவர்கள் மீதிருந்த (கடினமான சட்ட) விலங்குகளையும் (இறைவனின் அனுமதி கொண்டு)
நீக்கிவிடுவார். ஆகவே, எவர்கள் அவரை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவரை பலப்படுத்தி அவருக்கு உதவி செய்து, அவருக்கு
இறக்கப்பட்ட பிரகாசமான (இவ்வேதத்)தைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி
பெற்றவர்கள். (அல்குர்ஆன் : 7:157)
@@@@@@@
1 . கீரியும்
பாம்புமாக இருந்தவர்களை நகமும் சதையுமாக மாற்றினார்கள்.
பரஸ்பரம் நட்போடு பாசத்தோடு மாமன் மச்சானாக
ஒன்றரக் கூடிக்கலர்ந்து வாழும் நன்மக்களை ஜாதி மதங்களாக இயக்கங்களாக கூறுபோட்டு
சின்னாபின்னமாக்கி பிழப்புக்காக அரசியல் நடத்தும் சூழல் நாம் பார்க்கிறோம் .
தாழ்ந்த ஜாதி எனபதால் நடுரோட்டில் கேவலப்படுத்தி நிர்வாணமாக்கி கொலை வெறி
தாக்குதல் செய்து கொலை செய்யும் காட்சி நடந்தேறுவதை நாம் அறிவோம்.
ஆனால் பன்னெடும் காலமாக கீரியும் பாம்புமாக
வாழ்ந்தவர்களை ஒரு தாய் மக்களாக நகமும் சதையுமாக அன்பின் சின்னமாக மாற்றி
அமைத்தார்கள் அந்த மாமனிதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا
وَّلَا تَفَرَّقُوْا وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ
اَعْدَآءً فَاَلَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ
اِخْوَانًا وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ
مِّنْهَا كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ
تَهْتَدُوْنَ ⚪
நீங்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின்
கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து
விடாதீர்கள். மேலும், அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை
நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாய் இருந்த நேரத்தில் அவன்
உங்களுக்கிடையே உளப்பூர்வமான இணக்கத்தை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால்
நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள். மேலும், நெருப்புப்
படுகுழியின் விளிம்பில் நீங்கள் நின்று கொண்டிருந்தீர்கள். அல்லாஹ் உங்களை
அதிலிருந்து காப்பாற்றி விட்டான். இவ்விதம் அல்லாஹ் தன் சான்றுகளை உங்களுக்குத்
தெளிவுபடுத்துகின்றான்; இதன் மூலம் நீங்கள் வெற்றிக்கான பாதையை
அடைந்து கொள்ளக்கூடும் என்பதற்காக ! (அல்குர்ஆன் : 3:103)
وَاَلَّفَ بَيْنَ قُلُوْبِهِمْ لَوْ اَنْفَقْتَ
مَا فِى الْاَرْضِ جَمِيْعًا مَّاۤ اَلَّفْتَ بَيْنَ قُلُوْبِهِمْ وَلٰـكِنَّ
اللّٰهَ اَلَّفَ بَيْنَهُمْ اِنَّهٗ عَزِيْزٌ حَكِيْمٌ ⚪
அவர்களுக்கிடையே உளப்பூர்வமான பிணைப்பை
ஏற்படுத்தியவனும் அவனே! உலகத்திலுள்ள பொருள்கள் அனைத்தையும் நீர் செலவழித்தாலும்
அவர்களிடையே உளப்பூர்வமான இணைப்பை உம்மால் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆயினும், அல்லாஹ் அவர்களின் உள்ளங்களைப் பிணைத்தான். திண்ணமாக, அவன் வலிமைமிக்கவனும் நுண்ணறிவாளனுமாவான். (அல்குர்ஆன் : 8:63)
@@@@@@@
2 . பெண்
சிசுவதைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள்.
இன்றைய நம் நாட்டில் பெண் குழந்தை என்று
தெரிந்தால் கருவிலேயே சிசுவை கலைத்து விடுகின்றனர் சிலர். அதையும் மீறி பிறந்து
வளர்ந்து வந்தால் வெறும் போகப்பொருளாக/விளம்பரத்திற்கான ஆயுதமாக மட்டும்
ஆக்கப்படுகிறாள்.
இதுபோன்ற நிலையை தான் அக்காலத்திலும் நிலவி
வந்தது
பெண் குழந்தை பிறந்தால் அதை கேவலமாகக் கருதி
கூனிக்குறுகி அந்த பச்சிளம் பெண் குழந்தையை-பாவமரியாத பிஞ்சு உடலை உயிருடன்
புதைத்து வந்தார்கள் .
அதை வன்மையாக கண்டித்து புரிய வைத்து அதை
முற்றிலுமாக தடுத்து நிறுத்தி பெண் குழந்தைகள் பிறக்க வாழ வழி வகுத்தார்கள் நபிகள்
நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
وَاِذَا الْمَوْءٗدَةُ سُٮِٕلَتْۙ
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை)
விசாரிக்கப்படும் போது- (அல்குர்ஆன் : 81:8)
بِاَىِّ ذَنْبٍ قُتِلَتْ
“எந்தக்
குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று
(விசாரிக்கப்படும்). (அல்குர்ஆன் : 81:9)
பெண் சிசுவின் குத்தகையாளர்களுக்கு மனமாற்றம்
ஏற்பட்டுத்தி சாதனை ஏற்படுத்தினார்கள்
من تفسير فتح القدير: ﺃﺧﺮﺝ اﻟﺒﺰاﺭ، ﻭاﻟﺤﺎﻛﻢ ﻓﻲ
اﻟﻜﻨﻰ، ﻭاﻟﺒﻴﻬﻘﻲ ﻓﻲ ﺳﻨﻨﻪ، ﻋﻦ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﻗﺎﻝ: ﺟﺎء ﻗﻴﺲ ﺑﻦ ﻋﺎﺻﻢ اﻟﺘﻤﻴﻤﻲ ﺇﻟﻰ ﺭﺳﻮﻝ
اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻘﺎﻝ: ﺇﻧﻲ ﻭﺃﺩﺕ ﺛﻤﺎﻥ ﺑﻨﺎﺕ ﻟﻲ ﻓﻲ اﻟﺠﺎﻫﻠﻴﺔ، ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ
ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺃﻋﺘﻖ ﻋﻦ ﻛﻞ ﻭاﺣﺪﺓ ﺭﻗﺒﺔ» ، ﻗﺎﻝ: ﺇﻧﻲ ﺻﺎﺣﺐ ﺇﺑﻞ، ﻗﺎﻝ: «ﻓﺄﻫﺪ ﻋﻦ
ﻛﻞ ﻭاﺣﺪﺓ ﺑﺪﻧﺔ» .
கைஸ் இப்னு ஆஸிம் (ரலி) என்ற ஒருவர்
இஸ்லாத்தை ஏற்றார் . அவர் சொல்கிறார் என்னுடைய கையால் சுமார் எட்டு பெண்குழந்தைகளை
உயிருடன் குழி தோண்டி புதைத்து விட்டேன் . நீ செய்த இந்த மாபாதக செயலுக்காக
பரிகாரம் )செய்ய வேண்டும்.அது( ஒரு குழந்தைக்கு பகரமாக ஒரு அடிமை வீதம் (எத்தனை
பேரைக் கொன்றாயோ அத்தனை) அடிமைகளை வாங்கி உரிமை விட வேண்டும் என்று (பரிகாரம் செய்யக் கூறினார்கள். (நூல் இப்னு கதீர்.).
@@@@@@@
3 . வல்லரசையே
அசைத்து பார்க்கும் அளவுக்கு பெண்ணுக்கு உரிமை.
அரசாங்கமோ அரசர்களோ சாதாரண ஒரு வார்டு தலைவரோ
எந்தத் தவறு/அராஜகம் செய்தாலும் தட்டிக் கேட்க முடியாது / எதிர்த்து குரல் எழுப்ப
முடியாது என்ற நிலையில் இன்றும் பார்க்கிறோம்.
ஆனால் அந்த நபி ஸல் அவர்களால் உருவாக்கப்பட்ட
உமர் ரலி.
அந்த இரண்டாம் கலீபா உமர் ரலி அவர்களின் ஒரு
ருசிகரமான் வரலாறு இதோ. இவர்கள் சின்னச் சிறு சில்லறை விஷயத்திற்கும் வாளை உருவும்
கடும் கோபக்காரர் . வல்லரசர்களான சர்வாதிகளான ரோம பாரசீக பேரரசர்ளே
நடுநடுங்குவார்கள் .
இத்தகைய ஒரு பேரரசர் உமர் ரலி ஒரு சட்டம்
பாஸாக்கினார்கள் .
ﻻ ﺗﻐﺎﻟﻮا ﻓﻲ ﺻﺪاﻕ اﻟﻨﺴﺎء ﻓﺈﻧﻬﺎ ﻟﻮ ﻛﺎﻧﺖ ﻣﻜﺮﻣﺔ
ﻟﻜﺎﻥ ﺃﻭﻻﻛﻢ ﺑﻬﺎ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ»
“மஹர்” குறிப்பிட்ட அளவை அதிகம் கூடாது என சட்டத்தை அறிவித்தார்கள் ஏனெனில் பெண்கள்
மிக அதிகம் மஹர் கேட்பதால் நிறைய வாலிபர்கள் கல்யாணமின்றி தேங்கிவிட்டார்கள். அந்த
சட்டத்தை அறிவித்த அதே சபையில் சாதாரண ஒரு பெண்மணி அதுவும் வயசான கிழவி எழுந்து
நின்று அரசரை எதிர்த்து கேள்வி கேட்டார் . “(பொற்) குவிய”ல் (அளவிற்கு மஹர்) கொடுப்பதற்கு அல்லாஹ் (4:20 குர்ஆனில்) அனுமதிக்கிறான் . என்று சொன்னவுடன் அந்த சட்டத்தை வாபஸ் பெற்று
எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கொடுக்கலாம் திருத்தினார்கள். (நூல் இப்னு கதீர்)
وَاِنْ اَرَدتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ
زَوْجٍ ۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰٮهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَيْئًا
اَ تَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا
ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவளு)க்குப்
பதிலாக மற்றொரு பெண்ணை (மணந்துகொள்ள) நீங்கள் கருதினால் (நீக்கிவிட விரும்பும்) அந்த முந்திய மனைவிக்கு நீங்கள் ஒரு “(பொற்) குவிய”ல் (அளவிற்கு மஹர்) கொடுத்திருந்த போதிலும்
அதிலிருந்து எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அபாண்டமாகவும்
பகிரங்கமாகவும் ஒரு குற்றத்தைச் சுமத்தி அ(வளுக்கு நீங்கள் கொடுத்த)தை நீங்கள்
பறித்துக் கொள்ளலாமா? (அல்குர்ஆன் : 4:20)
இந்த அளவுக்கு பெண்ணுக்குரிய உரிமையை
கொடுத்தாங்க அந்த நபி ஸல் அவர்கள்.
@@@@@@@
4 . ஆண்டான் அடிமை
ஜாதி குலப்பெருமை யாவையும் ஒழித்துக் கெட்டினார்கள்.
30 - عَنْ الْمَعْرُورِ ، قَالَ :
لَقِيتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ وَعَلَيْهِ حُلَّةٌ وَعَلَى غُلَامِهِ حُلَّةٌ
، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ ، فَقَالَ : إِنِّي سَابَبْتُ رَجُلًا فَعَيَّرْتُهُ
بِأُمِّهِ ، فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَا
أَبَا ذَرٍّ ، أَعَيَّرْتَهُ بِأُمِّهِ ، إِنَّكَ امْرُؤٌ فِيكَ
جَاهِلِيَّةٌ إِخْوَانُكُمْ خَوَلُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ ،
فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ
وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ ، وَلَا تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ ، فَإِنْ
كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ
30. 'நான் அபூ
தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே)
அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான்
(ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை)
ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள்
கூறினார்கள்: 'அபூ தர், அவரையும்
தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி
கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின்
சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான்.
எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம்
உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய
பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள்
சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான்
அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்' என அபூதர்
கூறினார்' என மஃரூர் கூறினார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை
@@@@@@@
5 . கொலையாளிகளையும்
கொள்ளையர்களையும் வாழவைக்கும் வல்லவர்களாக மாற்றினார்கள்.
3798 - حَدَّثَنَا مُسَدَّدٌ ،
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ ، عَنْ
أَبِي حَازِمٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ رَجُلًا
أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَعَثَ إِلَى نِسَائِهِ ،
فَقُلْنَ : مَا مَعَنَا إِلَّا الْمَاءُ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ يَضُمُّ أَوْ يُضِيفُ هَذَا
، فَقَالَ : رَجُلٌ مِنْ الْأَنْصَارِ أَنَا فَانْطَلَقَ بِهِ إِلَى امْرَأَتِهِ ،
فَقَالَ : أَكْرِمِي ضَيْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ،
فَقَالَتْ : مَا عِنْدَنَا إِلَّا قُوتُ صِبْيَانِي ، فَقَالَ : هَيِّئِي
طَعَامَكِ وَأَصْبِحِي سِرَاجَكِ وَنَوِّمِي صِبْيَانَكِ إِذَا أَرَادُوا عَشَاءً
, فَهَيَّأَتْ طَعَامَهَا وَأَصْبَحَتْ سِرَاجَهَا وَنَوَّمَتْ صِبْيَانَهَا ،
ثُمَّ قَامَتْ كَأَنَّهَا تُصْلِحُ سِرَاجَهَا فَأَطْفَأَتْهُ , فَجَعَلَا
يُرِيَانِهِ أَنَّهُمَا يَأْكُلَانِ فَبَاتَا طَاوِيَيْنِ , فَلَمَّا أَصْبَحَ
غَدَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ :
ضَحِكَ اللَّهُ اللَّيْلَةَ أَوْ عَجِبَ مِنْ فَعَالِكُمَا ,
فَأَنْزَلَ اللَّهُ : وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ
خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ سورة
الحشر آية 9 .
3798. அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக)
வந்தார். நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம்
சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், 'எங்களிடம்
தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை'
என்று
பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை
நோக்கி), 'இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர்
யார்?.'.. அல்லது 'இவருக்கு
விருந்தளிப்பவர் யார்?.'.. என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில்
ஒருவர், 'நான் (விருந்தளிக்கிறேன்)' என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விருந்தாளியைக் கண்ணியப்படுத்து' என்று கூறினார். அதற்கு அவரின் மனைவி, 'நம்மிடம் நம்
குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை' என்று கூறினார்.
அதற்கு அந்த அன்சாரித் தோழர்,
'உன்
(குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப்
போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால்
அவர்களைத் தூங்கச் செய்து விடு'
என்று கூறினார்.
அவ்வாறே அவரின் மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு
விளக்கைச்சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார்.
பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு
(பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக
இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றார்.
நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ்
இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான் அல்லது வியப்படைந்தான்' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், 'தமக்கே தேவை
இருந்தும் கூடு, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை
வழங்குகிறார்கள். உண்மையில்,
தம் உள்ளத்தின்
கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றியாளர்கள்' என்றும்
(திருக்குர்ஆன் 59:9ம்) வசனத்தை அருளினான்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 63. அன்சாரிகளின் சிறப்புகள்...
சிலர் மூத்தா போரில் மரணத் தருவாயிலில்
இருந்தார்கள். தண்ணீர் தாகம் என்பதை சைக்கினாயால் சொன்னார்கள். தண்ணீரை கொடுக்க
சென்றபோது அருகில் இருந்த வேறொருவர் தேவை என அறிந்ததால் எனக்கு வேண்டாம் அவருக்கு
கொடுங்க என விட்டுக் கொடுத்தார். இவ்வாறு மூன்று பேர்கள் சரித்திரம் உண்டு. மரணத்
தருவாயிலும் கூட தனக்கு வேண்டாம் அடுத்தவருக்காக விட்டுக்கொடுத்தாங்க . இப்படி ஒரு
சாதனை உருவாக்கினார்கள் .
@@@@@@@
6 . அராஜக
பேர்வழிகளை ஒழித்து நீதத்தை நிலை நிறுத்தினார்கள்.
من البخاري
3733 - ح وحَدَّثَنَا عَلِيٌّ ،
حَدَّثَنَا سُفْيَانُ ، قَالَ : ذَهَبْتُ أَسْأَلُ الزُّهْرِيَّ عَنْ حَدِيثِ الْمَخْزُومِيَّةِ
فَصَاحَ بِي ، قُلْتُ لِسُفْيَانَ : فَلَمْ تَحْتَمِلْهُ عَنْ
أَحَدٍ ، قَالَ : وَجَدْتُهُ فِي كِتَابٍ كَانَ كَتَبَهُ أَيُّوبُ
بْنُ مُوسَى ، عَنْ الزُّهْرِيِّ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ
عَنْهَا ، أَنَّ امْرَأَةً مِنْ بَنِي مَخْزُومٍ سَرَقَتْ ، فَقَالُوا : مَنْ
يُكَلِّمُ فِيهَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَجْتَرِئْ
أَحَدٌ أَنْ يُكَلِّمَهُ , فَكَلَّمَهُ أُسَامَةُ بْنُ زَيْدٍ ، فَقَالَ :
إِنَّ بَنِي إِسْرَائِيلَ كَانَ إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ
وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ قَطَعُوهُ , لَوْ كَانَتْ فَاطِمَةُ لَقَطَعْتُ
يَدَهَا
3733. ஆயிஷா(ரலி)
அறிவித்தார்.
பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி
திருடிவிட்டாள். மக்கள், 'அவள் விஷயத்தில் நபி(ஸல்) அவர்களிடம்
(தண்டனையைத் தளர்த்தும்படிக் கூறி பரிந்து) பேசுவது யார்?' என்று (தமக்குள்) விசாரித்துக் கொண்டனர். எவரும் நபி(ஸல்) அவர்களிடம் பேசத்
துணியவில்லை. உஸாமா இப்னு ஸைத்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அது குறித்துப் பரிந்து)
பேசினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'பனூ இஸ்ராயீல்
குலத்தார் தம்மிடையேயுள்ள வலியவர் (உயர் குலத்தவர்) எவரேனும் திருடிவிட்டால் அவரை
தண்டிக்காமல்விட்டுவிடுவார்கள்;
தம்மிடையேயுள்ள
பலவீனர் எவரேனும் திருடிவிட்டால் அவரின் கையை துண்டித்து
விடுவார்கள். திருடியவர் (என் மகள்) ஃபாத்திமாவாகவே இருந்தாலும் கூட அவரின் கையை
நான் துண்டித்திருப்பேன்' என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் புகாரி
அத்தியாயம் : 62. நபித் தோழர்களின் சிறப்புகள்)
@@@@@@@
7 . சிகரத்தை
அடைந்தாலும் “ஏணி”ப்படிகளை
மறப்பதில்லை மதிப்பார்கள்.
பணத்தால் ஏழ்மை நிறத்தால் கருப்பு இனத்தால்
அடிமை குடிஉரிமையில் வெளிநாட்டவர் என்ற எல்லாவகையிலும் இரண்டாம் தரமாக மட்டுமல்ல
மனிதர்களாகவே மதிக்கப்படாத அவர்களை கூட முதல் தர மக்களாக மாற்றினார்கள் .
முஸ்லிம்களின் உயிர் நாடியாக இருக்கக்கூடிய
அந்த புனித காபாவை எல்லோரும் நேசிப்பார்கள். அதன் உள்ளே சென்று தொழுவதற்கு மிகவும்
விரும்புவார்கள்
அவ்வாறு நபிக்கு மிகவும் பாசம் நிறைந்த
அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா ரலி விரும்பினார்கள். ஒரு கோரிக்கையை வைத்தார்கள்.
போர்க் களமோ கலவரமோ இல்லாத ஒரு சமாதான காலத்திலும் கூட
அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை
.
صَلِّي فِي الْحِجْرِ إِنْ أَرَدْتِ دُخُولَ
الْبَيْتِ، فَإِنَّمَا هُوَ قِطْعَةٌ مِنْ الْبَيْتِ، وَلَكِنَّ
قَوْمَكِ اسْتَقْصَرُوهُ حِينَ بَنَوْا الْكَعْبَةَ، فَأَخْرَجُوهُ مِنْ
الْبَيْتِ
நீ காபா உள்ளே தொழுக நினைத்தால் ஹதீம் என்ற
(இந்த அரை வட்டமான) இடத்தில் தொழுது கொள். ஏனெனில் அது உண்மயில் காபாவின்
உல்பாகமே.என்று விளக்கம் கூறினார்கள். உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.ஹதீஸ் திர்மிதி
876.
ஆனால் (ஹிஜ்ரி எட்டாம்
ஆண்டு) மக்கா வெற்றி கொண்ட போது உள்ளத்தை கொள்ளை கொள்ளும் ரம்மியமான ஒரு
நிகழ்ச்சியை- புரட்சியை நடத்திக் காட்டினார்கள்.
النسائي 749 ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ
الْكَعْبَةَ هُوَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ، وَبِلَالٌ، وَعُثْمَانُ
بْنُ طَلْحَةَ الْحَجَبِيُّ فَأَغْلَقَهَا عَلَيْهِ، ،
கஃபா உள்ளே நுழையும் போது அரபு உலகின்
அதிபதியான நபி ஸல் அவர்களும் காபா உடைய முன்னாள் பொறுப்பாளர் உஸ்மான் என்பவரும் கருப்பினத்தைச் சேர்ந்த
அடிமைகளான பிலால் ரலி அவர்களும் உசாமா பின் ஸைத் ரலி அவர்களும் இந்த இருவர்
மொத்தம் இந்த நான்கு பேரும் உள்ளே சென்றார்கள் பின்பு கதவு பூட்டப்பட்டு விட்டன
ஹதீஸ் நஸஈ 749
குலத்தால் பணத்தால் மக்களிடத்தில் செல்வாக்கு
நிறைந்த படம் படைத்த முதலாளிமார்கள் உட்பட வேற யாருக்கும் உள்ளே வரும் பாக்கியம்
கிட்டவில்லை கிடைக்கவில்லை.
முதன்முதலில் பாங்கு சொல்லும் பாக்கியத்தை
அடிமை வர்க்கத்தைச் சார்ந்த ( பிலால் ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கே
வழங்கினார்கள்.
இவ்வாறான பல்லாயிரம் சாதனைளின் மன்னராக
திகழ்பவரே எங்கள் நபி ஸல் அவர்கள். அவர்களை முழுமையாக பின்பற்றி இரு உலகிலும்
வெற்றி பெற்ற நன்மக்களாக நம்மை ஆக்குவானாக ! ஆமீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.