தொலைந்து போன
நேசம்
*****************************
قَالَ الله تَعَالَى : ((وَاعْبُدُوا
اللهَ وَلا تُشْرِكُوا بِهِ شَيْئاً وَبِالْوَالِدَيْنِ إِحْسَاناً وَبِذِي
الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ
الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيل
5988- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ
عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((إِنَّ
الرَّحِمَ شجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، فَقَالَ اللَّهُ مَنْ وَصَلَكِ وَصَلْتُهُ،
وَمَنْ قَطَعَكِ قَطَعْتُهُ)).
முன்னுரை
************
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனக்கே உரித்தாகட்டுமாக!
அதிநவீன காலத்தில் அதிநவீன கருவிகளும் ( தொலைக்காட்சி
பெட்டி. செல்போன். கம்யூட்டர் போன்ற கருவிகள்) பெருகிவிட்ட காரணத்தால் சொந்த பந்த
உறவுகளோடும் அண்டை வீட்டாரோடும்
பரஸ்பரம் நேசம் கொள்வது முந்தைய காலத்தைவிட குறைந்து
விட்டது. கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்த காலம் போய் திருமணமான உடனே
தனிக்குடித்தனம் போக துடிக்கும் தம்பதிகளே இன்று அதிகம். வீட்டில் விஷேசம் என்றால் பல நாட்களுக்கு முன்பே
உறவுகள் ஒன்றுகூடி மகிழ்ச்சியையும் நேசத்தையும் வெளிப்படுத்தும் காலம்மாறி விஷேச
தினத்தன்று மட்டும் பத்தோடு பதினொன்றாக கலந்துவிட்டுச் செல்லும் உறவுகளே இன்று
அதிகம். எனவே இந்நிலை மாறவேண்டும் உறவுகளோடும் அண்டை வீட்டாரோடும் எவ்வாரெல்லாம்
நேசம் கொள்ள வேண்டும் என்பதை விபரிப்பதே *தொலைந்து போன நேசம்* என்ற இந்த பயான்
குறிப்பின் நோக்கம்.
உறவுகளோடு நேசம் கொள்வதின் அவசியம்...
6138- وعن ابي هريرة رضي الله عنه : أن رَسُول
الله صلى الله عليه وسلم ، قَالَ : (( مَنْ كَانَ يُؤْمِنُ باللهِ وَاليَومِ
الآخِرِ ، فَلْيُكْرِمْ ضَيْفَهُ ، وَمَنْ كَانَ يُؤْمِنُ باللهِ وَاليَومِ
الآخِرِ ، فَلْيَصِلْ رَحِمَهُ ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَاليَومِ
الآخِرِ ، فَلْيَقُلْ خَيْراً أَوْ لِيَصْمُتْ )) مُتَّفَقٌ
عَلَيهِ
6138. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்“ அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம்
விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை
கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும்
நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்
.
5987- وعن ابي هريرة رضي الله عنه، قَالَ : قَالَ
رَسُول الله صلى الله عليه وسلم : (( إنَّ اللهَ تَعَالَى خَلَقَ الخَلْقَ حَتَّى
إِذَا فَرَغَ مِنْهُمْ قَامَتِ الرَّحِمُ ، فَقَالَتْ : هَذَا مُقَامُ العَائِذِ
بِكَ مِنَ القَطِيعةِ ، قَالَ : نَعَمْ ، أمَا تَرْضَيْنَ أنْ أصِلَ مَنْ وَصَلَكِ
، وَأقْطَعَ مَنْ قَطَعَكِ ؟ قَالَتْ : بَلَى ، قَالَ : فَذَلِكَ لَكِ ، ثُمَّ
قَالَ رَسُول الله صلى الله عليه وسلم: (( اقْرَؤُوا إنْ شِئْتمْ : ((فَهَلْ
عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الأَرْضِ وَتُقَطِّعُوا
أَرْحَامَكُمْ أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى
أَبْصَارَهُمْ )) [ محمد : 22 - 23 ] مُتَّفَقٌ عَلَيهِ
.5987. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்“ அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது உறவானது
(எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு) “உறவுகளைத்
துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்“ என்று
கூறி(மன்றாடி)யது. அல்லாஹ், “ஆம். உன்னை (உறவை)ப்
பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகௌ;வேன் என்பதும், உன்னைத்
துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத்
திருப்தியளிக்கவில்லையா?“ என்று கேட்டான். அதற்கு உறவு, “ஆம் (திருப்தியே) என் இறைவா!“ என்று கூறியது. அல்லாஹ், “இது உனக்காக நடக்கும்“ என்று சொன்னான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , “நீங்கள் விரும்பினால் “(நயவஞ்சகர்களே!) நீங்கள்
(போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள்
உறவுகளைத் துண்டித்துவிடவும் முனைகிறீர்களா?“ எனும்
(திருக்குர்ஆன் 47:22 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்“ என்று கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.17
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்
5988- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ
عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((إِنَّ
الرَّحِمَ سُجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، فَقَالَ اللَّهُ مَنْ وَصَلَكِ وَصَلْتُهُ،
وَمَنْ قَطَعَكِ قَطَعْتُهُ))
5988. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்“ உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன்
(ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை
நோக்கி) “உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவுபாராட்டுவேன். உன்னை முறித்துக்
கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்“ என்று கூறினான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்
உறவை நேசிப்பதால் ஆயுள் அதிகமாகும் ரிஜ்கில் பரகத்
உண்டாகும்
أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ
فِي رِزْقِهِ، وَيُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ»
5986. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்'
தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும்
வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்
உறவை வெட்டினாலும் ஒட்டி வாழவேண்டும்...
*********************************
5991- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ
أَخْبَرَنَا سُفْيَانُ عَنِ الأَعْمَشِ وَالْحَسَنِ بْنِ عَمْرٍو وَفِطْرٍ عَنْ
مُجَاهِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو- وَقَالَ سُفْيَانُ لَمْ يَرْفَعْهُ
الأَعْمَشُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَفَعَهُ حَسَنٌ
وَفِطْرٌ- عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((لَيْسَ
الْوَاصِلُ بِالْمُكَافِئِ، وَلَكِنِ الْوَاصِلُ الَّذِي إِذَا قَطَعَتْ رَحِمُهُ
وَصَلَهَا)).
5991. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்“ பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப்
பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு
முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்.19 என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். இதன் அறிவிப்பாளர்களில் சிலர் இதை அப்துல்லாஹ் இப்னு
அம்ர்(ரலி) அவர்களின் பொன்மொழி என்றும், வேறு சிலர் நபி(ஸல்)
அவர்களின் பொன்மொழி என்றும் கூறுகிறார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்
5000 وعن ابي هريرة رضي الله عنه : أن رجلاً
قَالَ : يَا رَسُول الله ، إنّ لِي قَرابةً أصِلُهُمْ وَيَقْطَعُوني ، وَأُحْسِنُ
إلَيْهِمْ وَيُسِيئُونَ إلَيَّ ، وَأحْلَمُ عَنْهُمْ وَيَجْهَلُونَ عَلَيَّ ،
فَقَالَ : (( لَئِنْ كُنْتَ كَمَا قُلْتَ ، فَكأنَّمَا تُسِفُّهُمْ الْمَلَّ ،
وَلاَ يَزَالُ مَعَكَ مِنَ اللهِ ظَهِيرٌ عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذلِكَ ))
رواه مسلم .
5000. அபூஹுரைரா (ரலி)
அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் சிலர் உள்ளனர்.
அவர்களுடன் நான் ஒட்டி உறவாடுகிறேன். ஆனால், அவர்கள் எனது உறவை
முறிக்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு
அபகாரம் செய்கிறார்கள். (என்னைப் புண்படுத்தும்போது) அவர்களை நான் சகித்துக் கொள்கிறேன். (ஆனாலும்,) அவர்கள் என்னிடம்
அறியாமையோடு நடந்துகொள்கிறார்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ”நீங்கள் சொன்னதைப் போன்று நீங்கள் நடந்திருந்தால், அவர்களது வாயில்
நீங்கள் சுடு சாம்பலைப் போட்டவரைப் போன்றுதான். இதே நிலையில் நீங்கள்
நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக உங்களுடன்
இருந்துகொண்டேயிருப்பார்” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில்
வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்
தர்மத்தில் சிறந்தது உறவுகளுக்குச் செய்யும் தர்மமே.
- وعن انس رضي الله عنه ، قَالَ : كَانَ أَبُو
طَلْحَةَ أكْثَرَ الأنْصَارِ بالمَدينَةِ مَالاً مِنْ نَخل ، وَكَانَ أحَبُّ
أمْوَاله إِلَيْهِ بَيْرَحاء ، وَكَانَتْ مسْتَقْبَلَةَ المَسْجِدِ ، وَكَانَ
رَسُول الله صلى الله عليه وسلم يَدْخُلُهَا ، وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا
طَيِّب ، فَلَمَّا نَزَلَتْ هذِهِ الآيةُ : ((لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى
تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ)) [ آل عمران : 92 ] قَامَ أَبُو طَلْحَةَ إِلَى
رسولِ الله صلى الله عليه وسلم ، فَقَالَ : يَا رَسُول الله ، إنَّ الله تبارك
وتَعَالَى ، يقول : ((لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا
تُحِبُّونَ)) وَإنَّ أَحَبَّ مَالِي إِلَيَّ بَيْرَحَاءُ ، وَإنَّهَا صَدَقَةٌ
للهِ تَعَالَى ، أرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ الله تَعَالَى ، فَضَعْهَا
يَا رَسُول الله ، حَيْثُ أرَاكَ الله . فَقَالَ رَسُول الله صلى الله عليه وسلم:
(( بَخ ! ذلِكَ مَالٌ رَابحٌ ، ذلِكَ مَالٌ رَابحٌ ! وقَدْ سَمِعْتُ مَا قُلْتَ ،
وَإنِّي أرَى أنْ تَجْعَلَهَا في الأقْرَبينَ )) ، فَقَالَ أَبُو طَلْحَةَ :
أفْعَلُ يَا رَسُول الله ، فَقَسَّمَهَا أَبُو طَلْحَةَ في أقَارِبِهِ وبَنِي
عَمِّهِ . مُتَّفَقٌ عَلَيهِ
1461. அனஸ் இப்னு
மாலிக்(ரலி) அறிவித்தார். அபூ தல்ஹா(ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார்.
அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற
தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ன்னபவி)க்கு
எதிரில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல
தண்ணீரைக் குடிப்பது வழக்கம். “நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம்
செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்” என்ற (திருக்குர்ஆன் 03:92) இறைவசனம் அருளப்பட்டதும். அபூ தல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம்
வந்து, “இறைத்தூதர் அவர்களே! அல்லாஹு தஆலா, “நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம்
செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்“ எனக் கூறுகிறான். என்
செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது
அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது
(அவனிடம் என்னுடைய மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும்
விரும்புகிறேன். எனவே “இறைத்தூதர் அவர்களே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய
வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்“ எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் “ஆஹா! இது
அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே!
நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய
உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் பொறுத்தமாகக் கருதுகிறேன்“ எனக்
கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா(ரலி) “இறைத்தூதர் அவர்களே! நான் அவ்வாறே
செய்கிறேன்!“ எனக் கூறிவிட்டு,
அத் தோட்டத்தைத் தம் நெருங்கிய உறவினருக்கும் தம்
தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளும் பங்கிட்டுவிட்டார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 24. ஸகாத்தின் சட்டங்கள்
وعن أم المؤمنين ميمونة بنتِ الحارث رضي
الله عنها : أنَّهَا أعْتَقَتْ وَليدَةً وَلَمْ تَستَأذِنِ النَّبيَّ صلى الله
عليه وسلم ، فَلَمَّا كَانَ يَوْمُهَا الَّذِي يَدُورُ عَلَيْهَا فِيهِ ، قَالَتْ
: أشَعَرْتَ يَا رَسُول الله ، أنِّي أعتَقْتُ وَليدَتِي ؟ قَالَ : (( أَوَ
فَعَلْتِ ؟ )) قَالَتْ : نَعَمْ . قَالَ : (( أما إنَّكِ لَوْ أعْطَيْتِهَا
أخْوَالَكِ كَانَ أعْظَمَ لأجْرِكِ )) مُتَّفَقٌ عَلَيهِ
2592. மைமூனா பின்த்து
ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால், நபி (ஸல்)
அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற
முறை வந்தபோது, அல்லாஹ்வின் தூதரே!
அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டேனே, அறிவீர்களா? என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ (விடுதலை) செய்து
விட்டாயா? என்று கேட்க, நான், ஆம், (விடுதலை செய்து விட்டேன்) என்று கூறினேன். நபி (ஸல்)
அவர்கள், நீ உன் தாயின்
சகோதரர்களுக்கு (தாய் மாமன்களுக்கு அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால்
உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 50. முகாதப்
மேலான உறவு
******************
அனைத்து உறவுகளிலும் மேலான உறவு தாய் தந்தை என்கின்ற
உறவாகும் அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என மார்க்கம்
வலியுறுத்துகின்றது.
قَالَ اللهُ تَعَالي: (وَاعْبُدُوْا اللهَ
وَلاَ تُشْرِكُوْا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَبِذِي الْقُرْبي
وَالْيَتمي وَالْمَسكِيْنِ وَالْجَارِ ذِي الْقُرْبي وَالْجَارِ الْجُنُبِ
وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيْلِ لا وَمَا مَلَكَتْ اَيْمَانُكُمْ ط
اِنَّ اللهَ لاَ يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالاً فَخُوْرًا۞).
النساء:٣٦
1.அல்லாஹ்வையே நீங்கள்
வணங்குங்கள்; அவனுக்கு
எப்பொருளையும் இணையாக்காதீர்கள்;
தாய் தந்தையருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள
உறவினருக்கும் (உறவினரல்லாத) அண்டைவீட்டாருக்கும் (தொழிலில், பிரயாணத்தில்) கூட்டாளிகளாக
இருப்போருக்கும், வழிப்போக்கருக்கும், உங்களுடைய
வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்(களான அடிமை)களுக்கும், (நீங்கள்) உபகாரம் செய்யுங்கள் - கர்வமுடையோராக, வீண்
பெருமையுடையோராக இருப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
(அந்நிஸா:36)
٢٦١-
عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ:
رَغِمَ اَنْفُ، ثُمَّ رَغِمَ اَنْفُ، ثُمَّ رَغِمَ اَنْفُ، قِيْلَ: مَنْ
يَارَسُوْلَ اللهِ؟ قَالَ: مَنْ اَدْرَكَ اَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ،
اَحَدَهُمَا اَوْ كِلَيْهِمَا فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ.
رواه مسلم باب رغم من ادرك ابويه،
رقم:٦٥١٠
261.கேவலமடையவும்!
மீண்டும் கேவலமடையவும்! மீண்டும் கேவலமடையவும்!'' என ரஸூலுல்லாஹி
(ஸல்) அவர்கள் கூறியபோது, யாரஸூலல்லாஹ், யார் கேவலமடைவான்?'' எனக் கேட்கப்பட்டது. தனது பெற்றோரில் இருவர் அல்லது
ஒருவர் முதுமை அடைந்த நிலையில் இருக்க, (அவர்களுக்கு பணிவிடை
செய்து அவர்களை மகிழ்வித்து) சுவர்க்கத்தில் நுழையாதவன் கேவலமடையவும்!'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்
என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٦٣-
عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ:
نِمْتُ فَرَأَيْتُنِيْ فِي الْجَنَّةِ فَسَمِعْتُ صَوْتَ قَارِيءٍ يَقْرَأُ،
فَقُلْتُ: مَنْ هذَا؟ قَالُوْا: هذَا حَارِثَةُ بْنُ النُّعْمَانِ فَقَالَ لَهَا
رَسُوْلُ اللهِ ﷺ: كَذَاكَ الْبِرُّ كَذَاكَ الْبِرُّ وَكَانَ اَبَرَّ النَّاسِ
بِأُمِّهِ.
رواه احمد:٦ /١٥١.
263.நபி (ஸல்) அவர்கள்
கூறுகிறார்கள், நான் உறங்கிக்
கொண்டிருந்தேன் நான் சுவனத்தில் இருக்கக் கனவு கண்டேன். அங்கு நான் குர்ஆன்
ஓதுபவரின் சப்தத்தைச் செவியுற்று,
யார் இவர்?'' (சுவனத்தில் வந்து
குர்ஆன் ஓதுகிறார்) என வினவினேன். இவர் ஹாரிஸத்துப்னு நுஃமான்'' என மலக்குகள் பதிலளித்தார்கள். பிறகு நன்மை
இவ்வாறுதான் இருக்கும், நன்மை இவ்வாறுதான்
இருக்கும், நன்மை என்னும் பழம்
இவ்வாறு தான் இருக்கும்'' என்று ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். ஹஜ்ரத் ஹாரிஸதுப்னு நுஃமான் (ரலி) அவர்கள் தன் தாயாருடன் மிகவும்
அழகிய முறையில் நடந்து கொள்ளக் கூடியவராக இருந்தார்கள் என நபி (ஸல்) அவர்கள்
கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
தாயிற்கு பணிவிடை செய்த உவைசுல் கர்னீ (ரஹ்)
அவர்களின் வரலாறு...
كان عمر بن الخطاب إذا أتى عليه أمداد أهل
اليمن سألهم: "أفيكم أويس بن عامر؟" حتى أتى على أويس فقال: "أنت
أويس بن عامر؟" قال: "نعم" قال: "من مراد ثم من قرن؟"
قال: "نعم" قال: "فكان بك برص فبرأت منه إلا موضع درهم؟" قال:
"نعم" قال: "لك والدة؟" قال: "نعم" قال: "سمعت
رسول الله يقول لصحابته: يأتي عليكم أويس بن عامر مع أمداد أهل اليمن من مراد ثم
من قرن كان به برص فبرأ منه إلا موضع درهم له والدة هو بها بر لو أقسم على الله
لأبره؛ فإن استطعت أن يستغفر لك فافعل؛ فاستغفر لي" فاستغفر له،
உவைசுல் கர்னீ ரஹ் அவர்கள்
யமன் நாட்டைச் சார்ந்த முக்லரமீன்களில் ஒருவர்.தன்
வயது முதிர்ந்த தாயிற்கு பணிவிடை செய்த காரணத்தால் நபி ஸல் அவர்களை நேரில்
சந்திக்க முடியவில்லை இருப்பினும் நபியவர்கள் இவரைப்பற்றி சகாபாக்களிடம் கூறியுள்ளார்கள்
இன்னின்ன அடையாளங்கள் கொண்ட மனிதர் யமன் நாட்டிலிருந்து வருவார் அவரிடம்
உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடும்படி கூறுங்கள் என்றார்கள். அதே போல்
உமர் ரலி கலீபாவாக இருந்த போது அது நடந்தது. இந்த சிறப்பை உவைசுல் கர்னீ ரஹ்
அவர்கள் அடைவதற்கு காரணம் தாயிற்கு பணிவிடை செய்ததேயாகும்.
குறிப்பு: A. நபி (ஸல்) அவர்கள்
மீது ஈமான் கொண்டிருக்கனும்
C. மரணிக்கும் போது
ஈமானுடன் மரணித்திருக்கனும்
C. (நபி (ஸல்) அவர்களின்
சமகாலத்தில் வாழ்ந்து) நபியை சந்தித்திருக்கனும் ஈமான் கொண்ட நிலையில்.
இம்மூன்று ஷர்த்தும் இருந்தால் சஹாபி.
மூன்றாவது ஷர்த்து தவறிவிட்டால் அவருக்கு பெயர்
முக்லரமீன்.
٢٥٣-
عَنْ اَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ
اللهِ ﷺ يَقُوْلُ: اَلْوَالِدُ اَوْسَطُ اَبْوَابِ الْجَنَّةِ، فَاِنْ شِئْتَ
فَاَضِعْ ذلِكَ الْبَابَ اَوِ احْفَظْهُ.
رواه الترمذي وقال: هذا حديث صحيح باب
ماجاء من الفضل في رضا الوالدين رقم:١٩٠٠
253.தந்தை சுவர்க்க
வாசல்களில் சிறந்த வாசல், (அவருக்கு மாறு செய்து அவரது மனதை புண்படுத்தி)
அவ்வாசலை நாசப்படுத்து ! அல்லது அவருக்குக் கீழ்படிந்து நடந்து (அவரைத்
திருப்திப்படுத்தி) அவ்வாசலைப் பாதுகாத்துக் கொள்'' என்று நபி (ஸல்)
அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٥٤-
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ عَنِ النَّبِيِّ ﷺ
قَالَ: رِضَا الرَّبِّ فِيْ رِضَا الْوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِيْ سَخَطِ
الْوَالِدِ.
رواه التر مذي باب ماجاء من الفضل في رضا
الوالدين رقم:١٨٩٩
254.அல்லாஹுதஆலாவின்
பொருத்தம் தந்தையின் பொருத்தத்திலும். அல்லாஹுதஆலாவின் வெறுப்பு தந்தையின்
வெறுப்பிலும் உள்ளது'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத்
அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
பெற்றோரின் மரணத்திற்குப்பின்பும் நாம் அவர்களுடன்
நேசம் கொள்ளவது
*********************************************
٢٥٥-
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: سَمِعْتُ
رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنّ اَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ اَهْلَ وُدِّ
اَبِيْهِ.
رواه مسلم باب فضل صلة اصدقاء الاب
...رقم: ٦٥١٣
255.நன்மைகளில் சிறந்த
நன்மை, (தந்தையின் மரணத்துக்குப்பின்) தந்தையுடன் நட்பு
கொண்டவர்களுடன் மகன் அழகிய முறையில் நடந்து கொள்வது'' என நபி (ஸல்)
அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٥٦-
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: سَمِعْتُ
رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ اَحَبَّ اَنْ يَصِلَ اَبَاهُ فِيْ قَبْرِهِ
فَلْيَصِلْ اِخْوَانَ اَبِيْهِ بَعْدَهُ.
رواه ابن حبان (واسناده صحيح):٢ /١٧٥
256.எவர் தன் தந்தையின்
மரணத்திற்குப்பின், கப்ரில் இருக்கும்
தந்தையுடன் சேர்ந்து (வாழ) உறவு வளர்க்க விரும்புவாரோ அவர் தனது தந்தையின்
சகோதரர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளவும்'' என நபி (ஸல்)
அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٢٥٩-
عَنْ اَبِيْ اُسَيْدٍ مَالِكِ بْنِ رَبِيْعَةَ
السَّاعِدِيِّ ؓ قَالَ: بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُوْلِ اللهِ ﷺ اِذْ جَاءَهُ
رَجُلٌ مِنْ بَنِيْ سَلَمَةَ فَقَالَ: يَارَسُوْلَ اللهِﷺ هَلْ بَقِيَ مِنْ بِرِّ
اَبَوَيَّ شَيْءٌ اَبِرُّهُمَا بِهِ بَعْدَ مَوْتِهِمَا؟ قَالَ: نَعَمْ اَلصَّلوةُ
عَلَيْهِمَا، وَاْلاِسْتِغْفَارُ لَهُمَا، وَاِنْفَاذُ عَهْدِهِمَا مِنْ
بَعْدِهِمَا، وَصِلَةُ الرَّحْمِ الَّتِيْ لاَ تُوْصَلُ اِلاَّ بِهِمَا،
وَاِكْرَامُ صَدِيْقِهِمَا(رواه ابوداؤد باب في برالوالدين رقم:٥١٤٢)
259.ஹஜ்ரத் அபூஉஸைத்
மாலிகிப்னு ரபீஆ ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாங்கள் நபி (ஸல்)
அவர்களின் சமுகத்தில் அமர்ந்திருந்த சமயம், பனீஸலமா
கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் அங்கு வந்து, யாரஸூலல்லாஹ், என்னுடைய
பெற்றோருடைய மரணத்திற்குப்பின் அவர்களுடன் அழகிய முறையில் நடந்துகொள்ள ஏதேனும்
வழியுள்ளதா?'' எனக் கேட்டார்.ஆம்!'' அவர்களுக்காக துஆச்
செய்வது, அல்லாஹுதஆலாவிடம்
அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது, அவர்களுடைய
மரணத்துக்குப் பின் அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, அவர்களுக்கு யாருடன்
உறவுமுறை உள்ளதோ அவர்களுடன் அழகிய முறையில் நடப்பது, அவர்களின்
நண்பர்களைக் கண்ணியப்படுத்துவது ஆகியவை பெற்றோர்களுடன் நன்முறையில் நடப்பதாகும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
(அபூதாவூத்)
٢٦٦-
عَنِ ابْنِ عُمَرَ ؓ اَنَّ رَجُلاً اَتَي النَّبِيَّ ﷺ
فَقَالَ: يَا رَسُوْلَ اللهِﷺ اِنَّيْ اَصَبْتُ ذَنْبًا عَظِيْمًا فَهَلْ لِيْ
تَوْبَةٌ؟ قَالَ: هَلْ لَكَ مِنْ اُمٍّ؟ قَالَ: لاَ، قَالَ: هَلْ لَكَ مِنْ
خَالَةٍ؟ قَالَ: نَعَمْ قَالَ: فَبِرَّهَا. (رواه الترمذي، باب في بر الخالة،
رقم:١٩٠٤)
266.ஹஜ்ரத்
அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ஒருவர் ரஸூலுல்லாஹி (ஸல்)
அவர்களின் சமுகத்திற்கு வந்து,
யாரஸூலல்லாஹ், நான் பெரும்
பாவமொன்றைச் செய்து விட்டேன். எனக்கு பாவமன்னிப்பு கிடைக்குமா ?'' என்று கேட்டார். உமது தாயார் உயிருடன் உள்ளாரா?'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க ! அவர் இல்லை' என்றார் , உமது தாயின் சகோதரி
உள்ளாரா?'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் வினவ, ஆம்' என்று சொன்னார், நீர் அவருடன் அழகிய
முறையில் (கொஞ்சமும் மன வருத்தப்படாமல் முழுமையான சந்தோஷம் பெறும்) முறையில்
நடந்து கொள்.(அதன் காரணமாக அல்லாஹுதஆலா உனக்கு பாவமன்னிப்பு கிடைக்கும்)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ)
அண்டை வீட்டாருடன் நேசம் கொள்வது
*************************
٢٢٩-
عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ:
لَيْسَ المُؤْمِنُ الَّذِيْ يَشْبَعُ وَجَارُهُ جَائِعٌ.
رواه الطبراني وابو يعلي ورجاله ثقات مجمع
الزوائد:٨ /٣٠6
229.அண்டை வீட்டார்
பசித்திருக்க, தான் வயிறு நிரம்பச்
சாப்பிடுபவர் (முழுமையான) முஃமின் அல்ல'' என்று நபி (ஸல்)
அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ,)
வீட்டில் உணவு சமைத்தாலும் சற்று கூடுதலாக சமைத்து
அண்டை வீட்டாருக்கும் கொடுத்து நேசத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
عَنْ اَبِيْ ذَرٍّ ؓ قَالَ: قَالَ
رَسُوْلُ اللهِ ﷺ: لاَ يَحْقِرَنَّ اَحَدُكُمْ شَيْئًا مِنَ الْمَعْرُوْفِ، وَاِنْ
لَمْ يَجِدْ فَلْيَلْقَ اَخَاهُ بِوَجْهٍ طَلِيْقٍ، وَاِنِ اشْتَرَيْتَ لَحْمًا
اَوْ طَبَخْتَ قِدْرًا فَاكْثِرْ مَرَقَتَهُ وَاغْرِفْ لِجَارِكَ مِنْهُ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب
ماجاء في اكثار ماء المرقة رقم: ١٨٣٣
.உங்களில் எவரும் ஒரு
சிறிய நன்மையையும் சாதாரணமாகக் கருத வேண்டாம், எவ்வித நன்மையும்
செய்ய இயலவில்லை என்றால், தன் சகோதரனை
இன்முகத்துடன் சந்திப்பதும் நன்மைதான். சமைக்க நீங்கள் மாமிசம் வாங்கினாலோ அல்லது
ஏதேனும் குழம்பு சமைத்தாலோ அதன் அளவை அதிகப்படுத்துங்கள், அதில் சிறிதளவு
உங்கள் அண்டை வீட்டாருக்கும் கொடுங்கள்'' என ரஸூலுல்லாஹி
(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)
அன்பை வளர்க்கும் அன்பளிப்பு
************************************
عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ
ﷺ قَالَ: تَهَادَوْا فَاِنَّ الْهَدِيَّةَ تُذْهِبُ وَحَرَ الصَّدْرِ، وَلاَ
تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ شِقَّ فِرْسِنِ شَاةٍ.
رواه الترمذي وقال: هذا حديث غريب باب في
حث النبي ﷺ علي الهدية رقم:٢١٣٠
225.ஒருவருக்கொருவர்
அன்பளிப்பு வழங்கிக் கொள்ளுங்கள்!, அன்பளிப்பு
உள்ளத்தின் கறையை நீக்கிவிடும். எந்த அண்டை வீட்டுப் பெண்ணும், தன் பக்கத்து
வீட்டுப் பெண்ணின் அன்பளிப்பைக் கேவலமாகக் கருத வேண்டாம். அது ஆட்டுக்காலின் ஒரு
துண்டாக இருந்தாலும் சரியே!''
(அதேபோல் அன்பளிப்புக் கொடுக்கும் பெண்ணும் இந்த
அன்பளிப்பைச் சாதாரணமாகக் கருத வேண்டாம்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள்
கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٣٤-
عَنْ عَائِشَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَازَالَ
جِبْرِيْلُؑ يُوْصِيْنِيْ بِالْجَارِ حَتَّي ظَنَنْتُ اَنَّهُ سَيُوَرِّثُهُ.
رواه البخاري باب الوصاءة بالجار رقم:٦٠١٤
234.ஹஜ்ரத் ஜிப்ரஈல்
(அலை) அவர்கள் அண்டைவீட்டாருக்குச் செலுத்த வேண்டிய கடமையைப் பற்றி
உபதேசித்தார்கள், (அந்த உபதேசத்தின் மூலம்) அண்டை வீட்டார் சொத்தில்
பங்கு பெற உரிமை பெற்று விடுவாரோ என எண்ணலானேன்'' என்று ரஸூலுல்லாஹி
(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٢٨-
عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ
ﷺ: مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ اْلآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ،
قَالُوا: يَارَسُوْلَ اللهِﷺ وَمَا حَقُّ الْجَارِ؟ قَالَ: اِنْ سَأَلَكَ
فَاَعْطِهِ، وَاِنِ اسْتَغَاثَكَ فَاَغِثْهُ، وَاِنِ اسْتَقْرَضَكَ فَاَقْرِضْهُ،
وَاِنْ دَعَاكَ فَاَجِبْهُ، وَاِنْ مَرِضَ فَعُدْهُ، وَاِنْ مَاتَ فَشَيِّعْهُ،
وَاِنْ اَصَابَتْهُ مُصِيْبَةٌ فَعَزِّهِ، وَلاَ تُؤْذِهِ بِقُتَارِ قِدْرِكَ
اِلاَّ اَنْ تَغْرِفَ لَهُ مِنْهَا، وَلاَ تُرْفِعْ عَلَيْهِ الْبِنَاءَ لِتَسُدَّ
عَلَيْهِ الرِّيْحَ اِلاَّ بِاِذْنِهِ.(الترغيب)
رواه الاصبهاني في كتاب الترغيب:١/٤٨٠.
وقال في الحاشية: عزاه المنذري في الترغيب: ٣ /٣٥٧, للمصنف بعد ان رواه من طرق
اخري، ثم قال المنذري: لايخفي ان كثرة هذه الطرق تكسبه قوة والله اعلم.
228.எவர்
அல்லாஹுதஆலாவின் மீதும், மறுமை நாளின் மீதும்
நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தவும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, யாரஸூலல்லாஹ்! அண்டை
வீட்டாருக்குச் செலுத்தவேண்டிய கடமைகள் யாவை?'' என ஸஹாபாக்கள் (ரலி)
வினவினர். உங்களிடம் எதையேனும் அவர் கேட்டால் அவருக்கு அதைக் கொடுங்கள், உங்களிடம் அவர் உதவி
வேண்டினால் அவருக்கு உதவி செய்யுங்கள், தேவைக்காக அவர் கடன்
கேட்டால் அவருக்குக் கடன் கொடுங்கள், அவர் உங்களை
விருந்துக்கு அழைத்தால் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், அவர் நோயுற்றால்
அவரை நலன் விசாரியுங்கள், அவர் இறந்துவிட்டால்
அவருடைய ஜனாஸாவுடன் செல்லுங்கள்,
அவருக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அவருக்கு ஆறுதல்
கூறுங்கள், தனது வீட்டில்
சமைத்த இறைச்சியின் வாசனையின் மூலம் அவருக்குச் சிரமம் கொடுக்கவேண்டாம் (ஏனேனில், வறுமையின் காரணமாக
அவருக்கு இறைச்சி சமைக்கும் வாய்ப்பு கிடைக்காமலிருக்கலாம்) ஆயினும், அதிலிருந்து
சிறிதளவு அவரது வீட்டுக்கு அனுப்புங்கள். அவரது அனுமதியின்றி உங்கள் வீட்டை
உயர்த்தி அவரது வீட்டிற்குக் காற்று வராதபடிக் கட்டாதீர்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.( தர்ஙீப்)
நாளை மறுமை நாளில் முதல் வழக்கு அண்டை வீட்டாரைப்
பற்றியதாகும்...
٢٣٥-
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ
اللهِ ﷺ: اَوَّلُ خَصْمَيْنِ يَوْمَ الْقِيَامَةِ جَارَانِ.
رواه احمد باسناد حسن مجمع الزوائد:١٠/٦٣٢
235.கியாமத் நாளில்
முதன் முதலில் வழக்குத் தொடுப்போர் தமக்குள் சண்டையிட்டுக்கொண்ட இரு
அண்டைவீட்டார்களாவர், (அடியார்களின்) உரிமைகள் பற்றிய விவகாரத்தில்
(முதலிடம் பெறுவது) அண்டைவீட்டாரைப் பற்றியதாக இருக்கும்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத்
உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்,)