வியாழன், 3 அக்டோபர், 2019

வாழ்த்துக் கூறுவோம்


بسم الله الرحمن الرحيم

வாழ்த்துக் கூறுவோம்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

قال الله تعالي : كلوا واشربوا هنيئا بما اسلفتم في الايام الخالية
قال رسول الله صلي الله عليه وسلم : الدين النصيحة

பிறர் நலன் நாடுவதே மார்க்கம் என்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருவாக்காகும்.

எனவே சக மனிதர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கும் போது வாழ்த்து கூறுவதும் துக்க நேரத்தில் ஆறுதல் சொல்வதும் இஸ்லாமியனின் பண்பாக இருக்க வேண்டும்.
உலகில் யாரும் தன்னந்தனியே வாழ முடியாது. குடும்பம்‌‍‍‚ உறவு‚ நண்பர்கள் மற்றும் சமூகத்துடன் சேர்ந்து வாழ்வதில் தான் நிம்மதி கிடைக்கும். எனவே அவர்‌களின் நல்லது கெட்டதில் பங்கெடுத்துக் கொள்வது தான் மனிதாபிமான செயலாகும்.
யார் எப்படி இருந்தால் எனக்கென்ன என்று எண்ணுவது தவறாகும். சமூகத்துடன் கலந்து வாழ்பவரையே சிறந்த முஸ்லிமாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

வாழ்த்துக் கூறுவதின் ஆறுதல் கூறுவதின் அவசியம்.

வாழ்த்தும் ஆறுதலும் கூறுவதன் காரணமாக நாம் இவரோடு பாசப்பிணைப்புடன் இருக்கின்றோம் என்பதாகவும் இவர் மேல் எனக்கு போட்டி பொறாமை ஏதுமில்லை என்பதையும் நிரூபிக்கக் கூடியதாக இருக்கும்.

நாம் சொல்லும் இந்த வாழ்த்தும் ஆறுதலும் அதுவே துஆவாக அமைந்து இவருக்கு மேலும் பலநற்பாக்கியம் பெறுவதற்காக வேண்டியது காரணமாக அமையும்.

நல்லோர்களான மலக்குமார்கள் நபிமார்கள் ஸஹாபாக்கள் மற்றும் நல்லடியார்களின் பண்பாடாகும்.

1 . @@@@@@@
திறமைக்கு வாழ்த்து கூறுவது
--------------------------------------------------
பிறரிடம் உள்ள திறமைகளை ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் திறமைகளை பாராட்டுவது நபியவர்களின் பண்பாடு.
ஒருமுறை பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ரத் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அபுல் முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?" எனக் கேட்டார்கள்.
"அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று நான் கூறினேன்.
அவர்கள் "அபுல்முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?" என (மீண்டும்) கேட்டார்கள்.
"அல்லாஹு லாயிலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்... எனத் தொடங்கும் (2:255 ஆவது) வசனம்" என்று நான் விடையளித்தேன்.

فَضَرَبَ فِي صَدْرِي، ‏‏‏‏‏‏وَقَالَ: ﻭاﻟﻠﻪ لِيَهْنَكَ الْعِلْمُ يَا أَبَا الْمُنْذِرِ  .

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் (ஓர் அடி) அடித்து விட்டு "அல்லாஹ்வின் மீதாணையாக! அபுல்முன்திரே!" உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (என வாழ்த்துச்) சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1476.
அத்தியாயம் : 6. பயனிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும்

படிப்பினை : கல்வி ‚ அறிவு ‚  ஞானம் ‚ நினைவாற்றல் இவைகளில் சிறந்து விளங்கியதற்காக நபியுடைய வாழ்த்து.

2 . @@@@@@@

வெற்றிவாகை சூடியதற்காக வாழ்த்து
A . பத்ருப் போர் முடிந்து மதீனா திரும்பும் வழியில் ரவ்ஹா என்ற இடத்தை பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் அடைந்த போது மக்கள் அவர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார்கள் (நபி(ஸல்) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.நூல்: ஹாகிம்).

B. இன்னொரு முறை போர் முடிந்து மதீனா வந்த நபியவர்களை வீட்டில் நுழையும்போது அன்னை ஆயிஷா (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்கள் பெருமானாரின் திருக்கரத்தைப் பிடித்து
الحمد لله الذي نصرك واعزك واكرمك
என்று வாழ்த்தினார்கள்.(நூல்:அமலுல் யவ்மி வல்லைலா)

3 . @@@@@@@

இன்னல் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும் போது வாழ்த்து.
-------------------------------------------------------------------
فقد ثبت في حديث الصحيحين في قصة توبة كعب بن مالك رضي الله عنه حين تاب الله عليه بعد تخلفه عن غزوة تبوك.
فَيَتَلَقَّانِي النَّاسُ فَوْجًا فَوْجًا، يُهَنُّونِي بِالتَّوْبَةِ، يَقُولُونَ: لِتَهْنِكَ تَوْبَةُ اللَّهِ عَلَيْكَ، قَالَ كَعْبٌ: حَتَّى دَخَلْتُ المَسْجِدَ، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ حَوْلَهُ النَّاسُ، فَقَامَ إِلَيَّ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ يُهَرْوِلُ حَتَّى صَافَحَنِي وَهَنَّانِي، وَاللَّهِ مَا قَامَ إِلَيَّ رَجُلٌ مِنَ المُهَاجِرِينَ غَيْرَهُ، وَلاَ أَنْسَاهَا لِطَلْحَةَ، قَالَ كَعْبٌ: فَلَمَّا سَلَّمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يَبْرُقُ وَجْهُهُ مِنَ السُّرُورِ: «أَبْشِرْ بِخَيْرِ يَوْمٍ مَرَّ عَلَيْكَ مُنْذُ وَلَدَتْكَ أُمُّكَ»،

தபூக் போரில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரு போர் ஆக இருந்தது . அந்த நேரத்தில் தக்க காரணமின்றி கலந்து கொள்ளாத பலரும் உண்டு . அதில் மூன்று நல்ல ஸஹாப்பாக்களும் உண்டு. இம்மூன்று பேரும் கண்டிப்புக்கும் பலவகையான சங்கடத்துக்கு உள்ளானார்கள் . இறுதியாக மனம் வருந்தி தவ்பா செய்து கொண்டேயிருந்தார்கள்.

அம்மூவரில் ஒருவரான ஹஜ்ரத் கஃப் இப்னு மாலிக் ரலியல்லாஹூஅன்ஹூ அவர்களின் தவ்பா ஏற்கப்பட்டு அவர்கள் மன்னிக்கப்பட்டதாக குர்ஆன் இறங்கியது . அப்போது அவர்கள் மஸ்ஜிதுந் நபவிக்குச் ஓடோடி வந்தார்கள்.அங்கிருந்த பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் இவர்களுக்கு வாழ்த்துச் சொன்னார்கள் என்றவரலாறு புகாரி 4418ம் ஹதீஸில் விரிவாக இடம் பெற்றுள்ளது. அதன் ஒரு பாகம் இதோ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போரில் கலந்து கொள்ளாதவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் (யாரும்) பேசக் கூடாதென முஸ்லிம்களுக்குத் தடை விதித்து விட்டார்கள். எனவே, மக்கள் எங்களைத் தவிர்த்தனர். மேலும், அவர்கள் (முற்றிலும்) எங்கள் விஷயத்தில் மாறிப் போய்விட்டனர். (வெறுத்துப் போனதால்) என் விஷயத்தில் இப்புவியே மாறிவிட்டது போலவும் அது எனக்கு அன்னியமானது போலவும் நான் கருதினேன். இதே நிலையில் நாங்கள் ஐம்பது நாட்கள் இருந்தோம். எனது இரு சகாக்களும் (முராராவும், ஹிலாலும்) செயலிழந்து போய்த் தம் இல்லங்களிலேயே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தனர். ஆனால் நான், மக்களிடையே (உடல்) பலம் மிக்கவனாகவும் (மன) வலிமை படைத்தவனாகவும் இருந்தேன். எனவே, நான் (வீட்டைவிட்டு) வெளியேறி முஸ்லிம்களுடன் (ஐங்காலத்) தொழுகையில் கலந்து கொண்டும், கடை வீதிகளில் சுற்றிக் கொண்டுமிருந்தேன். என்னிடம் எவரும் பேச மாட்டார்கள்..................

அதற்குப் பின் பத்து நாட்கள் (இவ்வாறே) இருந்தேன். எங்களிடம் பேசக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்த நாளிலிருந்து ஐம்பது நாட்கள் எங்களுக்குப் பூர்த்தியாயின. நான் ஐம்பதாம் நாளின் ஃபஜ்ருத் தொழுகையை எங்கள் வீடுகளில் ஒன்றின் மாடியில் நிறைவேற்றிவிட்டு அல்லாஹ் (எங்கள் மூவரையும் குறித்து 9:118ஆவது வசனத்தில்) குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருந்தேன். (அதாவது:) பூமி இத்தனை விரிவாய் இருந்தும் என்னைப் பொருத்த வரையில் அது குறுகி, நான் உயிர் வாழ்வதே மிகக் கஷ்டமாயிருந்தது.அப்போது, சல்உ மலை மீதேறி பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவர் உரத்த குரலில், கஅப் பின் மாலிக்கே! நற்செய்தி பெற்றுக் கொள்க! என்று கூறினார். உடனே நான் சஜ்தாவில் விழுந்தேன். சந்தோஷம் வந்து விட்டது என்று நான் அறிந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுது கொண்டிருந்த போது (வஹீ அறிவிக்கப்பட்டு) எங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று அறிவித்து விட்டார்கள் என நான் விளங்கிக் கொண்டேன். எங்களுக்கு நல்வாழ்த்துச் சொல்ல மக்கள் வரலாயினர். என் இரு சகாக்களை நோக்கி நற்செய்தி சொல்பவர்கள் சென்றனர். என்னை நோக்கி ஒருவர் குதிரையில் விரைந்து வந்தார்.

அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடிச் சென்று மலை மீது ஏறிக் கொண்டார். (மேலும், உரத்த குரலில் எனக்கு நற்செய்தி சொன்னார்.) மேலும், (மலை மீதிருந்து வந்த) அந்தக் குரல் அக்குதிரையை விட வேகமாக வந்து சேர்ந்தது. எவரது குரலை (மலை மீதிருந்து) கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல (நேரடியாக) வந்த போது நான் என் இரு ஆடைகளையும் கழற்றி அவர் சொன்ன நற்செய்திக்குப் பகரமாக (பரிசாக) அவருக்கு அணிவித்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (ஆடைகளில்) அந்த இரண்டைத் தவிர வேறெதுவும் அப்போது எனக்குச் சொந்தமானதாக இருக்கவில்லை. (வேறு) இரண்டு ஆடைகளை (அபூகத்தாதா அவர்களிடமிருந்து) இரவல் வாங்கி நான் அணிந்து கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தேன். அப்போது (வழியில்) மக்கள் கூட்டங் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்து, எனக்குப் பாவமன்னிப்புக் கிடைத்ததால், அல்லாஹ் உங்கள் பாவத்தை மன்னித்து விட்டதற்காக உங்களுக்கு வாழ்த்துச் சொல் கிறோம் என்று கூறலாயினர். நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கு தம்மைச் சுற்றிலும் மக்களிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது என்னை நோக்கி தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் எழுந்தோடி வந்து எனக்குக் கைலாகு கொடுத்து என்னை வாழ்த்தவும் செய்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹாஜிர் களில் அவர்களைத் தவிர வேறெவரும் என்னை நோக்கி (வருவதற்காக) எழவில்லை. தல்ஹா (ரலி) அவர்களின் இந்த அன்பை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்ன போது, சந்தோஷத்தினால் அவர்கள் தம் முகம் மின்னிக் கொண் டிருக்க .
«أَبْشِرْ بِخَيْرِ يَوْمٍ مَرَّ عَلَيْكَ مُنْذُ وَلَدَتْكَ أُمُّكَ»،
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உன்னை உன் தாய் பெற்றெடுத்தது முதல் உன்னைக் கடந்து சென்ற நாட்களில் மிகச் சிறந்த நாளான இன்று உனக்கு (பாவ மன்னிப்புக் கிடைத்த) நற்செய்தி கூறுகிறேன் என்று கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! (இந்த நற்செய்தியைத்) தாங்களே தங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கிறீர்களா? அல்லது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்த வேத அறிவிப்பின் அடிப்படையில்) தெரிவிக் கிறீர்களா? என்று கேட்டேன். அவர்கள், இல்லை. (என் தரப்பிலிருந்து நான் இதைத் தெரிவிக்கவில்லை.) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்துள்ள வேத அறிவிப்பின் அடிப் படையில்)தான் தெரிவிக்கிறேன் என்று சொன்னார்கள்.

4 . @@@@@@@
உயர்வு கிடைக்கும் போது வாழ்த்துவது
-----------------------------------------------------------------
A . பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்  ஹூதைபிய்யாவிலிருந்து திரும்பி வரும்போது

إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا (1) لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُسْتَقِيمًا (2) وَيَنْصُرَكَ اللَّهُ نَصْرًا عَزِيزًا (3)
என்ற ஆயத் இறங்கியது.அதனால் மகிழ்ச்சியடைந்த நபியவர்கள் ஸஹாபாக்களிடம்

لقد نزلت علي آية أحب الي مما علي وجه الأرض
இன்று என் மீது இறங்கியுள்ள ஆயத் இவ்வுலகிலுள்ள அனைத்தையும் விட எனக்கு மிகப்பிரியமானது.
என்று கூறி அதனை ஓதிக்காட்டினார்கள்.
அதைக் கேட்ட ஸஹாபாக்கள்

هنيئا لك يا رسول الله
அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு வாழ்த்து உண்டாகட்டும் என்று கூறினார்கள்.(நூல்:புஹாரி 4172‚ முஸ்லிம்)

B . நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹூஅன்ஹூ அவர்களிடம்

من كنت مولاه فعلي مولاه
யாருக்கு நான் நண்பனாக இருக்கிறேனோ அவருக்கு அலியும் நண்பராக இருப்பார்.
என்று கூறிய போது அதைக் கேட்ட ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹூஅன்ஹூ அவர்கள்

هنيئا لك يا علي أمسيت مولى كل مؤمن ومؤمنة
அலியே! உமக்கு வாழ்த்து உண்டாகட்டும்!
முஃமின்கள் அனைவருக்கும் நீங்கள் நண்பராகி விட்டீர்கள் என்று வாழ்த்தினார்கள் (நூல்:முஸ்னத் அஹ்மத்).

5 . @@@@@@@
திருமணத்தின் போது

((بَارَكَ اللَّهُ لَكَ، وبَارَكَ عَلَيْكَ، وجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ)
----------------------------------
1906 -عن عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ: أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنْ بَنِي جُشَمَ، فَقَالُوا: بِالرَّفَاءِ وَالْبَنِينَ. فَقَالَ: لَا تَقُولُوا هَكَذَا، وَلَكِنْ قُولُوا كَمَا قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: "اللَّهُمَّ بَارِكْ لَهُمْ وَبَارِكْ عَلَيْهِمْ" (1).
அகீல் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் பனீஜுஸம் என்ற குடும்பத்தில் ஒரு பெண்ணை கல்யாணம் செய்தார்கள் அந்த நேரத்தில் ஜாஹிலிய்ய-அறியாமைக்கால மக்கள் செய்யக்கூடிய கல்யாண வாழ்த்துப் போன்று
بالرفاء والبنين
நீங்கள் இருவரும் மனமொன்றியவர்களாக (பெண்குழந்தையின்றி-)ஆண் குழந்தைகளோடு வாழ்வீர்களாக! என்று குறைஷிகள் (ஒருதலைப்பட்சமாக) வாழ்த்தினார்கள்.
இந்த மாதிரி வாழ்தவேண்டாம் .
- ((بَارَكَ اللَّهُ لَكَ، وبَارَكَ عَلَيْكَ، وجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ)
என பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்த்திய அதையே
வாழ்த்தாக கூறுங்கள என அகீல் (ரலி) அவர்களிடம் கட்டளையிட்டார்கள். ஹதீஸ் 1906 இப்னு மாஜஹ்.

6 . @@@@@@@

புத்தாடை அணிந்தால்
-------------------------------------
ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹூஅன்ஹூ அவர்கள் தூய வெள்ளை நிற ஆடை அணிந்து வந்ததைப்பார்த்த பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
البس جديدا وعش حميدا ومت شهيدا

புத்தாடை அணிவீராக! புகழோடு வாழ்வீராக!ஷஹீதாக மரணிப்பீராக!
என்று வாழ்த்தினார்கள்.
(நூல்:இப்னுமாஜா 3558 )

ஸஹாபாக்கள் யாராவது புத்தாடை அணிந்து இருப்பதைக் கண்டால்

تبلي ويخلف الله عزوجل
இதனை நீர் பழையதாக ஆக்குவீராக! (இது பழையதான பின்)அல்லாஹ் இதற்கு பகரமாக வேறோன்றைத் தருவானாக!
என்று வாழ்த்துவார்கள்.(நூல்: அபூதாவூத்)

7 . @@@@@@@

குழந்தை பிறக்கும் போது வாழ்த்து கூறுவது
---------------------------------------------------------

யாருக்கேனும் குழந்தை பிறந்தால் ஹுஸைன் (ரலி) அவர்கள் மேலும் ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் (வாழ்த்துவார்கள்)

بارك الله لك في الموهوب لك وشكرت الواهب وبلغ اشده ورزقت بره
உமக்கு கொடுக்கப்பட்ட இக்குழந்தைக்கு அல்லாஹ் பரகத் செய்வானாக!கொடுத்த இறைவனுக்கு நீ நன்றி சொல்வாயாக! இக்குழந்தை வாலிபத்தை அடையட்டும்.அது உமக்கு உபகாரம் செய்யும் பிள்ளையாக அல்லாஹ் ஆக்குவானாக!
என்று வாழ்த்துவார்கள்.‍‍‍‍‌‍‌‍‍
(நூல்:ஹிஸ்னுல் முஸ்லிம் & ஷரஹுல் முஹத்தப்).

இமாம் அய்யூப் ஸஹ்தியானி (ரஹ்)அவர்கள் (வாழ்த்துவார்கள்)

جعله الله مباركا عليك وعلي أمة محمد صلي الله عليه وسلم
அல்லாஹ் இந்த குழந்தையை உங்களுக்கும் முழு உம்மத்தினருக்கும் பரகத்தாக ஆக்கிவைப்பானாக!
என்று வாழ்த்துவார்கள்.

8 . @@@@@@@

ரமலான் மாதம் வரும்போது
----------------------------+---------------

خطب رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ في آخرِ يومٍ من شعبانَ فقال : أيها الناسُ قد أظلَّكُم شهرٌ عظيمٌ شهرٌمُباركٌ، شهرٌ فيهِ ليلةٌ خيرٌ من ألفِ شهرٍ،
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதம் வருவதற்கு முன் ஷஃபான் மாத இறுதியில் ஸஹாபாக்களுக்குச்செய்த இந்த உபதேசத்தில் ரமலானை வாழ்த்திவரவேற்றுள்ளார்கள்.(நூல்:தர்ஙீப்)

ரமலானை வாழ்த்துவதற்கு இந்த ஹதீஸ் ஆதாரம் என்பதாக அல்லாமா இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் ரமலான் வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ: ( اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ )
இவ்வாறு துஆச் செய்து ரமலானை வரவேற்றுள்ளார்கள்.(நூல்:பைஹகி)


9 . @@@@@@@

பெருநாள் வாழ்த்து
--------------------------------
ஈது தொழுகை முடிந்தவுடன்
تقبل الله منا ومنك
என்று தங்களுக்குள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார்கள் ஸஹாபாக்கள் என ஹஜ்ரத் அபூஉமாமா அல்பாஹிலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் .

ان محمد بن زيادة قال:كنت مع ابي أمامة الباهلي وغيره من
أصحاب الرسول -صلى الله عليه وسلم- فكانوا إذا رجعوا من العيد يقول بعضهم لبعض يتقبل الله منا ومنك)
قال الإمام أحمد بن حنبل إسناده إسناد جيد وجود اسناده أيضاً العلامة ابن التركماني، الجوهر النقي 3/ 319.
ونقل ابن قدامة عن الأمام أحمد بن حنبل رحمه الله
قال: ولا بأس أن يقول الرجل للرجل يوم العيد تقبل الله منا ومنك.

وساق فيه أيضاً أثراً عن عمر بن عبد العزيز فقال (عن أدهم مولى عمر بن عبد العزيز قال: كنا نقول لعمر بن عبد العزيز في العيد تقبل الله منا ومنك يا أمير المؤمنين فيرد علينا ولا ينكر ذلك علينا) سنن البيهقي 3/ 319.

இவ்வாறு வாழ்த்துக்கூறுவதில் தவறில்லை என்பதே இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்)  மேலும் ஹஜ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ( ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்.


10 . @@@@@@@

ஜூம்ஆ முபாரக் கூறுவது
------------------------------------------------

ஜூம்ஆ வுக்கும் வாழ்த்து கூறுவது‚ ஜூம்ஆ முபாரக் என்று வாழ்த்து கூறுவது கூடுமா கூடாதா ?

பதில் : அதனைத் தவிர்த்துக் கொள்வது நல்லது ஏனென்றால் நபி(ஸல்) அவர்களோ  சஹாபாக்களோ அதனை செய்யவில்லை என்பதால்.

ஆனாலும் அவ்வாறு வாழ்த்து சொல்வது கூடும் என்று ஃபதாவா காஸிமிய்யாவில் உண்டு.
இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைகிறது

1098 - عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: "إِنَّ هَذَا يَوْمُ عِيدٍ، جَعَلَهُ اللَّهُ لِلْمُسْلِمِينَ، فَمَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ، وَإِنْ كَانَ طِيبٌ فَلْيَمَسَّ مِنْهُ، وَعَلَيْكُمْ بِالسِّوَاكِ" (1).

ஜும்ஆ நாள் (ஏழை & பணக்கார ன் என) எல்லாமுஸ்லிம்களுக்கு பெருநாளாக ஆக்கி இருக்கின்றான் . எனவே ஜும்ஆவுக்கு வருபவர் குளித்துக் கொள்ளட்டும் மணம் பூசிக் கொள்ளட்டும் மிஸ்வாக் செய்து கொள்ளட்டும் என்பதாக இப்னு மாஜஹ் 1098ஹதீஸ்.
__________
(1) صحيح لغيره، وهذا إسناد ضعيف من أجل صالح بن أبي الأخضر،

11 . @@@@@@@

மாற்று மதசகோதரர்களுக்கு வாழ்த்து கூறலாமா?
-------------------------------------------------------------
மாற்று மதத்தினருக்கிடையே மதநல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதும் அவர்களையும் நமது சகோதரர்களாக பாவிக்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் வலியுறுத்தத் தவறவில்லை.
அவர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வது‚ அவர்களுடைய சந்தோஷமான தருணங்களில் வாழ்த்து கூறுவது. அவர்களுக்கு துன்பம் ஏற்படும் போது ஆறுதல் சொல்வது. நம்மால் முடிந்த உதவி‚உபகாரங்கள் புரிவது அனைத்தும் கூடும். அவர்களிடம் முஸாஃபஹா செய்வதற்குக்கூட மார்க்கம் அனுமதி தந்துள்ளது.

اختلف العلماء في حكم حضور احتفالات الكفار في مناسباتهم الشخصية ، كزواج ، أو شفاء من مرض ، أو رجوع من سفر ، وأرجح الأقوال القول بالجواز بشرط وجود مصلحة شرعية ، كتأليف قلوبهم للإسلام ، أو دعوتهم إلى الدين .

அதே சமயம் அவர்களுடன் கலந்துறவாடும்போது நமது மார்க்கத்தின் வரையறையை மீறி விடக்கூடாது என்பது நிபந்தனையாகும்.

இந்த அடிப்படையில் மாற்றார்களின் மதப்பண்டிகைகளில் நாம் கலந்து கொள்வதும் அப்பண்டிகை தினங்களில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதும் கூடாது.
ஏனெனில் இப்பண்டிகைகள் அனைத்தும் முழுக்க முழுக்க குஃப்ர்‚ஷிர்க்கை அடிப்படையாகக் கொண்டவையாகும். எனவே அவற்றில் நாம் கலந்து கொள்வதும் வாழ்த்துக் கூறுவதும் அதனை நாம் ஆதரிப்பதாக ஆகிவிடும்.
அல்லாஹூதஆலா திருமறையில்

في الآية:ـ( وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ) ،

பாவத்துக்கும் வரம்புமீறலுக்கும் நீங்கள் உதவி செய்யாதீர்கள் (  மாயிதா: 2) என்று கூறியுள்ளான்.

பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்

من تشبه بقوم فهو منهم (أبو داؤد)
من كثر سواد قوم فهو منهم ومن رضي عمل قوم كان شريكا في عمله (كنز العمال)

إياكم وزي أهل الشرك (بخاري)
خالفوا اليهود ( أبو داؤد)
மேற்கண்ட ஹதீஸ்களில் இதனை கடுமையாக்கண்டித்துள்ளார்கள்.

أحكام اهل الذمة
என்ற நூலில் இதுபற்றி கூறப்பட்டுள்ளதாவது.

لا يحل لمسلم المشاركة في الاحتفالات الدينية للكفار ، ولا يحل تهنئتهم بها مطلقاً ، وهذا أشد حالات الاحتفالات إثماً ؛ إذ قد يؤدي بفاعله إلى الكفر .

قال ابن القيم – رحمه الله - :

وأما التهنئة بشعائر الكفر المختصة به : فحرام بالاتفاق ، مثل أن يهنئهم بأعيادهم ، وصومهم ، فيقول : " عيد مبارك عليك " ، أو " تهنأ بهذا العيد " ، ونحوه ، فهذا إن سلم قائله من الكفر : فهو من المحرمات ، وهو بمنزلة أن يهنئه بسجوده للصليب ، بل ذلك أعظم إثماً عند الله وأشد مقتاً من التهنئة بشرب الخمر ، وقتل النفس ، وارتكاب الفرج الحرام ، ونحوه .
" أحكام أهل الذمة " ( 3 / 211 ) .
மாற்று மதசகோதரர்கள் நமது பண்டிகைகளுக்கு வாழ்த்தும் சொல்கிறார்கள் என்பதற்காக நாம் அவர்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச்சொல்வது கூடாது.
ஏனெனில் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
1.அவர்கள் உண்மையான மார்க்கத்தின் பண்டிகைக்கு வாழ்த்துக்கூறுகிறார்கள்.
நாம் பொய்யான பண்டிகைக்கு வாழ்த்துக்கூறுகிறோம்.
2.அவர்கள் ஏகத்துவத்தின் அடிப்படையில் அமைந்த பண்டிகைக்கு வாழ்த்து சொல்கிறார்கள்.
நாம் இணைவைப்பின் அடிப்படையில் அமைந்த பண்டிகைக்கு வாழ்த்துக்கூறுகிறோம்.
3.அவர்கள் அல்லாஹ்வை சந்தோஷப்படுத்துகின்ற பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள்.
நாம் அல்லாஹ்வை கோபப்படுத்துகின்ற பண்டிகைக்கு வாழ்த்துக் கூறுகின்றோம்.

மாற்றார்களுடன் நாம் பேண வேண்டிய எத்தனையோ பண்பாடுகள் உள்ளன.இதனை நாம் பண்பாடாக பார்க்கக்கூடாது. அப்படி ஒருக்கால் அவர்களுக்கு வாழ்த்து கூறியே ஆக வேண்டும் என்று கருதினால் பாவம் ஏற்படாத வகையில் இவ்வாறு வாழ்த்து கூறலாம்.
அவர்களின் பண்டிகை நாளன்று‚
இந்த நன்னாளில் நீங்கள்
எல்லா நலமும் பெற்றிட இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு நாம் அந்த பண்டிகையின் பெயரைக் குறிப்பிடாமல் வாழ்த்தும் போது நமக்கும் பாவம் ஏற்படாது. அவர்களும் நமது பண்டிகைக்குத்தான் வாழ்த்துச்சொல்கிறார் என்று நினைத்துக்கொள்வார்கள்.

12 . @@@@@@@
கப்ரிலும் மறுமையிலும் கிடைக்கும் வாழ்த்துக்கள்
A . மரணத்தின் போது மலக்குகளின் வாழ்த்து
-------------------------------------------------------------
நல்லடியார்களின் உயிரைக் கைப்பற்ற வரும் மலக்குகள்

(( يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي ))

என்று வாழ்த்துக் கூறி உயிரைக் கைப்பற்றுவார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.(89:27-30)
B . கப்ரில் கிடைக்கும் வாழ்த்து
---------------------------------------------
கப்ரில் வைக்கப்பட்ட நல்லடியாரிடம் மலக்குகள் தங்கள் விசாரணையை முடித்து‚
نم كنومة العروس
என்று வாழ்த்திவிட்டுச்சென்ற பிறகு அவரது நல்லமல்கள் அழகிய மனித உருவில் வந்து‚

ويأتيه رجل حسن الوجه حسن الثياب طيب الريح فيقول : أبشر بالذي يسرك هذا يومك الذي كنت توعد ، فيقول : ومن أنت ؟ فوجهك الوجه الذي يجيء بالخير فيقول : أنا عملك الصالح ،
அவருக்கு வாழ்த்துக்கூறும் என்று பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்.(நூல்: அபூதாவூத்)
C . மஹ்ஷரில் சொல்லப்படும் வாழ்த்து
-----------------------------------------------------------
கியாமத் முடிந்து திரும்ப எழுப்பப்பட்டு மஹ்ஷரில் நிற்கும் போது நல்லடியார்களிடம் மலக்குகள் வந்து‚

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ (30) نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۖ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ (31)
என்று வாழ்த்துவார்கள்.   (سورة فصلت 30٫31)

சொர்க்கத்தில் நுழையும்போது.
------------------------------------------------------
நல்லடியார்கள் சொர்க்கத்தில் நுழையும்போது மலக்குகள் அவர்களிடம் வந்து‚

الَّذِينَ تَتَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ طَيِّبِينَ ۙ يَقُولُونَ سَلَامٌ عَلَيْكُمُ ادْخُلُوا الْجَنَّةَ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ (32)
என்று வாழ்த்துவார்கள்(.நஹ்ல்:32)

D . சொர்க்கத்தில் நுழைந்த பின்
------------------------------------------------
சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பிறகு அல்லாஹூ தஆலா   அவர்களுக்கு'

( كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ (24)
என்று வாழ்த்துக் கூறுவான்.(அல்ஹாக்கா:24)

வாழ்த்துக் கூறுதல் என்பது ஒரு முஃமினுக்கு இவ்வுலகுடன் முடிந்து போகும் விஷயமல்ல.மாறாக அவரது உயிர் பிரியும் போதும்‚கப்ரிலும்‚மஹ்ஷரிலும்‚சொர்க்கத்திலும் தொடரும் என்பதைப்பார்த்தோம்.
எனவே பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கற்றுத் தந்த-ஸஹாபாக்களும்‚நமது முன்னோர்களும் கடைபிடித்து வந்த இந்த உயரிய சுன்னத்தை நாமும் கடைபிடித்து பிறரின் வாழ்வில் ஏற்படும் சந்தோஷமான தருணங்களில் அவர்களை மனதார வாழ்த்தியும் நமது வாழ்வில் ஏற்படும் சந்தோஷமான தருணங்களில் பிறரிடமிருந்து வாழ்த்தைப்பெற்றும் நமது வாழ்வை மகிழ்ச்சிகரமாக ஆக்கிக் கொள்வதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக ! ஆமீன் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.