சகோதர சமயத்தாரையும் அரவணைப்போம்...
*****************************
قول الله عز وجل:
يَٰٓأَيُّهَا
ٱلنَّاسُ إِنَّا خَلَقۡنَٰكُم مِّن ذَكَرٖ وَأُنثَىٰ وَجَعَلۡنَٰكُمۡ شُعُوبٗا
وَقَبَآئِلَ لِتَعَارَفُوٓاْۚ إِنَّ أَكۡرَمَكُمۡ عِندَ ٱللَّهِ أَتۡقَىٰكُمۡۚ
إِنَّ ٱللَّهَ عَلِيمٌ خَبِيرٞ⭕
قول النبي صلى الله
عليه وسلم : ١- [عن عبدالله بن مسعود:] الخَلقُ عيالُ اللَّهِ، فأحبُّ
الخلقِ إلى اللَّهِ مَن أحسنَ إلى عيالِهِ
البيهقي (٤٥٨ هـ)،
شعب الإيمان ٦/٢٥٢٨ • إسناده ضعيف • أخرجه الطبراني في «المعجم الأوسط» (٥٥٤١ )،
وأبو نعيم في «حلية الأولياء » (٢/ ١٠٢)، والبيهقي في «شعب الإيمان» (٧٠٤٨ )
அகிலங்களை
படைத்து அவைகளுக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்தி இயக்கிக் கொண்டிருக்கும்
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகட்டுமாக!
வல்லோன்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இறுதித் தூதராக அகிலத்தாருக்கு அருட்கொடையாக
கருணையின் மறுஉருவாக அனுப்பப்பட்ட அண்ணல் நபி ஸல் அவர்கள் மீதும் அவர்களின்
பரிசுத்த குடும்பத்தினர் மற்றும் முஃமின்களின் மீது பணிவும் காஃபிர்களின் மீது
துணிவும் கொண்ட சத்திய ஸஹாபாக்களின் மீதும் அவர்களது வழிமுறைகளை வழுவாது பின்பற்றி
நடந்த , நடந்து கொண்டிருக்கக் கூடிய இனிமேல் நடக்கவிருக்கிற எல்லா
நல்லடியார்கள் மீதும் அல்லாஹ்வின் ஸலாத்தும் ஸலாமும் என்றென்றும் உண்டாகட்டுமாக
ஆமீன்.
அல்லாஹ்வின்
கருணை இல்லாமல் இவ்வுலகம் ஒரு நொடிப் பொழுதும் இயங்காது அவன் கருணையால் சகிப்புத்
தன்மையால் மாறு செய்யும் கூட்டம் நிறைந்திருந்தும் அவனது அன்பும் அருளும் மிகைத்தே
இருக்கிறது.
وَلَوۡ يُؤَاخِذُ
ٱللَّهُ ٱلنَّاسَ بِظُلۡمِهِم مَّا تَرَكَ عَلَيۡهَا مِن دَآبَّةٖ وَلَٰكِن
يُؤَخِّرُهُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗىۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمۡ لَا
يَسۡتَـٔۡخِرُونَ سَاعَةٗ وَلَا يَسۡتَقۡدِمُونَ⭕
மனிதர்கள்
செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக
இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட
தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவணை வந்து
விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும்
மாட்டார்கள். (அல்குர்ஆன் 16: 61)
அல்லாஹ்வின்
கருணை நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறது...
"تخلقوا
بأخلاق الله "
"அல்லாஹ்வின்
பண்புகளை நம் பண்புகளாக ஆக்க வேண்டும் " என்ற
சூஃபியாக்களின் சொல்லிற்கிணங்க நாம் அல்லாஹ்வின் படைப்புகளின் மீது கருணையோடும்
உபகாரத்தோடும் நடந்து கொள்ள வேண்டும்...
١- [عن عبدالله بن مسعود:] الخَلقُ عيالُ اللَّهِ، فأحبُّ الخلقِ إلى
اللَّهِ مَن أحسنَ إلى عيالِهِ
البيهقي (٤٥٨ هـ)،
شعب الإيمان ٦/٢٥٢٨ • إسناده ضعيف • أخرجه الطبراني في «المعجم الأوسط» (٥٥٤١ )،
وأبو نعيم في «حلية الأولياء » (٢/ ١٠٢)، والبيهقي في «شعب الإيمان» (٧٠٤٨ )
அப்துல்லாஹ்
இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் அறிவித்தார்கள் " படைப்புகள்
யாவும் அல்லாஹ்வின் குடும்பமாகும் படைப்பினங்களில் அல்லாஹ்விற்கு மிகவும்
பிரியமானவர்கள் யார் அவனுடைய குடும்பத்தாரிடம் உபகாரமாக நடந்து கொள்கிறாரோ அவரே
ஆவார்"
(நூல்: பைஹகீ)
நபிகள் நாயகம்
ஸல் அவர்கள் இஸ்லாத்தை ஏற்காத மாற்று கொள்கையுடையவர்களையும் அரவணைத்து சென்றது
தான் இஸ்லாமிய வளர்ச்சிக்கு வித்திட்டது என்றால் மிகையாகாது....
لَا يَنْهٰٮكُمُ
اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ
يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا اِلَيْهِمْ
اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ
(நம்பிக்கையாளர்களே!)
மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள்
இல்லத்திலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை
செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ்
தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 60:8)
إِنَّ النَّبِيَّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتْ بِهِ جِنَازَةٌ فَقَامَ، فَقِيلَ لَهُ:
إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ، فَقَالَ: «أَلَيْسَتْ نَفْسًا»
அப்துர் ரஹ்மான்
இப்னு அபீ லைலா அறிவித்தார்.
ஸஹ்ல் இப்னு
ஹுனைஃபு(ரலி), கைஸ் இப்னு ஸஅத்(ரலி) ஆகியோர் காதிஸியாவில் ஓரிடத்தில்
அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. உடனே அவர்கள் இருவரும்
எழுந்தார்கள். அப்போது அவர்களிடம் 'இது இந்நாட்டில்
அபயம் பெற்ற (காபிரின்) ஜனாஸாவல்லவா?' எனக்கேட்கப்பட்டது.
அதற்கு
அவ்விருவரும், 'நபி(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா சென்றபோது எழுந்து
நின்றார்கள்; அப்போது அவர்களிடம் அது யூதரின் ஜனாஸா தான் ( முஸ்லிமுடையது
அல்ல) எனக் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ' அவர் ஒரு
மனிதரில்லையா?' எனப் பதிலளித்தார்கள் என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1312.
அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள் .
எனவே தான்
ஸஹாபாக்கள் தனது அண்டை வீட்டில் வசித்த யூதரிடமும் உபகாரத்தை
வெளிப்படுத்தினார்கள்.
عن مجاهد قال: كنت
عند عبد الله بن عمرو - وغلامه يسلخ شاة - فقال: يا غلام، إذا فرغت فابدأ بجارنا
اليهودي، فقال رجل من القوم: اليهودي أصلحك الله؟ قال: إني سمعت النبي صلى الله
عليه وسلم يوصي بالجار، حتى خشينا أو رئينا أنه سيورثه (الأدب المفرد : 128 , قال
الشيخ الألباني صحيح )
முஜாஹித் (ரஹ்)
அவர்கள் அறிவித்தார்கள். நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்களுடன் இருந்தேன்.
அவரது அடிமை ஆட்டை உரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர்கள் அடிமையே! நீ
(உரித்து) முடித்ததும் நம்முடைய அண்டை வீட்டார் யூதருக்கு முதலில் கொடு
என்றார்கள். அப்பொழுது சமூகத்தில் ஒருவர் (கேட்டார் .முதலில்) யூதருக்கா? அல்லாஹ் உங்களை
சீர்த்திருத்துவானாக! என்று சொன்னார் . அதற்கவர்கள் நிச்சயமாக நான் நபி (ஸல்)
அவர்கள் அண்டை வீட்டாரை எங்களுக்கு வாரிசாக்கி விடுவார்களோ என்று அஞ்சுமளவிற்கு
அவர்கள் குறித்து எங்களுக்கு வஸிய்யத் செய்தார்கள். (அல்அதபுல் முஃப்ரத் : 128)
இஸ்லாமிய
கலீஃபாக்கள் மாற்று மதத்தைச் சார்ந்தவர்களிடம் காட்டிய கருணை.....
முதல் கலீஃபா
அபூபக்கர் சித்தீக் ரலீ அவர்களது ஆட்சிக் காலத்தில் காலித் இப்னு வலீத் ரலீ
அவர்கள் ஈராக் நாட்டில் ஹீரா பகுதியில் வசிக்கும் அபயம் தேடி வந்த ஏழைகள்
(திம்மிகள்) விஷயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கடிதம் மூலம் விளக்கம்
தேடினார்கள் அவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள் .அதற்கு பதில்
கடிதத்தில் அபூபக்கர் சித்தீக் ரலீ அவர்கள் எழுதினார்கள்...
في خلافة أبي بكر
رضي الله عنه كتب خالد بن الوليد رضي الله عنه في عقد الذمة لأهل الحيرة بالعراق -
وكانوا من النصارى - : "وجعلت لهم أيما شيخ ضعف عن العمل، أو أصابته آفة من
الآفات أو كان غنياً فافتقر، وصار أهل دينه يتصدقون عليه طرحت جزيته، وعيل من بيت مال
المسلمين هو وعياله
" வேலை செய்ய
முடியாத பலவீனமான வயோதிகர் அல்லது ஏதாவது விபத்தில் சிக்கியவர், அல்லது
பணக்காரராக வாழ்ந்து ஏழையாகி அவரது மதத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்கு தர்மம்
செய்யும் நிலையில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் ஜிஸ்யா வரியை நான்
அகற்றி அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பைதுல்மால் - முஸ்லிம்களின் பொது
சேமிப்பு நிதியிலிருந்து உதவி செய்யுமாறு உத்தரவிடுகிறேன்" என எழுதினார்கள்.
ஹஜ்ரத் உமர் ரலீ
அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த யூதப் பெரியவரை
அழைத்து அவருக்கு உதவி செய்து அனுப்பி வைத்தார்கள்.
مرّ عمر بن الخطاب
رضي الله عنه بباب قوم وعليه سائل يسأل: شيخ كبير ضرير البصر، فضرب عضده من خلفه
وقال: من أي أهل الكتاب أنت؟ قال: يهودي، قال: فما ألجأك إلي ما أرى؟ قال: أسأل
الجزية والحاجة والسن، قال: فأخذ عمر بيده وذهب به إلى منزله فرضخ له بشيء من
المنزل، ثم أرسل إلى خازن بيت المال فقال: انظر هذا وضرباءه فوالله ما أنصفناه، أن
أكلنا شبيبته ثم نخذله عند الهرم "إنما الصدقات للفقراء والمساكين"
والفقراء هم المسلمون، وهذا من المساكين من أهل الكتاب، ووضع عنه الجزية وعن
ضربائه... (تاريخ الاسلام)
ஹஜ்ரத் உமர் ரலீ
அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் சில கூட்டத்தாரின் வீடுகளை கடந்து சென்று
கொண்டிருந்த போது பார்வை குறைந்த முதியவர் ஒருவர் வீடுகளின் வாசலில் பிச்சை
கேட்டுக் கொண்டிருந்தார். ஹஜ்ரத் உமர் ரலீ அவர்கள் பின்னால் இருந்து அவரது தோளை
தட்டி... நீர் எந்த வேதக்காரர்களை சார்ந்தவர் என்று கேட்டார்கள். அதற்கவர் யஹூதி
என்று பதிலளிக்க உமர் ரலீ அவர்கள் இந்த நிலையில் உன்னை நான் பார்க்க காரணம் என்ன ? என்று கேட்க நான்
வயோதிகத்தை முறையிட்டு ஜிஸ்யா வரியையும், தேவையையும்
கேட்கிறேன் என்றார். உடனே உமர் ரலீ அவர்கள் அவரது கையை பிடித்து அவரது வீட்டிற்கு
அழைத்துச் சென்று வீட்டிலிருந்த சில பொருட்களை வழங்கி விட்டு பின்பு பைதுல் மாலின்
பொறுப்பாளரை அழைத்து இவரைப் போன்றோரை கணக்கெடுங்கள் இவர்களின் வாலிபப் பருவத்தை
நாம் சாப்பிட்டு விட்டு வயோதிகத்தில் கைவிட்டு விட்டால் நாம் நீதவான்களாக ஆக
மாட்டோம் என்று கூறினார்கள்.......
மேலும் இந்த
முதியவருக்கும் அவரைப் போன்றவர்களுக்கும் ஜிஸ்யா வரியை நீக்கிட உத்தரவிட்டார்கள்.
(நூல் : தாரீகுல்
இஸ்லாம்)
இது போன்ற
பண்புகள் நம்மிடம் குறைந்து வருவதால் அழைப்புப் பணியில் மிகப் பெரும் தொய்வு
ஏற்பட்டுள்ளது. இதையும் தாண்டி நம் மீது பரப்பப்படும் விஷமக் கருத்துக்கள்
உண்மைப்படுத்தப் படுகிறது.
சக மனிதர்களோடு
பழகும் போது நளினப் போக்கு இல்லாமை, கொடுக்கல்
வாங்கலில் நேர்மையற்ற தன்மை, அண்டை வீட்டாரோடு சுமூகம் பேணாமை என இஸ்லாம் காட்டித் தந்த
பல நற்குணங்கள் நம்மிடம் இல்லாமல் போனது நிலைமையை மேலும் சிக்கலாக்கி விட்டது
இன்று நாம் தனித்து விடப் பட்டுள்ளோம்...
இஸ்லாம் சக
மனிதர்களோடு எவ்வாறு பழக வேண்டும் அது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகிறது...
திருமறை குர்ஆனில்
அல்லாஹ் நமக்கு உபதேசிக்கிறான்...
وَمَنۡ أَحۡسَنُ
قَوۡلٗا مِّمَّن دَعَآ إِلَى ٱللَّهِ وَعَمِلَ صَٰلِحٗا وَقَالَ إِنَّنِي مِنَ
ٱلۡمُسۡلِمِينَ⭕
எவர் அல்லாஹ்வின்
பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து "நிச்சயமாக நான்
(அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று
கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?" (இருக்கின்றார்?)
(அல்குர்ஆன் 41: 33)
وَلَا تَسۡتَوِي
ٱلۡحَسَنَةُ وَلَا ٱلسَّيِّئَةُۚ ٱدۡفَعۡ بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ فَإِذَا ٱلَّذِي
بَيۡنَكَ وَبَيۡنَهُۥ عَدَٰوَةٞ كَأَنَّهُۥ وَلِيٌّ حَمِيمٞ⭕
நன்மையும்
தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக!
அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே
போல் ஆகிவிடுவார்.
(அல்குர்ஆன் 41:34)
ஒரு முஸ்லிம்
தீங்கு செய்தவருக்கும் நன்மை செய்ய வேண்டும் அதனால் பகைமை தவிர்த்து மிகுந்த
நேசத்தை ஏற்படுத்த முடியும்...
ஹதீஸ் ஷரீஃபில்
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்...
[عن عقبة
بن عامر:] قال ثم لقيتُ رسولَ اللهِ ﷺ فأخذْتُ بيدِهِ فقُلْتُ يا رسولَ اللهِ
أخبرْني بفواضِلِ الأعمالِ فقال يا عُقْبَةُ صِلْ مَنْ قَطَعَكَ وأَعْطِ مَنْ
حرمَكَ وأَعْرِضْ عمن ظلَمَكَ وفي روايةٍ واعْفُ عمن ظلَمَكَ
الهيثمي (٨٠٧ هـ)،
مجمع الزوائد ٨/١٩١ • أحد إسنادي أحمد رجاله ثقات
உக்பா இப்னு
ஆமிர் ரலீ அவர்கள் அறிவித்தார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் கரம் பற்றி எனக்கு
உயர்ந்த அமல்களை கற்றுத் தாருங்கள் என்று நான் கேட்டேன் அதற்கவர்கள்
"உக்பாவே! உன்னை துண்டித்த உறவை சேர்ந்திரு, யார் உனக்கு
உதவவில்லையோ அவர்களுக்கு நீ உதவி செய், உனக்கு அநீதம்
செய்தாரை புறக்கணித்து விடு.
வேறு அறிவிப்பில்
"உனக்கு அநீதி இழைத்தவரை மன்னித்து விடு" என்று கூறினார்கள்.
(நூல்: மஜ்மவுஜ்
ஜவாயித்)
இக்கால
கட்டத்தில் இந்த பண்புகளை பேணி வாழ்வது நமக்கு மிகவும் இன்றியமையாததாக
இருக்கிறது.
சக முஸ்லிம்களின்
கடமைகளில் கூட பாகுபாடும், புறக்கணிப்பும், ஏன் அநீதிகள் கூட இழைக்கப்படுவதை
சமூகத்தில் நாம் கண்ணுருகிறோம் இந்நிலை மாற வேண்டும் இல்லையேல் சோதனைகளால் நாம்
மாற்றியமைக்கப் படுவோம்...
அல்லாஹ் நம்மை
பாதுகாப்பானாக ஆமீன்.
திருமணம்
உள்ளிட்ட வைபவங்களில் வசதியானவர்களில் துவங்கி நடுத்தர வர்க்கத்தினரும்
ஆடம்பரத்திற்கும் அநாவசிய நிகழ்வுகளுக்கும் பழகிப் போன கொடுமை தொடருகிறது .
இது
ஒருபுறமிருக்க அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் சிரமத்தில் காலம் தள்ளும் ஏழைகள்
நம் சமூகத்திலும், சகோதர சமுதாயத்திலும் நிரம்பியுள்ளனர் விருந்துக்கு
அழைக்காவிடினும் எஞ்சிய உணவுகளையாவது கொடுத்து உதவலாம் என்ற எண்ணமே நமக்கு
ஏற்படாமலிருக்கிறது... சுருங்கக் கூறின் நிரம்பிய வயிறுகளே தொடர்ந்து நிரப்பப்
படுகிறது சுருங்கிய வயிறுகள் தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிறது. சமயங்களில்
உறவினர்களில் கூட...
இது
அல்லாஹ்விற்கு எவ்வளவு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய செயல் .
ஹதீஸ் ஷரீஃபில்
வருகிறது.
١- [عن سعيد بن أبي سعيد المقبري:] عن أبي هريرةَ قال: من دخل على
طعامٍ ولم يدعُ له دخلَ فاسقًا وأكل حرامًا، وشرُّ الطعامِ طعامُ الوليمةِ يُدعى
الأغنياءُ ويُتركُ الفقراءُ، ومَن لم يُجبِ الدَّعوةَ فقد عصى اللهَ ورسولَه.
البوصيري (٨٤٠ هـ)،
إتحاف الخيرة المهرة ٤/ ١٣٦ • له شاهد
ஹஜ்ரத் அபூஹூரைரா
ரலி அவர்கள் அறிவித்தார்கள் "யார் அழைக்கப்படாத விருந்தில் நுழைவாரோ அவர்
பாவியாக நுழைந்து ஹராமான உணவை உட்கொள்கிறார்; உணவுகளில் மிகக்
கெட்ட உணவு ஏழைகள் விடப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்படும்
வலீமா உணவாகும்; யார் விருந்துக்கு பதிலளிக்கவில்லையோ அவர் அல்லாஹ்விற்கும்
அவனுடைய தூதுவருக்கும் மாறு செய்து விட்டார்.
(நூல் :
இத்ஹாஃபுல் ஹியரஹ் )
இந்த நிலையில்
தான் பெரும்பாலான வலீமாக்கள் நடந்து கொண்டிருக்கிறது.
நம்மை
சுற்றியுள்ள மாற்று மத சகோதரர்களை புறக்கணிப்பதன் மூலம் எதிரிகளை நாம் உருவாக்கிக்
கொண்டிருக்கிறோம். நமக்கான களத்தை நாம் தவற விடுகிறோம். அவர்களை நாம் அரவணைத்தால்
அவர்கள் நமக்கு பாதுகாப்பாகவும், இல்லையேல் எதிர்ப்பாகவும் மாற வாய்ப்புள்ளது.
நமக்கான ஆதரவும்
எதிர்ப்பும் நம்மை சுற்றியுள்ளவர்களாலே ஏற்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள
கடமைப்பட்டுள்ளோம்.
ஒரு குஜராத்
கலவரம் நமக்கு பல பாடங்களை சொல்லிக் கொண்டிருக்கின்றது . அங்கே முஸ்லிம்களும்
தாழ்தப்பட்டவர்களும் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுடன் நட்பு
கொண்டு நண்பர்களாக ஆக்கத் தவறியதால் சமூக விரோதிகள் அந்த தாழ்த்தப்பட்ட சமூக
மக்களை தன் கொள்கைகளுக்கு இலக்காக்கி சில உதவிகள் செய்து அவர்களை நமக்கெதிராக
திருப்பி விட்டு பல சேதங்களை ஏற்படுத்தினார்கள். அதனுடைய வடு கூட இன்னும் காயாமல்
இருக்கிறது.
"فاعتبروا
يا أولي الابصار"
"அகப்பார்வை
கொண்டோரே! நீங்கள் (நடந்த நிகழ்வுகளிலிருந்து) படிப்பினை பெறுங்கள்."
என்று அல்லாஹ்
குர்ஆனில் சொல்வது போல நாம் நடந்த நிகழ்வுகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்
கொள்ளவில்லையானால் ஏமாந்த சமூகமாகிப் போவோம்.
இஸ்லாத்தில்
சாதியம் இல்லை! உயர்வு தாழ்வு இல்லை! நேற்று இஸ்லாத்தை ஏற்றவரும் இன்று நமது
சகோதரர் அவர் நம்மோடு நின்று தொழுவதற்கும், இஸ்லாமிய
அடையாளங்களை பயன்படுத்தவும் எல்லாவித உரிமைகளையும் மார்க்கம்
வழங்கியுள்ளது ஆனால் இஸ்லாத்தின் பெயரால் பாகுபாடு இன்றளவும் காட்டப்படுவது
வருந்தத்தக்கது.
நாகரீகமும், நியாயமும் பேசும்
நம் சமுதாயத்தில் தான் இன்றளவும் மொழியால் பாகுபாடுகளை ஏற்படுத்தி வருகிறோம்.(
உருது முஸ்லிம், தமிழ் முஸ்லிம்)
அல்லாஹ் திருமறை
குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
يَٰٓأَيُّهَا
ٱلنَّاسُ إِنَّا خَلَقۡنَٰكُم مِّن ذَكَرٖ وَأُنثَىٰ وَجَعَلۡنَٰكُمۡ شُعُوبٗا
وَقَبَآئِلَ لِتَعَارَفُوٓاْۚ إِنَّ أَكۡرَمَكُمۡ عِندَ ٱللَّهِ أَتۡقَىٰكُمۡۚ
إِنَّ ٱللَّهَ عَلِيمٌ خَبِيرٞ⭕
மனிதர்களே!
நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை
ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக்
கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில்
எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம்
அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ்
நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
(அல்குர்ஆன் 49:13)
இஸ்லாம் உலகில்
உள்ள எல்லா மக்களுக்கான மார்க்கம் இதை சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமையில்லை
எனவே நம் அழகிய நடைமுறையால் எல்லா மக்களிடமும் அன்பு பாராட்டுவோம்
ஹிதாயத் இறைவன்
கையில் உள்ளது தான் நாடியவர்களை அவன் நேர்வழி படுத்துவான்... அதற்கு காரணிகளாக நாம்
ஆகியிருப்போம்...
ادع إلى سبيل ربك
بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله
وهو أعلم بالمهتدين (النحل : 125)
(நபியே!) உம்
இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய
உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில்
மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன்
வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும்
நன்கு அறிவான்.
(அல்குர்ஆன் 16:125)
நமது அடுத்த
தலைமுறையினருக்கு பாதுகாப்பான சூழலை நாம் விட்டுச் சொல்வோம். அதற்கு நாம் செய்ய
வேண்டியது முதலில் நமக்கு மத்தியிலான கருத்து வேறுபாடுகளை களைந்து ஒன்றுபடுவோம், பிறகு பிற
மக்களிடம் நட்பு பாராட்டுவோம் அல்லாஹ் நாடினால் அவன் கூற்றுப்படி நமது எதிரிகளும்
நம் உற்ற தோழர்களாக மாறுவார்கள்...
அல்லாஹ் தவ்ஃபீக்
செய்வானாக ஆமீன்.
وآخر دعوانا أن
الحمد لله رب العالمين
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.