வியாழன், 17 அக்டோபர், 2019

ஈமானிய உணர்வும் அதன் வெளிப்பாடுகளும்.


ஈமானிய உணர்வும் அதன் வெளிப்பாடுகளும்.
************************************


قال الله تعالي :وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ‏

وعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: كَانَ الْمُشْرِكُونَ يَقُولُونَ: لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ، قَالَ: فَيَقُولُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيْلَكُمْ، قَدْ قَدْ» فَيَقُولُونَ: إِلَّا شَرِيكًا هُوَ لَكَ، تَمْلِكُهُ وَمَا مَلَكَ، يَقُولُونَ هَذَا وَهُمْ يَطُوفُونَ بِالْبَيْتِ

மக்கள் மனமும் பணமும் நிறைந்து சந்தோஷமாக வாழ்ந்தார்கள். பூமி பசுமையாக  இருந்தது என்றெல்லாம் கதை சொல்லும் அளவிற்கு காலம் கடந்து நாம் இருந்து வருகின்றோம் .
அவ்வாறுதான் பெரும்பாலான மனிதர்கள் உறுதியான ஈமானோடு போட்டி பொறாமை இன்றி மனநிம்மதியாக மனநிறைவாக குடும்பங்கள் ஒன்றிணைந்து இறைவனையே முழுமையாக சார்ந்து வாழ்ந்து வந்தார்கள் என்று கதை சொல்லும் அளவிற்கு பெரும்பான்மையான மக்களின் இறை நம்பிக்கை சிதைந்து சேதமாகி கிடக்கக்கூடிய ஒரு அவல சூழ்நிலையில் இருக்கிறோம்.
அதனை பழுது நீக்கி பசுமை படுத்த அந்த "ஈமான்"னை மீண்டும் விதைப்பது நம்முடைய கடமை . உறுதியான நம்பிக்கை கொண்டு முழுமையாக இஸ்லாமைப் பேணி நடந்தால் மட்டுமே நல்லோர்கள் என்று சான்று பெற்ற சஹாபாக்களை போன்று நம்முடைய வாழ்வும் அமையும் அவ்வாறு அமைந்தால் மட்டுமே நாம் முஸ்லிம் என்ற பட்டியலில் வருவோம்.

فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا ‌
(சஹாபாக்களே!) நீங்கள் நம்பிக்கை கொண்டவாறே அவர்களும் நம்பிக்கை கொண்டால் மட்டுமே நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைவார்கள். (அல்குர்ஆன் : 2:137)
எனவே அதற்காக நாம் கடைபிடிக்க வேண்டிய சில காரியங்கள்

1.@@@@@@@
நம்ஈமான் ஆழமாக வேர் பாய வேண்டும்

اَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللّٰهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ اَصْلُهَا ثَابِتٌ وَّفَرْعُهَا فِى السَّمَآءِۙ‏
(நபியே! "தவ்ஹீத் கலிமா" என்னும்) நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு (மிக்க மேலான) உதாரணத்தைக் கூறுகிறான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவ்வாக்கியம்) வானளாவிய கிளைகளையும் (பூமியில்) ஆழப்பாய்ந்த வேரையும் உடைய ஒரு நல்ல மரத்திற்கு ஒப்பாக இருக்கிறது. (அல்குர்ஆன் : 14:24)
ஈமான் நுனிப்புல் மேய்ந்ததாக இருப்பது கூடாது முனாபிக்களின் ஈமான் போன்று.
யாசிர் (ரலி) / சுமையா (ரலி) / பிலால் (ரலி) இவர்கள் சோதனைக்கு சித்ரவதை செய்யப்பட்ட நிலையிலும் ஈமான் வெளிப்பட்டது. உறுதியாக இருந்தார்கள்.

2 . @@@@@@@

பேச்சிலும் மூச்சிலும் வெளிப்படும் ஈமானிய உணர்வலைகள்.
விதை விதைத்தால் நல்ல விதையாக இருந்தால் வெடித்து பூமியை பிழந்து முளைக்க வேண்டும் . முளைக்காவிட்டால் அது பதறு என்பதாக அர்த்தம்.

وَالْبَلَدُ الطَّيِّبُ يَخْرُجُ نَبَاتُهٗ بِاِذْنِ رَبِّهٖ ‌ وَالَّذِىْ خَبُثَ لَا يَخْرُجُ اِلَّا نَكِدًا ‌ كَذٰلِكَ نُصَرِّفُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّشْكُرُوْنَ‏
(ஒரேவிதமான மழை பெய்தபோதிலும்) வளமான பூமி, தன் இறைவனின் கட்டளையைக் கொண்டே எல்லா புற்பூண்டுகளையும் வெளியாக்குகிறது. எனினும், கெட்ட (வளமற்ற) பூமியிலோ வெகு சொற்பமாகவே தவிர முளைப்பதில்லை. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு பல வகைகளிலும் (நம்முடைய) வசனங்களை விவரிக்கின்றோம்.(அல்குர்ஆன் : 7:58)

நபி மூஸா (அலை) அவர்களை தோற்கடிப்பதற்காக வந்த சூனியக்காரர்கள்-மந்திரவாதிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் இந்த நேரத்தில் இவர்களை பிர்வ்ன் மிரட்டும் நேரத்தில் அவர்கள் முழங்கிய கர்ஜனை

قَالُوْا لَنْ نُّؤْثِرَكَ عَلٰى مَا جَآءَنَا مِنَ الْبَيِّنٰتِ وَالَّذِىْ فَطَرَنَا‌ فَاقْضِ مَاۤ اَنْتَ قَاضٍ‌  اِنَّمَا تَقْضِىْ هٰذِهِ الْحَيٰوةَ الدُّنْيَا ‏
அதற்கவர்கள் (கொடுங்கோலனான ஃபிர்அவ்னை நோக்கி) "எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ செய்துகொள். நீ செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்.(அல்குர்ஆன் : 20:72)

எனவே நம்முடைய ஈமான்-இஸ்லாம் தொழுகை வணக்க வழிபாடுகள் நற்குணம் நடை உடை தாடி புர்காவின் மூலமாகவும் அது வெளிப்பட வேண்டும் . அவ்வாறு வெளிப்பட வில்லையானால் ஈமான் உறுதியாகவில்லை என்பதுவே அர்த்தம்
3 . @@@@@@@

والقدر خيره وشره من الله تعالى.
நல்லதோ கெட்டதோ யாவுமே அல்லாஹ்வால் மட்டுமே நடக்கின்ற தவிர வேறு யாருக்கும் எதற்கும் எந்தப் பங்கும்(-சக்தியும்) இல்லை

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: كَانَ الْمُشْرِكُونَ يَقُولُونَ: لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ، قَالَ: فَيَقُولُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيْلَكُمْ، قَدْ قَدْ» فَيَقُولُونَ: إِلَّا شَرِيكًا هُوَ لَكَ، تَمْلِكُهُ وَمَا مَلَكَ، يَقُولُونَ هَذَا وَهُمْ يَطُوفُونَ بِالْبَيْتِ
__
[شرح محمد فؤاد عبد الباقي]
ش (قد قد) قال القاضي روى بإسكان الدال وكسرها مع التنوين ومعناه كفاكم هذا الكلام فاقتصروا عليه ولا تزيدوا]
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பாளர்கள் (ஹஜ்ஜின்போது) "லப்பைக், லா ஷரீக்க லக்" (உன் அழைப்பை ஏற்றோம். உனக்கு இணை ஏதுமில்லை) என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்குக் கேடுதான். போதும்! போதும்! (இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்)" என்பார்கள். (ஏனெனில்,) அதன் பிறகு இணைவைப்பாளர்கள் "இல்லா ஷரீக்கன் ஹுவ லக்க. தம்லிகுஹு வ மா மலக் (ஆனால், உனக்கு ஓர் இணையாளன் இருக்கின்றான்; அவனுக்கு நீ எசமானன். அவன் எவருக்கும் எசமான் அல்லன்; அல்லது அவனுக்கும் அவனுடைய உடமைகளுக்கும் நீயே அதிபதி) என்றும் கூறுவார்கள். இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரும்போது, இவ்வாறு இணைவைப்பாளர்கள் கூறுவார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2209. அத்தியாயம் : 15. ஹஜ்

மக்காவிலிருந்த குறைஷிகளும் ஈமான் கொண்டு இருந்தார்கள் ஆனால் அது அர்த்தமற்றது. அதாவது அல்லாஹ்வுக்கும் சக்தி உண்டு . நல்லடியார்களில் யாருக்கு கொடுத்திருக்கிறானோ அவங்களுக்கும் சக்தி உண்டு என்று நம்பி அவர்களை இடத்தரகர் களாகஆக்கி துஆ-வணக்கம் செய்து வந்தார்கள். இதுபோன்ற நம்பிக்கை குப்ர். இது கூடாது.
وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ‏
அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆயினும் (அவனோடு மற்றவர்களையும்) இணையாக்குகிறார்கள். (அல்குர்ஆன் : 12:106)
4 . @@@@@@@

ஸஃபர் மாதம் பீடை நல்ல நேரம் கெட்ட நேரம் கூடாது.

2180  عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَرَجَ إِلَى حُنَيْنٍ مَرَّ بِشَجَرَةٍ لِلْمُشْرِكِينَ يُقَالُ لَهَا: ذَاتُ أَنْوَاطٍ يُعَلِّقُونَ عَلَيْهَا أَسْلِحَتَهُمْ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ ذَاتُ أَنْوَاطٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " سُبْحَانَ اللَّهِ هَذَا كَمَا قَالَ قَوْمُ مُوسَى {اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ} [الأعراف: 138] وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَرْكَبُنَّ سُنَّةَ مَنْ كَانَ قَبْلَكُمْ ":
ஹுனைன் போர்க்களத்திற்கு புறப்பட்ட நேரத்தில் காபிர்கள் மதிக்கின்ற “ذَاتُ أَنْوَاطٍ தாது அன்வாத்” என்ற ஒரு மரத்தைக் கடந்து சென்றார்கள் நபி (ஸல்) அவர்கள் .
காபிர்கள் தன்னுடைய ஆயுதத்தை அதில் தொங்கவிட்டு எடுப்பார்கள் “பரக்கத்” கிடைக்கும் என நம்பி .
இதுபோன்று “தாது அன்வாத்” என்ற ஒரு மரத்தை எங்களுக்கும்  தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று சொன்னார்கள் சில முஸ்லிம்கள் .
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (கோபத்தால்) சொன்னார்கள் ஸுப்ஹானல்லா என்னடா இது மூசா நபி (அலை) அவர்களிடத்தில் அவரின் கூட்டத்தார்கள் கேட்டதைப் போலிருக்கிறது .
(நபியே) இந்த(ஊர்)மக்களுக்கு நிறைய தெய்வங்கள்-சிலை இருக்கின்றன இதுபோன்று  ஒரே ஒரு தெய்வத்தை-சிலை வணங்க எங்களுக்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டது போல இருக்கிறதே.
அல்லாஹ்வின் மீது ஆணையாக சொல்கிறேன் நீங்கள் முன் சென்றோரின் அதே வழிமுறையை பின்பற்றி கொண்டிருக்கிறீர்கள் என வன்மையாக கண்டித்தார்கள் (ஹதீஸ் திர்மிதி 2180)

3313 - عن ﺛﺎﺑﺖ ﺑﻦ اﻟﻀﺤﺎﻙ، قال نذرَ رجلٌ على عهدِ رسولِ الله -صلَّى الله عليه وسلم- أن ينحرَ إبلاً ببُوانةَ، فأتى رسول الله -صلَّى الله عليه وسلم -، فقال: إني نذرتُ أن أنحر إبلاً ببُوانةَ، فقال رسول الله -صلَّى الله عليه وسلم-: "هل كان فيها وثنٌ من أوثانِ الجاهليةُ يُعبَدُ؟ " قالوا: لا، قال: "هل كان فيها عِيدٌ من أعيادِهم؟ "
நபி (ஸல்)அவர்களிடத்தில் ஒரு தூதர் வந்து கேட்டார் . ”புவானா” என்ற இடத்தில் சென்று ஒரு ஒட்டகத்தை அறுத்து பலியிட நான் நேர்ச்சை செய்திருந்தேன் அறியாமைக் காலத்தில்.
நபியவர்கள் கேட்டார்கள் அது சிலை வணக்கம் செய்யப்பட்ட இடமா. அவர் சொன்னார் இல்லை என.
சரி அந்தடத்தில் வேற ஏதாவது விழாக்கள் கொண்டாடப்படுமா .
அதற்கும் அவர் இல்லை என்றார்.
அப்படியானால் மட்டும் அந்த நேர்ச்சை அங்கு சென்று நிறைவேற்று. என அனுமதி வழங்கினார்கள் . ஹதீஸ் அபூ தாவூத் 3313.

A . எனவே ஸஃபர் மாதம் பீடை / அந்த மாதத்தின் கடைசிப் புதனை ஒடுக்கத்து புதன் பீடை என்று சொல்வது கூடாது. அதற்காக துஆ ஓதி குடிப்பதும் கூடாது.
B . அது ஒரு புனிதமான இடம் . அந்த இடத்திற்குச் சென்றால் அங்கு சென்று இந்த செயலை செய்தால் எனக்கு இந்த காரியம் நடக்கும் . இல்லாவிட்டால் நடக்காது என்று நம்புவது / சொல்வது கூடாது.
C . கையில் இடுப்பில் இதையும் அதையும் கட்டிக்கொண்டால் நல்லது நடக்குது இல்லாவிட்டால் முஸீபத்து என்று நம்புவதும் கூடாது
D . நல்ல நேரம்/நாள் கெட்ட நேரம்/நாள் என்று பார்பதும் கூடாது .
அந்த இடத்துக்கு போனால் / இதை கட்டினால் நல்லது நடக்குது என்று நம்பினால் இந்த இடத்திற்கும் / இந்த பொருளுக்கும் ஏதோ சக்தி உண்டு என்பதாக பொருள் படும். இது ஈமான் ஆகாது.

وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ‏
அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆயினும் (அவனோடு மற்றவர்களையும்) இணையாக்குகிறார்கள். (அல்குர்ஆன் : 12:106)

5 . @@@@@@@
பூச்சாண்டி காட்டி மிரட்டல்.
ஒருத்தருக்கு திடீரென ஒரு சோதனை உடல் நலம் குறைவு ஒரு விபத்து பரீட்சையில் தோல்வி இது போன்ற ஒரு சோதனை ஏற்பட்டால் உடனே நம்மில் சிலர் இப்படி கூவுவார்கள் . இவன் புதுமை வாதம் பேசி தொன்று தொட்டு செய்து வரும் பலதையும் மறுத்துப் பேசியதால் ... குற்றம் பிடித்துக்கொண்டது என்பதாக உளறுவார்கள் . இது மக்கா காபிர்களின் வழிமுறையாகும்.

زنيرة الرومية رضي الله عنها كانت من السابقات إلى الإسلام، أسلمت في أول الإسلام، وعذبها المشركون، ..........وربي قادر على رد بصري، فأصبحت من الغد وقد رد الله بصرها، فقالت قريش: هذا من سحر محمد.
ரோம் நாட்டைச் சேர்ந்த ஒரு சஹாபிய. அவர்களின் பெயர் ஸின்னீரா (ரலி). இவர்கள் மக்காவில் ஒரு அடிமை பெண்ணான இருந்தார்கள். ஆரம்பத்திலேயே இஸ்லாத்தை ஏற்றவர்களில் இவர்களும் ஒருவர். இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்ற பின்பு திடீரென பார்வை இழந்து(-குருடாகி) விட்டார்கள் . எங்களுடைய தெய்வங்களை நீ மதிக்காததால் அவமதிப்பு செய்ததால் எங்களுடைய தெய்வம் உன் கண்ணை பிடுங்கி விட்டன என்று மாக்கள் உலறினார்கள் அதற்கு இந்த ஸின்னீரா (ரலி) சொன்னார்கள் இது யாருடைய சக்தியும் அல்ல ஒரே இறைவன் அவனுடைய சக்தி . وربي قادر على رد   அவன் என் ஒளியை எடுத்து இருக்கிறான் அவன் விரும்பினால் எனக்கு திருப்பி தருவான் என்று ஆணித்தரமாக பதில் உரைத்தார்கள் முழு நம்பிக்கையோடு அதன் காரணமாக அடுத்த நாள் அவர்களுக்கு மீண்டும் கண் பார்வை கிடைத்தது . கண் பிரகாசம் உள்ளவர்களாக ஆனார்கள் . (நூல் உஸ்துல் காபா)

اَلَيْسَ اللّٰهُ بِكَافٍ عَبْدَهٗ‌  وَيُخَوِّفُوْنَكَ بِالَّذِيْنَ مِنْ دُوْنِهٖ‌  وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ‌ ‏
தன் அடியானுக்கு (வேண்டிய உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனல்லவா? அவர்கள் தங்கள் தெய்வங்ககளைக் கொண்டு   உங்களை பயமுறுத்துகின்றனர். (அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்.) எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகின்றானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை. (அல்குர்ஆன் : 39:36

6 . @@@@@@@

கடமையான ஒரு அமல் செய்ய தயங்கினார்கள் சஹாபாக்கள் . இல்லாததை துணிந்து செய்கின்றோம் நாம் .
உள்ளதை செய்தால் மட்டுமே நன்மை இல்லாததை எவ்வளவு பயபக்தியாய் செய்தாலும் அது பயனற்றது என்றிருக்க .
நம்மில் சிலர் இது நல்ல காரியம் தானே என்பதாக செய்ய முனைவதும் / வாதப் பிரதி வாதம் செய்வதையும் நாம் அறிவோம் . ஆனால் சஹாபாக்களும் ஐந்து கடமைகளில் ஒரு கடமையான ஹஜ் உம்ராவில் சஹ்யி (-சபா மர்வா தொங்கோட்டம்) என்ற கடமையானா ஒரு அமல் செய்ய அவர்கள் தயங்கினார்கள் . காரணம் இணைவைப்பு போல் ஒரு தோற்றம் சின்னதாக தென்படுவதால்

قَالَ عُرْوَةُ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَقُلْتُ لَهَا: أَرَأَيْتِ قَوْلَ اللَّهِ تَعَالَى: {إِنَّ الصَّفَا وَالمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ البَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا} [البقرة: 158]، فَوَاللَّهِ مَا عَلَى أَحَدٍ جُنَاحٌ أَنْ لاَ يَطُوفَ بِالصَّفَا وَالمَرْوَةِ، قَالَتْ: بِئْسَ مَا قُلْتَ يَا ابْنَ أُخْتِي، إِنَّ هَذِهِ لَوْ كَانَتْ كَمَا أَوَّلْتَهَا عَلَيْهِ، كَانَتْ: لاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ لاَ يَتَطَوَّفَ بِهِمَا، وَلَكِنَّهَا أُنْزِلَتْ فِي الأَنْصَارِ، كَانُوا قَبْلَ أَنْ يُسْلِمُوا يُهِلُّونَ لِمَنَاةَ الطَّاغِيَةِ، الَّتِي كَانُوا يَعْبُدُونَهَا عِنْدَ المُشَلَّلِ،
உர்வா அறிவித்தார்.
நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'நிச்சயமாக ஸஃபா மர்வா (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை. எனவே, (கஅபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ராச் செய்பவர்கள் அவ்விரண்டையும் வலம் வருவது குற்றமில்லை' என்ற (திருக்குர்ஆன் 02:158) இறைவசனப்படி, அல்லாஹ்வின் மீது ஆணையாக!   ஸஃபா மர்வாவுக்கிடையே வலம் வராவிட்டாலும் குற்றமில்லை என்பது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'என்னுடைய சகோதரியின் மகனே! நீர் சொன்னது தவறு. அந்த வசனத்தில் அவ்விரண்டையும் வலம் வராமலிருப்பது குற்றமில்லை என்றிருந்தாலே நீர் கூறும் கருத்து வரும். ஆனால், இவ்வசனம் அன்ஸாரிகளின் விஷயத்தில் இறங்கியதாகும். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன் அவர்கள் வணங்கி வந்த المُشَلَّلِ “முஷல்லல்” என்னும் மலைக்குன்றிலுள்ள மனாத் என்னும் சிலைக்காக இஹ்ராம் அணியும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர்.
எனவே, இப்போது (இஸ்லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா, மர்வா எனும் மலைக்குன்றை சஹ்யி-வலம் வருவது பாவமாகும் எனக் கருதினார்கள். எனவே, இஸ்லாத்தை அவர்கள் ஏற்றதும் நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி, இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஸஃபா - மர்வாவை வலம் வருவதைப் பாவமாகக் கருதுகிறோம்? எனக் கேட்டார்கள். அப்போதுதான் அல்லாஹ், 'நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை' என்ற (திருக்குர்ஆன் 02:158) வசனத்தை அருளினான். மேலும் நபி(ஸல்) அவர்கள் அவ்விரண்டுக்குமிடையே வலம் வருவதைச் செயல்படுத்திக் காட்டியுள்ளனர். எனவே, அவ்விரண்டிற்குமிடையே வலம் வருவதை விடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை' எனக் கூறினார்.
ஸஹீஹ் புகாரி : 1643. அத்தியாயம் : 25. ஹஜ்

தீனில் உள்ளதை செய்தால் மட்டுமே நன்மை இல்லாததை எவ்வளவு பயபக்தியாய் செய்தாலும் அது பயனற்றது. உள்ளதை முழுமையாக அமல் செய்வோம்.

ஆக நம்முடைய ஈமானை அந்த சஹாபாக்கள் உடைய போன்று ஆழமாக வேர் பாய்ந்ததாக ஆக்கி . ஆவதும் அழிவதும் அல்லாஹ்வால் மட்டுமே என்ற நம்பிக்கையை ஏற்று அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் எதற்கும் எந்த சக்தியும் இல்லை என்பதை செயலால் நிரூபித்து வாழ்ந்து அல்லாஹ் ரசூல் சொன்ன அமல்களை முழுமையான முறையில் செய்து இருஉலகிலும் வெற்றிபெற்ற நல்லவர்களாக் நம்மை ஆக்குவனாக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.