வியாழன், 16 பிப்ரவரி, 2017

உண்மையை மறைக்கும் ஊடகங்கள்

بسم الله الرحمن الرحيم 
உண்மையை மறைக்கும் ஊடகங்கள்
****************************************

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ  بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا  بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ‏

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ» م : 04
1)ஊடகம் என்றால் என்ன?
*****************

பொதுவாக ஊடகம் என்றால் கடத்துவது காவுவது என்று தமிழில் அர்த்தம் கொள்ளப்படுகிறது.
ஒரு செப்புக்கம்பி ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு மின்சாரத்தை கடத்திச் செல்லும் போது அது அங்கே ஒரு ஊடகமாகச் செயற்படுகிறது.அதே போல ஒருவர் பேசும்பேச்சை மற்றவர் கேட்பதற்கு அதை ஒலி அலைகளாகச் சுமந்து செல்லும் காற்று ஊடகமாகச் செயற்படுகிறது.
சுருங்கக் கூறுவதாயின் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்பவர்கள் செல்பவைகளை ஊடகம் எனலாம்.
قال الله تعالي : وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين (20)  لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين (21) فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبإ بنبإ يقين (22) إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم (23) وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون (النمل : 24)
27:20. அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து: நான் (இங்கே) ஹுத்ஹுத் (பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார்.
27:21. “
நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்என்றும் கூறினார்.
27:22. (
இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுத்ஹுத் வந்து) கூறிற்று: தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். ஸபாவிலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”
27:23. “
நிச்சயமாக (த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும் அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.
27:24. “
அவளும் அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.
இவ்வசனங்களில் ஹுத்ஹுத் பறவை சுலைமான (அலை) அவர்களுக்கு ஒரு ஊடகமாக செயல்பட்டுள்ளது.
عَنِ ابْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بَعَثَ جَيْشًا وَأَمَّرَ عَلَيْهِمْ رَجُلًا يُدْعَى سَارِيَةَ. قَالَ: فَقَامَ عُمَرُ يَخْطُبُ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ فَأَقْبَلَ يَصِيحُ وَهُوَ عَلَى الْمِنْبَرِ: يَا سَارِيَةُ الْجَبَلَ يَا سَارِيَةُ الْجَبَلَ فَقَدِمَ رَسُولُ الْجَيْشِ فَسَأَلَهُ فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ لَقِينَا عَدُوَّنَا فَهَزَمُونَا فَإِذَا صَائِحٌ يَصِيحُ: " يَا سَارِيَةُ الْجَبَلَ فَاسْتَنَدْنَا بِأَظْهُرِنَا إِلَى الْجَبَلِ فَهَزَمَهُمُ اللَّهُ فَقِيلَ: إِنَّكَ كُنْتَ تَصِيحُ بِذَلِكَ                                     (دلائل النبوة لأبي نعيم الأصبهاني إسناده حسن جيد)
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். உமர் (ரழி) அவர்கள் ஸாரிய்யஹ் என்றழைக்கப்படுபவரின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார்கள். அப்பொழுது வெள்ளிக் கிழமை அன்று உமர் (ரழி) அவர்கள் எழுந்து மக்களுக்கு உரையாற்றினார்கள். அதில் அவர்கள் மிம்பரின் மீதிருந்த நிலையில் ''மலையில் ஏறக்கூடியவரே! மலையில் ஏறக்கூடியவரே!"" என்று சப்தமாக கூறலானார்கள்.        (பின்னர் யுத்தம் முடிந்து) படையின் தூதர் வந்ததும் உமர் (ரழி) அவர்கள் அவரிடம் விசாரித்தார்கள். அப்பொழுது அவர் அமீருல் முஃமினீன் அவர்களே! எங்களின் எதிரிகளை நாங்கள் (போரில்) எதிர் கொண்டோம். அவர்கள் எங்களை தோற்கடித்தார்கள். அப்பொழுது மலையில் ஏறக்கூடியவரே! என்று ஒருவர் சப்தமிட்டார். அச்சமயம் நாங்கள் எங்களின் முதுகுகளை மலையுடன் இணைத்துக் கொண்டோம். அப்பொழுது அல்லாஹ் அவர்களை தோற்கடித்தான். பின்னர் நீங்கள்தான் இவ்வாறு சப்தமிட்டீர்கள் என்று சொல்லப்பட்டது.                                                                                         
இந்த ஹதீஸில் உமர் (ரழி) அவர்களுக்கும் படைக்குமிடையில் காற்று ஊடகமாக பயன்பட்டுள்ளது.
2)ஊடகத்தின் முக்கியத்துவம்
***************************

يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ (المائدة :67(
தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை (மற்றவர்களுக்கு) எத்தி வைப்பீராக!
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلاَ حَرَجَ، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ» خ : 3461
என்னிடம் ஓரு விஷயத்தை நீங்கள் கேட்டிருந்தாலும் அதனை (மற்றவர்களுக்கு) எத்தி வையுங்கள்….. (புஹாரி : 3461)
மேற்குறிப்பிடப்பட்ட ஊடகத்திற்கான வரையறையின் படி ஊடகம் என்பதற்குள்
1. 
மனிதர்கள் தங்களின் பிரச்சாரத்தின் மூலம் ஊடகம் எனலாம் (பிற சாதனங்கள் உருவாக்கப்படாத காலங்கள் முதல் இன்று வரை)
2. 
இதழ்கள்
3. 
தினசரிகள்
4. 
ரேடியோக்கள்
5. 
தொலைக் காட்ச்சிகள்
6. 
இண்டர்நெட் என அனைத்தும் உள்ளடங்கும்.
3)ஊடகத்தினர் பின்பற்ற வேண்டிய விதிகள்
*******************************

1. 
பொறுப்புடமை:
வாசகர்களை நேயர்களை கவர பல்வேறு வழிமுறைகளை பின்பற்றும் உரிமை ஊடகங்களுக்கு உண்டு. ஆனால் இந்த உரிமைகளை பயன்படுத்தும் பொழுது பொதுமக்களின் நலனை கெடுக்காமல் செயல்பட வேண்டிய பொறுப்புணர்ச்சி ஊடகங்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் இன்றைய ஊடகங்கள் அப்படி செயல்பட வில்லை.
•  இன்றைய ஊடகங்கள் பொது மக்களை கவருவதற்காக பொதுமக்களில் ஆண்கள், பெண்கள்> சிறார்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரையும் நாசப்படுத்தும் வகையில் ஆபாசமான  விளம்பரங்களை வெளியிடுகின்றார்கள். விளம்பரங்களில் பெரும்பாலும் தொடர்பு இருக்கின்றதோ இல்லையோ பெண்களே நடிக்க வைக்கப்படுகின்றார்கள். இதில் சிறுமிகுளம் உள்ளடக்கம். இதன் பலன் சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தில் 17 வயது நந்தினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். (திஹிந்து தமிழ் 11-02-2017)
2.  பத்திரிக்கைச் சுதந்திரம்:
மனித இனத்தின் தலையாய உரிமைகளின் ஒன்று பத்திரிக்கைச் சுதந்திரம். சட்டத்திற்கு புறம்பாக போகாமல் எதனைப் பற்றியும் வெளியிட, விவாதிக்க ஊடகங்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் இருக்க வேண்டும். (இதழியல் கலை டாக்டர் மா.பா குருசாமி)
•  ஊடகங்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரங்கள் இருக்க வேண்டும் என்பது உண்மைதான். அப்படி இருந்தால்தான் அரசியல்வாதிகள் போன்று சமூகத்தில் தலைவர்களாக இருந்து கொண்டு தவறு செய்பவர்களை இணங்கண்டு மக்களுக்கு முன் நிறுத்தவும், கேள்வி கேட்கவும் முடியும். ஆனால் இந்த கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை மீடியாக்கள் தவறாக பயன்படுத்தி மற்றவர்களின் கொளரவத்தோடு விளையாடுவதற்காகவும், பனத்தை பறிக்க தங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதன்படி திரைமறைவில் யாரேனும் தவறுகள் செய்து, காவல் துறையிடமோ அல்லது பொதுமக்களிடமோ சிக்கிக் கொண்டால் அதனை வெளியிடுவோம் என்று மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கின்றனர்.
• 
அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சும் போது மட்டும் இந்த சுதந்திரத்தை கண்டு கொள்வதில்லை. இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு பா.. வின் குஜராத் உள்ளாட்சி தேர்தல் தோல்வி. எந்த ஊடகமும் வெளிட வில்லை.
3.  நம்பிக்கை, உண்மை, துல்லியம்.
ஊடகங்கள் நம்பிக்கையாகவும், உண்மையாகவும், துல்லியமாகவும் செய்திகளை வெளியிட வேண்டும். இதற்கு மாறாக செய்திகளை வேண்டுமென்றே திரித்தோ அல்லது வேறு முரண்பட்ட பொருள்படும் வகையிலோ வெளியிடுவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
ஊடகங்கள் பொய்மையை பறப்புவதற்கான சான்றுகள்
**************************

சில மாதங்களுக்கு முன்பு கும்பகோணத்தி்ல் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு கும்பகோணம் வட்டார உலமா சபையின் சார்பாக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களையும் அழைத்து நடத்தப்பட்டது. அதில் அனைத்து மீடியாக்களும் அழைக்கப்பட்டு செய்தி கொடுக்கப்பட்டது.ஆனால் சில சில மீடியாக்கள் முஸ்லிம்கள் காவிரி பிரச்சினைக்காக போராட்டம் நடத்தினார்கள் ஹெட்டிங் கொடுத்து  வேறு கோணத்தில் திசை திருப்பியது.தீர்மாணங்களில் இதுவும் ஒன்றாக இருந்தாலும் அசல் தீர்மாணமான பொது சிவில் எதிர்ப்பு கூட்டம் என்பதையே மறைத்து செய்தி வெளியிட்டது.
உண்மையை மறைத்து பொய்யைக் கூறி பிரச்சனையை உண்டாக்குபவர் முஸ்லிமாக இருந்தாலும் அவரைக் கண்டித்து வசனம்..
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَأٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ (الحجرات6)
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
(
அல்குர்ஆன் : 49:6)
عن الْحَارِث بْن أَبِي ضِرَارٍ الْخُزَاعِيِّ قَالَ قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَانِي إِلَى الْإِسْلَامِ فَدَخَلْتُ فِيهِ وَأَقْرَرْتُ بِهِ فَدَعَانِي إِلَى الزَّكَاةِ فَأَقْرَرْتُ بِهَا وَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرْجِعُ إِلَى قَوْمِي فَأَدْعُوهُمْ إِلَى الْإِسْلَامِ وَأَدَاءِ الزَّكَاةِ فَمَنْ اسْتَجَابَ لِي جَمَعْتُ زَكَاتَهُ فَيُرْسِلُ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَسُولًا لِإِبَّانِ كَذَا وَكَذَا لِيَأْتِيَكَ مَا جَمَعْتُ مِنْ الزَّكَاةِ فَلَمَّا جَمَعَ الْحَارِثُ الزَّكَاةَ مِمَّنْ اسْتَجَابَ لَهُ وَبَلَغَ الْإِبَّانَ الَّذِي أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْعَثَ إِلَيْهِ احْتَبَسَ عَلَيْهِ الرَّسُولُ فَلَمْ يَأْتِهِ فَظَنَّ الْحَارِثُ أَنَّهُ قَدْ حَدَثَ فِيهِ سَخْطَةٌ مِنْ اللَّهِ عَزَّ وَجَلَّ وَرَسُولِهِ فَدَعَا بِسَرَوَاتِ قَوْمِهِ فَقَالَ لَهُمْ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ وَقَّتَ لِي وَقْتًا يُرْسِلُ إِلَيَّ رَسُولَهُ لِيَقْبِضَ مَا كَانَ عِنْدِي مِنْ الزَّكَاةِ وَلَيْسَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْخُلْفُ وَلَا أَرَى حَبْسَ رَسُولِهِ إِلَّا مِنْ سَخْطَةٍ كَانَتْ فَانْطَلِقُوا فَنَأْتِيَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْوَلِيدَ بْنَ عُقْبَةَ إِلَى الْحَارِثِ لِيَقْبِضَ مَا كَانَ عِنْدَهُ مِمَّا جَمَعَ مِنْ الزَّكَاةِ فَلَمَّا أَنْ سَارَ الْوَلِيدُ حَتَّى بَلَغَ بَعْضَ الطَّرِيقِ فَرِقَ فَرَجَعَ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْحَارِثَ مَنَعَنِي الزَّكَاةَ وَأَرَادَ قَتْلِي فَضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَعْثَ إِلَى الْحَارِثِ فَأَقْبَلَ الْحَارِثُ بِأَصْحَابِهِ إِذْ اسْتَقْبَلَ الْبَعْثَ وَفَصَلَ مِنْ الْمَدِينَةِ لَقِيَهُمْ الْحَارِثُ فَقَالُوا هَذَا الْحَارِثُ فَلَمَّا غَشِيَهُمْ قَالَ لَهُمْ إِلَى مَنْ بُعِثْتُمْ قَالُوا إِلَيْكَ قَالَ وَلِمَ قَالُوا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ بَعَثَ إِلَيْكَ الْوَلِيدَ بْنَ عُقْبَةَ فَزَعَمَ أَنَّكَ مَنَعْتَهُ الزَّكَاةَ وَأَرَدْتَ قَتْلَهُ قَالَ لَا وَالَّذِي بَعَثَ مُحَمَّدًا بِالْحَقِّ مَا رَأَيْتُهُ بَتَّةً وَلَا أَتَانِي فَلَمَّا دَخَلَ الْحَارِثُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنَعْتَ الزَّكَاةَ وَأَرَدْتَ قَتْلَ رَسُولِي قَالَ لَا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا رَأَيْتُهُ وَلَا أَتَانِي وَمَا أَقْبَلْتُ إِلَّا حِينَ احْتَبَسَ عَلَيَّ رَسُولُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَشِيتُ أَنْ تَكُونَ كَانَتْ سَخْطَةً مِنْ اللَّهِ عَزَّ وَجَلَّ وَرَسُولِهِ قَالَ فَنَزَلَتْ الْحُجُرَاتُ{ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ... } (مسند أحمد)حديث الحارث بن ضرار ஹாரிஸ் ரழி கூறுகிறார்கள்- நான் நபி ஸல் அவர்களிடம் வருகை தந்தேன். என்னை இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். நான் ஏற்றுக்கொண்டேன். என்னை ஜகாத் தரும்படி ஏவினார்கள் அதற்கும் சம்மதித்தேன். பிறகு நான் நபியவர்களிடம் யாரஸூலல்லாஹ் நான் என் சமூகத்தாரிடம் சென்று இஸ்லாத்தைக் கூறி, ஜகாத்தையும் தூண்டுவேன். அவர்களிடம் நான் ஜகாத்தை சேமித்த பின் நீங்கள் ஒரு தூதரை அனுப்புங்கள். அவரிடம் அவற்றை ஒப்படைத்து விடுகிறேன் என்றேன் அதற்கு நபி ஸல் சம்மதித்தார்கள் அதன்படி ஹாரிஸ் ரழி ஜகாத் பொருளை சேகரித்து தூதரின் வருகைக்காக காத்திருந்தார். நபி ஸல் வலீத் இப்னு உக்பாவை ஹாரிஸிடம் அனுப்பி வைத்தார்கள். அந்த வலீத் பாதி தூரம் வந்தவர் (ஹாரிஸ் சமூகத்தவருக்கும் இவருக்கும் உள்ள பழைய பகையால் தம்மை ஏதேனும் செய்து விடுவார்களோ என பயந்து) அங்கு செல்லாமல் திரும்பி வந்து யாரஸூலல்லாஹ் நான் ஹாரிஸிடம் சென்று ஜகாத்தை கேட்க அதை அவர் கொடுக்க மறுத்து என்னைக் கொல்லவும் துணிந்தார். என்று பொய்யான தகவலை நபி ஸல் அவர்களிடம் கூற நபி ஸல் அவர்கள் அந்த சமூகத்தை நோக்கி ஒரு படையை அனுப்புகிறார்கள். இதற்கிடையில் தூதர் வருவார் என்று முடிந்த வரை காத்திருந்த ஹாரிஸ் அவர்கள் தன் சமூக மக்களிடம் வாருங்கள் நாம் மதீனாவுக்குச் செல்வோம். நபி ஸல் அவர்களுக்கு நம் மீது ஏதேனும் கோபம் இருக்கலாம் அதனால் தான் தூதரை அனுப்பவில்லை ஆகவே நாம் செல்வோம் எனக்கூறி முக்கியமானவர்களை அழைத்துக் கொண்டு மதீனா நோக்கி வருகிறார். இதற்கிடையில் நபி ஸல் அனுப்பிய படை மதீனாவை தாண்டிய உடனே எதிரில் ஹாரிஸையும், அவரது சமூகத்தினரையும் சந்திக்கிறார்கள் உடனே அவரை சூழ்ந்து கொண்டு எதற்காக நபி ஸல் அனுப்பிய தூதரிடம் ஜகாத் கொடுக்க மறுத்து அவரையும் கொலை செய்ய முயன்றீர்கள் என்று கேட்க அதற்கு அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர் எங்களிடம் வரவேயில்லை என்று நடந்ததை கூறினார் பிறகு நபி ஸல் அவர்களிடம் வந்தார். அவர்கள் கேட்ட போதும் அவ்வாறே உண்மையை கூறினார். அப்போது தான் மேற்படி வசனம் இறங்கியது
மொகலாய மன்னர்கள் கோவில்களை இடித்து விட்டு பள்ளிவாசல்களை கட்டியதாக பொய்யான வரலாற்றை ஊடகங்கள் பறப்புகின்றது.உண்மையில் பாபர், அவுரங்கசீப் போன்றவர்கள் மன்னர்கள் என்ற அடிப்படையில் கோவில்கள் கட்ட அரசு சார்பில் மானியம் வழங்கிய வரலாறுகள் எவ்வளவோ உள்ளன. எந்த கோவிலையும் இடித்த வரலாறு இல்லை. கோயில்களை மஸ்ஜித்களாக ஆக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்கள் மொகலாய மன்னர்களுக்கு இருந்திருந்தால் இந்துக்கள் நிறைந்த இந்த நாட்டில் 800 வருடங்கள் அவர்கள் ஆட்சி செய்திருக்க முடியாது. அவரங்கசீப் அவர்கள் மற்ற மொகலாய மன்னர்களைப் போன்றில்லாமல் மார்க்கப் பற்றுடையவராக இருந்ததால் அவரை கொடுமைக்காரர், மராட்டிய மன்னன் சிவாஜியை சிறையில் வைத்து கொடுமைப்படுத்தியவர் என பாசிச ஊடகங்கள்,வரலாறுகள் சித்தரிக்கும். ஆனால் அவர் சிவாஜியை அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைத்து வைத்த போதும் சிவாஜியின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவருடைய மத சடங்குகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் அவுரங்கசீப்
•  முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும். அவர்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்களை கொலைசெய்வது போன்றும்  சித்தரிப்பது. (இது முற்றிலும் பொய்யானது)
அல்லாஹ் கூறுகின்றான்.
مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الأرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا  (المائدة : 32)
எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை தடுக்கவோ அன்றி மற்றொருவரை கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான்.
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: وُجِدَتِ امْرَأَةٌ مَقْتُولَةً فِي بَعْضِ مَغَازِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَنَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ النِّسَاءِ وَالصِّبْيَانِ» خ : 3015
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். நபிகளாரின் போர்களங்கள் ஒன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒரு பெண் கண்டெடுக்கப்பட்டால். அப்போது நபி (ஸல்) அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை போரில் கொலை செய்வதை தடுத்தார்கள்.   (புஹாரி : 3015)
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் சதி வேலை என்றைக்கோ துவங்கி விட்டது இந்தியா, பாகிஸ்தான் பிரிந்த பின் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே கலவரம் ஏற்பட்ட போது அதில் பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இச்செய்தி காந்திஜீக்கு சொல்லப்பட்ட போது காந்திஜீ அப்போதைய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலை தம்மை வந்து பார்க்குமாறு சொல்லி அனுப்பினார். முஸ்லிம்கள் பெருமளவில் கொல்லப்படுவது பற்றித்தான் அழைத்துள்ளார் என்பதை புரிந்து கொண்ட பட்டேல் காந்திஜீக்கு கிடைத்த தகவல் மிகைப்படுத்தப்பட்டவைஎன்றும் முஸ்லிம்கள் அந்த அளவுக்கு கொல்லப்படவில்லைஎன்றும் பதில் கூறி அனுப்பினார் அபுல் கலாம் ஆசாத் கூறுகிறார்- நானும், நேருவும், பட்டேலும் காந்திஜீயுடன் பேசிக்கொண்டிருந்த போது நேரு கவலையுடன் முஸ்லிம்களை நாய், பூனைகளை கொல்வது போல கொல்கிறார்கள். அதைத் தடுக்க தம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையேஎன்று வருத்தப்பட்ட போது அருகில் இருந்த பட்டேல் நேருவின் புகார்கள் அனைத்தும் ஆதாரமாற்றவை. அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறு சிறு சம்பவங்கள் நடந்துள்ளன. என்று கூறி உண்மையை மறைத்து பதில் கூறினார். காந்திஜீயால் ஒன்றும் பேச முடியவில்லை. அதற்குப் பிறகு பட்டேல் என்ன செய்தார் தெரியுமா ? முஸ்லிம்கள் கொல்லப்படுவது நியாயம் தான் என்று காட்டுவதற்காக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இருந்து ஆபத்தான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், டில்லியில் உள்ள இந்துக்களையும், சீக்கியர்களையும் தாக்குவதற்காக அவைகளை முஸ்லிம்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் சில நாட்கள் கழித்து செய்தி வெளியிட்டார். நாங்கள் மந்திரி சபை கூட்டத்திற்கு சென்ற போது பட்டேல் எங்களை நோக்கி முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அடுத்த அறையில் உள்ளன. அதைப் பார்த்து விட்டு வந்து கூட்டத்தை ஆரம்பிப்போம் என்றார். நாங்கள் அங்கு சென்று மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைப் பார்த்தோம். அங்கு துருப்பிடித்த சமையலறைக் கத்திகள், தண்ணீர் குழாய்கள், தடுப்பு வேலியிலிருந்து எடுக்கப்பட்ட கம்பிகள் ஆகியவை இருந்தன. அவைகளைக் காட்டி இவை சீக்கியர்களையும், இந்துக்களையும் கொலை செய்ய முஸ்லிம்களால் திரட்டி வைக்கப்பட்ட ஆயுதங்கள் என்றார் பட்டேல். அப்போது அங்கிருந்த மவுன்ட் பேட்டன் பிரபு அந்தக் கத்திகளை எடுத்துப் பார்த்துக் கொண்டே கிண்டலாகவும், கேலியாகவும் சொன்னாராம் இந்த ஆயுதங்களை சேகரித்தவர்களுக்கு அபாரமான கற்பனை வளம் உள்ளது. இவைகளைக் கொண்டு டில்லியைக் கைப்பற்றலாம் என கற்பனை செய்கிறார்கள் போலும்என்றார். (மெளலானா அபுல் கலாம் ஆசாத் எழுதிய நூலில் இருந்து அன்று பட்டேல் செய்த வேலையை இன்று பாசிச சக்திகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது வெடி குண்டுகள் வெடிக்கும்போதெல்லாம் அதன் பின்னணியில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பு இருப்பதாக செய்திகளை படித்திருப்போம் உண்மையில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பு உளவுத்துறையால் உருவாக்கப்பட்டது என முன்னால் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
•  மத்ரஸாக்களில் தீவிரவாதம் போதிக்கப்படுவதாக செய்தி வெளியிடுவது.
ஆனால் மத்ரஸாக்களில் அப்படி ஏதும் நடக்க வில்லை. ஏனினும் ஆர்.எஸ்.எஸ் ஸால் நடத்தப்படுகின்ற பள்ளிகளில் சாஹா பயிற்சி எனும் பெயரில் தீவிரவாதத்துக்கான அனைத்து பயிற்சிகளும் போதிக்கப்படுகின்றன. எனினும் அதனை ஊடகங்கள் மறைக்கின்றன. அப்படியே ஒரு வேளை தெரியவந்தாலும் அது தற்காப்பு பயிற்சி என்று பெயர்களை மாற்றிக் காட்டுகின்றார்கள். இது அப்பட்டமான ஊடக பயத்தையும், தோழ்வியையும் காட்டுகின்றது.
உண்மையை மறைப்பதற்கான சான்றுகள்:
****************************

• 
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிகழ்த்தப்படும் தாக்குதல்களை பெரிதுபடுத்துவதும், அரபு நாடுகளில் அன்றாடம் நிகழ்த்தப்படும் தாக்குதல்களை மறைப்பதும்.
• 
யூதர்களால் ஃபலஸ்தீனிலும், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல், பயன்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்கள், கொலை செய்யப்பட்ட சிறார்கள்,பெண்கள் இவர்களைப் பற்றிய செய்திகளை திட்டமிட்டே மறைப்பது.
• 
ஹைதராபாத் மக்கா பள்ளியில் குண்டு வைத்த அசிமானந்தா சாமியாரை காப்பாற்றி விட்டு முஸ்லிம் இளைஞர்கள் மீது பழி சுமத்தினார்கள். பின்னர் நீதிபதிக்கு முன் அசிமானந்தாவே ஒப்புக் கொண்டப் பின் பழிசுமத்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.
•  தற்போதைய தந்தி டிவி, புதிய தலைமுறை ஆகிய சேனல்கள் முஸ்லிம்களுடன் தொடர்புடைய விவாதங்களில் முஸ்லிம்களின் தரப்பில் இஸ்லாத்தைப் பற்றியும், அதன் சட்ட திட்டங்களைப் பற்றியும் கொஞ்சமும் அறியாத, இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கைகளை பகிரங்கமாக செய்யக்கூடிய தேசிய லீக்கின் ஷேக் தாவூத் போன்றவர்களையும், மறு பக்கத்தில் நாவன்மை கொண்டவர்களை மோத விட்டு,எதிரிகளுக்கு அதிக நேரங்கள் ஒதுக்குவது.
•  ஹெஜ் ராஜா போன்றோர்களை இஸ்லாத்திற்கு எதிராக பேசவிட்டு, அதற்கு எதிராக கேள்வி கேட்பதைப் போல் நாடகமாடுவது.
• 
இஸ்லாமிய சட்டங்களில் அதைப் பற்றிய அறிவும், செயல்பாடுகளும் இல்லாத முஸ்லிம் பெயர் தாங்கி சல்மா போன்றவர்களைக் கொண்டு (முத்தலாக் போன்ற விவகாரங்களில்) இஸ்லாத்திற்கு எதிராக பேச வைப்பது. (இதுவும் ஒரு வகையில் தந்திரமாக உண்மையை மறைக்க பயன்படுத்தப்படும் யுக்தியே)
•  அரசியல்வாதிகளை நியாயவான்களாக காட்ட முயற்சிப்பது.
• 
அரசியல்வாதிகளால் நடத்தப்படும் ஊடகங்களில் தன் கட்சியைச் சேர்ந்தவர்களின் கெட்ட செய்திகளை குலி தோன்றி புதைப்பதுடன் எதிர் கட்சிகளின் சிறிய தவறுகளை பெரிதுபடுத்திக் காட்டுவது.
எனவே ஆதாரமில்லாத செய்திகளை நம்புவதோ அதை பரத்துவதோ கூடாது.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ» م : 04
கேட்டவைகளையெல்லாம் (மக்களுக்கு ) அறிவிப்பதே ஒருவன் பொய்யன் என்பதற்கு போதுமானதாகும்
4.  பக்கம் சாராமை:
************************

நடுநிலையோடு செய்திகளை வெளியிட வேண்டும். ஆனால் இன்று மீடியாக்களில் பக்கச் சார்பு என்பது வெட்ட வெளிச்சமான ஒன்று.
• 
மதத்தால் பிரித்துப் பார்ப்பது. (முஸ்லிம்கள் - யூதர்கள் , கிருத்தவர்கள் , ஹிந்துக்கள்)
• 
ஆள்வோருக்கு சாதகமாக செய்திகளை வெளியிடுவது.
• 
முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பான செய்திகளை மறைப்பதும், அவர்களின் தவறுகளை அம்பலப்படுத்துவதும்.
5.  நியாயமான நடவடிக்கை:
ஊடகங்கள் ஆதாரமின்றி யாரையும் குற்றம் சாட்டுவதோ, பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிப்பதோ நியாயமாகாது. மற்றவருக்கு விளக்கமளிக்க வாய்ப்புகள் வழங்க வேண்டும். தவறுகள் ஏற்பட்டு விட்டால் திருத்திக் கொள்ள வேண்டும்.
முடிவுரை: ஊடகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட சமுதாயங்களில் முஸ்லிம் சமுதாயம் முதலிடத்தில் இருப்பதாக கூறுவது மிகையல்ல. இதற்கு மிகமுக்கிய காரணம் முஸ்லிம்கள்தான். காரணம் நமக்கென ஒரு ஊடகம் இல்லை. ஊடகத்துறையில் முஸ்லிம் சமுதாயம் இதுவரை கவனம் செலுத்த வில்லை. சம்பாத்தியம் செய்வதற்காக பொறியியல் கல்லூரிகளை ஆரம்பித்த முஸ்லிம்களில் ஒருவர் கூட ஊடகத்துறைக்கான கல்லூரிகளை ஆரம்பிக்க வில்லை. தற்பொழுதான் C.M.N சலீம் அவர்கள் பாண்டிச்சேரியில் Abul kalam Asad School Of Journalism எனும் பெயரில் ஒரு கல்லூரியை ஆரம்பிக்கின்றார்கள்.
 
وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم
உலகில் அனைத்து விதமான அக்கிரமங்களையும் செய்யக்கூடிய யூதர்களின் சதிச்செயல்கள் மீடியாக்களில் வராமல் போவதற்கு மிக முக்கிய காரணம் அனைத்து மீடியாக்களின் பிடிகளும் அவர்களின் கையில் இருப்பதுதான். சிந்தித்து செயல்படுவோம். வெற்றி பெறுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.