புதன், 1 பிப்ரவரி, 2017

ஆரோக்கியம் பேணுவோம்

بسم الله الرحمن الرحيم
ஆரோக்கியம் பேணுவோம்
புற்றுநோய் காரணிகளை புறக்கணிப்போம்
புற்றுநோய் இல்லா புவி படைப்போம்
وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ - البقرة: 195
عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا سُئِلَ اللَّهُ شَيْئًا أَحَبَّ إِلَيْهِ مِنَ العَافِيَةِ»   سنن 
الترمذي
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புற்றுநோய் என்ற வார்த்தை, நம்மிடையேயும் நம் குடும்பத்தினரிடையேயும் பற்றியெரிய வைக்கும் ஒரு தீப்பந்து. மனிதனின் உடலில் ஒரு பகுதியில் சிறு கட்டியாக தோன்றும் புற்றுநோய், அதை சரிசெய்வதற்குள், மற்ற உடல் உறுப்புகளுக்கும் பரவி மனிதனை கொல்லும் ஆட்கொல்லி நோயாக கருதப்படுகிறது. உலகளவில் இந்த ஆண்டு வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 12.5 கோடி பேர். அவர்களில் 7 கோடி பேர் இறந்துவிட்டனர். இந்தியாவில் மட்டும் 1.5 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சுமார் 60 லட்சம் பேர் பலியாகி விட்டனர். இந்த எண்ணிக்கை வரும் 2030-ம் ஆண்டில் மேலும் பல மடங்கு உயரும் என்று ஐநா சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது, அதன் காரணிகள் என்ன, அவற்றை எவ்வாறு மனஉறுதியோடு எதிர்த்து போராடுவது என்பது குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130174
புற்றுநோய் உள்பட அனைத்து நோய்களுமற்ற ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இஸ்லாம் கூறிய வழிகளைப் பற்றி பேசுவதும் சிந்திப்பதும் மிக அவசியம்.
ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றிய ஹதீஸ்கள்
6412 - عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالفَرَاغُ " صحيح البخاري
                    6412. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ.
عَنْ أَبَي هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ أَوَّلَ مَا يُسْأَلُ عَنْهُ يَوْمَ القِيَامَةِ - يَعْنِي العَبْدَ مِنَ النَّعِيمِ - أَنْ يُقَالَ لَهُ: أَلَمْ نُصِحَّ لَكَ جِسْمَكَ، وَنُرْوِيَكَ مِنَ المَاءِ البَارِدِ "- سنن الترمذي
[இறைவனின் அருட்கொடைகளில் அடியானிடம்] மறுமையில் முதல் விசாரணை, உன் உடலை நான் ஆரோக்கியமாக வைக்கவில்லயா? குளிர்ந்த நீரால் உன் தாகத்தை தீர்க்கவில்லையா?” என்று கேட்பதேயாகும். என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள். ஸுனன் திர்மிதீ
عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَادَ رَجُلًا مِنَ الْمُسْلِمِينَ قَدْ خَفَتَ فَصَارَ مِثْلَ الْفَرْخِ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كُنْتَ تَدْعُو بِشَيْءٍ أَوْ تَسْأَلُهُ إِيَّاهُ؟» قَالَ: نَعَمْ، كُنْتُ أَقُولُ: اللهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الْآخِرَةِ، فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " سُبْحَانَ اللهِ لَا تُطِيقُهُ - أَوْ لَا تَسْتَطِيعُهُ - أَفَلَا قُلْتَ: اللهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ " قَالَ: فَدَعَا اللهَ لَهُ، فَشَفَاهُ. صحيح مسلم
5216. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(
ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களில் ஒருவரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள். அவர் கோழிக் குஞ்சைப் போன்று நலிந்து பலவீனத்துடன் காணப்பட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ ஏதேனும் பிரார்த்தித்து வந்தாயா? அல்லது இறைவனிடம் ஏதேனும் வேண்டிவந்தாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் "ஆம்; நான், இறைவா! நீ மறுமையில் அளிக்கவிருக்கும் தண்டனையை முன்கூட்டி இவ்வுலகிலேயே எனக்குத் தந்துவிடு என்று பிரார்த்தித்துவந்தேன்" என்று கூறினார்.
அதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வியப்புடன்) "அல்லாஹ் தூயவன் (சுப்ஹானல்லாஹ்!) "உன்னால் அதைத் தாங்க முடியாது". அல்லது "உன்னால் அதற்கு இயலாது" என்று கூறிவிட்டு, நீ "இறைவா! இம்மையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எம்மைக் காப்பாயாக!" என்று பிரார்த்தித்திருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள்.
பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்; அவருக்கு அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான். ஸஹீஹ் முஸ்லிம்
عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا سُئِلَ اللَّهُ شَيْئًا أَحَبَّ إِلَيْهِ مِنَ العَافِيَةِ» -  سنن الترمذي
ஆரோக்கியத்தைவிட அல்லாஹ்வுக்கு பிரியமான வேறு எதையும் அவனிடம் வேண்டப்படுவதில்லை என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ஸுனன் திர்மிதீ
[அதாவது அல்லாஹ்விடம் வேண்டப்படுபவைகளில் அல்லாஹ்வுக்கு மிக பிடித்தமானது ஆரோக்கியம்தான்.]                                               
ஆரோக்கியம் பேண இரு வழிகள் உள்ளன
[1] வருமுன் காப்பது
மனித உடல்நலனிற்கு கேடு விளைவிக்கும் காரியங்களை ஆரம்பத்திலேயே விலக்கியது இஸ்லாம்.
1-    மலஜலம் அடக்குவது
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ "مسند أحمد
உணவு தயாராக இருக்கும் சூழ்நிலையிலும் இரு கேடானவைகள் [மலம், சிறுநீர்] முட்டிக்கொண்டிருக்கும் போதும் உங்களில் ஒருவர் தொழவேண்டாம் என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள். அஹ்மத்
மலம் சிறுநீர் அடக்கினால் முழங்கால் வலி தலைவலி உடல் சோர்வு முகசோர்வு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சிறுநீ்ரை அடக்குவதால் ஏற்படும் பாதிப்புகள்
பொதுவாக ஐந்து முதல் பத்து வயதுள்ள சிறுவர்களால் 100-150 மி.லி சிறுநீரை சேமிக்க முடியும். உடல் வளர்ச்சி அதிகமாகசிறுநீர்ப்பையில் சிறுநீரின் கொள்ளளவும் அதிகரிக்கும். 22-25 வயதில் சிறுநீர்ப்பையின் வளர்ச்சி நின்றுவிடும். இந்த வயதில் சராசரியாக 350-400 மி.லி சிறுநீரை சிறுநீர்ப்பை தேக்கிவைக்கும். சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைத்தால், சிறுநீர்ப்பை விரிவடைந்து கொண்டே செல்லும். பல மணி நேரங்கள் அடக்கி வைத்து சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீர் முழுவதுமாக வெளியேறாது. விட்டு விட்டுத்தான் வெளியேறும். இதே பழக்கம் தொடர்ந்தால், சிறுநீர்ப் பையின் சுருங்கி விரியும் தன்மை குறைந்துவிடக்கூடும்.
சிறுநீரை அடக்குவதால், சிறுநீரில் உள்ள உப்பு படிமம் சிறு சிறு படிவங்களாக சேர்ந்து கற்களை உருவாக்கும். பிறகு, இந்தக் கற்கள் சிறுநீர்ப் பாதையை அடைத்துக் கொள்ளும்.
பொதுவாக, வயதான ஆண்கள்சிறுநீரை அடக்குவர். இதனால், ப்ராஸ்டேட் சுரப்பியில் தொற்று காரணமாக வீக்கம் (Prostatitis) ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வீக்கத்தால் இவர்களுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றினாலும், முழுதாக சிறுநீர் வெளியேறாது. 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும். அரிதாக, இந்த வீக்கம் மலக்குடலையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
சிறுநீரை அடக்குவதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம்பேர் உள்ளனர். பயணங்களின்போது, பெண்கள் சிறுநீரை வெளியேற்ற கழிப்பறைகள் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு  உள்ளாகின்றனர். இதனால் பெண்களுக்கு சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படுகிறது.
கர்ப்பிணிகள் சிறுநீரை அடக்குவதால், கருவின் தலைப்பகுதி சிறுநீர்ப்பையை அழுத்த வாய்ப்புள்ளது. இதனால் வயிற்று வலி, சிறுநீர் போகிற இடங்களில் வலி எனத் தேவையில்லாத பிரச்னைகள் வரக்கூடும். சிறுநீர் வருமோ என்று குறைவாக நீர் அருந்தும்போது, நீர் வறட்சி (Dehydration), சோர்வு, தலைவலி, சருமப் பிரச்னைகள், உடல் உஷ்ணம் ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.

மலத்தை அடக்குவதால் ஏற்படும் பாதிப்புகள்
மலத்தை நீண்ட நேரம் அடக்கிவைத்தால், மலம் இறுகி மூலம் அல்லது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். மலம் இறுகி, மலக்குடலை பாதிக்கும். இவர்களுக்கு மலம் கழிக்கும்போது ரத்தமும் வெளியேறும்.
மலம் வரும்போது அடக்கும் பழக்கத்தால், சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் பிரச்னையான இரிட்டபுள் பௌல் சிண்ட்ரோம் (Irritable bowel syndrome) பிரச்னை வரலாம்.
மலம் கழிக்கத் தோன்றும் எனச் சாப்பிடாமல் இருந்தால் பசி, மயக்கம், சோர்வு, தலைவலி ஆகியவை உண்டாகி உடலை பலவீனமாக்கி நோய்களுக்கு வாசலாக அமையும். இடுப்புப் பகுதியில் உள்ள பெல்விக் தசைகள் பலவீனமாகும். மலக்குடல், ஆசனவாய்ப் பகுதிகளில் கிருமி வேகமாக வளர்ச்சி அடையும். அது, உடலில் வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
சிறுநீர், மலம் அடக்குதல் அதிகமாக சிறுநீர் அல்லது மலம் அடக்குவதால், செரிமான இயக்கம் கழிவுகளை துளைகளின் வழியாக வெளியேற்ற துவங்கும் என ஓர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு சரும துளை வழியாக வியர்வையாக வெளிவரும் கழிவுகள் அதிக நாற்றம் வீசும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
2-    காலையில் தாமதமாக விழிப்பது
عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «باكِرُوا طَلَبَ الرِّزْقِ وَالْحَوَائِجَ، فَإِنَّ الْغُدُوَّ بَرَكَةٌ وَنَجَاحٌ» - المعجم الأوسط
ரிஜ்கையும் வாழ்க்கைத்தேவைகளையும் தேடி அதிகாலையிலேயே புறப்படுங்கள் ஏனெனில் அதிகாலையில் செல்வது பரக்கத்தாகும் வெற்றியுமாகும் என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள். அல் முஃஜமுல் அவ்ஸத்.
عَنْ صَخْرٍ الْغَامِدِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا» . وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ «وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا، وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ» - سنن أبي داود
இறைவா! என் உம்மத்துக்கு அதிகாலைப்பொழுதில் அபிவிருத்தி செய்திடு! என்று என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் மேலும் அதிகைலைப்பொழுதிலே போருக்காக படை அனுப்பி வைப்பார்கள் மேலும் அறிவிப்பாளர் ஸஹ்ர் [ரலி] ஒரு வியாபாரியாக இருந்தார் வியாபாரத்திற்காக தன் சரக்குகளை அதிகாலையிலே அனுப்பி வைப்பார் அதனால் அவர் செல்வம் பெருகி வசதியானார். ஸுனன் அபீதாவூத்
அதிகாலையில் துயில் எழுதல் (Waking up early) என்பது ஒரு சிறந்த பழக்கமாகும். அதிகாலையில் தூக்கத்தில் இருந்து விழித்தால் உடல் நலமும், மன நலமும் கூடும் என்று பல பல்கலைக்கழகங்களின் ஆய்வுகள் காட்டுகின்றன. [1] மேலும் கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாட்டில் தன்னுடய கருத்துகளில் "இந்த பழக்கமானது எனக்கு வெற்றி, கல்வி, ஆரோக்கியம் போன்றவற்றை தருகிறது" என்று சொல்லியிருக்கிறார்
காலையில்தான் வான்வெளியில் புத்தம்புதிய பிராண வாயு அதிகமாக இருக்கும். இதனால் நுரையீரலுக்கு சுத்தமான காற்றும், இதயத்துக்கு நல்ல ரத்த ஓட்டமும் கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும்என்கிறது 2011ம் ஆண்டு வெளியான ஆய்வு ஒன்று. இந்த ஆய்வின் முடிவு ‘Medicines & Science’ இதழில் வெளிவந்துள்ளது. ரத்தத்தில் கொழுப்பு சேர்வது தவிர்க்கப்பட்டால் இதய நோய்களுக்கு உங்களுடைய முகவரி தெரியாது. செல்களுக்கு போதுமான ரத்த ஓட்டம் இருப்பதால் புற்றுநோய்கள் வருவதையும் தவிர்க்க முடியும்.
பிறமத சாஸ்திரங்களிலும் பிரம்ம முகூர்த்தத்தில் விழிப்பது என்று கூறுவர். பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3:00 to 5:00.
காலையில் சீக்கிரம் விழிக்க வேண்டும் என்றால் இரவில் சீக்கிரம் தூங்க வேண்டும். அதனால்தான் இரவில் அனாவசியமாக விழித்திருப்பதை நபி [ஸல்] அவர்கள் தடுத்துள்ளார்கள்.
568 - عَنْ أَبِي بَرْزَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَ العِشَاءِ وَالحَدِيثَ بَعْدَهَا» صحيح البخاري
568. அபூ பர்ஸா (ரலி) அறிவித்தார்.
'
நபி (ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.ஸஹீஹுல் புஹாரீ.
நாம் சரியாக தூங்காவிட்டால் ரத்தக்கொதிப்பு, மனச்சோர்வு, கண்களை இழுத்து பிடிப்பது போன்ற உணர்வு, கண் சிவப்பு, கோபம், கை, கால் நடுக்கம், தூக்கம் இடையில் கலைந்தவுடன் மலம் மற்றும் சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு, கொட்டாவி, கண், மூக்கு மற்றும் வாய் பாதையில் ஒரு வறட்சி, உச்சந்தலையில் சூடான சட்டியை கவிழ்த்து வைத்தது போன்ற உணர்வு, கண்ணை சுற்றியுள்ள பகுதிகள் வீங்கி, கன்னங்கள் ஒட்டிப் போதல், அல்சர், தலைவலி மற்றும் பலவித உடல் உபாதைகளும் சுறுசுறுப்பின்மையும் உண்டாகின்றன.   http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5269&ncat=11&Print=1
3-    மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا -  البقرة: 219  
 (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிதுஅல்-குர்ஆன் 2:219. 
عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ وَائِلٍ الْحَضْرَمِيِّ، أَنَّ طَارِقَ بْنَ سُوَيْدٍ الْجُعْفِيَّ، سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْخَمْرِ، فَنَهَاهُ - أَوْ كَرِهَ - أَنْ يَصْنَعَهَا، فَقَالَ: إِنَّمَا أَصْنَعُهَا لِلدَّوَاءِ، فَقَالَ: «إِنَّهُ لَيْسَ بِدَوَاءٍ، وَلَكِنَّهُ دَاءٌ- صحيح مسلم
4015. வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள்; அல்லது அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், "மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அது மருந்தல்ல; நோய்" என்றார்கள். ஸஹீஹ் முஸ்லிம்.
4-   வயிறு நிறைய சாப்பிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது
عَنْ مِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ. بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ» سنن الترمذي
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூற, நபித்தோழர் மிக்தாம் இப்னு மஃதீ கரிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதமின் மகன் வயிறை விடக் கெட்ட ஒரு பையை நிரப்புவதில்லை. ஆதமுடைய மகனின் முதுகெலும்பை நிமிர்த்தும் அளவிற்கு  சில கவளம் உணவே அவனுக்குப் போதுமானது! அவசியமானால் அவனுடைய வயிற்றில் மூன்றில் ஒரு பகுதி உணவுக்காகவும், மற்றொரு பகுதி தண்ணீருக்காகவும், பிரிதொரு பகுதி மூச்சு விடுவதற்காகவும் (காலியாக) இருக்கட்டும்.
ஸுனன் திர்மிதீ.
ஆரோக்கியம் பேண இரு வழிகள் உள்ளன. அவற்றில் இரண்டாவது
மருத்துவம் செய்வது
நோய் என்ன என்று கண்டறிந்து  ஆரம்ப நிலையிலேயே தகுந்த முறையில் சிகிச்சை எடுப்பதும் மருத்துவம் செய்வதும் நோய் முற்றி விடாமலும் பாதிப்பு ஏற்படாமலும் இருக்க உதவும். வியாதிக்கு மருத்துவம் செய்வதை அனுமதித்து அல்லது வலியுறுத்தி வரும் குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் வருமாறு
وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ (68) ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ  [النحل: 69
16:69. பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا - النساء: 29
நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். அல்-குர்ஆன்4:29.
وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ - البقرة: 195
இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; அல்-குர்ஆன் 2:195
5678 - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً» صحيح البخاري
5678. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ.
عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لِكُلِّ دَاءٍ دَوَاءٌ، فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللهِ عَزَّ وَجَلَّ» صحيح مسلم
4432. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம்.

5681 - عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الشِّفَاءُ فِي ثَلاَثَةٍ: فِي شَرْطَةِ مِحْجَمٍ، أَوْ شَرْبَةِ عَسَلٍ، أَوْ كَيَّةٍ بِنَارٍ، وَأَنَا أَنْهَى أُمَّتِي عَنِ الكَيِّ " صحيح البخاري

5681. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தேன் அருந்துவது, நெருப்பால் சூடிட்டுக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றும். (இருப்பினும்,) நான் என் சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமெனத் தடை விதித்கிறேன். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ.
عَنْ خَالِدِ بْنِ سَعْدٍ، قَالَ: خَرَجْنَا وَمَعَنَا غَالِبُ بْنُ أَبْجَرَ فَمَرِضَ فِي الطَّرِيقِ، فَقَدِمْنَا المَدِينَةَ وَهُوَ مَرِيضٌ، فَعَادَهُ ابْنُ أَبِي عَتِيقٍ، فَقَالَ لَنَا: عَلَيْكُمْ بِهَذِهِ الحُبَيْبَةِ السَّوْدَاءِ، فَخُذُوا مِنْهَا خَمْسًا أَوْ سَبْعًا فَاسْحَقُوهَا، ثُمَّ اقْطُرُوهَا فِي أَنْفِهِ بِقَطَرَاتِ زَيْتٍ، فِي هَذَا الجَانِبِ وَفِي هَذَا الجَانِبِ، فَإِنَّ عَائِشَةَ، حَدَّثَتْنِي: أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ هَذِهِ الحَبَّةَ السَّوْدَاءَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ، إِلَّا مِنَ السَّامِ» قُلْتُ: وَمَا السَّامُ؟ قَالَ: المَوْتُ- صحيح البخاري

5687. காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்
எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ (த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஏழு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள். ஸஹீஹுல் புஹாரீ

عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " عَلَيْكُمْ بِهَذَا العُودِ الهِنْدِيِّ، فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ: يُسْتَعَطُ بِهِ مِنَ العُذْرَةِ، وَيُلَدُّ بِهِ مِنْ ذَاتِ الجَنْبِ " صحيح البخاري
5692. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசைவாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்.
என உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ. ஸஹீஹுல் புஹாரீ.

                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.