புதன், 8 பிப்ரவரி, 2017

இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்

بسم الله الرحمن الرحيم
இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்

اَللهُ الَّذِي خَلَقَكُمْ مِنْ ضُعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضُعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاءُ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ [الروم: 54]
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: " اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ , شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ , وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ , وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ , وَفَرَاغَكَ قَبْلَ شُغُلُكَ , وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ " شعب الإيمان
**********************************************************
இஸ்லாம் இளைஞர்களுக்கு மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளது; இஸ்லாமிய சமூகத்தின் மிக மகத்தான சொத்தாக மதிக்கிறது. உலகில் சத்தியம் நிலைக்கவும், அசத்தியம் அழியவும், அர்ப்பணிப்புடன் அயராது உழைத்தவர்கள் இஸ்லாமிய இளைஞர்களே! நபி (ஸல்) அவர்கள் தமது ஏகத்துவப் பிரசாரத்தை, ஜாஹிலிய்யத்துக்கு எதிராக மக்காவில் ஆரம்பித்த போது, முதலில் விளங்கி, அதிகளவு விரும்பி ஏற்று, செயற்பட்டு அதனைப் பிரசாரப்படுத்த துணை நின்றவர்களும் இளைஞர்களே! நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் உலகில் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட தூதர்களின் ஆத்மீக, பிரசார வரலாற்றிலும் இளைஞர்களின் பணி மகத்தானது
ஆனால் இன்றைய சமூக சூழலில் இளைஞர்களின் ஆற்றலும் திறமையும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் முஸ்லிம் சமூகத்தின் உயர்வுக்கும் பயன்படுவதில்லை என்பதையும் தாண்டி இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை.
இத்தகைய காலச்சூழலில் வாழும் நம் இளைஞர்களை இஸ்லாமிய இலட்சிய வாதிகளாக உருவாக்குவதும் அவர்களால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் உயர்வு ஏற்படும் விதம் வழிநடத்துவதும் காலத்தின் அவசரத்தேவை.
1) சிறுபிராயம், வயோதிகம் எனும் இரு பலவீனங்களுக்கிடையில் உள்ள ஒரு பலமான பருவமே வாலிபம்.
*******************************
اَللهُ الَّذِي خَلَقَكُمْ مِنْ ضُعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضُعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاءُ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ [الروم: 54]
وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ  [النور: 59 ]
عَنْ عَلِيٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:" رُفِعَ القَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَشِبَّ، وَعَنِ المَعْتُوهِ حَتَّى يَعْقِلَ سنن الترمذي
மேலுள்ள வசனம் மற்றும் ஹதீஸிலிருந்து, பருவ வயதை அடைந்ததிலிருந்தே வாலிபம் துவங்கி விடுகிறது என்பதை அறியலாம்.
وقيل سن الشباب ومبدؤه بلوغ الحلم. تفسير البيضاوي
والثانية سن الوقوف وهو سن الشباب ونهايته الى ان تتم أربعون سنة من عمره. روح البيان
மேலுள்ள இரு பெருமக்களின் பதிவிலிருந்து வாலிபம் என்பது பருவமடைந்தது முதல் துவங்கி நாற்பதாம் வயதில் நிறைவடைகிறது என்பதை விளங்கலாம்.
2) வாலிபம் என்பது இறைவனின் தனிப்பெரும் அருட்கொடை.
*****************************
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: " اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ , شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ , وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ , وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ , وَفَرَاغَكَ قَبْلَ شُغُلُكَ , وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ " شعب الإيمان
'உனக்கு, ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்னர், ஐந்து அருட்கொடைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்என நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கு உபதேசமாக கூறினார்கள்.  அவை:
1. முதுமை வருமுன் இளமைப் பருவத்தையும்.
2. நோய் வருமுன் உடலாரோக்கியத்தையும்.
3. வறுமை வருமுன் செல்வநிலையையும்'
4. அதிக வேலை பழுக்கள் வருமுன் ஓய்வு நேரத்தையும்.
5. மரணம் வருமுன் வாழ்க்கையையும்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்  : ஷுஅபுல் ஈமான்.
3)வாலிபம் குறித்து விசாரனை
****************************
வாலிபம் தனிப்பெரும் அருட்கொடை என்பதால்தான் இறைவனின் அருட்கொடைகள் பற்றிய விசாரணையில் ]பொதுவாக வயது பற்றி ஒரு விசாரணை இருந்தும்[ வாலிபம் குறித்தும் தனியொரு விசாரணை  நடைபெறும் என வருகிறது.
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا تَزُولُ قَدِمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعِ خِصَالٍ: عَنْ عُمُرُهِ فِيمَا أَفْنَاهُ؟ وَعَنْ شَبَابِهِ فِيمَا أَبْلَاهُ؟ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَا أَنْفَقَهُ؟ وَعَنْ عَلِمهِ مَاذَا عَمِلَ فِيهِ؟ " المعجم الكبير للطبراني
'மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது’. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவை:
1. தனது (உலக) வாழ்வை எவ்வாறு கழித்தான்?
2. தனது வாலிபப் பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினான்?
3. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தான்? அதை எவ்வாறு செலவழித்தான்?
4. பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தான்?
அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் (ரலி)
நூல்  : தபரானி.
4) சுவனவாசிகள் வாலிபர்களாகவே இருப்பார்கள்
**************************************
வாலிபம் தனிப்பெரும் அருட்கொடை என்பதால்தான் இறைவனின் அருளையும் சுகங்களையும் அனுபவிக்கும் சுவனவாசிகள், வாலிபர்களாகவே இருப்பர்
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَأَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يُنَادِي مُنَادٍ: إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلَا تَسْقَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلَا تَمُوتُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلَا تَهْرَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا " فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ: {وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ} [الأعراف: 43]
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர்) பொது அறிவிப்பாளர் ஒருவர், "(இனி) நீங்கள் ஆரோக்கியத்துடனேயே இருப்பீர்கள்; ஒருபோதும் நோய் காணமாட்டீர்கள். நீங்கள் உயிருடன் தான் இருப்பீர்கள்; ஒருபோதும் இறக்கமாட்டீர்கள். இளமையோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் முதுமையடையமாட்டீர்கள். நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் துன்பம் காணமாட்டீர்கள்" என்று அறிவிப்புச் செய்வார்.
"இதுதான் சொர்க்கம்; நீங்கள் (உலகில்) நற்செயல் புரிந்துகொண்டிருந்ததற்காக இது உங்களுக்கு உடைமையாக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படும்" (7:43) என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், கூறுவது அதுதான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அபூ ஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 5457.
5) இந்த பருவத்தில் செய்யப்படும் அனைத்து நல்ல செயல்களுக்கும் அல்லாஹ்விடம் தனிப்பெரும் வெகுமதிகள் உண்டு.
*********************************************
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ "صحيح البخاري 660
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் வளர்ந்த வாலிபர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 660.
6)இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் முஸ்லிம்களின் உயர்விலும் முற்காலத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மகத்தானதாக இருந்திருக்கிறது.
****************************************
அல் குர்ஆனுக்கு விளக்கமளிப்பதில் சிறந்து விளங்கிய ஒருவர் தான் அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். நபித்தோழர்கள் அவரை அல் ஹப்ரு (அறிஞர்) என்ற பெயர் கொண்டு அழைத்தனர். அவர் நபி (ஸல்) அவர்களது ஹதீஸ்களைத் தேடிப்பிடிக்கக் கூடியவராகக் காணப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அவரது வயது பதிமூன்று, அவர் தன்னைப் பற்றி ஒரு முறை இவ்வாறு கூறியுள்ளார். எங்கேனும் ஒரு மனிதரிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஒரு ஹதீஸ் இருக்கும் செய்தி எனக்குக் கிடைத்து விட்டால் உடனே அவரைத் தேடி அவரது இடத்திற்குச் செல்வேன். அவர் வரும் வரைக்கும் அவரது வீட்டு வாசலில் எனது போர்வையைத் தலையணையாக வைத்து படுத்துக் கொள்வேன். வீசுகின்ற காற்று மண்ணை வாரி என் மீது இறைத்து விடும். அவர் வெளியே வந்து (நான் இருக்கும் நிலையில்) என்னைக் காண்பார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களது சிறிய தந்தையின் மகனே! நீங்கள் எதற்காக இஙகு வந்தீர்கள்? நீங்கள் எனக்குத் தூது அனுப்பி இருக்கக் கூடாதா? நான் உங்களிடம் வந்திருப்பேனே! எனக் கூறுவார். அதற்கு இல்லை! நான் தான் உங்களிடம் வரவேண்டும் என்று கூறி அவரிடம் ஹதீஸைக் கேட்பேன் என்கிறார்கள், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
( سيرة عبد الله ابن عباس رضي)
இமாம்களின் இளமை கால சேவைகள்!
**********************************************
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் தனது பதினாறாவது வயதிலேயே ஹதீஸ்களைத் தேடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்களாகக் காணப்பட்டார்கள். அவர் அனாதையாக வளர்ந்தார். அவரை அவரது தாய் பராமரித்து வந்தார். அவரது அறிவுத் திறமை பல பகுதிகளைலும் பிரபல்யமாகியது. அவர் தனது இருபதாவது வயதிலேயே கால்நடையாக வந்து தனது ஹஜ் கடமையை நிறைவேற்றினார். ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் போது அவரிடம் ஒரு பையைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. அதில் அவரது புத்தகங்களே இருந்தன. தான் களைப்புறும் போது அப்பையை ஒரு கல்லின்; மீது வைத்து அதில் தனது தலையை வைத்து ஓய்வெடுப்பார்.

இந்த உம்மத்தின் மற்றுமோர் அறிஞர் தான் இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள். அவரையும் அவரது தாயே வளர்த்தார். அவர் தனது பதினாறு வயதிலேயே பிரபல்யமான இஸ்லாமிய நூற்களைப் படிக்க ஆரம்பித்தார். ஸஹாபாக்கள், தாபியீன்கள் பற்றிய நூற்களையும் அவர்களது கருத்துக்கள் பொதிந்த நூற்களையும் அவர் தனது பதினெட்டாவது வயதில் எழுதினார். அவர் இரவில் நபி (ஸல்) அவர்களது மண்ணறைக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு நிலா ஒளியில் ஹத்யுஸ் ஸாரி முகத்திமது பத்ஹுல் பாரி எனும் வரலாற்று நூலை எழுதினார்.
இமாம் ஷாஃபிஈ ( ரஹ்) அவர்களின் இளமைக் காலம்
***************************
حدثنا المزني ، سمع الشافعي يقول : حفظت القرآن وأنا ابن سبع سنين ، وحفظت " الموطأ " وأنا ابن عشر
فكان أول ما فعله قبل سفره هو حفظ الموطأ، فحفظه في تسع ليال
இமாம் ஷாபி ( ரஹ்) அவர்கள்  14 வயதில் மதீனாவில் இமாம் மாலிக்கைப் பற்றியும் அவர்களது மு அத்தாவைப் பற்றியும் கேள்விப்பட்டார்.
இமாம் ஷாபியின் தாயார் மகனை இமாம் மாலிக்கிடம் அனுப்ப ஆசைப்பட்டர். இமாம் மாலிக்கிடம் செல்வதற்கு முன்னதாகவே அவர் தொகுத்த முஅத்தா நூலை ஷாபி( ரஹ்)மனனம் செய்து விட்டார்.
·        وفي مرة جاء رجل الي الامام مالك ليساله في امرحيث انه قال لزوجته ( انتي طالق ان لم تكوني اجمل من القمر )
·        فقال له الامام مالك انت قد طلقتهافما كان من الرجل الا ان خرج حزينافساله الامام الشافعي عن جواب فتواه
·        وعندما علم الامام الشافعي دخل الي الامام مالك وقال له يا امام - الله سبحانه وتعالي يقول (لقد خلقنا الإنسان في أحسن تقويم
·        فما كان من الامام مالك الا ان تراجع عن فتواه وقال ( اخطأ مالك واصاب الشافعي) ٍ
இமாம் மாலிக் ரஹ் அவர்களின் பாட வகுப்பு மிகவும் மரியாதையானதாக பல வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பயிலும் இடமாக ஒவ்வொரு நாட்டுக்காரருக்கும் தனித்தனியே பாடங்கள் நடை பெறும் இடமாக இருந்தது.
இமாம் ஷாபியியின் சிறு வயது காரணமாக அவர்களுக்கு அங்கு போதிய அந்தஸ்து கிடைக்கவில்லை.
ஒரு தடவை ஒரு மனிதர் ஒரு பிரச்சனையை கொண்டு வந்தார்.
என் மனைவியோடு பேசிக் கொண்டிருந்தேன். அவள் தன்னுடைய அழகை பெருமையடித்து நான் நிலவை விட அழகானவள் என்று சொன்னாள்.  எனக்கு கோபம் வந்து அப்படி இல்லை எனில் நீ தலாக் என்று சொல்லி விட்டேன். என்ன செய்வது என்று கேட்டார்.
இமாம் மாலிக்( ரஹ்) அவர்கள் தலாக் நிகழ்ந்து வி்ட்டது  என்றார்கள்.
அந்த இடத்தில் தலையிட்ட இமாம் ஷாபி ரஹ் அவர்கள்  . இதற்கு நான் வேறு தீர்வை கூற முடியும் என்றார்.அல்லாஹ் தஆலா கூறுகின்றான் மனித வர்க்கத்தைத்தான்  அழகிய படைப்பாக படைத்துள்ளேன் என்கின்றான் எனவே தலாக் நிகழாது என்றார்கள்.இந்த தீர்ப்பை இமாம் மாலிக் ( ரஹ்) அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
·இந்நிகழ்வுக்குப்பின் அவர்கள் முதல் வரிசையில் அமர வை்க்கப்பட்டார்கள்.
7)இளைஞர்களின் இன்றய நிலை
@@@@@@@@@@@@@@@@@@
1)சமீப காலமாக கலாச்சார சீரழிவுகளில் தங்களையும் இணைத்துக் கொள்ளும் சமூகமாக இஸ்லாமிய சமூகம் மாறிக் கொண்டிருக்கின்றது.
அதிலும் குறிப்பாக இன்றைய இளைஞர் சமூகம் தங்களை ஈடுபடுத்தி, தங்களின் இஸ்லாமிய அடையாளங்களை இழந்து வரும் போக்கும் அதிகரித்திருக்கின்றது.
அப்படியொரு கலாச்சாரச் சீரழிவு இதோ காதலர் தினம்எனும் பெயரில் எதிர் நோக்கி இருக்கிறது.
இதற்கு மற்றொரு பெயர் வேலண்டைன் தினம் என்றும் கூறுவார்கள்.
வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் நம்பும் கதை இது
2)ஹேர் ஸ்டைல்
*****************
இன்றய நவீன காலத்தில் நபிவழியை பின்பற்ற வேண்டிய முஸ்லிம் இளைஞர்கள் நடிகர்களின் வழியைப் பின்பற்றி தங்களின் ஹேர் ஸ்டைலை வித விதமாக அமைத்துக் கொள்கிறார்கள்
தலைமுடியையும்.தாடிமுடியையும் அழகு படு்த்த வேண்டும் தான் அதே நேரத்தில் அது நபி வழிக்கு மாற்றமாக இருந்து விடக்கூடாது.
قال الله تعالي: ان الله يحب التوابين ويحب المتطهرين
عن ابي هريرة رضي الله عنه ان رسول الله صلي الله عليه وسلم قال من كان له شعر فليكرمه( ابوداود)

4486 -[68] (ﻟﻢ ﺗﺘﻢ ﺩﺭاﺳﺘﻪ) ﻭﻋﻦ ﻋﻄﺎء ﺑﻦ ﻳﺴﺎﺭ ﻗﺎﻝ: ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ اﻟﻤﺴﺠﺪ ﻓﺪﺧﻞ ﺭﺟﻞ ﺛﺎﺋﺮ اﻟﺮﺃﺱ ﻭاﻟﻠﺤﻴﺔ ﻓﺄﺷﺎﺭ ﺇﻟﻴﻪ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﻴﺪﻩ ﻛﺄﻧﻪ ﻳﺄﻣﺮﻩ ﺑﺈﺻﻼﺡ ﺷﻌﺮﻩ ﻭﻟﺤﻴﺘﻪ ﻓﻔﻌﻞ ﺛﻢ ﺭﺟﻊ ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺃﻟﻴﺲ ﻫﺬا ﺧﻴﺮا ﻣﻦ ﺃﻥ ﻳﺄﺗﻲ ﺃﺣﺪﻛﻢ ﻭﻫﻮ ﺛﺎﺋﺮ اﻟﺮﺃﺱ ﻛﺄﻧﻪ ﺷﻴﻄﺎﻥ» . ﺭﻭاﻩ ﻣﺎﻟﻚ
தலைவிரி கோலமாக மஸ்ஜிதுக்கு வந்த ஒருவரை நபியவர்கள் முடிகளை சரிசெய்து வரும்படி கூறினார்கள்.
அதே போன்று போலிஸ் கட்டிங் போன்று பாதி முடியும் பாதி மொட்டையுமாக முடி வெட்டுவதை தடை செய்தார்கள்.
عن ابن عمر رضي الله عنه ان رسول الله صلي الله عليه وسلم  نهي عن القزع قال قلت لنافع وما القزع قال يحلق بعض رأس الصبي ويترك بعض( مسلم)
عن ابن عمر رضي الله عنه ان رسول الله صلي الله عليه وسلم رأي غلاما قد حلقدبعض رأسه وترك بعضه فنهاهم عن ذالك قال اما ان تحلقوا كله واما تتركوا كله وفي رواية قال فان هذا زي اليهود( شرح السنة)
பாதி முடியை வெட்டி மீதப் பாதியை விட்டுவிடுவது யஹூதிகளின் பழக்கம் அவ்வாறு முடி வெட்டிய ஒரு சிறுவரை கண்ட நபியவர்கள் கண்டித்தார்கள்.
அதை தடை செய்தார்கள்.
3)போதைப் பொருட்களுக்கு அடிமையாகுதல்:-
***************************************
இன்றைய இளைஞர்களில் அதிகமானவர்கள் சூழல் தாக்கத்தின் காரணமாக விஸ்கி, பியர், ஹெரோயின், கஞ்சா, அபின், பீடா, பான்பராக் போன்ற போதைப் பொருட்களை உபயோகிக்க பழகுகின்றனர்..
இன்று புதிய புதிய பெயர்களில் போதைப் பொருட்கள், விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு இளைஞர்கள் அடிமையாகி தமது நிரந்தர இருப்பிடமாக நரகத்தை தெரிவு செய்துகொள்கின்றனர்.
4.தீய நண்பர்களின்  தாக்கம்:-
********************************
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ، فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ» سنن أبي داود
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்  'ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக கவனி(த்து தேர்ந்தெடு)க்கட்டும்.' அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) (நூல்: அபூதாவூது).
ஒருவர் தான் யாருடன் பழகுகின்றேன் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தீய நண்பர்களின் தூண்டுதலே எமது நெறிபிறழ்வுக்குக் காரணமாக அமைகின்றது. இதனை நபியவர்கள் விளக்கி பின்வருமாறு கூறினார்கள்.
عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الجَلِيسِ الصَّالِحِ وَالجَلِيسِ السَّوْءِ، كَمَثَلِ صَاحِبِ المِسْكِ وَكِيرِ الحَدَّادِ، لاَ يَعْدَمُكَ مِنْ صَاحِبِ المِسْكِ إِمَّا تَشْتَرِيهِ، أَوْ تَجِدُ رِيحَهُ، وَكِيرُ الحَدَّادِ يُحْرِقُ بَدَنَكَ، أَوْ ثَوْبَكَ، أَوْ تَجِدُ مِنْهُ رِيحًا خَبِيثَةً» صحيح البخاري
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து இரண்டிலொன்று உமக்கு உறுதியாக கிடைக்கும். (1) நீர் அதை விலைக்கு வாங்கலாம்: (2) அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம்! கொல்லனின் உலை உம்முடைய உடலையோ உம்முடைய ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்!"
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 2101
குறிப்பாக ஒருசில இஸ்லாமிய பெண்களிடம் தீய நட்புகள் குடிகொண்டு ஈமானை இழக்கக்கூடய நிலைகளும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றது.

சிறந்த நண்பர்கள் யார் என்று கேட்டதற்கு நபியவர்கள் கூறிய பதில்
عن ابن عباس رضي الله عنه قال قيل يا رسول الله اي جلسائنا خير؟  قال من يذكركم الله رؤيته وزاد في عملكم منطقه وذكركم الاخرة عمله( رواه البيهقي )
கெட்ட நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டவர்கள் மறுமை நாளில் கைசேதப்படுவார்கள்.
يٰوَيْلَتٰى لَيْتَنِىْ لَمْ اَتَّخِذْ فُلَانًا خَلِيْلًا‏ 
எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?”
(அல்குர்ஆன் : 25:28)
لَقَدْ اَضَلَّنِىْ عَنِ الذِّكْرِ بَعْدَ اِذْ جَآءَنِىْ‌  وَكَانَ الشَّيْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا‏ 
நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!” (என்று புலம்புவான்.)
(அல்குர்ஆன் : 25:29)
5)  கலாச்சார சீரழிவிற்கு விதை தூவும் திரைப்படங்களைப் பார்த்தல்:-
********************************
இன்று அதிகமான இளைஞர்களின் நேரங்கள் சினிமாக்களினால் வீணடிக்கப்படுகின்றன. ஓய்வு என்பது அல்லாஹ் எமக்கு அருளிய அருளாகும். அதனை இம்மைக்கும் மறுமைக்கும் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். இன்றைய ஆய்வுகளின்படி ஒரு மாணவன் வாரத்தின் பாடசாலை நாட்களாகிய திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் 36 மணிகள் தொலைக்காட்சியில் செலவழிப்பதாகவும், வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் இது இரு மடங்காக அதிகரிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் சினிமாக்களை பார்ப்பதுடன் நின்றுவிடாமல் அங்கு வரும் நடிகர்கள், நடிகைகள் போன்று நடை, உடை, பாவனைகளை அமைத்துக் கொள்வதும் எமது ஈமானையும் இஸ்ஸலாமிய பற்றுதலையும் பாதிக்கிறது என்பது பேரபத்தான ஒன்றல்லவா?
6. பாடல்களையும் இசைகளையும் செவிமெடுத்தல்:-
*************************************
பெரும்பாலான இளைஞர்கள் தமது கைகளில் உள்ள கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி விகாரமான  பாடல்களை வீதி ஓரங்களிலும், தூக்கத்தின் முன்னரும் கேட்டு மகிழ்கின்றனர். இவை உண்மையில் எமது ஈமானை பறித்துவிடும். எவ்வாறு பாலைவன மணலில் நீரை ஊற்றுகின்ற போது மிக வேகமாக உறிஞ்சி எடுப்பது போன்று இசையானது எமது ஈமானை உறிஞ்சி எடுத்துவிடும்.
7. கையடக்க தொலைபேசிகளை தவறாக பயன்படுத்தல்:-
***********************************
இன்று கையடக்க தொலைபேசிகள் அவசியமான தொடர்புக்கு உதவியாக இருக்கும் அதே நேரத்தில் பல இளைஞர்களின் ஈமானிய உணர்வை அது சீரழித்துக் கொண்டிருக்கின்றது. அதில் திரைப்படங்களை பார்த்து ரசித்து கொண்டிருக்கின்றனர். ஷைத்தானின் ஓசைகள் இளைஞர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
வீதி ஓரங்களில் சென்று கொண்டிருக்கின்ற வயது பெண்களை படம் எடுத்துக் கொள்கின்றனர். பெண்கள் இருக்கின்ற வீடுகளுக்கு அழைப்புகளை கொடுத்து தொல்லைப்படுத்துகின்றனர். இவை அனைத்தும் நரகத்தின் வேதனைக்கே எம்மைக் கொண்டு சேர்க்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
8. இணையத்தளங்களுடன் தொடர்பு கொண்டு மோசமான விஷயங்களை கண்டுகளித்தல்:-
****************************************
இணையத்தளங்களை தவறாக பயன்படுத்தி பாலியல் உணர்வுகளை தூண்டக் கூடிய படங்கள், காட்சிகளை பார்த்து ரசிக்கின்றனர். இதன் மூலமும் அல்லாஹ்வுடனான எமது நெருக்கம் துண்டிக்கப்படுகின்றது.கக
அல்லாஹ் ஏவியவற்றை எடுத்து நடப்பதுடன், விலக்கியவற்றை தவிர்ந்து வாழ வேண்டும். அதற்காக இஸ்லாம் மார்க்கம் பற்றிய தெளிவை பெற்று, அல்லாஹ்வினால் அமானிதமாக அருளப்பட்ட இவ்வுலக வாழ்கையை, இளமை பருவத்தை அல்லாஹ், இரசூலின் வழிகாட்டலுக்கேற்ப பெரியவர்கள் சொல் கேட்டு இவ்வுலகிலும் மறுஉலகிலும் வெற்றிபெறுவதற்க்கு முயற்சிக்க வேண்டும் .

பொதுவாகவே அறிவுரை கூறுவதையும் கண்டிப்பு செய்வதையும் இன்றைய இளைய தலைமுறை விரும்புவதே இல்லை. ஆனால் உளி படாத கற்கள் சிற்பமாகுவதில்லை. பட்டை தீட்டாத வைரங்கள் ஜொலிப்பதில்லை என்பது உண்மையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.