புதன், 3 மே, 2017

ஷஃபானும் சீர்மிகு நல்அமல்களும்.

ஷஃபானும் சீர்மிகு நல்அமல்களும்.

قول الله عز وجل : وسارعوا الي مغفرة من ربكم وجنة عرضها السموات والأرض أعدت للمتقين...                ( سورة أل عمران )
فعن أسامة بن زيد رضي الله عنهما قال: قلت: يا رسولَ الله، لم أرَك تصوم شهرًا مِن الشهور ما تصومُ مِن شعبان؟! قال: «ذلك شهرٌ يغفُل الناس عنه بين رجَب ورمضان، وهو شهرٌ تُرفَع فيه الأعمالُ إلى ربِّ العالمين، فأحبُّ أن يُرفَع عمِلي وأنا صائِم» (مسند أحمد وسُنن النسائي، وحسنه الألباني).

புகழனைத்தும் அகிலங்களை படைத்து வளர்த்து பாதுகாத்திடும் ரப்புல் ஆலமீன் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டுமாக.
அவனுடைய சாந்தியும் சமாதானமும் ஈருலக வாழ்விழும் நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய இறுதித் தூதர் முஹம்மத் நபி ஸல் அவர்கள் மீதும் அவர்களின் மார்க்கத்தை உலகெங்கும் பரப்பிட வாழ்க்கையையே  தியாகம் செய்த அவர்களின் தோழர்கள் நல்லடியார்கள் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக ஆமீன்.

மகத்துவமிக்க ரமலான் மாதத்திற்கு முன்னோட்டமாக ஷஃபானும் அதில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கடைபிடித்த நல்லமல்களும் அமைந்துள்ளது.
எனவே தான் ஷஃபான் மாதம் குறித்து நபிகளார் ஸல் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

فعن أسامة بن زيد رضي الله عنهما قال: قلت: يا رسولَ الله، لم أرَك تصوم شهرًا مِن الشهور ما تصومُ مِن شعبان؟! قال: «ذلك شهرٌ يغفُل الناس عنه بين رجَب ورمضان، وهو شهرٌ تُرفَع فيه الأعمالُ إلى ربِّ العالمين، فأحبُّ أن يُرفَع عمِلي وأنا صائِم» (مسند أحمد وسُنن النسائي، وحسنه الألباني).
அல்லாஹ்வின் தூதரே (ஸல்)  எந்த மாதத்திலும் நாங்கள் பார்க்காத அளவு (நிறைய) ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்கிறீர்களே? என்று உஸாமா ரலி அவர்கள் கேட்க... "ரஜபுக்கும், ரமலானுக்கும் மத்தியில் உள்ள அந்த மாதத்தில் மக்கள் நல்லமல்கள் செய்யாமல் பொடுபோக்காக இருக்கிறார்கள்.  அந்த மாதத்தில் நல்லமல்கள் அல்லாஹ்வின் பால் உயரத்தப் படுகிறது என் அமல்கள் நான்
நோன்பு நோற்ற நிலையில் எடுத்துக் காட்டப் படுவதை நான் விரும்புகிறேன்" என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.( நூல் :முஸ்னத் அஹ்மத் )

ரமலான் துவங்குவதற்கு முன்பே அதனுடைய பரகாத்கள் (நல்ல அறிவிப்புகள் ) பூமியில் இறங்கத் துவங்குகிறது.  எப்படி சூரியன் உதிப்பதற்கு முன்பே அதன் வெளிச்சம் கிழக்கு வானில் தென்படுகிறதோ அது போல ஷஃபான் மாதத் துவக்கத்திலேயே ரமளானுடைய நன்மைகள் வெளிப்படத் துவங்குகிறது பராஅத் உடைய இரவிலிருந்து அது மேலும் மெருகேறி  ரமலானில் பரிபூரணத்துவம் பெற்று  பிரகாசிக்கிறது.
நாமும்  இதே போல ஷஃபான் மாதத்திலிருந்தே நம்முடைய அமல்களின் வேகத்தை கூட்டினால் ரமலானில் நிறைவாக அமல் செய்ய ஏதுவாக இருக்கும்.

فقد ثبت في الصحيحين من حديث عائشة قالت: كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر، ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان، وما رأيته في شهر أكثر منه صياما في شعبان. قال الإمام النووي في شرحه لصحيح مسلم: وفي رواية  كان يصوم شعبان كله كان يصوم شعبان إلا قليلا...

ஹஜ்ரத் ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சில வேளைகளில் நோன்பு நோற்பார்கள் நாங்கள் நோன்பை விட மாட்டார்கள் என்று சொல்லுமளவு, சில சமயங்களில் நோன்பை விட்டு விடுவார்கள் நோன்பு நோற்க மாட்டார்கள் என்று நாங்கள் சொல்லுமளவு ' ரமளானைத் தவிர எந்த மாதத்திலும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் முழுக்க நோன்பு நோற்க நான் பார்த்ததில்லை .
ஷஃபான் மாதத்தை தவிர வேறெந்த மாதத்திலும்  நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அதிகம் நோன்பு நோற்க நான் பார்த்ததில்லை. ( நூல் : புகாரி முஸ்லிம் )

நம் வாழ் நாளில் தவற விட்ட நோன்புகளை களா செய்வதற்கு ஷஃபான் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களை பயன்படுத்தி களா ஏதும் இல்லாமல் புத்துணர்வோடு ரமலானை எதிர் கொள்ளலாம்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அதிகமாக நோன்பு நோற்க தேர்ந்தெடுத்த இந்த மாதத்தில்  நஃபிலான நோன்புகளை நோற்பதன் மூலமாக இரண்டு நன்மைகளை நாம்  அடைந்து கொள்ளலாம் ஒன்று நபிகளாரின் சுன்னத்தை பின்பற்றுவது
மற்றொன்று நோன்பின் அளப் பெரிய நன்மைகளை அடைவது.
ஹதீஸ் ஷரீஃபில் வந்துள்ளது .

وعنه قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : " من صام يوما ابتغاء وجه الله بعده الله من جهنم كبعد غراب طائر وهو فرخ حتى مات هرما " . رواه أحمد ، وروى البيهقي في ( شعب الإيمان ) عن سلمة بن ( قيس ) - رضي الله عنه - .
யார் ஒரு நாள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியவராக நோன்பு நோற்பாரோ அல்லாஹ் நரகிலிருந்து அவரை தூரமாக்குவான் ஒரு பறவைக் குஞ்சு பறக்கத் துவங்கி  வயோதிகமாகி மரணமடையும் வரை பறந்தால் எவ்வளவு தூரம் பறக்குமோ அவ்வளவு தூரத்தை ஏற்படுத்துவான். ( நூல் : அஹ்மத் )

இன்னும் ஹதீஸில் நஃபிலான நோன்புகளை அதிகம் நோற்பவருக்கு "ரய்யான்"  என்ற பிரத்யேகமான சுவன வாயிலின் வழியாக அல்லாஹ் நுழைவித்து கண்ணியப் படுத்துவான்  அதில் நுழைந்தவருக்கு பிறகு தாகமே எடுக்காது.

حدثنا خالد بن مخلد حدثنا سليمان بن بلال قال حدثني أبو حازم عن سهل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم يقال أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد

சஹ்லு இப்னு சஅத் ரலி அறிவிக்கிறார்கள்
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் சுவனத்தில் ஒரு வாசல் இருக்கிறது அதற்கு "ரய்யான்" என்று சொல்லப்படும். அதன் வழியாக கியாமத் நாளில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள்(அதிகம் நஃபிலான நோன்புகளை நோற்றவர்கள்) நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும்
அவர்கள் நுழைந்த பிறகு வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப் பட மாட்டார்கள் வாசல் அடைக்கப் பட்டு விடும்.(நூல் :புகாரி)

இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான்

وَسَارِعُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்;. அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது பயபக்தி யுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன்- 3 : 133)

நல்லமல்களில் விரைந்து செயல் படுவது அதற்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது என்பது நபிமார்கள் நல்லடியார்களின் உயர் பண்பாகும்.

சுவன வாசிகள் கூட உலகில் வீணாக கழித்த நேரங்கள் குறித்து கவலை கொள்வார்கள். இந்த மகத்துவமிக்க பொழுதுகளை நாம் நன்மையில் கழிக்க முயற்சிப்போம்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஷஃபானுடைய பிந்தைய பதினைந்து தினங்களில் நோன்பு நோற்பதை தடுத்துள்ளார்கள் வழமையான நோன்புகளை தவிர ஏனெனில் ரமலானுடைய நோன்பிற்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதினால் எனவே பராஅத்துடைய நோன்பிற்கு முன்பே நோன்புகளை நோற்பது சாலச்சிறந்தது.

பராஅத் இரவின் மேன்மைகள்.

ஷஃபான் மாதத்தின் சிறப்புகளுக்கு முத்தாய்ப்பாக அது பரகத்கள் நிறைந்த பராஅத் இரவை உள்ளடக்கியுள்ளது.

இறைவன் தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنْذِرِينَ

நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ

அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.
(அல்குர்ஆன்- 44 : 3,4 )

ليلة المباركة
என்பதற்கு ليلة النصف من شعبان என்ற கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. (ابن كثير)
இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஹதீஸூம் வந்துள்ளது.

يعني ليلة النصف من شعبان- قالت: ما فيها يا رسول الله؟ فقال: فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة، وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة، وفيها ترفع أعمالهم، وفيها تنزل أرزاقهم،
(روي في مرعات المفاتيح)
ஷஃபான் மாதத்தில் இந்த வருடத்தில் பிறக்கும் குழந்தைகள் முடிவு செய்யப் படுகிறது,  இந்த வருடத்தில் மரணிப்பவர்கள் குறித்தும் முடிவு செய்யப் படுகிறது, அடியார்களின் அமல்கள் உயர்த்தப் படுகிறது, இந்த இரவில் அவர்களின் ரிஜ்க்கள் இறக்கி வைக்கப் படுகிறது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

وروى عثمان بن المغيرة قال : قال النبي - صلى الله عليه وسلم - : تقطع الآجال من شعبان إلى شعبان حتى إن الرجل لينكح ويولد له وقد خرج اسمه في الموتى.
(رواه ابن جرير)
மேலும் ஹதீஸில் வந்துள்ளது .                 ஒரு ஷஃபானிலிருந்து மற்றொரு ஷஃபான் வரை மனிதர்களின் வாழ் நாள் நிர்ணயிக்கப்படுகிறது ஒரு மனிதன் திருமணம் முடித்து குழந்தை பெற்றெடுக்க இருப்பான் அவன் பெயர் மரணிப்பவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். (நூல் : இப்னு ஜரீர்)

(رواه الترمذي: بَاب مَا جَاءَ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ، وابن ماجة
وعن عائشة أيضا: دخل علي رسول الله صلى الله عليه وسلم فوضع عنه ثوبيه ثم لم يستتم أن قام فلبسهما فأخذتني غيرة شديدة ظننت أنه يأتي بعض صويحباتي فخرجت أتبعه فأدركته بالبقيع بقيع الغرقد يستغفر للمؤمنين والمؤمنات والشهداء، فقلت: بأبي وأمي أنت في حاجة ربك، وأنا في حاجة الدنيا فانصرفت، فدخلت حجرتي ولي نفس عال، ولحقني رسول الله صلى الله عليه وسلم، فقال: «ما هذا النفس يا عائشة؟»، فقلت: بأبي وأمي أتيتني فوضعت عنك ثوبيك ثم لم تستتم أن قمت فلبستهما فأخذتني غيرة شديدة، ظننت أنك تأتي بعض صويحباتي حتى رأيتك بالبقيع تصنع ما تصنع، قال: «يا عائشة أكنت تخافين أن يحيف الله عليك ورسوله، بل أتاني جبريل عليه السلام، فقال: هذه الليلة ليلة النصف من شعبان ولله فيها عتقاء من النار بعدد شعور غنم كلب، لا ينظر الله فيها إلى مشرك، ولا إلى مشاحن، ولا إلى قاطع رحم، ولا إلى مسبل، ولا إلى عاق لوالديه، ولا إلى مدمن خمر» قال: ثم وضع عنه ثوبيه، فقال لي: «يا عائشة تأذنين لي في قيام هذه الليلة؟»، فقلت: نعم بأبي وأمي، فقام فسجد ليلا طويلا حتى ظننت أنه قبض فقمت ألتمسه، ووضعت يدي على باطن قدميه فتحرك ففرحت وسمعته يقول في سجوده: «أعوذ بعفوك من عقابك، وأعوذ برضاك من سخطك، وأعوذ بك منك، جل وجهك، لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك»، فلما أصبح ذكرتهن له فقال: «يا عائشة تعلمتهن؟»، فقلت: نعم، فقال: «تعلميهن وعلميهن، فإن جبريل عليه السلام علمنيهن وأمرني أن أرددهن في السجود»
(رواه البيهقي في شعب الإيمان برقم: 3678

ஹஜ்ரத் ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் என் வீட்டில் நுழைந்து தங்கள் ஆடைகளை களைந்தார்கள், சற்று நேரத்திலேயே எழுந்து ஆடைகளை அணிந்து கொண்டு புறப்பட்டார்கள் எனக்கு கடுமையாக ரோஷம் ஏற்பட்டது, எங்கே (நம் வீட்டில் இருக்க வேண்டிய நாளில்)என்னுடைய சகமனைவியர்களின் வீட்டிற்கு செல்வார்களோ என்று எண்ணி அவர்களை பின் தொடர்ந்தேன் அவர்களை "பகீங்" -ல் ( பொது கபர்ஸ்தான்) அவர்கள் செய்த ஒன்றை செய்ய பெற்றுக் கொண்டேன், மரணித்து விட்ட முஃமின்களான ஆண்கள், பெண்கள், ஷூஹதாக்களுக்காக பாவ மன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள். நான் என் மனதில் சொல்லிக் கொண்டேன் 'என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம் நீங்கள்  உங்கள் இரட்சகனிடம் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள் நானோ உலகம் சார்ந்து சிந்தித்துக் கொண்டுள்ளேன்' பிறகு நான் திரும்பி வந்து என் அறையில் நுழைந்தேன் எனக்கு மேல் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் என்னிடம் வந்து ஆயிஷாவே ஏன் இந்த மூச்சு என்று கேட்டார்கள். நான் நடந்ததைக் கூறினேன். நபிகள் ஸல் அவர்கள் கூறினார்கள் "ஆயிஷாவே அல்லாஹ்வும்,அவனுடைய தூததரும் உனக்கு அநீதி இழைத்து விடுவார்கள் என்று அஞ்சுகிறாயா? மாறாக ஜிப்ரயீல் அலை அவர்கள் என்னிடம் வந்து இது ஷஃபானுடைய பதினைந்தாம் இரவு கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளின் ரோமங்களின் எண்ணிக்கை அளவு அல்லாஹ் நரகிலிருந்து( அடியார்களை) விடுதலை செய்கிறான்.  இன்று அல்லாஹ் இணை வைப்பாளர்களையும், காழ்ப்புணர்ச்சி கொள்பவர்களையும்.உறவை துண்டித்தவர்கள், கரண்டைக்கு கீழ் ஆடையை தொங்கவிடுபவர்கள், பெற்றோர்களை நோவினை செய்பவர்கள், நிரந்தர குடிகாரர்கள் ஆகியோரை (கருணைக் கண் கொண்டு) பார்க்க மாட்டான்" பிறகு நபியவர்கள் ஆடைகளைக் களைந்து விட்டு என்னிடம் கூறினார்கள்  ஆயிஷாவே இந்த இரவில் என் இரட்சகனை  நின்று வணங்க என்னை அனுமதிக்கிறாயா? நான் சொன்னேன் என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம் ஆம்! என்று. பிறகு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எழுந்து நீண்ட நேரம் ஸஜ்தாவில் இருந்தார்கள் நான் அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நினைக்குமளவு நான் அவர்களை (இருளில்) தேடியவாறு எழுந்தேன் என் கரங்கள் அவர்களின் இரு பாதங்களிலும் பட்டு அசைந்தது நான் மகிழ்வுற்றேன் அவர்கள் ஸஜ்தாவில் ஓத செவியுற்றேன்.
"உன் தண்டனையிலிருந்து உன் மன்னிப்பைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன், உன் கோபத்திலிருந்து உன் திருப் பொருத்தத்தைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன், உன்னிலிருந்து உன்னைக் கொண்டே பாதுகாவல் தேடுகிறேன், உன் திருமுகம் மகத்துவமிக்கது உன் புகழை நான் குறிக்க மாட்டேன் நீ உன்னை எவ்வாறு புகழ்ந்தாயோ அவ்வாறே நான் புகழ்கிறேன்" காலையில் ஆன போது இந்த துஆவை நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் கூறினேன் நபிகள் ஸல் அவர்கள் 'ஆயிஷாவே கற்றுக் கொண்டாயா?  நான் ஆம் என்றேன். இதை நீ கற்றுக் கொள்! இன்னும் கற்றுக் கொடு! ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் இதை எனக்கு கற்றுத் தந்தார்கள் இதை ஸஜ்தாவில் திரும்ப திரும்ப ஓதுமாறு ஏவினார்கள்' என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல் : பைஹகீ )

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلَا كَذَا أَلَا كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ
(رواه ابن ماجة: بَاب مَا جَاءَ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ، والبيهقي في شعب الإيمان برقم 3664، والديلمي في مسند الفردوس برقم: 1007)
ஹஜ்ரத் அலீ ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் "ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்து விட்டால் அந்த இரவில் நீங்கள் நின்று வணங்குங்கள் இன்னும் அந்த பகலில் நோன்பு நோறறுக் கொள்ளுங்கள் அல்லாஹ் அந்த மாலையில் சூரியன் மறையும் போது முதல் வானத்தில் இறங்கி  ( தன் கருணையை இறக்கி )கூறுகிறான் "உங்களில் பாவ மன்னிப்பு கேட்பவர் உண்டா? நான் பாவங்களை மன்னிக்கிறேன், உங்களில் உணவு விஸ்தீரணத்தை கேட்பவர் உண்டா? நான் விசாலமாக்கித்  தருகிறேன், சோதனைகளில் ஆழ்பட்டவர் உண்டா? நான் ஆரோக்கியமாக்கி வைக்கிறேன் இன்னும் சில....விஷயங்களை கூறி நான் தருகிறேன் என்று காலை ஃபஜ்ரு வரை கேட்கிறான்.
( நூல் : இப்னு மாஜஹ் )

عن عثمان بن أبي العاص، عن النبي صلى الله عليه وسلم، قال: «إذا كان ليلة النصف من شعبان نادى مناد: هل من مستغفر فأغفر له، هل من سائل فأعطيه فلا يسأل أحد شيئا إلا أعطي إلا زانية بفرجها أو مشرك (رواه البيهقي في شعب الإيمان برقم: 3676)
"ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்து விட்டால் அழைப்பாளர் ஒருவர் அழைத்து பாவ மன்னிப்பு கேட்பவர் உண்டா? அவருடைய பாவம் மன்னிக்கப்படும், தங்களது தேவைகளை கேட்பவர் உண்டா? அவருக்கு கொடுக்கப்படும், யாரும் எதையும் கேட்பதில்லை அது கொடுக்கப் பட்டே தவிர  என்கினும் விபச்சாரி தான் தவறு செய்ய கேட்பது, இன்னும் இணை வைப்பாளனின் கோரிக்கையை தவிர ( மற்ற அனைவரின் கோரிக்கைகளும் ஏற்கப்படும்).
(நூல் : பைஹகீ )

تصحيح الألباني الروايات الواردة في فضل ليلة النصف من شعبان

قال الألباني في " السلسلة الصحيحة " 3/ 135: في تخريج الحديث: يطلع الله تبارك و تعالى إلى خلقه ليلة النصف من شعبان، فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن ":
حديث صحيح، روي عن جماعة من الصحابة من طرق مختلفة يشد بعضها بعضا و هم معاذ ابن جبل و أبو ثعلبة الخشني و عبد الله بن عمرو و أبي موسى الأشعري و أبي هريرة و أبي بكر الصديق و عوف ابن مالك و عائشة.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَطَّلِعُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى خَلْقِهِ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِعِبَادِهِ إِلَّا لِاثْنَيْنِ مُشَاحِنٍ وَقَاتِلِ نَفْسٍ _
(رواه أحمد برقم : 6353 ، وقال المحشي شعيب الأرنؤوط : صحيح بشواهده وهذا إسناد ضعيف لضعف ابن لهيعة )

ஹதீஸில் இரண்டு நபர்களின் கோரிக்கை ஏற்கப் படுவதில்லை என்று வந்துள்ளது  காழ்ப்புணர்ச்சி கொள்பவன், தற்கொலை செய்பவன் .

13251- لا يحجب قول لا إله إلا الله عن الله إلا ما خرج من فم صاحب الشاربين ليلة النصف من شعبان. "الديلمي عن ابن مسعود".
தைலமீ உடைய ரிவாயத்தில் "லாயிலாஹ இல்லல்லாஹ்" என்ற வார்த்தை மது அருந்துபவர்களின் நாவில் வந்தாலன்றி அது ஏற்கப் படுவதில் எந்த திரையும் ( மறுப்பும்) இல்லை என்று ஹஜ்ரத் இப்னு  மஸ்வூது ரலி அவர்கள் அறிவித்ததாக வந்துள்ளது.

إن الله يطلع على عباده في ليلة النصف من شعبان فيغفر للمؤمنين و يملي للكافرين و يدع أهل الحقد بحقدهم حتى يدعوه .
تخريج السيوطي (طب) عن أبي ثعلبة. تحقيق الألباني(حسن) انظر حديث رقم: 1898 في صحيح الجامع.
அல்லாஹ் இந்த இரவில் முஃமின்கள் அனைவரது பாவங்களையும் மன்னிக்கிறான். காஃபிர்களை மன்னிக்காமல் விடுகிறான், மேலும் குரோதம் கொள்வோரை அவர்கள் அதை கைவிடும் வரை மன்னிப்பதில்லை...
'சுயூதி இமாம் இதை طب என்ற கிதாபில் வெளியாக்கி உள்ளார்கள் இமாம் அல்பானி இந்த ரிவாயாத்தை حسن என்கிறார்கள்'.

இது போன்ற மகத்துவமிக்க இரவுகள் நம்மை எதிர் நோக்கி இருக்கிறது நம் பாவங்கள் மன்னிக்கப் பட்டு நம் வாழ்வில் ஒளிவீசும் அந்த புனித இரவுகளின் நன்மைகளை நாம் முழுமையாக அடைந்திட மேற்கண்ட துற்குணங்களை தவிர்ந்திருப்பது மிகவும் அவசியமாகும்.
இறைவனின் கருணைகளை நமக்கு கிடைக்க விடாமல் தடுக்கும் அனைத்து கெட்ட குணங்களிலிருந்தும் அல்லாஹ் நம்மையும், நம் மனைவி மக்களையும் நம் சமூக வாழ் மக்கள் அனைவரையும் காப்பாற்றுவானாக...ஆமீன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.