ரமலானை வரவேற்போம்
********************************
முன்னுரை: அல்லாஹ் ஒரு முஃமினுக்க
வழங்குகின்ற சந்தர்பங்களில் மிகப் பெரும் சந்தர்பம் ரமலானை அடைவதும், அதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வதும்தான். அப்படிபட்ட உன்னதமான
சந்தர்பத்தை விரைவில் அடையவிருக்கும் நாம் அதனை உரிய முறையில் வரவேற்க தயாராக
இருக்க வேண்டும்.
எப்படி?
1. உடலை தயார் நிலையில் வைத்துக் கொள்வது:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ،
قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقَدَّمُوا
رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ وَلَا يَوْمَيْنِ إِلَّا رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمًا،
فَلْيَصُمْهُ» م : 1082
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: ரமலானுக்கு முந்தைய நாளும் அதற்கு முந்தைய நாளும் நோன்பு
நோற்காதீர்கள். (வழக்கமாக அந்த நாளில்) ஏதேனும் நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர!
அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
2. துஆ செய்வதன் மூலம்:
*********************************
அல்லாஹ் ரமலானை அடையச் செய்ய பிரார்த்திக்க
வேண்டும். ஏனெனில் நம்முடன் கடந்த ரமலானில் இருந்தவர்கள் இந்த ரமலானில் இல்லாமல் இருக்கலாம்.
அவர்களுக்கு இந்த ரமலானை அடையும் வாய்ப்பை அல்லாஹ் வழங்க வில்லை. எனினும் நமக்கு
அல்லாஹ் முழுமையாக வழங்க வேண்டி துஆச் செய்ய வேண்டும்.
3. அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதன் மூலம்:
*******************************************
ஒரு அருட் கொடை திரும்ப கிடைக்குமெனில் அது
அல்லாஹ் நமக்கு செய்துள்ள உபகாரம்தான். அந்த உபகாரத்தை வழங்கியமைக்கு நாம் நன்றி
செலுத்தினால் அந்த அருட் கொடை நமக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கப்பெறும்.
وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ
لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ ( إبراهيم :7)
இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால்
உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக்
கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும்
(நினைவு கூறுங்கள்)
4. மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதன் மூலம்:
********************************************
عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه
وسلم: «أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه، تفتح فيه أبواب
السماء، وتغلق فيه أبواب الجحيم، وتغل فيه مردة الشياطين، لله فيه ليلة خير من ألف
شهر، من حرم خيرها فقد حرم»
நபி (ஸல்) அவர்கள் பரகத் பொருந்திய மாதமான
ரமலான் மாதம் உங்களிடம் வந்துள்ளது. அதில் அல்லாஹ் உங்கள் மீது நோன்பை
கடமையாக்கியுள்ளான். அம்மாதத்தில் சுவனத்து வாசல்கள் திறக்கப்பட்டு, நரகத்து வாசல்கள் அடைக்கப்படுகின்றது. மேலும் ஷைத்தான்கள்
விலங்கிடப்படுகின்றனர். அதில் ஓர் இரவு உள்ளது. அது ஆயிரம் மாதங்களை விட
சிறந்ததாகும். எவன் அதன் நன்மையைவிட்டும் தடுக்கப்பட்டானோ அவன் (அனைத்து நன்மைகளை
விட்டும்)தடுக்கப்பட்டவனாவான். நஸயி:2106
5. அதனை பயன்படுத்திக் கொள்ள உறுதியேற்பதின் மூலம்:
***************************************
1. நோன்பு நோற்பது
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ
الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ
شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ
فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ
بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا
هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ (185)
ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான்
மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட
நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர உங்களுக்கு சிரமமானதை அவன்
நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப்
போனதைப்) பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின்
மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம்
நாடுகிறான்).
عن أبي هريرة رضي الله عنه، أن رسول الله صلى
الله عليه وسلم، قال: " الصيام جنة فلا يرفث ولا يجهل، وإن امرؤ قاتله أو
شاتمه فليقل: إني صائم مرتين " «والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند
الله تعالى من ريح المسك»«يترك طعامه وشرابه وشهوته من أجلي الصيام لي، وأنا أجزي
به والحسنة بعشر أمثالها» خ : 1894
'நோன்பு
(பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே நோன்பாளி
கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்!
யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன்
கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும்
வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும் பானத்தையும் இச்சையையும்விட்டு விடுகிறார்!
நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது;
அதற்கு நானே
கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!' (என்று அல்லாஹ் கூறினான்
2. இரவில் நின்று வணங்குவது
عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم
قال: «من قام رمضان إيمانا واحتسابا، غفر له ما تقدم من ذنبه» خ : 37
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமலான் (மாதத்தின்
சிறப்பு) பற்றி கூறினார்கள். 'ரமலானில்
நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின் முன்னர் செய்த
பாவங்கள் மன்னிக்கப்படும்!' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
عن عائشة رضي الله عنها، أن رسول الله صلى الله
عليه وسلم خرج ليلة من جوف الليل، فصلى في المسجد، وصلى رجال بصلاته، فأصبح الناس
فتحدثوا، فاجتمع أكثر منهم فصلى فصلوا معه، فأصبح الناس فتحدثوا، فكثر أهل المسجد
من الليلة الثالثة، فخرج رسول الله صلى الله عليه وسلم فصلى فصلوا بصلاته، فلما
كانت الليلة الرابعة عجز المسجد عن أهله، حتى خرج لصلاة الصبح، فلما قضى الفجر
أقبل على الناس، فتشهد، ثم قال: «أما بعد، فإنه لم يخف علي مكانكم، ولكني خشيت أن
تفترض عليكم، فتعجزوا عنها»، فتوفي رسول الله صلى الله عليه وسلم والأمر على ذلك خ
: 2012
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள்
நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும்
தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்)
முதல்நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று
தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம்
இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு
வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர்.
நான்காம் இரவில்பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர்; ஆனால் நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஸுப்ஹுத்
தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி தஷஹ்ஹுத் மொழிந்து 'நான் இறைவனைப்
போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்;
நீங்கள்
வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும் இது
உங்களின் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று
நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள். 'நிலைமை இப்படியே இருக்க (ரமலானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே
தொழுது கொண்டிருக்க) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!' என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
3. குர்ஆனை அதிகமதிகம் ஓதுவது
ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر (القمر :
17)
நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு
படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து)
நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
عن عثمان رضي الله عنه، عن النبي صلى الله عليه
وسلم قال: «خيركم من تعلم القرآن وعلمه» خ : 5028
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதைக் கற்றுக் கொடுத்தவரே உங்களில்
சிறந்தவர். என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அறிவித்தார்.
குர்ஆனை மனனமாக ஓதுவது பற்றி!
عن سهل بن سعد، أن امرأة جاءت رسول الله صلى
الله عليه وسلم، فقالت: يا رسول الله جئت لأهب لك نفسي، فنظر إليها رسول الله صلى
الله عليه وسلم، فصعد النظر إليها وصوبه، ثم طأطأ رأسه، فلما رأت المرأة أنه لم
يقض فيها شيئا جلست، فقام رجل من أصحابه، فقال: يا رسول الله إن لم يكن لك بها
حاجة فزوجنيها، فقال: «هل عندك من شيء؟» فقال: لا والله يا رسول الله، قال: «اذهب
إلى أهلك فانظر هل تجد شيئا؟» فذهب ثم رجع فقال: لا والله يا رسول الله ما وجدت
شيئا، قال: «انظر ولو خاتما من حديد» فذهب ثم رجع، فقال: لا والله يا رسول الله
ولا خاتما من حديد، ولكن هذا إزاري - قال سهل: ما له رداء - فلها نصفه، فقال رسول
الله صلى الله عليه وسلم: «ما تصنع بإزارك، إن لبسته لم يكن عليها منه شيء، وإن
لبسته لم يكن عليك شيء» فجلس الرجل حتى طال مجلسه ثم قام فرآه رسول الله صلى الله
عليه وسلم موليا، فأمر به فدعي، فلما جاء قال: «ماذا معك من القرآن؟» قال: معي
سورة كذا، وسورة كذا، وسورة كذا -عدها - قال: «أتقرؤهن عن ظهر قلبك؟» قال: نعم،
قال: «اذهب فقد ملكتكها بما معك من القرآن» خ : 5030
5030. ஸஹ்ல் இப்னு
ஸஅத்(ரலி) அறிவித்தார் ஒரு பெண்மணி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு
அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி
நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு தம் தலையைத்
தொங்கவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்வில்லை
என்பதைக் கண்ட அந்தப்பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது
நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு அவர்
தேவையில்லையென்றால் அவரை எனக்கு மணமுடித்து வைய்யுங்கள்!' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் '(மஹ்ராகச்
செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?' என்று
கேட்டார்கள். அதற்கவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை
இறைத்தூதர் அவர்களே!' என்றார். நபி(ஸல்) அவர்கள் உம்
குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!' என்றார்கள். அவரும் போய் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். 'இரும்பாலான ஒரு மோதிராவது கிடைக்குமா என்று
பார்!' என்று நபி(ஸல்) அவர்கள்
சொல்லியனுப்பினார்கள். அவர் மீண்டும் சென்றுவிட்டுத் திரும்பிவந்து 'இறைத்தூதர் அவர்களே! இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக்கவில்லை. ஆனால் இதோ இந்த
என்னுடைய வேட்டி உள்ளது' என்று கூறினார்.
-அறிவிப்பாளர்
ஸஹ்ல்(ரலி) கூறினார்: அவரிடம் ஒரு மேல்துண்டு கூட இல்லை. எனவேதான் தன்னுடைய
வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகக் கூறினார். -
அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இந்த வேட்டியை நீர் அணிந்தால் அவளின் மீது ஏதும் இருக்காது. அவள் அணிந்தால்
உம்மீது ஏதும் இருக்காது. (ஒரு வேட்டியை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்?)' என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்துகொண்டார்.
பிறகு அவர் எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
பார்த்தபோது அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவர் வரவழைக்கப்பட்டபோது 'உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது' என்று கேட்டார்கள். அவர் 'இன்ன இன்ன என்னுடன் உள்ளன' என்று எண்ணி எண்ணிக் கூறினார். நபி(ஸல்)
அவர்கள் 'அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம் (ஓதுவேன்)' என்று கூறினார்.
நபி(ஸல்) அவர்கள் 'உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக
இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தேன். நீர் செல்லலாம்!' என்று கூறினார்கள்.
4. தர்மம் அதிகமாக செய்வது
عن ابن عباس، قال: «كان رسول الله صلى الله عليه
وسلم أجود الناس، وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل، وكان يلقاه في كل
ليلة من رمضان فيدارسه القرآن، فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من
الريح المرسلة» خ : 4997
4997. இப்னு
அப்பாஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே நல்லவற்றை அதிகமாக
வாரிவழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ரமலான் மாதத்தில் இன்னும் அதிகமாக
வாரி வழங்குவார்கள். ஏனென்றால் (வானவர்) ஜிப்ரீல் ரமலானின் ஒவ்வோர் இரவும் -
ரமலான் முடியும் வரை - நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பது வழக்கம். (அப்போது) அவரிடம்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். (அவ்வாறு) ஜிப்ரீல் தம்மைச்
சந்திக்கும்போது தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட அதிகமாக நபி(ஸல்) அவர்கள்
நல்லவற்றை வாரி வழங்குவார்கள்.
5. உம்ரா செய்வது
عن ابن عباس رضي الله عنهما، قال: لما رجع النبي
صلى الله عليه وسلم من حجته قال لأم سنان الأنصارية: «ما منعك من الحج؟»، قالت:
أبو فلان، تعني زوجها، كان له ناضحان حج على أحدهما، والآخر يسقي أرضا لنا، قال:
«فإن عمرة في رمضان تقضي حجة أو حجة معي» خ : 1863
1863. இப்னு
அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் ஹஜ்ஜை முடித்துத் திரும்பியபோது
உம்முஸினான் அல் அன்ஸாரியா என்ற பெண்மணியிடம் 'நீ ஹஜ்ஜுக்கு வர
என்ன தடை?' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி 'என் கணவரே காரணம்; அவருக்கு தண்ணீர் இறைக்கும் இரண்டு
ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் ஏறி அவர் ஹஜ்ஜுக்குச் சென்றார்; மற்றொன்று எங்களுக்குரிய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது; (இதுவே காரணம்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்' என்றார்கள்.
6. அதன் சட்ட திட்டங்களை அறிந்து கொள்வதன் மூலம்:
****************************************************
கல்வி இருந்தால்தான் சரியான அமல் சாத்தியம்:
ரமலானில் கடைபிடிக்க வேண்டியவைகளைப் பற்றிய, தவிர்க்கப்பட
வேண்டிய விஷயங்களை குறித்த போதிய விளக்கமின்மையே நோன்பு வைத்துக் கொண்டு புறம், பொய் முதலிய தீய காரியங்களை செய்ய வைக்கின்றது.
7. தீமையிலிருந்து விலகிக் கொள்ள உறுதியேற்பதன் மூலம்:
******************************************
1. ரமலான் வருவதற்கு முன் பாவங்களிலிருந்து தவ்பா செய்து மீள வேண்டும்.
ياأيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا
عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي
الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم
لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير (التحريم : 8)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில் நான்
ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறுமுறை பாவமன்னிப்புக் கோருகிறேன். இதை அப்துல்லாஹ் பின்
உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
عَنِ الْأَغَرِّ الْمُزَنِيِّ، وَكَانَتْ لَهُ
صُحْبَةٌ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّهُ
لَيُغَانُ عَلَى قَلْبِي، وَإِنِّي لَأَسْتَغْفِرُ اللهَ، فِي الْيَوْمِ مِائَةَ
مَرَّةٍ» م : 2702
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: எனது உள்ளத்தின் மீதும் திரையிடப்படுகிறது. நான் ஒவ்வொரு நாளும் நூறு
முறை அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்.
முடிவுரை: ரமலானை வரவேற்று, அதில் செய்ய வேண்டிய நல்லறங்களை முழுமையாக செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.