بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ
الرَّحِيمِ
படிப்பினை பெறவேண்டாமா?
فَاعْتَبِرُوا يَا أُولِي
الْأَبْصَارِ [الحشر: 2]
6133 - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لاَ يُلْدَغُ
المُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ»- صحيح البخاري
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முஃமினின்
பார்வையும் அனுபவமும் படிப்பினை நிறைந்ததாக இருக்க வேண்டும்.
படிப்பினை என்பது பாடத்தின் வழியாகவோ, நிகழ்வின் வழியாகவோ அறிந்துகொள்ளும் தகவலாகும்.
படிப்பினை பெற வேண்டும் என்பதும் இறை உத்தரவே!
فَاعْتَبِرُوا يَا أُولِي
الْأَبْصَارِ [الحشر: 2]
قَالَ: خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
فَقَالَ فِي خُطْبَتِهِ: «إِنَّ رَبِّي أَمَرَنِي أَنْ يَكُونَ نُطْقِي
ذِكْرًا، وَصَمْتِي فِكْرًا وَنَظَرِي عِبْرَةً»- مسند الشهاب القضاعي
“என் பேச்சு தியானமாகவும் என் மௌனம்
சிந்தனையாகவும் என் பார்வை படிப்பினையாகவும் இருக்க வேண்டும் என்று என் இறைவன்
எனக்கு கட்டளையிட்டுள்ளான்” என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
தனக்கு
நேர்ந்தவைகளிலிருந்து படிப்பினை
6133 - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لاَ يُلْدَغُ
المُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ»- صحيح البخاري
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ 6133.
இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ 6133.
பிறரைப்
பார்த்து படிப்பினை.
وَالسَّارِقُ
وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِنَ
اللَّهِ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ - المائدة:
38
ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச்
செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது)
அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனை ஆகும். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். 5:38.
கடந்த
கால வரலாறுகளிலிருந்து படிப்பினை
அளவு
கடந்த பெருமை அளவு கடந்த கேவலத்தை தேடித்தரும் என்ற படிப்பினை பிர்அவ்னின்
வாழ்வில்...
فَقَالَ أَنَا رَبُّكُمُ
الْأَعْلَى (24) فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَى (25) إِنَّ فِي
ذَلِكَ لَعِبْرَةً لِمَنْ يَخْشَى (26) النازعات: 24 - 26
79:24. “நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம் ஃபிர்அவ்ன்)
கூறினான்.
79:25. இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக
அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.
79:26. நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு
படிப்பினை இருக்கிறது.
இறைவன்
கொடுக்க நினைத்ததை எவரும் தடுக்க முடியாது என்பதற்கு யூஸுப் அலை அவர்களின் வரலாறு
படிப்பினை.
لَقَدْ كَانَ فِي
قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ - يوسف: 111
أَيْ فِي قِصَّةِ
يُوسُفَ وَأَبِيهِ وَإِخْوَتِهِ، أَوْ فِي قَصَصِ الْأُمَمِ.
(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில்
அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது. 12:111.
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنِّي نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ
الْقُبُورِ فَزُورُوهَا، فَإِنَّ فِيهَا عِبْرَةً،---------- مسند أحمد ط الرسالة
(17 / 429
நான் உங்களை கப்ரு ஜியாரத் செய்யவேண்டாமெனத்
தடுத்திருந்தேன் கப்ரு ஜியாரத் செய்யுங்கள் ஏனெனில் அதில் படிப்பினை உண்டு. என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
أَخْبَرَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «ائْتُوا مَوْتَاكُمْ فَسَلِّمُوا عَلَيْهِمْ،
وَصَلُّوا عَلَيْهِمْ فَإِنَّ لَكُمْ فِيهِمْ عِبْرَةٌ»- مصنف عبد الرزاق الصنعاني
உங்களில் மரணமடைந்தவர்களிடம் வந்து ஸலாம்
கூறி அவர்களுக்காக துஆ செய்யுங்கள் ஏனெனில் அவர்களில் உங்களுக்கு படிப்பினை
இருக்கிறது. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நம் பார்வையில் படும் படைப்புகளிலிருந்தும்
நாம் பார்க்கும் காட்சிகளிலிருந்தும் படிப்பினை
وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ
لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا
سَائِغًا لِلشَّارِبِينَ [النحل: 66]
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க)
படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற
பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். 16:66.
وَهُوَ الَّذِي
يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ حَتَّى إِذَا أَقَلَّتْ
سَحَابًا ثِقَالًا سُقْنَاهُ لِبَلَدٍ مَيِّتٍ فَأَنْزَلْنَا بِهِ الْمَاءَ
فَأَخْرَجْنَا بِهِ مِنْ كُلِّ الثَّمَرَاتِ كَذَلِكَ نُخْرِجُ الْمَوْتَى
لَعَلَّكُمْ تَذَكَّرُونَ - الأعراف: 57
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றையெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. 7:57.
عَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ , عَنْ أُمَّهِ , أَنَّ
امْرَأَةً دَخَلَتْ بَيْتَ عَائِشَةَ فَصَلَّتْ عِنْدَ بَيْتِ رَسُولِ اللهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ صَحِيحَةٌ , فَلَمْ تَرْفَعْ رَأْسَهَا
حَتَّى مَاتَتْ , قَالَتْ عَائِشَةُ: " الْحَمْدُ لِلَّهِ الَّذِي يُحْيِي
وَيُمِيتُ , إِنَّ هَذَا لَعِبْرَةً لِي فِي أَخِي عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي
بَكْرٍ , وَكَانَ عَبْدُ الرَّحْمَنِ رَقَدَ فِي مَقِيلٍ قَالَ: فَذَهَبُوا
يُوقِظُونَهُ فَوَجَدُوهُ قَدْ مَاتَ , فَدَخَلَ نَفْسَ عَائِشَةَ تُهْمَةٌ أَنْ
يَكُونَ صُنِعَ بِهِ شَيْءٌ , أَوْ عُجِلَ عَلَيْهِ , فَدُفِنَ وَهُوَ حَيٌّ ,
فَرَأَتْ أَنَّهَا عِبْرَةٌ لَهَا , وَذَهَبَ مَا كَانَ فِي نَفْسِهَا "- شعب
الإيمان
ஒரு பெண்மனி
ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வருகை தந்து நபி (ஸல்) அவர்களின் அறைக்கு அருகில் தொழுதார்கள் ஆரோக்கியமான
நிலையில் வந்து தொழுத அந்தப்பெண் ஸஜ்தாவில் மரணமடைந்து விட்டார்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் வாழ்வையும்
மரணத்தையும் தருகிற அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும் இந்த நிகழ்வானது என் சகோதரர்
அப்துர்ரஹ்மான் மரணவிஷயத்தில் எனக்கு படிப்பினையாகும் அவர் மதியவேளையில் தூங்கச்சென்றார் அவரை
எழுப்பி விடச் சென்றபோது அவர் மரணமடைந்திருந்தார் இது ஆயிஷா (ரலி) அவர்களின் மனதில் நன்றாக ஆரோக்கியமாக
இருந்தவர் இப்படி தீடீரென இறந்ததால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்குமோ அல்லது
மரணமடையாத நிலையில் அவசரப்பட்டு உயிருடன் அடக்கம் செய்ப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது அந்த சந்தேகம்
இப்போது நீங்கி விட்டது.
قَالَ شَقِيقُ بْنُ
إِبْرَاهِيمَ: مَرَّ إِبْرَاهِيمُ بْنُ أَدْهَمَ فِي أَسْوَاقِ الْبَصْرَةِ
فَاجْتَمَعَ النَّاسُ إِلَيْهِ , فَقَالُوا لَهُ: يَا أَبَا إِسْحَاقَ إِنَّ اللهَ
تَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ: {ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ} [غافر: 60] .
وَنَحْنُ نَدْعُوهُ مُنْذُ دَهْرٍ فَلَا يَسْتَجِيبُ لَنَا , قَالَ: فَقَالَ
إِبْرَاهِيمُ: " يَا أَهْلَ الْبَصْرَةِ مَاتَتْ قُلُوبُكُمْ فِي عَشَرَةِ
أَشْيَاءَ , أَوَّلُهَا: عَرَفْتُمُ اللهَ ولَمْ تُؤَدُّوا حَقَّهُ , وَالثَّانِي:
قَرَأْتُمْ كِتَابَ اللهِ ولَمْ تَعْمَلُوا بِهِ ,
وَالثَّالِثُ: ادَّعَيْتُمْ حُبَّ رَسُولِ اللهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَرَكْتُمْ سُنَّتَهَ , وَالرَّابِعُ:
ادَّعَيْتُمْ عَدَاوَةَ الشَّيْطَانِ وَوَافَقْتُمُوهُ وَالْخَامِسُ: قُلْتُمْ
نُحِبُّ الْجَنَّةَ ولَمْ تَعْمَلُوا لَهَا , وَالسَّادِسُ: قُلْتُمْ نَخَافُ
النَّارَ وَرَهَنْتُمْ أَنْفُسَكُمْ بِهَا
وَالسَّابِعُ: قُلْتُمْ
إِنَّ الْمَوْتَ حَقٌّ وَلَمْ تَسْتَعِدُّوا لَهُ وَالثَّامِنُ: اشْتَغَلْتُمْ
بِعُيُوبِ إِخْوَانِكُمْ وَنَبَذْتُمْ عُيُوبَكُمْ
وَالتَّاسِعُ: أَكَلْتُمْ نِعْمَةَ رَبِّكُمْ
ولَمْ تَشْكُرُوهَا وَالْعَاشِرُ: دَفَنْتُمْ مَوْتَاكُمْ وَلَمْ تَعْتَبِرُوا
بِهِمْ " - حلية الأولياء وطبقات الأصفياء
இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஒருநாள் பஸராவின்
சந்தைக்குச் சென்றார்கள் அப்போது மக்கள் அவர்களிடம் அபூ இஸ்ஹாக் அவர்களே!
இறைவன் தனது திருமறையில் “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; (40:60)
என்று கூறுகிறான் நாங்கள் பல காலங்களாக
பிரார்த்திக்கிறோம் ஏற்க்கப்படவில்லையே என்றனர்.
மனிதர்களை விளித்து இவ்வாறு உபதேசம் புரிந்தார்கள்:
“அன்பர்களே, நீங்கள் பத்து விஷய(ங்களை விட்டுவிட்ட காரண)த்தினால் உங்களது உள்ளங்களெல்லாம் இறந்து விட்டன.
1. அல்லாஹ்வை அறிந்த நீங்கள், அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமையைச் செய்யவில்லை.
2. அல்குர்ஆனை ஓதும் நீங்கள், அல்குர்ஆனின் அடிப்படையில் செயற்படவில்லை.
3. அல்லாஹ்வின் தூதரை நேசிக்கும் நீங்கள், அவர்களின் ஸுன்னாவை முறையாகப் பின்பற்றவில்லை.
4. ஷைத்தானை உங்களுடைய எதிரி என்று
நம்புகின்ற நீங்கள், அவனுடைய
அழைப்புக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
5. சுவர்க்கத்தை விரும்பும் நீங்கள், சுவர்க்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காக செயற்படுவதில்லை.
6. நரகத்தை அஞ்சும் நீங்கள், அதிலிருந்து உங்களைக் காத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச்
செய்வதில்லை.
7. மரணம் உண்மை என்று நம்புகின்ற நீங்கள், அதற்காக உழைப்பதில்லை.
8. அடுத்தவர்களுடைய குறையைத் தேடுவதிலேயே
காலம் கழிக்கிறீர்கள். உங்களது குறைகளை மறந்து விடுகிறீர்கள்.
9. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அனுபவிக்கும்
நீங்கள், அவனுக்கு
நன்றி செலுத்தவில்லை.
10.
எத்தனையோ ஜனாஸாக்களை நீங்கள் நல்லடக்கம் செய்கிறீர்கள்.
ஆனால், அவற்றின்
மூலம் படிப்பினை பெறுவதில்லை.
இத்தகைய தீய குணங்கள் உங்களிடத்தில் இருப்பதன் காரணமாக
அல்லாஹ் உங்களது உள்ளங்களை மரணிக்கச் செய்து விட்டான். உங்களுடைய பிரார்த்தனைகளைக்கூட
அவன் ஏற்றுக் கொள்வதில்லை” எனக்
கூறினார்கள்.
எதிர்காலம்
சிறக்க கடந்த கால நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்க வேண்டும்.
மூஸா (அலை) தன் சமூகத்தைச்
சார்ந்த ஒருவனுக்கு உதவும் பொருட்டு எதிரியை ஓங்கி குத்தியதன் முடிவில் அவன்
மரணித்தான் மறுநாளும் அதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டபோது கவனமாக கையாண்டாரகள்.
وَدَخَلَ الْمَدِينَةَ
عَلَى حِينِ غَفْلَةٍ مِنْ أَهْلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيْنِ يَقْتَتِلَانِ
هَذَا مِنْ شِيعَتِهِ وَهَذَا مِنْ عَدُوِّهِ فَاسْتَغَاثَهُ الَّذِي مِنْ
شِيعَتِهِ عَلَى الَّذِي مِنْ عَدُوِّهِ فَوَكَزَهُ مُوسَى فَقَضَى عَلَيْهِ قَالَ
هَذَا مِنْ عَمَلِ الشَّيْطَانِ إِنَّهُ عَدُوٌّ مُضِلٌّ مُبِينٌ (15) قَالَ رَبِّ
إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ
الرَّحِيمُ (16) قَالَ رَبِّ بِمَا أَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ أَكُونَ ظَهِيرًا
لِلْمُجْرِمِينَ (17) فَأَصْبَحَ فِي الْمَدِينَةِ خَائِفًا يَتَرَقَّبُ فَإِذَا
الَّذِي اسْتَنْصَرَهُ بِالْأَمْسِ يَسْتَصْرِخُهُ قَالَ لَهُ مُوسَى إِنَّكَ
لَغَوِيٌّ مُبِينٌ (18) فَلَمَّا أَنْ أَرَادَ أَنْ يَبْطِشَ بِالَّذِي هُوَ
عَدُوٌّ لَهُمَا قَالَ يَا مُوسَى أَتُرِيدُ أَنْ تَقْتُلَنِي كَمَا قَتَلْتَ
نَفْسًا بِالْأَمْسِ إِنْ تُرِيدُ إِلَّا أَنْ تَكُونَ جَبَّارًا فِي الْأَرْضِ
وَمَا تُرِيدُ أَنْ تَكُونَ مِنَ الْمُصْلِحِينَ (19) [القصص: 19]
28:15. (ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து (தூக்கத்தில் பராமுகமாக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார்; அங்கு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக்
கொண்டியிருந்ததைக் கண்டார்; ஒருவன்
அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன்
அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக
உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான் - மூஸா அ(ப் பகை)வனை ஒரு குத்துக்
குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா): “இது ஷைத்தானுடைய வேலை; நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய
பகிரங்கமான விரோதியாவான்” என்று
கூறினார்.
28:16. “என்
இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!” என்று
பிரார்த்தித்தார்; அப்போது
அவன் அவரை மன்னித்தான் - நிச்சயமாக அவன், மிகவும்
மன்னிப்பவனாகவும், கிருபை
மிக்கவனாகவும் இருக்கின்றான்.
28:17. “என்
இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான்
இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்” என்று கூறினார்.
28:18. மேலும், (தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள்)
காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்தபோது, முன் தினம் அவரிடம் உதவி கோரியவன்
(மீண்டும்) அவரை (உதவிக்காக) கூச்சலிட்டு அழைத்தான் அதற்கு, மூஸா: “நிச்சயமாக நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கின்றாய்” என்று அவனிடம் கூறினார்.
28:19. பின்னர், மூஸா தம்மிருவருக்கும் பகைவனாக
இருந்தவனைப் பிடிக்க, நாடியபோது, அவர் இனத்தான் (தன்னையே அவர் பிடிக்க)
வருகிறார் என்று எண்ணி) “மூஸாவே! நேற்று
ஒரு மனிதனை நீர் கொலை செய்தது போல், என்னையும்
கொலை செய்ய நாடுகிறீரா? இப்பூமியில்
அக்கிரமம் செய்பவராகவே இருக்க நீர் நாடுகிறீர். மேலும், இணக்கம் ஏற்படுத்துவோரில் (ஒருவராக)
இருக்க நீர் நாடவில்லை” என்று
கூறினான்.
யாகூப் நபி அலை அவர்களின் வாழ்விலும்
இதேபோன்ற அனுபவம்
قَالَ هَلْ آمَنُكُمْ
عَلَيْهِ إِلَّا كَمَا أَمِنْتُكُمْ عَلَى أَخِيهِ مِنْ قَبْلُ فَاللَّهُ خَيْرٌ
حَافِظًا وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ -
يوسف: 64
அதற்கு (யஃகூப்; “இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர்
விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில்
அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட
மிக்க கிருபையாளனாவான்” என்று கூறிவிட்டார். 12:64.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.