بسم الله الرحمن الرحيم
உறவோடு உறவாடு.
وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ
اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا
குடும்ப உறவு பெரும் கொடை. அதில் உடைசல் - விரிசல் நிகழாமல் உறவுகளை ஒட்டி
உறவாட வேண்டும் .
உற்றார் உறவினர் சொந்தங்களை இழந்து தனிமையில் வாடுபவர்களுக்கே அந்த
மகிமை/பெருமை தெரியும் . பூக்கள் ஒன்றிணைந்தாலே "மாலை"யாகும். இரண்டு
கைகள் இணந்தாலே ஓசையாகும். அது போல் குடும்பம் பிணக்கின்றி ஒற்றுமையாக கூடி
வாழ்ந்தாலே இரு உலகமும் தித்திக்கும்.
எனவே இஸ்லாம் அதை கட்டாய சட்டமாக போதிக்கிறது. பிணங்கி வாழ்வதை வன்மையாக கண்டிக்கிறது.
من تفسير السعدي.
{ﻭاﻟﺬﻳﻦ ﻳﺼﻠﻮﻥ ﻣﺎ ﺃﻣﺮ اﻟﻠﻪ ﺑﻪ ﺃﻥ ﻳﻮﺻﻞ}
ﻭﻫﺬا ﻋﺎﻡ ﻓﻲ ﻛﻞ ﻣﺎ ﺃﻣﺮ اﻟﻠﻪ ﺑﻮﺻﻠﻪ، ﻣﻦ اﻹﻳﻤﺎﻥ ﺑﻪ ﻭﺑﺮﺳﻮﻟﻪ، ﻭﻣﺤﺒﺘﻪ
ﻭﻣﺤﺒﺔ ﺭﺳﻮﻟﻪ، ﻭاﻻﻧﻘﻴﺎﺩ ﻟﻌﺒﺎﺩﺗﻪ ﻭﺣﺪﻩ ﻻ ﺷﺮﻳﻚ ﻟﻪ، ﻭﻟﻄﺎﻋﺔ ﺭﺳﻮﻟﻪ.
ﻭﻳﺼﻠﻮﻥ ﺁﺑﺎءﻫﻢ ﻭﺃﻣﻬﺎﺗﻬﻢ ﺑﺒﺮﻫﻢ ﺑﺎﻟﻘﻮﻝ ﻭاﻟﻔﻌﻞ ﻭﻋﺪﻡ ﻋﻘﻮﻗﻬﻢ، ﻭﻳﺼﻠﻮﻥ
اﻷﻗﺎﺭﺏ ﻭاﻷﺭﺣﺎﻡ، ﺑﺎﻹﺣﺴﺎﻥ ﺇﻟﻴﻬﻢ ﻗﻮﻻ ﻭﻓﻌﻼ ﻭﻳﺼﻠﻮﻥ ﻣﺎ ﺑﻴﻨﻬﻢ ﻭﺑﻴﻦ اﻷﺯﻭاﺝ ﻭاﻷﺻﺤﺎﺏ
ﻭاﻟﻤﻤﺎﻟﻴﻚ، ﺑﺄﺩاء ﺣﻘﻬﻢ ﻛﺎﻣﻼ ﻣﻮﻓﺮا ﻣﻦ اﻟﺤﻘﻮﻕ اﻟﺪﻳﻨﻴﺔ ﻭاﻟﺪﻧﻴﻮﻳﺔ.
وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ
اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا
(மனிதர்களே) மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர்
மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்!
மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து
நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக்
கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:1)
உறவுகளை ஒட்டி-சேர்ந்து வாழ்வது தீமைகளுக்கு தடை கல்லாகவும். நற்பாக்கியத்தின் நுழை வாசலாகவும் அமையும் .
1 . வருமானம் பெருகும் . ஆயுள் நீடிக்கும் ,
أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَيُنْسَأَ لَهُ
فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ»
5986. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள்
நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்
2 . உஷார் உஷார்.
மழை வருவதே நல்லோருக்காக தான் .
குடும்பத்தில் சிலர் வருமானம் ஈட்டி தராது பலஹீனமாக இருக்கலாம் . அவருக்கும்
அவர் மனைவி மக்களுக்கும் நீங்கள் தான் சம்பாதித்து போடுவீர்கள் . அப்படி என்ன தேவை
என அரைகணக்கு போட்டு உதவியை நிறுத்திக் கொண்டால் அல்லாஹ் உங்கள் வருமானத்தில்
குறைவு / வீண் செலவு / மருத்துவ செலவு உண்டாக்கி "பரக்கத்" இல்லாமல்
ஆக்கிடாலாம். அவர்களுக்கு தன் உதவியை நேரடியாக செய்ய துவங்கிவிடுவான்.
عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، قَالَ: رَأَى سَعْدٌ رَضِيَ اللَّهُ
عَنْهُ، أَنَّ لَهُ فَضْلًا عَلَى مَنْ دُونَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ تُنْصَرُونَ وَتُرْزَقُونَ إِلَّا بِضُعَفَائِكُمْ»
2896. முஸ்அப் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
(என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), (தம் வீரச் செயல்களின் காரணத்தினால்) தமக்குப் பிறரை விட ஒரு சிறப்பு இருக்க
வேண்டும் (போரில் கிடைக்கும் செல்வத்தில் அதிகப் பங்கு தனக்கு கிடைக்க வேண்டும்)
எனக் கருதினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களிடையேயுள்ள பலவீனர்களின் (சாமானிய
மக்களின்) பொருட்டால் தான் உங்களுக்கு (இறைவனின் தரப்பிலிருந்து) உதவி கிட்டுகிறது' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்
மழை வருவதே நல்லோருக்காக தான்.
நல்லோருக்கு (மட்டும்)வரும் மழையே எல்லா(கெட்டவ)ருக்கும் .
3 . அது தீமைகளுக்கு தடை கல்லாகும் ,
فَرَجَعَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَرْجُفُ فُؤَادُهُ، فَدَخَلَ عَلَى خَدِيجَةَ بِنْتِ خُوَيْلِدٍ رَضِيَ اللَّهُ
عَنْهَا، فَقَالَ: «زَمِّلُونِي زَمِّلُونِي» فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ
الرَّوْعُ، فَقَالَ لِخَدِيجَةَ وَأَخْبَرَهَا الخَبَرَ: «لَقَدْ خَشِيتُ عَلَى
نَفْسِي» فَقَالَتْ خَدِيجَةُ: كَلَّا وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا،
إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَحْمِلُ الكَلَّ، وَتَكْسِبُ المَعْدُومَ،
وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الحَقِّ،
3. ஆயிஷா(ரலி) கூறினார்.
நபி(ஸல்) அவர்களுக்கு .........., (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, 'ஓதும்' என்றார். அதற்கவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள். 'அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு
இறுக்கமாக கட்டியணைத்தார் , பிறகு என்னை விட்டு விட்டு மீண்டும் 'ஓதும்' என்றார்.
இவ்வாறு செய்தார்கள் ,
மேலும், ஆயிஷா(ரலி) கூறினார். பிறகு இதயம்
படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா(ரலி)
விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம்
உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா(ரலி) அவர்கள் 'அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும்
அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்;
(அப்படி எந்தக் கெட்டதும் உங்களுக்கு வரவே வராது.ஏனெனில்) தாங்கள்
உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி
புரிகிறீர்கள்' என்றார்கள்.,,,.....
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 1. இறைச்செய்தியின் ஆரம்பம்.
உறவுகளை சேர்ந்து வாழுதல் போன்ற நல்ல செயல்களை பேணி நடப்பதால் அப்படி எந்தக்
கெட்டதும் உங்களுக்கு வரவே வராது என்று கதீஜா ரலி அவர்கள் ஆறுதல் கூறினார்கள் .
வறுமை/வெறுமை நோய் தலை விரித்து ஆடுவதின் காரணம் நாம் உறவுகளை துண்டித்து வாழ்வதால் தான்,
@@@@@@@
4 . துண்டித்தால் மன்னிப்பும் ரத்து, சுவர்க்கமும் இல்லை .
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ
الْخَمِيسِ فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا إِلَّا
رَجُلًا كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ فَيُقَالُ أَنْظِرُوا
هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا أَنْظِرُوا
هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا
5013. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் திறக்கப்படுகின்றன.
அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு
வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே
பகைமையுள்ள மனிதரைத் தவிர.
அப்போது "இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம்
செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்;இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை (மன்னிப்பு இன்றி
அப்படியே) விட்டுவையுங்கள்; இவ்விருவரும் சமாதானம் செய்துகொள்ளும்வரை
இவர்களை விட்டுவையுங்கள்" என்று கூறப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும் .
5 . மதம் மாறுபட்டிருந்தாலும் உறவை வெட்டினால் அபாய சங்கு தான் .
أَنَّ مُحَمَّدَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ أَخْبَرَهُ أَنَّ
أَبَاهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ
5984. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
குடும்ப உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.15
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்.
عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا،
قَالَتْ: قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهِيَ مُشْرِكَةٌ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَفْتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، قُلْتُ: وَهِيَ رَاغِبَةٌ، أَفَأَصِلُ أُمِّي؟ قَالَ: «نَعَمْ صِلِي
أُمَّكِ»
2620. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார். என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில்
வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின்
தூதரிடம், 'என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என்
தாயிடம் அவரின் உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்)
அவர்கள், 'ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல
முறையில் நடந்து கொள்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 51. அன்பளிப்பும் அதன் சிறப்பும்.
6 . சாதாரண உறவை வெட்டினாலே அந்த நிலமையெனில் பெற்ற தாய் தந்தை !
قَالَ أَبُو هُرَيْرَةَ [ص:64] رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " نَادَتِ امْرَأَةٌ ابْنَهَا
وَهُوَ فِي صَوْمَعَةٍ، قَالَتْ: يَا جُرَيْجُ، قَالَ: اللَّهُمَّ أُمِّي
وَصَلاَتِي، قَالَتْ: يَا جُرَيْجُ، قَالَ: اللَّهُمَّ أُمِّي وَصَلاَتِي، قَالَتْ:
يَا جُرَيْجُ، قَالَ: اللَّهُمَّ أُمِّي وَصَلاَتِي، قَالَتْ: اللَّهُمَّ لاَ
يَمُوتُ جُرَيْجٌ حَتَّى يَنْظُرَ فِي وُجُوهِ المَيَامِيسِ، وَكَانَتْ تَأْوِي
إِلَى صَوْمَعَتِهِ رَاعِيَةٌ تَرْعَى الغَنَمَ، فَوَلَدَتْ، فَقِيلَ لَهَا:
مِمَّنْ هَذَا الوَلَدُ؟ قَالَتْ: مِنْ جُرَيْجٍ، نَزَلَ مِنْ صَوْمَعَتِهِ، قَالَ
جُرَيْجٌ: أَيْنَ هَذِهِ الَّتِي تَزْعُمُ أَنَّ وَلَدَهَا لِي؟ قَالَ: يَا
بَابُوسُ، مَنْ أَبُوكَ؟ قَالَ: رَاعِي الغَنَمِ "
1206. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முற்காலத்தில்) ஒரு பெண் வழிபாட்டு அறையிலிருந்த தம் மகனை 'ஜுரைஜ்' என்று அழைத்தார்! 'இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை
அழைக்கிறாரே!' என்று ஜுரைஜ் (மனத்திற்குள்) கூறினார். மீண்டும்
'ஜுரைஜ்' என்று அப்பெண் அழைத்தபோது. 'இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் அன்னை அழைக்கிறாரே!' என்று ஜுரைஜ் (மனத்திற்குள்) கூறினார். மீண்டும்
அப்பெண் 'ஜுரைஜ்' என்று அழைத்தபோது 'இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை
அழைக்கிறாரே' என்று (மனத்திற்குள்) கூறினார். அப்போது அப்பெண்
'இறைவா! விபச்சாரிகளின் முகத்தில் விழிக்காமல்
ஜுரைஜ் மரணிக்கக் கூடாது' என்று பிரார்த்தித்தார். ஆடு மேய்க்கும்
பெண்ணொருத்தி ஜுரைஜுடைய ஆசிரமத்திற்கு வந்து செல்பவளாக இருந்தாள். அவள் ஒரு
குழந்தையைப் பெற்றாள். இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று அவளிடம்
கேட்கப்பட்டபோது 'ஜுரைஜுக்குதான்; அவர் தம் ஆசிரமத்திலிருந்து இறங்கி வந்து இவ்வாறு செய்துவிட்டார்' என்று அவள் கூறினாள். 'தன்னுடைய குழந்தையை எனக்குப் பிறந்தது எனக்
கூறும் அப்பெண் எங்கே?' என்று ஜுரைஜ் கேட்டுவிட்டு அவள் பெற்ற குழந்தையை
நோக்கி 'சிறுவனே! உன் தந்தை யார்?' எனக் கேட்டதற்கு அக்குழந்தை 'ஆடுமேய்க்கும் இன்னார்' என விடையளித்தது. என அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 21. தொழுகையில் செய்யும் பிற செயல்கள்.
இதோ சின்னதோர் பிணக்கு/ மனக்கசப்பு காரணமாக அதிரடியாக உலகிலேயே ஒரு தண்டனை , சொத்து / பாகப் பிரிவினை / மனைவியின் தலையணை மந்திரம் போன்றதால் தாய் தந்தை
தூக்கி எரிந்து விடுவது , அவர்களை முதியோர் இல்லத்தில் தள்ளுவது இதெல்லாம்
எவ்வளவு பெரும் தண்டனை /ஆபத்து /விபரீதங்களை உலகிலேயே ஏற்படுத்தும் என்பதை
கண்கூடாக கண்டிருப்போம்,காண்போம் ,
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ مِنْ اَزْوَاجِكُمْ
وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْ .
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள்
இருக்கின்றனர்; எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக
இருங்கள்;
(அல்குர்ஆன் : 64:14)
7 . உறவை முறித்தால் இறை சாபமும் சாத்தான் உடன் கூட்டுறவும் ஏற்பட்டு விடும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَلَقَ اللَّهُ الخَلْقَ، فَلَمَّا فَرَغَ
مِنْهُ قَامَتِ الرَّحِمُ، فَأَخَذَتْ بِحَقْوِ الرَّحْمَنِ، فَقَالَ لَهُ: مَهْ،
قَالَتْ: هَذَا مَقَامُ العَائِذِ بِكَ مِنَ القَطِيعَةِ، قَالَ: أَلاَ تَرْضَيْنَ
أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ، قَالَتْ: بَلَى يَا رَبِّ،
قَالَ: فَذَاكِ " قَالَ أَبُو هُرَيْرَةَ: " اقْرَءُوا إِنْ شِئْتُمْ:
{فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الأَرْضِ
وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ} [محمد: 22] "
4830. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப்
பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், 'என்ன?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம்
பாதுகாப்புக் கோரி நிற்கிறேன்' என்று கூறியது. 'உன்னை (உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்து
கொள்பவருடன் நானும் நல்லமுறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுகிறவரை நானும் துண்டித்து
விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்க வில்லையா?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'ஆம் (திருப்தியே) என் இறைவா!' என்று கூறியது. அல்லாஹ் 'இது (அவ்வாறுதான்) நடக்கும்' என்று கூறினான்.
அறிவிப்பாளர் அபூ ஹுரைரா(ரலி), 'நீங்கள் விரும்பினால் '(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்)
பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?' எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை.
اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَعَنَهُمُ اللّٰهُ فَاَصَمَّهُمْ وَاَعْمٰٓى
اَبْصَارَهُمْ
(அறப்போருக்கு போகாதவர்கள்/உறவை முறித்து வாழ்வோர்கள்) இத்தகையோரை அல்லாஹ்
சபித்துவிட்டான். மேலும், அவர்களைச் செவிடர்களாயும், குருடர்களாயும் ஆக்கி விட்டான்.
(அல்குர்ஆன் : 47:23).
கொடிய சாபத்திலிருந்து தப்பிக்க வேண்டும் , உறவை முறித்துக் கொள்ள கூடாது என்பதுக்காவும் ஸஹாபாக்கள் (-அபூ பக்கர் சித்தீக் ரலி அவர்கள்) மாபெரும் குற்றம்
செய்தவர்களையும் மன்னித்து உறவை ஒட்டி வாழ்ந்தார்கள் .
وَلَا يَاْتَلِ اُولُوا الْـفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ
يُّؤْتُوْۤا اُولِى الْقُرْبٰى وَالْمَسٰكِيْنَ وَالْمُهٰجِرِيْنَ فِىْ سَبِيْلِ
اللّٰهِ وَلْيَـعْفُوْا وَلْيَـصْفَحُوْا اَلَا تُحِبُّوْنَ اَنْ
يَّغْفِرَ اللّٰهُ لَـكُمْ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
உங்களில் செல்வந்தரும் (பிறருக்கு உதவி செய்ய) தக்க வசதி வாய்ப்புடையவரும், தங்கள் சொந்தபந்துக்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (யாதொன்றுமே) கொடுக்க முடியாது
என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு ஏதும் மனவருத்தம்
ஏற்பட்டிருந்தால்) அதனை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ்
உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும்
கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 24:22)
பத்ர் ஸஹாபியான மிஸ்தஹ் ரலி அவர்கள் என்பவர் அபூ பக்கர் சித்தீக் ரலி
அவர்களின், தூரத்துச் சொந்தக்காரர், இவர் ஏழையானவர் . இவருக்கு அபூ பக்கர் சித்தீக்
ரலி அவர்கள் பொருளுதவி செய்து வந்தார்கள் , தன் மகள் ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி அவதூறு கூறி அபாண்டமான வீண்
பழிசுமத்தியவர்களில் இவரும் (மிஸ்தஹ் (ரலி) அவர்கள்) ஒருவர் , என்பதால் பொருளுதவி செய்யாமல் நிறுத்திக்
கொண்டார்கள் .
ஆனாலும் முன்பு உள்ள (24:22) வசனத்திற்க்கு கட்டுப் பட்டு , மேலும் உறவை முறித்துக் கொள்ள கூடாது , என்பதால் உறவை சேர்ந்து வாழவும். பொருள் உதவி
செய்யவும் மீண்டும் துவங்கி விட்டார்கள் .
நாமோ அல்ர சில்ர பேச்சுக்காக நெருங்கிய சொந்த சகோதர/சகோதரி களை , ஏன் நொந்து பெற்ற தாய் தந்தையையும் கூட
பல்லாண்டுகளாக உறவை துன்டித்து வாழ்(ந்து சாவு)கிறோம் .
8 . அல்லாஹ் உடன் உறவு வேண்டும் என விரும்புவோர் மூன்றே நாளில் ஒட்டிக்
கொள்வார்கள் ,
عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لاَ يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ
أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ: فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ
هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلاَمِ "
6077. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல்
இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர்
முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில்
தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார்.
என அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்
வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி .
6073 6074 6075. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர்
ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல்(ரஹ்) கூறினார்
ஆயிஷா(ரலி) (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி)
(அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்)
கைவிடவேண்டும். அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம்
தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ஆயிஷா(ரலி) (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி)
(அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்)
கைவிடவேண்டும். அல்லது நான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம்
தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ஆயிஷா(ரலி), 'அவரா இப்படிக் கூறினார்?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றனர். அப்போது ஆயிஷா(ரலி), 'இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது
ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்' என்று கூறிவிட்டார்கள். நீண்ட நாள்கள் பேச்சு வார்த்தை நின்றுபோனபோது
ஆயிஷா(ரலி) அவர்களிடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு
ஸுபைர்(ரலி) கேட்டுக்கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து பேசியபோது) ஆயிஷா(ரலி), 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்
விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவுமாட்டேன். என்
சத்தியத்தை நான் முறித்துக் கொள்ளவுமாட்டேன்' என்று கூறிவிட்டார்கள்.
ஆயிஷா(ரலி) இப்னு ஸுபைர் அவர்களிடம் பேச்சை நிறுத்தி நீண்ட நாள்களாம்
விட்டபோது பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி
யகூஸ்(ரலி) ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர்(ரலி), 'அல்லாஹ்வை முன்வைத்து உங்கள் இருவரிடமும நான் வேண்டுகிறேன். என்னை (என் சிறிய
தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லக்கூடாதா? என் உறவை முறித்துக் கொள்வதாக அவர்கள் செய்துள்ள
சத்தியம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்லவே!' என்று கூறினார்கள். எனவே, மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களும் தம் மேலங்கிகளை
அணிந்துகொண்டு இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுடன் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றார்கள்.
(அங்கு சென்ற) உடனே 'அஸ்ஸலாமு அலைக்கி வ ரஹ்மத்துலலாஹி வ பரகாதுஹு' என்று சலாம் சொல்லிவிட்டு, 'நாங்கள் உள்ளே வரலாமா?' என்று அனுமதி கேட்டனர். அதற்கு ஆயிஷா(ரலி), 'உள்ளே வாருங்கள்' என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள் (மூவரும்) 'நாங்கள் அனைவரும் உள்ளே வரலாமா?' என்று கேட்டனர். ஆயிஷா(ரலி), 'ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள்' என்று அவர்கள் இருவருடனும் இப்னு ஸுபைர்(ரலி) இருப்பதை அறிந்து கொள்ளாமலேயே
கூறினார்கள்.
அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர்(ரலி) (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த) திரைக்குள் நுழைந்து
அவர்களைத் தழுவிக்கொண்டு அவர்களிடம் முறையிட்டு அழத் தொடங்கினார்கள். மிஸ்வர்(ரலி)
அவர்களும் அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்களும் (வெளியே இருந்தபடி) இப்னு ஸுபைர்(ரலி)
அவர்களிடம் பேசியே தீரவேண்டும் என்றும் அவருக்காகத் தாங்கள் செய்யும் பரிந்துரையை
ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தனர்.
" لاَ يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ
لَيَالٍ،
மேலும், அவர்கள் இருவரும், 'ஒரு முஸ்லிம் தம் சகோதரிடம் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது
அனுமதிக்கப்பட்டதன்று' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளதை
தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்' என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி) அவர்களிடம் (உறவைப் பேணுவதன் சிறப்பு குறித்து)
கசப்பூட்டியும் அவர்கள் அதிகமாகப் பேசியபோது (தாம் செய்த சத்தியத்தைப் பற்றி)
அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா(ரலி) அழலானார்கள்.
மேலும், '(நான் அவரிடம் பேசமாட்டேன் என) சத்தியம் செய்து
விட்டேன். சத்தியம் மிகவும் கடுமையானதாகும்' என்று (அவர்கள் இருவரிடமும் திரும்பக் திரும்பக்) கூறிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஆயிஷா(ரலி) இருவரும் (தங்கள் கருத்தை) வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர்.
இறுதியில் ஆயிஷா(ரலி) (தம் சகோதரியின் புதல்வர்) இப்னு ஸுபைரிடம் பேசிவிட்டார்கள்.
தம் சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை
செய்தார்கள். அதற்குப் பிறகும் கூடத் தம் சத்தியத்தை நினைவுகூர்ந்து தம் முகத்திரை
நனையுமளவிற்கு அவர்கள் அழுவார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்.
9 . வெட்டினாலும் ஒட்டிக் கொள்ள வேண்டும் .
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ
الوَاصِلُ بِالْمُكَافِئِ، وَلَكِنِ الوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ
وَصَلَهَا»
5991. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே
உறவைப் பேணுபவராவார். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ
لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ
إِلَيَّ وَأَحْلُمُ عَنْهُمْ وَيَجْهَلُونَ عَلَيَّ فَقَالَ لَئِنْ كُنْتَ كَمَا
قُلْتَ فَكَأَنَّمَا تُسِفُّهُمْ الْمَلَّ وَلَا يَزَالُ مَعَكَ مِنْ اللَّهِ
ظَهِيرٌ عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذَلِكَ
5000. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடன் நான் ஒட்டி
உறவாடுகிறேன். ஆனால், அவர்கள் எனது உறவை முறிக்கின்றனர். நான்
அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு அபகாரம் செய்கிறார்கள். (என்னைப் புண்படுத்தும்போது) அவர்களை
நான் சகித்துக் கொள்கிறேன். (ஆனாலும்,) அவர்கள் என்னிடம் அறியாமையோடு
நடந்துகொள்கிறார்கள்" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் சொன்னதைப் போன்று நீங்கள்
நடந்திருந்தால், அவர்களது வாயில் நீங்கள் சுடு சாம்பலைப்
போட்டவரைப் போன்றுதான். இதே நிலையில் நீங்கள் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து
ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக உங்களுடன் இருந்துகொண்டேயிருப்பார்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும் .
10 . வீட்டில் கஞ்சன் நாட்டில் கொடை வள்ளல் இதில் பலனில்லை.
أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خَيْرُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ
غِنًى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ»
1426. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தேவைபோக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உம்முடைய
வீட்டாரிடமிருந்தே தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!'
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 24. ஸகாத்தின் சட்டங்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «دِينَارٌ أَنْفَقْتَهُ فِي سَبِيلِ اللهِ وَدِينَارٌ أَنْفَقْتَهُ
فِي رَقَبَةٍ، وَدِينَارٌ تَصَدَّقْتَ بِهِ عَلَى مِسْكِينٍ، وَدِينَارٌ
أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ، أَعْظَمُهَا أَجْرًا الَّذِي أَنْفَقْتَهُ عَلَى
أَهْلِكَ» (رواه مسلم)
1818. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் அடிமை(யின் விடுதலை)க்காகச்
செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் ஏழைக்குத் தர்மம் செய்த ஒரு
பொற்காசு, நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட
ஒரு பொற்காசு - இவற்றில் நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசே
அதிக நற்பலனை உடையதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 12. ஜகாத்
من ابي داؤد
1692 - ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﻤﺮﻭ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ:
«ﻛﻔﻰ ﺑﺎﻟﻤﺮء ﺇﺛﻤﺎ ﺃﻥ ﻳﻀﻴﻊ ﻣﻦ يقوت»
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலி அவர்கள்
அறிவிக்கிறார்கள். " உணவளிக்க கடமைப் பட்டவர்களை கவனிக்காமல் வீணடித்து
விடுவது அவனுக்கு பாவத்தால் போதுமாகும். (பெரும் பாவமாகும்)"
(நூல் : அபூ தாவூத்)
له>ا اعطي البيرحاء للاقرباء
فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى
يَقُولُ: {لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [آل
عمران: 92] وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَيَّ بَيْرُحَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ
لِلَّهِ، أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ، فَضَعْهَا يَا رَسُولَ
اللَّهِ حَيْثُ أَرَاكَ اللَّهُ،
قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«بَخٍ، ذَلِكَ مَالٌ رَابِحٌ، ذَلِكَ مَالٌ رَابِحٌ، وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ،
وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ» فَقَالَ أَبُو طَلْحَةَ:
أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ، فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ
وَبَنِي عَمِّهِ،
1461. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
அபூ தல்ஹா(ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள்
அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும்
விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ன்னபவி)க்கு எதிரில் இருந்தது. நபி(ஸல்)
அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம். 'நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம்
செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்' என்ற (திருக்குர்ஆன் 03:92) இறைவசனம் அருளப்பட்டதும். அபூ தல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹு தஆலா, 'நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம்
செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்' எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா
என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம்
அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் என்னுடைய மறுமை வாழ்வின் நலனுக்கான)
சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே 'இறைத்தூதர் அவர்களே! அதை அல்லாஹ் உங்களுக்குக்
காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய
செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை
உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் பொறுத்தமாகக்
கருதுகிறேன்' எனக் கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! நான் அவ்வாறே செய்கிறேன்!' எனக் கூறிவிட்டு, அத் தோட்டத்தைத் தம் நெருங்கிய உறவினருக்கும் தம் தந்தையுடன் பிறந்தவரின்
குழந்தைகளும் பங்கிட்டுவிட்டார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 24. ஸகாத்தின் சட்டங்கள்
11. இலவசமாக ஒரு ஆஃபர்.
اﻟﻨﺴﺎﺋﻲ 2582 - عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الصَّدَقَةَ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ،
وَعَلَى ذِي الرَّحِمِ اثْنَتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ» ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ ﻭاﻟﺘﺮﻣﺬﻱ ﻭاﻟﻨﺴﺎﺋﻲ
ﻭاﺑﻦ ﻣﺎﺟﻪ ﻭاﻟﺪاﺭﻣﻲ
عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَلِيَ
أَجْرٌ أَنْ أُنْفِقَ عَلَى بَنِي أَبِي سَلَمَةَ، إِنَّمَا هُمْ بَنِيَّ؟
فَقَالَ: «أَنْفِقِي عَلَيْهِمْ، فَلَكِ أَجْرُ مَا أَنْفَقْتِ عَلَيْهِمْ»
1467. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் நான், இறைத்தூதர் அவர்களே! (என் முதல் கணவரான) அபூ ஸலமாவின் குழந்தைகளுக்குச்
செலவழிப்பதற்காக எனக்கு நன்மையுண்டா? அவர்களும் என்னுடைய குழந்தைகளே! எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீ அவர்களுக்காகச் செலவு செய்! அவர்களுக்காக நீ
செலவு செய்ததற்கான நன்மை உனக்குண்டு' எனக் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 24. ஸகாத்தின் சட்டங்கள் .
12 . உறவை சேர்த்து வைக்க பொய்யை கூட சொல்லலாம்.
ஆனால் உறவு துண்டு படுமெனில் உண்மையாக இருந்தாலும் சொல்லக் கூடாது ,அப்படி சொல்லித் திரிபனுக்கு கப்ரிலேயே தண்டனை
துவங்கி விடும். சொர்க்கத்தையும் இழக்க நேரிடும் .
ﻋﻦ ﻫﻤﺎﻡ ﺑﻦ اﻟﺤﺎﺭﺙ، ﻗﺎﻝ: ﻛﺎﻥ ﺭﺟﻞ ﻳﻨﻘﻞ اﻟﺤﺪﻳﺚ ﺇﻟﻰ اﻷﻣﻴﺮ، ﻓﻜﻨﺎ ﺟﻠﻮﺳﺎ
ﻓﻲ اﻟﻤﺴﺠﺪ ﻓﻘﺎﻝ: اﻟﻘﻮﻡ ﻫﺬا ﻣﻤﻦ ﻳﻨﻘﻞ اﻟﺤﺪﻳﺚ ﺇﻟﻰ اﻷﻣﻴﺮ، ﻗﺎﻝ: ﻓﺠﺎء ﺣﺘﻰ ﺟﻠﺲ ﺇﻟﻴﻨﺎ
ﻓﻘﺎﻝ ﺣﺬﻳﻔﺔ: ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: «ﻻ ﻳﺪﺧﻞ اﻟﺠﻨﺔ ﻗﺘﺎﺕ ﺭﺿﻲ اﻟﻠﻪ
ﻋﻨﻬﻤﺎ
169. ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (மக்களிடையே நடக்கும்) உரையாடல்களை ஆட்சியாளர்வரைக் கொண்டு போய்ச்
சேர்த்துக்கொண்டிருந்தார். நாங்கள் (ஒரு நாள்) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம்.
அப்போது மக்கள், "இதோ! இவர் (நமக்கிடையே நடக்கும்) உரையாடல்களை
ஆட்சியாளர் வரைக் கொண்டுபோய்ச் சேர்ப்பவர்களில் ஒருவர் என்று (ஒருவரைச்
சுட்டிக்காட்டி) கூறினர். அந்த மனிதர் வந்து எங்கள் அருகில் அமர்ந்தார். அப்போது
ஹுதைஃபா (ரலி) அவர்கள், "கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை
ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: ﺃﻧﻪ ﻣﺮ ﺑﻘﺒﺮﻳﻦ ﻳﻌﺬﺑﺎﻥ، ﻓﻘﺎﻝ: «ﺇﻧﻬﻤﺎ
ﻟﻴﻌﺬﺑﺎﻥ، ﻭﻣﺎ ﻳﻌﺬﺑﺎﻥ ﻓﻲ ﻛﺒﻴﺮ، ﺃﻣﺎ ﺃﺣﺪﻫﻤﺎ ﻓﻜﺎﻥ ﻻ ﻳﺴﺘﺘﺮ ﻣﻦ اﻟﺒﻮﻝ، ﻭﺃﻣﺎ اﻵﺧﺮ ﻓﻜﺎﻥ
ﻳﻤﺸﻲ ﺑﺎﻟﻨﻤﻴﻤﺔ»، ﺛﻢ ﺃﺧﺬ ﺟﺮﻳﺪﺓ ﺭﻃﺒﺔ، ﻓﺸﻘﻬﺎ ﺑﻨﺼﻔﻴﻦ، ﺛﻢ ﻏﺮﺯ ﻓﻲ ﻛﻞ ﻗﺒﺮ ﻭاﺣﺪﺓ،
ﻓﻘﺎﻟﻮا: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﻟﻢ ﺻﻨﻌﺖ ﻫﺬا؟ ﻓﻘﺎﻝ: «ﻟﻌﻠﻪ ﺃﻥ ﻳﺨﻔﻒ ﻋﻨﻬﻤﺎ ﻣﺎ ﻟﻢ ﻳﻴﺒﺴﺎ
1361. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இருவருடைய கப்ருகளைத் கடந்து நபி(ஸல்)
அவர்கள் சென்றபோது, 'இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை
செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்' எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றை
நட்டார்கள். தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?' என்று கேட்டதும், 'இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்
أن أم كلثوم ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻭﻫﻮ ﻳﻘﻮﻝ: «ﻟﻴﺲ اﻟﻜﺬاﺏ
اﻟﺬﻱ ﻳﺼﻠﺢ ﺑﻴﻦ اﻟﻨﺎﺱ، ﻭﻳﻘﻮﻝ ﺧﻴﺮا ﻭﻳﻨﻤﻲ ﺧﻴﺮا» ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ.
ﻭﺯاﺩ ﻣﺴﻠﻢ ﻗﺎﻟﺖ: ﻭﻟﻢ ﺃﺳﻤﻌﻪ - ﺗﻌﻨﻲ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻳﺮﺧﺺ ﻓﻲ
ﺷﻲء ﻣﻤﺎ ﻳﻘﻮﻝ اﻟﻨﺎﺱ ﻛﺬﺏ ﺇﻻ ﻓﻲ ﺛﻼﺙ: اﻟﺤﺮﺏ ﻭاﻹﺻﻼﺡ ﺑﻴﻦ اﻟﻨﺎﺱ ﻭﺣﺪﻳﺚ اﻟﺮﺟﻞ اﻣﺮﺃﺗﻪ
ﻭﺣﺪﻳﺚ اﻟﻤﺮﺃﺓ ﺯﻭﺟﻬﺎ
5079. உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இருதரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே
சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்" என்று
கூறுவதை நான் கேட்டேன்.
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், சாலிஹ் பின் கைசான் அவர்களது அறிவிப்பில், "உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள், "மக்கள் பேசும் பொய்களில் மூன்றைத் தவிர
வேறெதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்ததை நான் கேட்டதில்லை;
1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).
2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.
3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.
இம்மூன்று விஷயங்களில் தவிர" என்று கூறினார்கள்" என
இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும் .