சனி, 4 ஆகஸ்ட், 2018

மதீனாவின் புனிதம்.


மதீனாவின் புனிதம்.
--------------------------------

இஸ்லாமிய கடமைகளில் ஐந்தாம் கடமையான ஹஜ் & உம்ராவும் செய்வதற்கு நற்பாக்கியம் தருவானாக.
மக்கா செல்லும் யாவரும் மதீனா செல்வார்கள்,
எனவே அப்புனித தளங்கள் பற்றி தெரிந்து இருந்தால் சரியாக பயன் படுத்திக் கொள்ளலாம்.
@@@@@@@

1. அங்கு நன்மைகள் பன்மடங்கு.

இங்கு வருவதற்கு உடல் உழைப்பு மிக அதிகம் , பணம் காசும் அதிக செலவு என்பதால் அதற்குப் பகரமாக பரிசும் மிகப்பெரியதே,
எந்த நல்லது செய்தாலும் நன்மை மக்காவில் ஒரு இலட்சத்தை விட கூடுதல் , மதீனாவில் ஒரு ஆயிரத்தை விட கூடுதல் கிட்டும்,

ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ: ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﺻﻼﺓ ﻓﻲ ﻣﺴﺠﺪﻱ ﻫﺬا ﺧﻴﺮ ﻣﻦ ﺃﻟﻒ ﺻﻼﺓ ﻓﻴﻤﺎ ﺳﻮاﻩ، ﺇﻻ اﻟﻤﺴﺠﺪ اﻟﺤﺮاﻡ.

1190. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஒரு ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்'.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 20. மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு.

ﻋﻦ ﺟﺎﺑﺮ، ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﺻﻼﺓ ﻓﻲ ﻣﺴﺠﺪﻱ ﺃﻓﻀﻞ ﻣﻦ ﺃﻟﻒ ﺻﻼﺓ ﻓﻴﻤﺎ ﺳﻮاﻩ ﺇﻻ اﻟﻤﺴﺠﺪ اﻟﺤﺮاﻡ ﻭﺻﻼﺓ ﻓﻲ اﻟﻤﺴﺠﺪ اﻟﺤﺮاﻡ ﺃﻓﻀﻞ ﻣﻦ ﻣﺎﺋﺔ ﺃﻟﻒ ﺻﻼﺓ ﻓﻴﻤﺎ ﺳﻮاﻩ»
(மதீனாவில் உள்ள) என்னுடைய மஸ்ஜிதில் தொழுகுவது (மக்காவில் உள்ள) மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் ஒரு ஆயிரம் தொழுகை தொழுகுவதை விடச் சிறந்ததாகும்'.
மஸ்ஜிதுல்  ஹராமில் தொழுவது மற்ற மஸ்ஜித்களில் ஒரு இலட்சம்  தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்,
என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்;இப்னு மாஜஹ் 1406.
அறிவிப்பாளர் ;
ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

இப்னு மாஜஹ்வின்
வேறு ரிவாயத்தில்
وصلاة في مسجدي بخمسين ألف صلاة
மதீனாவில் ஐம்பது ஆயிரம்  மடங்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று வந்துள்ளது.
அது பலஹீனமான ஹதீஸ் .

@@@@@@@
2. இம் மூன்று  மஸ்ஜிதுகளுக்கு மட்டும் தனித்துவம்,

ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: " ﻻ ﺗﺸﺪ اﻟﺮﺣﺎﻝ ﺇﻻ ﺇﻟﻰ ﺛﻼﺛﺔ ﻣﺴﺎﺟﺪ: اﻟﻤﺴﺠﺪ اﻟﺤﺮاﻡ، ﻭﻣﺴﺠﺪ اﻟﺮﺳﻮﻝ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻭﻣﺴﺠﺪ اﻷﻗﺼﻰ.

1189. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
'மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதின் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 20. மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு.


@@@@@@@
3. அங்கு நன்மைகள் அதிகம் கிடைப்பது போன்று தீமைசெய்தால் தண்டனையும்
மிகக் கடினமானதே!

وَمَنْ يُّرِدْ فِيْهِ بِاِلْحَـادٍ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ اَ لِيْمٍ‏ 

அதில் மார்க்கத்திற்கு விரோதமான அநியாயம் செய்ய நினைத்தாலே, அவர்கள் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம்.
(அல்குர்ஆன் : 22:25).

அந்த ஹரம்-புனிதமான ஏரியாவில் இன்னும் தப்பு செய்யவே இல்லை,செய்வதற்கு மனதில் உறுதி கொண்டு நினைத்தாலே தண்டனை கிடைக்கும் ,
அப்படியானால் அதை செய்து விட்டால் தண்டனை எப்படி இருக்கும் ,


மேலும் இப்புனித இடங்களில் ஒழுக்கம் / நிசப்தம் அதிகம் கடைபிடிக்க வேண்டும்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَرْفَعُوْۤا اَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِىِّ وَلَا تَجْهَرُوْا لَهٗ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ اَنْ تَحْبَطَ اَعْمَالُكُمْ وَاَنْـتُمْ لَا تَشْعُرُوْنَ‏ 
நம்பிக்கையாளர்களே!  நபியுடைய சப்தத்திற்கு மேல் உங்களுடைய சப்தத்தை உயர்த்தாதீர்கள். அன்றி, உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் சப்தமாகப் பேசுவதைப் போல், (மதீனாவில்)அவரிடம் சப்தத்தை உயர்த்தி நீங்கள் பேசாதீர்கள். இதன் காரணமாக உங்களுடைய நன்மைகள் எல்லாம் அழிந்துவிடலாம், (இதனை) நீங்கள் உணர்ந்துகொள்ள முடியாது.
(அல்குர்ஆன் : 49:2).


ஹிஜ்ரி 6 ம் ஆண்டு 1400 தோழர்களுடன் உம்ராவிற்கு சென்ற நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் தங்குகிறார்கள்  நபியவர்களின் நிலை கண்டுவருவதற்காக காஃபிர்களின் சார்பில் உர்வத் பின் மஸ்ஊத் ரலி ( அவர் அப்போது முஸ்லிமாகவில்லை) அவர்கள் வந்து பார்த்துவிட்டு காஃபிர்களிடம் சென்று இவ்வாறு கூறினாராம்

ﻭاﻟﻠﻪ ﺇﻥ ﺗﻨﺨﻢ ﻧﺨﺎﻣﺔ ﺇﻻ ﻭﻗﻌﺖ ﻓﻲ ﻛﻒ ﺭﺟﻞ ﻣﻨﻬﻢ، ﻓﺪﻟﻚ ﺑﻬﺎ ﻭﺟﻬﻪ ﻭﺟﻠﺪﻩ، ﻭﺇﺫا ﺃﻣﺮﻫﻢ اﺑﺘﺪﺭﻭا ﺃﻣﺮﻩ، ﻭﺇﺫا ﺗﻮﺿﺄ ﻛﺎﺩﻭا ﻳﻘﺘﺘﻠﻮﻥ ﻋﻠﻰ ﻭﺿﻮﺋﻪ، ﻭﺇﺫا ﺗﻜﻠﻢ ﺧﻔﻀﻮا ﺃﺻﻮاﺗﻬﻢ ﻋﻨﺪﻩ، ﻭﻣﺎ ﻳﺤﺪﻭﻥ ﺇﻟﻴﻪ اﻟﻨﻈﺮ ﺗﻌﻈﻴﻤﺎ ﻟﻪ،

(இவற்றையெல்லாம் உற்றுக் கவனித்து நேரடியாக அறிந்தபின்) உர்வா இப்னு மஸ்ஊத் தன் தோழர்களிடம் சென்று, 'என் சமுதாயத்தாரே! நான் பல அரசர்களிடம் தூதுக் குழுவில் ஒருவனாகச் சென்றுள்ளேன். (உரோம மன்னன்) சீசரிடமும், (பாரசீக மன்னன்) கிஸ்ராவிடமும், (அபிசீனிய மன்னன்) நஜாஷியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மத்து அளிக்கிற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரின் தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரின் கட்டளையை நிறைவேற்ற அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருகிறார்கள். அவர் உளூச் செய்தால் அவர் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பெறுவதற்காக, ஒருவரோடொருவர் சண்டையிடும் அளவிற்குச் செல்வார்கள். அவர் பேசினால், அவரிடம் அவர்கள் தங்களின் குரல்களைத் தாழ்த்திக் கொள்கிறார்கள். அவரை கண்ணியப்படுத்தும் விதத்தில் அவரைக் கூர்ந்து (நேருக்கு நேர்) பார்ப்பதில்லை.

சில சஹாபாக்கள் தங்களின் குரல் பெரியகுரல் நாம் பேசினால் நபியவர்களின் சப்தத்தைவிட பெரியதாகிவிடுமோ என்ற அச்சத்தால் அவர்களின் முன்பு பேசாமல் மௌனமாக இருந்துள்ளார்கள்.

49:2 இந்த வசனத்தின் சட்டம் அன்றைக்கு மட்டுமல்ல கியாமத்நாள் வரைக்கும் பொருந்தக்கூடியது.

470 ﻋﻦ اﻟﺴﺎﺋﺐ ﺑﻦ ﻳﺰﻳﺪ، ﻗﺎﻝ: ﻛﻨﺖ ﻗﺎﺋﻤﺎ ﻓﻲ اﻟﻤﺴﺠﺪ ﻓﺤﺼﺒﻨﻲ ﺭﺟﻞ، ﻓﻨﻈﺮﺕ ﻓﺈﺫا ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ، ﻓﻘﺎﻝ: اﺫﻫﺐ ﻓﺄﺗﻨﻲ ﺑﻬﺬﻳﻦ، ﻓﺠﺌﺘﻪ ﺑﻬﻤﺎ، ﻗﺎﻝ: ﻣﻦ ﺃﻧﺘﻤﺎ - ﺃﻭ ﻣﻦ ﺃﻳﻦ ﺃﻧﺘﻤﺎ؟ - ﻗﺎﻻ: ﻣﻦ ﺃﻫﻞ اﻟﻄﺎﺋﻒ، ﻗﺎﻝ: «ﻟﻮ ﻛﻨﺘﻤﺎ ﻣﻦ ﺃﻫﻞ اﻟﺒﻠﺪ ﻷﻭﺟﻌﺘﻜﻤﺎ، ﺗﺮﻓﻌﺎﻥ ﺃﺻﻮاﺗﻜﻤﺎ ﻓﻲ ﻣﺴﺠﺪ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ

470. ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
நான் பள்ளி வாசலில் நின்றிருந்தபோது ஒருவர் என் மீது சிறு கல்லை எறிந்தார். நான் திரும்பிப் பார்த்தபோது உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) நின்றிருந்தார்கள். 'நீ சென்று (அதோ) அந்த இருவரையும் என்னிடம் அழைத்து வா!' என்றார்கள். அவ்விருவரையும் அவர்களிடம் கூட்டிக் கொண்டு வந்தேன். நீங்கள் இருவரும் எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று உமர்(ரலி) கேட்க, 'நாங்கள் தாயிஃப் வாசிகள்' என்று அவர்கள் கூறினர். 'அல்லாஹ்வின் தூதருடைய பள்ளி வாசலில் சப்தங்களை நீங்கள் உயர்த்தியதற்காக நீங்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்களாக இருந்தால் உங்களிருவரையும் (சவுக்கால்) அடித்திருப்பேன்' என்று உமர்(ரலி) கூறினார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை.


எனவே மக்கா & மதீனாவில் குரலை உயர்த்தி சப்தமாக பேசுவது /பொய் பேசுவது /கோபப் படுவது /பீடி-சிகரெட்/மொபைலில் பாட்டு/சீரியல் பார்ப்பது /கேட்பது போன்ற யாவையும் முழுமையாக தவிர்க்க வேண்டும் ,

@@@@@@@
4. நபி (ஸல்) அவர்களின் புனித  ரவ்லா,

1196 ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﻣﺎ ﺑﻴﻦ ﺑﻴﺘﻲ ﻭﻣﻨﺒﺮﻱ ﺭﻭﺿﺔ ﻣﻦ ﺭﻳﺎﺽ اﻟﺠﻨﺔ، ﻭﻣﻨﺒﺮﻱ ﻋﻠﻰ ﺣﻮﺿﻲ.

1196.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்கா
(-ரவ்லா)களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர், என்னுடைய ஹவ்லுல் கவ்ஸர் அருகிலுள்ளது'.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 20. மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு.

மஸ்ஜித் முழுவதும் சிவப்புக் கலர் கார்பெட்-விரிப்பு,
அந்த ரவ்லா மட்டும் பச்சை நிற விரிப்பு,
சுமார் ஏழாவது/எட்டாவது ஸப்-வரிசையின் இடது பாகத்தில் அது அமைந்துள்ளது ,

அற்புதத்  தூண்கள்.
*********************
ரவ்லாவிற்குள் சில தூண்கள் உள்ளது அதில் ஒவ்வொன்றும் சில தனிச் சிறப்புண்டு.

ﺇﺫا ﺧﻄﺐ ﻳﺴﺘﻨﺪ ﺇﻟﻰ ﺟﺬﻉ ﻧﺨﻠﺔ ﻣﻦ ﺳﻮاﺭﻱ اﻟﻤﺴﺠﺪ ﻓﻠﻤﺎ ﺻﻨﻊ ﻟﻪ اﻝﻣﻨﺒﺮ ﻓﺎﺳﺘﻮﻯ ﻋﻠﻴﻪ اﺿﻄﺮﺑﺖ ﺗﻠﻚ اﻟﺴﺎﺭﻳﺔ ﻛﺣﻨﻴﻦ اﻟﻨﺎﻗﺔ ﺣﺘﻰ ﺳﻤﻌﻬﺎ ﺃﻫﻞ اﻟﻤﺴﺠﺪ
இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மஸ்ஜித் நபவியில் நபியவர்கள் ஒரு பேரித்த மரக்கட்டையில் சாய்ந்து நின்று பிரசங்கம் செய்வார்கள். சஹாபாக்கள் நபியவர்கள் நிற்பதற்காக ஒரு மிம்பர் தயார் செய்து கொடுத்த போது அதில் ஏறி நின்று பிரசங்கம் செய்தார்கள் அப்போது குழந்தை அழுவது போன்ற ஒரு சப்தம் வந்தது அது எங்கிருந்து வருகின்றது என்பதை கவனித்த போது அந்த பேரீத்த மரக் கட்டையிலிருந்து வந்தது. நபியவர்கள் தங்களின் திருக் கரத்தால் அதை தடவிக் கொடுத்து விட்டு இத்தனை நாட்களாக இதன் மீது சாய்ந்து நான் பிரசங்கம் செய்தேன் இப்போது அந்த பாக்கியம் போய்விட்டதே என நினைத்து இந்த மரக்கட்டை தேம்பி அழுகின்றது .
நபிகள் (ஸல்) அவர்கள் தடவிக் கொடுத்து சமாதான படுத்திய பின் அழுகையை நிறுத்தியது.
அந்த தூணுக்கு "உஸ்துவானதே ஹன்னானா" என்று பெயர். இன்றைக்கும் அது அங்குநிறுத்தியது.
நூல் அஹ்மத் ,அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) அவர்கள் .
அதுமிம்பருக்கு கீழேதான் புதைக்கப் பட்டுள்ளது.



இந்த ரவ்லாவிற்குள் சில இடம் உள்ளது அந்த இடத்தில் தொழுவது பெரிய சிறப்பு இருக்கிறது

ﻳﺰﻳﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﺒﻴﺪ، ﻗﺎﻝ: ﻛﻨﺖ ﺁﺗﻲ ﻣﻊ ﺳﻠﻤﺔ ﺑﻦ اﻷﻛﻮﻉ ﻓﻴﺼﻠﻲ ﻋﻨﺪ اﻷﺳﻄﻮاﻧﺔ اﻟﺘﻲ ﻋﻨﺪ اﻟﻤﺼﺤﻒ، ﻓﻘﻠﺖ: ﻳﺎ ﺃﺑﺎ ﻣﺴﻠﻢ، ﺃﺭاﻙ ﺗﺘﺤﺮﻯ اﻟﺼﻼﺓ ﻋﻨﺪ ﻫﺬﻩ اﻷﺳﻄﻮاﻧﺔ، ﻗﺎﻝ: ﻓﺈﻧﻲ «ﺭﺃﻳﺖ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﺘﺤﺮﻯ اﻟﺼﻼﺓ ﻋﻨﺪﻫﺎ.

502. யஸீத் இப்னு ஆபீ உபைத் கூறினார்.
நான் ஸலமா பனீ அல் அக்வஃ(ரலி) உடன் (பள்ளிக்கு) செல்பவர்களாக இருந்தேன். ஸலமா(ரலி) குர்ஆன் வைக்கப்படும் இடத்தில் அமைந்த தூணருகே தொழுவார்கள். அபூ முஸ்லிம் அவர்களே! இந்தத் தூணை தேர்ந்தெடுத்துத் தொழுகிறீர்களே?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில் தொழுவதற்குச் சிரத்தை எடுப்பவர்களாக இருந்ததை பார்த்திருக்கிறேன்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை.

ﻋﻦ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ، ﻗﺎﻝ: «ﻟﻘﺪ ﺭﺃﻳﺖ ﻛﺒﺎﺭ ﺃﺻﺤﺎﺏ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﺒﺘﺪﺭﻭﻥ اﻟﺴﻮاﺭﻱ ﻋﻨﺪ اﻟﻤﻐﺮﺏ,

503. அனஸ்(ரலி) அறிவித்தார்.
மஃரிபு(க்கு பாங்கு சொன்னது) முதல் நபி(ஸல்) அவர்கள் வெளியே வரும் வரை முதிய நபித்தோழர்கள் (இரண்டு ரக்அத்கள் முன் ஸுன்னத் தொழுவதற்காகத்) தூண்களை நோக்கி விரைவார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை


وَرُوِيَ عَنْ عَائِشَةَ أَنَّهَا كَانَتْ تَقُول: لَوْ عَرَفَهَا النَّاس لَاضْطَرَبُوا عَلَيْهَا بِالسِّهَامِ، وَأَنَّهَا أَسَرَّتْهَا إلَى ابْن الزُّبَيْر فَكَانَ يُكْثِر الصَّلَاة عِنْدهَا"
ஆயிஷா ரலி  அவர்கள் சொன்னார் கள்,
ரவ்லாவிற்குள் சில இடம் உள்ளது அந்த இடத்தில் தொழுவது பெரிய சிறப்பு இருக்கிறது .
அதை நான் உங்களுக்குச் காண்பித்து விட்டால்  நீங்கள் அனைவரும் அந்த இடத்தில் தொழுவதற்கு போட்டி போடுவீர்கள் எனவே பகிரங்கமாக அதை சொல்ல விரும்பவில்லை என்றார்கள் பின்பு ஆயிஷா ரலி அவர்களுக்கு மட்டும் அந்த இடத்தை நபியவர்கள் காட்டிக் கொடுத்தார்கள். நபியவர்களின் வஃபாத்திற்கு பின்பு அது எந்த இடம் என்று சஹாபாக்களுக்கு அன்னை ஆயிஷா ரலி அறிவித்தார்கள். அவர்கள் அறிவித்து கொடுத்த காரணத்தால் அந்த இடத்தில் இருக்கக் கூடிய தூணிற்கு "உஸ்துவானதே ஆயிஷா" என்று பெயர் இன்றும் எழுதப்பட்டுள்ளது.

இன்னும் பல முக்கிய தூண்கள் "உஸ்துவானதே அபீலுபாபா". "உஸ்துவானதே ஜிப்ரயீல்"
"உஸ்துவானதே வஃபூத்"
"உஸ்துவானதே ஹாரீஸ்" இன்னும் பல...

@@@@@@@

5. குபா மஸ்ஜிதில் தொழுதால் உம்ராவுக்கு சமமான நன்மை.

இது மக்காவிருந்து  மதீனா விற்குள் வரும் வழியில் மதீனா மாநகரத்தின் வெளியே இருந்தது .
நபி (ஸல்) அவர்கள் மதீனா ஹிஜ்ரத் செய்து வந்த போது சில நாட்கள் இங்கு தங்கியிருந்தார்கள். அப்போது தன் புனித கரங்களால் கட்டினார்கள்,
பிறகு தான் (மதீனா மாநகர் உள்ளே வந்து) மஸ்ஜித் நபவி கட்டினார்கள்.

உலகில் கட்டப்பட்ட மஸ்ஜித்களில் 1வது காஃபா, 2வது பைத்துல் முகத்தஸ், 3வது குபா மஸ்ஜித் . 4வது மஸ்ஜித் நபவி,

எனவே மஸ்ஜித்களில் நன்மையில் நான்காவதாக இருந்தாலும் கட்டிய வரிசையில் மூன்றாவது ஆகும்.

1412 - عن ﺳﻬﻞ ﺑﻦ ﺣﻨﻴﻒ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﺗﻄﻬﺮ ﻓﻲ ﺑﻴﺘﻪ ﺛﻢ ﺃﺗﻰ ﻣﺴﺠﺪ ﻗﺒﺎء، ﻓﺼﻠﻰ ﻓﻴﻪ ﺻﻼﺓ، ﻛﺎﻥ ﻟﻪ ﻛﺄﺟﺮ ﻋﻤﺮﺓ»

ஒருவர் தன் வீட்டிலேயே உளு செய்து விட்டு பிறகு "மஸ்ஜித் குபா"விற்க்கு வந்து அங்கு தொழுதால் அவருக்கு உம்ரா செய்தது போல் நன்மை கிடைக்கும் .
ஹதீஸ் 1412 இப்னு மாஜஹ் .
அறிவிப்பாளர் ;ஸஹ்ல் (ரலி) அவர்கள் ,

குறிப்பு ;
தங்கியிருக்கும் ரூமில்/வேற மஸ்ஜிதில் உளு செய்து விட்டு வந்தால் கூடுதல் நன்மை.


எனவேதான் நபி (ஸல்) அவர்கள் வாரவாரம் தவறாமல் வருவார்கள்.

1193 ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﻗﺎﻝ: «ﻛﺎﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﺄﺗﻲ ﻣﺴﺠﺪ ﻗﺒﺎء ﻛﻞ ﺳﺒﺖ، ﻣﺎﺷﻴﺎ ﻭﺭاﻛﺒﺎ» ﻭﻛﺎﻥ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﻤﺮ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ «ﻳﻔﻌﻠﻪ.

1193. அப்துல்லாஹ் இப்னு தீனார் அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) ஒவ்வொரு சனிக்கிழமையும் குபாப் பள்ளிக்கு வருவார்கள் 'நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நடந்தும் வாகனத்திலும் குபாப் பள்ளிக்கு வருவார்கள்' என்று அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 20. மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு

@@@@@@@@

6. இந் நான்கு மஸ்ஜித்கள் தவிர மற்ற எந்த இடமும் தொழுகை & துஆவுக்கென தனிச் சிறப்புக்குரியது அல்ல, எனவே
A, ஜபலுந்நூர் - ஹிரா குகை,
B, அரபா தினத்தை தவிர பிற நாட்களில் அரபாவில் உள்ள
ஜபலுர் ரஹ்மா மலை,
C, கிப்லதைன் (இரண்டு கிப்லா)மஸ்ஜித் ,
D, உஹத்  போன்றதில் தொழுவது/துஆ செய்வது  தனிச்சிறப்புக்குரியது இல்லை.

ஆனாலும் வரலாற்றில் இடம் பெற்றதால் அதை சென்று காண்பது தவறல்ல,
ஜன்னதுல் பகீ கப்ருஸ்தான் &
உஹதுக்கு சென்று ஷுஹதாக்களை ஜியாரத் செய்வது ஸுன்னத்,

அவர்களுக்காக துஆ செய்யனும், தவிர அவர்களிடம் துஆ கேட்பது கூடாது .
ஜியாரத்எப்படி  செய்யனும்/என்ன துஆ செய்யனும் அதன் நோக்கம் என்ன என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்,

ﻋﻦ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻃﻠﻊ ﻟﻪ ﺃﺣﺪ ﻓﻘﺎﻝ: «ﻫﺬا ﺟﺒﻞ ﻳﺤﺒﻨﺎ ﻭﻧﺤﺒﻪ، اﻟﻠﻬﻢ ﺇﻥ ﺇﺑﺮاﻫﻴﻢ ﺣﺮﻡ ﻣﻜﺔ ﻭﺇﻧﻲ ﺣﺮﻣﺖ ﻣﺎ ﺑﻴﻦ ﻻﺑﺘﻴﻬﺎ.

4084. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(கைபர் போரிலிருந்து நாங்கள் திரும்பி வந்து கொண்டிருந்த போது) உஹுத் (மலை) நபி(ஸல்) அவர்களுக்குத் தென்பட்டது. அப்போது அவர்கள், 'இந்த மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதனை நேசிக்கிறோம். இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்தார்கள். நான் இரண்டு (கருங்கற்கள் நிறைந்த) மலைகளுக்கிடையிலுள்ள பகுதியை (மதீனாவை)ப் புனிதமானதாக அறிவிக்கிறேன்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்

ஜன்னதுல் பகீஉ ஜியாரத்
********************
ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ، ﺃﻧﻬﺎ ﻗﺎﻟﺖ: ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻛﻠﻤﺎ ﻛﺎﻥ ﻟﻴﻠﺘﻬﺎ ﻣﻦ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻳﺨﺮﺝ ﻣﻦ ﺁﺧﺮ اﻟﻠﻴﻞ ﺇﻟﻰ اﻟﺒﻘﻴﻊ، ﻓﻴﻘﻮﻝ:  «اﻟﺴﻼﻡ ﻋﻠﻴﻜﻢ ﺩاﺭ ﻗﻮﻡ ﻣﺆﻣﻨﻴﻦ، ﻭﺃﺗﺎﻛﻢ ﻣﺎ ﺗﻮﻋﺪﻭﻥ ﻏﺪا، ﻣﺆﺟﻠﻮﻥ، ﻭﺇﻧﺎ، ﺇﻥ ﺷﺎء اﻟﻠﻪ، ﺑﻜﻢ ﻻﺣﻘﻮﻥ، اﻟﻠﻬﻢ، اﻏﻔﺮ ﻷﻫﻞ ﺑﻘﻴﻊ اﻟﻐﺮﻗﺪ.

1773. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதிநாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும்(மதீனாவிலுள்ள) "பகீஉல் ஃகர்கத்" பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள்:
அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அத்தாக்கும் மா தூஅதூன ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத்.

(பொருள்: இந்த அடக்கத்தலத்தில் உள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது சாந்தி பொழியட்டும்! நீங்கள் நாளை சந்திக்கப்போவதாக வாக்களிக்கப்பட்ட ஒன்று, தவணை அளிக்கப்பட்ட பின்னர் உங்களிடம் வந்துவிட்டது. நாங்கள் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோருக்கு நீ மன்னிப்பளிப்பாயாக!)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களிடம் வந்துவிட்டது" (அ(த்)தாக்கும்) எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 11. இறுதிக் கடன்கள்.
الترمذي.
1053ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﻗﺎﻝ: ﻣﺮ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﻘﺒﻮﺭ اﻟﻤﺪﻳﻨﺔ ﻓﺄﻗﺒﻞ ﻋﻠﻴﻬﻢ ﺑﻮﺟﻬﻪ، ﻓﻘﺎﻝ: اﻟﺴﻼﻡ ﻋﻠﻴﻜﻢ ﻳﺎ ﺃﻫﻞ اﻟﻘﺒﻮﺭ، ﻳﻐﻔﺮ اﻟﻠﻪ ﻟﻨﺎ ﻭﻟﻜﻢ، ﺃﻧﺘﻢ ﺳﻠﻔﻨﺎ، ﻭﻧﺤﻦ ﺑﺎﻷﺛﺮ

மதீனாவில் மரணிக்க ஆசை பட வேண்டும் .
ﻗﺎﻝ ﻋﻤﺮ: «اﻟﻠﻬﻢ اﺭﺯﻗﻨﻲ ﺷﻬﺎﺩﺓ ﻓﻲ ﺑﻠﺪ ﺭﺳﻮﻟﻚ
எனக்கு  ஷஹீத் என்ற மரணம் தா.அதுவும் மதீனாவுக்குள்ளேயே தா என உமர் ரலி அவர்கள் துஆ செய்து வந்தார்கள் , நூல் புகாரி , ஜிஹாத்&ஷஹீத் மரணம் என்ற  பாடம்,

மேலும் ஹஜ்ரத் இமாம் மாலிக் ரஹ் அவர்கள் மதீனா அல்லாத பூமியில் மரணம் நிகழ்ந்து விடுமோ என பயந்து கடைசி காலத்தில் ஹஜ்ஜுக்கு கூட செல்லாமல் இருந்தார்கள்.

فقد صح عن رسول الله صلى الله عليه وسلم الترغيب في الموت بالمدينة، وأنه يشفع لمن يموت بها، فقد روى الترمذي وابن ماجه وغيرهما عن نافع عن ابن عمر قال: قال رسول الله صلى الله عليه وسلم: من استطاع أن يموت بالمدينة فليمت بها فإني أشفع لمن يموت بها. وروايةابن ماجه: من استطاع منكم أن يموت بالمدينة فليفعل، فإني أشهد لمن مات بها. صححه الألباني

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் இப்னு மாஜஹ் மற்றும் திர்மிதீ ஷரீஃபில் வருகிறது " யாருக்கு மதீனாவில் மரணிக்க முடியுமோ அவர் மதீனாவில் மரணிக்கவும் , மதீனாவில் மரணித்தவருக்கு நான் சிபாரிசு செய்வேன்"

பாக்கியம் நிறைந்த அந்த பூமிகளை தரிசித்து அதன் பயன்களை முழுமையாக அடைந்து கொள்ள அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.