வியாழன், 9 ஆகஸ்ட், 2018

"துல்ஹஜ்ஜின் சிறப்புகள்"


بسم الله الرحمن الرحيم

"துல்ஹஜ்ஜின் சிறப்புகள்"

وَالْفَجْرِۙ‏ وَلَيَالٍ عَشْرٍۙ‏ (89:1.2)

762- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الأَيَّامِ الْعَشْرِ)) رواه الترمذي

கண்ணியமிக்க அல்லாஹ்வின் நல்லடியார்களே!
அல்லாஹ் நமக்கு குறுகிய ஆயுட்காலத்தை வழங்கியுள்ளான் நமக்குமுன் வாழ்ந்த சமுதாயத்தினர்கள் 900 வருடம் 1000 வருடம் என நீண்ட  ஆயுட்காலம் கொடுக்கப்பட்டார்கள்.

ஆனால் இந்த சமுதாயத்தின் ஆயுள் அறுபதிற்கும் எழுபதிற்கும் இடைப்பட்டதாகவே இருக்கிறது.

عن أبي هريرة عن رسول الله –صلى الله عليه وسلم- قال:"أعمار أمتي ما بين الستين إلى السبعين وأقلهم من يجوز ذلك" وهو حديث صحيح أخرجه الترمذي
(3550)، وابن ماجة

அருமையானவர்களே! முந்தைய சமுதாயத்தினருக்கு ஆயுட்காலம் கூடுதலாக கொடுக்கப்பட்டாலும் அமல்  செய்ததற்குரிய கூலி குறைவுதான். ஆனால் இந்த சமுதாயத்திற்கு ஆயுளை குறைத்தாலும்கூட நாம் செய்யக்கூடிய அமல்களுக்கு ஏராளமான நன்மையை அல்லாஹ் தருகின்றான்.

குறைவான அமல் நிறைவான நன்மை
***************************************
அல்லாஹ் இந்த உம்மத்தினர்களுக்கு அதிகம் அமல் செய்வதற்கென்றே சில காலங்களை தந்திருக்கின்றான் அந்த காலங்களில் அதிகம் அமல் செய்யும்போது முன் சென்ற சமுதாயத்தினர்கள் தங்களின் ஆயுட்காலத்தில் எவ்வளவு அமல் செய்து நன்மையை பெற்றுக் கொண்டார்களோ அதைவிட கூடுதலாக அல்லாஹ் இந்த உம்மத்திற்கு வழங்குகின்றான்.

உதாரணமாக லைலத்துல் கத்ரு இரவு உள்ளது இந்த இரவில் நின்று வணங்கினால் ஆயிரம் மாதங்கள் நின்று வணங்கினால் என்ன நன்மையோ அதை கொடுக்கின்றான்.

அமல்களுக்குரிய காலங்களை பயன் படுத்தியவர்களே பாக்கியசாலிகள்
********************************
நாம் செய்யக்கூடிய அமல்களுக்கு அதிக நன்மையை பெற்றுத்தரக்கூடிய காலங்கள்.

1) ரமலானுடைய காலம் அது சென்றுவிட்டது.

2) துல்ஹஜ் ஆரம்ப பத்து நாட்கள்  இந்த காலங்களை முறையாக பயன் படுத்த வேண்டும்.

இந்நாட்களின் சிறப்புக்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் பல ஆதாரங் கள் உள்ளன! அல்லாஹ் கூறுகிறான்

وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ
அதிகாலையின் மீது சத்தியமாக:
பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக! (89:1-2)

அதிகாலையின் மீது சத்தியமாக எனப் பொதுவாக கூறப்பட்டிருந்தாலும் துல்ஹஜ்மாதம் 10 ஆம் நாள் பெருநாள் காலையின் மீது சத்தியமாக என்று பொருள்கொள்ள வேண்டும் என "மஸ்ரூக்: "முஜாஹித் "முஹம்மது பின் கஅப்" ரஹ் போன்ற தாபியீ விரிவுரையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

துல் ஹஜ்ஜின் பத்து நாட்களைக் கொண்டு இறைவன் ஆணையிட்டுக் கூறுவதென்றால் நிச்சயமாக அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கவேண்டும். இல்லை யெனில் அவ்வாறு ஆணையிட்டுக் கூற வேண்டிய அவசியமில்லை.

762- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الأَيَّامِ الْعَشْرِ)). فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((وَلاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلاَّ رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ))(رواه الترمذي)

நற்செயல்கள் செய்யப்படும் நாட்களில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைவிட அல்லாஹ்வக்கு பிரியமான நாட்கள் வேறொன்றும் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை செவியுற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வின் திருத்தூதரே! இந்நாட்களின் அமல் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை விடவும்  சிறப்பிற்குரியதா எனக் கேட்டனர்.

ஆம் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதும் கூட இந்நாட்களின் சிறப்பிற்கு ஈடானது அல்ல என்று கூறிவிட்டு ஆனால் ஒருவர் தனது சரீரத்துடனும்,பொருளுடனும் அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டு உயிரையும், பொருளையும் தியாகம் செய்(து அதில் ஷஹீத் ஆகி இறந்)தவரை தவிர என்று விளக்கமளித்தார்கள்.


மூஸா அலை அவர்களுக்கு தவ்ராத் வேதத்தை வழங்குவதற்காக 30 நாட்கள் நோன்பிருக்கும்படி அல்லாஹ் கூறினான் அவர்கள் துல்கஃதா மாதம் 30 நாளும் நோன்பிருந்தார்கள் பிறகு துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் மகிமையை அடையவேண்டும் என்பதினால் மீண்டும் ஒரு பத்து நாட்கள் நோன்பிருக்கும்படி கூறினான் அந்த பத்து நாட்களும் மூஸா நபி நோன்பிருந்த பின்பே தவ்ராத் வேதத்தை இறைவன் வழங்கினான் என்று தப்ஸீர் தப்ரியில் காண முடிகின்றது.

, عن مجاهد: (وواعدنا موسى ثلاثين ليلة وأتممناها بعشر)، قال: ذو القعدة، وعشر ذي الحجة.(تفسير طبري)


عن جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال :أفضل أيام الدنياأيام العشر ـ يعني عشر ذي الحجة

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் உலகத்தின் நாட்களிலேயே மிக சிறப்பிற்குரிய கண்ணியமான நாட்களாகும். (ஹதீஸ் நூல் பஸ்ஸாzர்)

இந்த பத்து நாட்களில் தான் அரஃபா உடைய நாளும் வருகின்றது. அந்த நாள் ஹாஜிகளுக்கும் மிகப் புனிதமான நாளாகும் ஹாஜிகள் அல்லாதவர்களுக்கும் புனிதமான நாளாகும்.

அரஃபா உடைய நோன்பாகிறது இரண்டு ஆண்டின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது.

عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صِيَامُ يَوْمِ عَرَفَةَ، إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ» رواه الترمذي  : 749
அரஃபாவின் நோன்பு அதற்கு முன்னுள்ள ஓர் ஆண்டு,மற்றும் பின்னுள்ள ஓர் ஆண்டின் குற்றங்களை அழித்து விடும் என்று நான் நம்புகிறேன். (திர்மிதி: 749)

வரக்கூடிய ஆண்டின் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்பதின் விளக்கம் என்னவென்றால் இதற்கு இரண்டு கருத்துக்கள் கூறப்படுகிறது.
1. வரக்கூடிய ஆண்டில் அவர் பாவம் செய்ய மாட்டார்.
2. வரக்கூடிய ஆண்டில் பாவம் செய்தாலும் அரஃபா நோன்பின் பரக்கத்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பான்.

நரக விடுதலை
****************
நரகவாசிகளை விடுதலை செய்வதற்கென்று அல்லாஹ் சில நாட்களை வைத்துள்ளான் அவைகளாவன ரமலானின் கடைசிப்பத்து நாட்கள்.  அதேபோல் அரஃபா உடைய நாளிலும் விடுதலை செய்கின்றான்.

قَالَتْ عَائِشَةُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ وَإِنَّهُ لَيَدْنُو ثُمَّ يُبَاهِي بِهِمُ الْمَلاَئِكَةَ فَيَقُولُ مَا أَرَادَ هَؤُلاَءِ)) (رواه مسلم)

2623. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?” என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 15. ஹஜ்)

ஷைத்தான் அரஃபா உடைய நாளில் மிகவும் சிறுமைப் பட்டு போகின்றான் மிகவும் அவன் அந்த நாளில் இழிவு படுத்தப்படுகிறான் காரணம் மனிதர்களை எப்படியெல்லாம் வழிகெடுத்திருந்தேன் ஆனால் இந்த அரஃபா உடைய நாளில் ஹாஜிகள் இந்த மைதானத்தில் தங்கி அமல் செய்ததின் மூலமாகவும்.
மற்றவர்கள் நோன்பு நோற்பதின் மூலமாகவும் பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டுவிட்டதே! அவர்கள் அல்லாஹ்வின் அருளை பெற்றுவிட்டார்களே! என்று கைசேதமடைகின்றான்.

எனவே துல் ஹஜ் பிறை முதல் நாளிலிருந்து  ஒன்பது நாளும் நோன்பு நோற்று அமல் செய்ய வேண்டும் அதற்கு முடியாதவர்கள் அரஃபா உடைய நாளிலாவது நோன்பு நோற்க வேண்டும்.


முன்னோர்கள் இந்த பத்து நாட்களை அமல்களைக் கொண்டு கண்ணியப் படுத்துவார்கள் ஏனென்றால் இந்த நாட்களில் செய்யப்படும் அமல் தான் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமானது.

இந்நாட்களில் நாம் செய்ய வேண்டிய அமல்கள்
*******************************************************
1) ஆரம்ப ஒன்பது நாட்களும் நோன்பு வைப்பது.

நபி ( ஸல்) அவர்கள் தவறாமல் கடைபிடித்த நோன்பு துல்ஹஜ் மாத ஆரம்பத்தில் ஒன்பது நோன்பும். ஆஷூராவுடைய நோன்பும். ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புமாகும்.
(ஹதீஸ் நஸஈ)

அப்துல்லாஹ் பின் உமர் ரலி துல்ஹஜ் ஆரம்ப ஒன்பது நாட்களும் நோன்பு வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இந்த நாட்கள் நோன்புக்குரிய நாட்கள் மட்டுமல்ல இந்த நாட்களை மிகவும் பரக்கத்தான நாட்களாக ஆக்கியுள்ளான்.

عَنْ أَبِي حَرِيْزٍ، أَنَّ سَعِيْدَ بنَ جُبَيْرٍ رضي الله عنه قَالَ:
لاَ تُطْفِئُوا سُرُجَكُم لَيَالِيَ العَشْرِ - تُعْجِبُهُ العِبَادَةُ .
سير اعلام النبلاء للذهبي.

துல் ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களில் வீடுகளில் விளக்கை அணைக்காதீர்கள் என்று சயீது பின் ஜுபைர் ரலி கூறுவார்கள்.

இதன் கருத்து என்ன வென்றால் இந்த நாட்களில் இரவிலும் பகலிலும் அமல்ககளை அதிகம் செய்யுங்கள் என்பதாகும்.

قال مجاهد(رح) العمل في العشر يضائف
துல்ஹஜ் ஆரம்ப பத்து நாட்களில் என்ன அமல் செய்தாலும் அல்லாஹ் பன்மடங்காக நன்மையைத் தறுகிறான் என்று முஜாஹித் (ரஹ்) கூறுகின்றார்கள்

2 நஃபில் தொழுகைகளை அதிகப்படுத்த வேண்டும்
*******************************************
இந்த நாட்களில் தஹஜ்ஜத் உடைய தொழுகையை தவறாமல் தொழுது வரவேண்டும். மற்றும் ஐவேளை தொழுகையின் முன் பின் சுன்னத்துக்களை பேணுதலாக தொழுது வரவேண்டும். எல்லா காலங்களிலும் இதை நிறைவேற்றினாலும் குறிப்பாக இந்த சிறப்பான காலங்களில் இதை தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.

நபி ( ஸல்) அவர்கள் ஒரு நாளைக்கு 12 ரகஅத்துகள் தொழுவதை சுன்னத்து முஅக்கதாவாக ஆக்கியுள்ளார்கள்.

عَنْ عَائِشَةَ ؓ عَنِ النَّبِيِّ قَالَ: مَنْ صَابَرَ عَلَي اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً بَنَي اللهُ لَهُ بَيْتاً فِي الْجَنَّةِ، أَرْبَعاً قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ.
رواه النسائي باب ثواب من صلي في اليوم والليلة ثنتي عشرة ركعة…،رقم:١٧٩٦
எவர் பன்னிரெண்டு ரக்அத்துகள் நியமமாகத் தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையை எழுப்புவான், ளுஹருக்கு முன் நான்கு ரக்அத், ளுஹருக்குப் பின் இரண்டு ரக்அத், மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத், பஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)

இஷ்ராக் தொழுகையின் சிறப்பு

عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ يَقُولُ: مَنْ صَلَّي الْغَدَاةَ ثُمَّ ذَكَرَ اللهَ حَتَّي تَطْلُعَ الشَّمْسُ، ثُمَّ صَلَّي رَكْعَتَيْنِ أَوْ أَرْبَعَ رَكَعَاتٍ لَمْ تَمَسَّ جِلْدَهُ النَّارُ.
رواه البيهقي في شعب الايمان: ٣/٤٢

எவர் சுப்ஹுத் தொழுத பிறகு, சூரியன் உதயமாகும் வரை அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டிருந்து, பிறகு இரண்டு அல்லது நான்கு ரக்அத் (இஷ்ராக்) தொழுகிறாரோ, அவரது தோலைக்கூட நரக நெருப்புத் தீண்டாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹஸனிப்னு அலீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
(பைஹகீ)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ : مَنْ صَلَّي الْفَجْرَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللهَ حَتَّي تَطْلُعَ الشَّمْسُ، ثُمَّ صَلَّي رَكْعَتَيْنِ كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ : تَامَّةٍ تَامَّةٍ تَامَّةٍ.
رواه الترمذي وقال:هذا حديث حسن غريب باب ماذكر مما يستحب من الجلوس …،رقم:٥٨٦

எவர், பஜ்ருத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு சூரியன் உதயமாகும்வரை அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டு, பின்பு இரண்டு ரக்அத் நஃபில் தொழுவாரோ அவருக்கு ஒரு  ஹஜ்ஜு
ஒரு உம்ரா செய்த நன்மை கிடைக்கிறது'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முழுமையான ஹஜ் உம்ராவின் நன்மை, முழுமையான ஹஜ், உம்ராவின் நன்மை, முழுமையான ஹஜ், உம்ராவின் நன்மை கிடைக்கும்'' என்று மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(திர்மிதீ)

லுஹா தொழுகையின் சிறப்பு

عَنْ مُعَاذِ بْنِ أَنَسِ نِ الْجُهَنِيِّ ؓ أَنَّ رَسُولُ اللهِ قَالَ: مَنْ قَعَدَ فِي مُصَلاَّهُ حِينَ يَنْصَرِفُ مِنْ صَلاَةِ الصُّبْحِ حَتَّي يُسَبِّحَ رَكْعَتَيِ الضُّحَي لاَ يَقُولُ إِلاَّ خَيْرًا غُفِرَلَهُ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ أَكْثَرَ مِنْ زَبَدِ الْبَحْرِ.
رواه ابوداود باب صلوة الضحي رقم:١٢٨٧
எவர் சுப்ஹு தொழுது விட்டு, நன்மையைத் தவிர வேறெதையும் பேசாமல் அதே இடத்திலேயே உட்கார்ந்திருந்து, பிறகு இரண்டு ரக்அத் ளுஹா தொழுதால், அவரது பாவங்கள், கடல் நுரையைவிட அதிகமாக இருந்தாலும் மன்னிக்கப்படும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆதிப்னு அனஸ் ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)

عَنْ بُرَيْدَةَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ يَقُولُ: فِي اْلإِنْسَانِ ثَلثُمِائَةٍ وَسِتُّونَ مَفْصِلاً، فَعَلَيْهِ أَنْ يَتَصَدَّقَ عَنْ كُلِّ مَفْصِلٍ مِنْهُ بِصَدَقَةٍ قَالُوا: وَمَنْ يُطِيقُ ذلِكَ يَانَبِيَّ اللهِ؟ قَالَ: النُّخَاعَةُ فِي الْمَسْجِدِ تَدْفِنُهَا، وَالشَّيْءُ تُنَحِّيهِ عَنِ الطَّرِيقِ، فَإِنْ لَمْ تَجِدْ فَرَكْعَتَا الضُّحَي تُجْزِئُكَ.
رواه ابوداؤد باب في اماطة الاذي عن الطريق رقم:٥٢

மனிதனுடைய உடம்பில் முந்நூற்று அறுபது இணைப்புகள் உள்ளன, ஒவ்வோர் இணைப்பும் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு நன்றி செலுத்தும் முகமாக ஒரு தருமம் செய்வது அவன் மீது கடமை'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னபோது, யாரஸூலல்லாஹ், இவ்வளவு தர்மம் யாரால் செய்ய இயலும்?' என்று ஸஹாபாக்கள் வினவினர். பள்ளிவாசலில் எச்சில் இருக்கக் கண்டால், அதை மண்ணில் புதைப்பது தர்மம். இடர் தரும் பொருட்களை வழியிலிருந்து அகற்றுவது தர்மம். இந்த காரியங்களைச் செய்யச் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால், ளுஹாவுடைய இரண்டு ரக்அத் தொழுவது இந்த தர்மங்கள் யாவற்றுக்கும் பகரமாக உமக்குப் போதுமாகிவிடும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)

தஹிய்யதுல் உளு தொழுகை

عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ النَّبِيَّ قَالَ لِبِلاَلٍ عِنْدَ صَلوةِ الْفَجْرِ: يَابِلاَلُ حَدِّثْنِي بِأَرْجَي عَمَلٍ عَمِلْتَهُ فِي اْلإِسْلاَمِ، فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الْجَنَّةِ قَالَ: مَاعَمِلْتُ عَمَلاً أَرْجَي عِنْدِي أَنِّي لَمْ أَتَطَهَّرْ طُهُورًا فِي سَاعِةِ لَيْلٍ أَوْ نَهَارٍ إِلاَّ صَلَّيْتُ بِذلِكَ الطُّهُورِ مَاكُتِبَ لِي أَنْ أُصَلِّيَ.
رواه البخاري باب فضل الطهور بالليل والنهار …،رقم:١١٤٩

ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு நாள் பஜ்ருத் தொழுகை நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களிடம், பிலால்! நீர் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து அதிகமான நன்மை கிடைக்குமென எந்த அமலின் மீது ஆதரவு வைக்கிறீர்? ஏனேனில், சுவர்க்கத்தில் எனக்கு முன்னால் உமது பாத அணிகலன்களின் சப்தத்தை நேற்றிரவு கனவில் நான் கேட்டேன்'' என்று கேட்டதற்கு எனது அமல்களில் அதிக நன்மைகளுக்குரியது என நான் ஆதரவு வைப்பது, இரவிலோ, பகலிலோ எப்பொழுது உளூச் செய்தாலும், அந்த உளூவைக் கொண்டு அந்த நேரத்தில் அல்லாஹ் நல்லுதவி செய்யுமளவு தவறாமல் தஹியத்துல் உளூ இரண்டு ரக்அத் தொழுதுவிடுவேன் இதுதான் என்னுடைய அமல்களில் அதிக ஆதரவு கொள்ளத் தக்கது'', என்று ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
(புகாரி)

எனவே இதுபோன்ற சிறப்பான காலங்களில் இந்த தொழுகைகளை விட்டுவிடக்கூடாது.

3) அதேபோல் இந்த துல்ஹஜ் உடைய ஆரம்ப பத்து நாட்கள் அதிகமாக திக்ரு செய்யப்பட வேண்டிய நாட்களாகும்.
******************************************************
وَقَالَ تَعَالي: (وَلَذِكْرُ اللهِ أَكْبَرُ۞).
(العنكبوت:٤٥)
இன்னும் அல்லாஹ்வை திக்ரு செய்வது தான் மிகப்பெரியது. (அல்அன்கபூத்:45)

திக்ரைப் பற்றி நபி( ஸல்) கூறுவார்கள்

عَنْ أَبِي الدَّرْدَاءِؓ قَالَ: قَالَ النَّبِيُّ : أَلاَ أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ وَأَرْفَعِهَا فيِ دَرَجَاتِكُمْ وَخَيْرٍ لَّكُمْ مِنْ إِنْفَاقِ الذَّهَبِ وَالْوَرِقِ وَخَيْرٍ لَّكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ؟ قَالُوا: بَلَي قَالَ: ذِكْرُ اللهِ.
رواه الترمذي باب منه كتاب الدعوات رقم:٣٣٧٧

உங்கள் அமல்களில் மிகச் சிறந்ததும், உங்கள் எஜமானனிடத்தில் மிகத் தூய்மையானதும், உங்கள் பதவிகளை மிக உயர்த்தக் கூடியதும், தங்கம், வெள்ளியை அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதைவிடச் சிறந்ததும். போரில் நீங்கள் எதிரிகளை வெட்ட, அவர்கள் உங்களை வெட்டுவதைவிடச் சிறந்ததுமான ஓரு செயலை உங்களுக்கு நான் சொல்லித்தரட்டுமா?'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க, அவசியம் சொல்லுங்கள்' என்று ஸஹாபாக்கள் கூறினார்கள், அந்த அமல் அல்லாஹ்வைத் திக்ரு செய்வது'', என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)

ஆயிரம் நன்மைகளை பெற்றுக் கொள்ள
*******************************************
عَنْ سَعْدٍؓ قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ فَقَالَ: أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَّكْسِبَ كُلَّ يَوْمٍ اَلْفَ حَسَنَةٍ؟ فَسَاَلَهُ سَائِلٌ مِّنْ جُلَسَائِهِ: كَيْفَ يَكْسِبُ أَحَدُنَا اَلْفَ حَسَنَةٍ؟ قَالَ: يُسَبِّحُ مِائَةَ تَسْبِيحَةٍ فَيُكْتَبُ لَهُ اَلْفُ حَسَنَةٍ وَتُحَطُّ عَنْهُ اَلْفُ خَطِيئَةٍ.
رواه مسلم باب فضل التهليل والتسبيح والدعاء رقم:٦٨٥٢

ஹஜ்ரத் ஸஃது (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சபையில் அமர்ந்திருந்தோம், அச்சமயம் நபி (ஸல்) அவர்கள், உங்களில் யாரேனும் ஒருவர் தினமும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க இயலுமா?'' என்று கேட்டார்கள், அச்சபையில் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், எங்களில் ஒருவர் ஆயிரம் நன்மைகளை எப்படிச் சம்பாதிப்பது?' என வினவினார். சுப்ஹானல்லாஹ் என்று நூறு முறை ஓதினால் அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன, ஆயிரம் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ( முஸ்லிம்)

ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் நன்மைகளை பெற்றுக் கொள்ள
****************************************
١١٧- عَنْ أَبِي طَلْحَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ : مَنْ قَالَ لاَ إِلهَ إِلاَّ اللهُ دَخَلَ الْجَنَّةَ أَوْ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ وَمَنْ قَالَ: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه مِائَةَ مَرَّةٍ كَتَبَ اللهُ لَهُ مِائَةَ اَلْفِ حَسَنَةٍ وَأَرْبَعاً وَّعِشْرِينَ اَلْفَ حَسَنَةٍ
رواه الحاكم وقَالَ:صحيح الاسناد الترغيب:٢ /٤٢١

எவரொருவர் லாஇலாஹ இல்லல்லாஹ்' என்னும் கலிமாவைச் சொல்வாரோ அவருக்கு சொர்க்கம் கடமையாகிவிடும், யார் சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என்று நூறு முறை சொல்வாரோ, அவருக்காக ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் நன்மைகள் (1,24,000) எழுதப்படுகின்றன'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம், தர்ஃகீபு)

பத்து லட்சம் நன்மைகளை பெற்றுக்கொள்ள
**********************************************
ஒருவர் கடைவீதியில் நுழையும்போது நான்காம் கலிமாவை
" وَهُوَ حَيٌّ لاَ يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ "
என்ற வார்த்தையை  இணைத்து

(لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لاَ يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلي كُلِّ شَيْءٍ قَدِيرٌ)

என்று கூறுவாரானால், அல்லாஹுதஆலா அவருக்குப் பத்து லட்சம் நன்மைகளை எழுதுகின்றான். அவருடைய பத்து லட்சம் தீமைகளை அழிக்கிறான். அவருக்குப் பத்து லட்சம் தகுதிகளை உயர்த்துகிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.பத்து லட்சம் தகுதிகள் உயர்த்தப்படும் என்பதற்குப் பதில் சுவனத்தில் ஒரு மாளிகை அமைக்கப்படும் என இன்னோர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
(திர்மிதீ & முஸ்தத்ரக்.)

முதியோருக்காக
********************
عَنْ أُمِّ هَانِيءٍ بِنْتِ أَبِي طَالِبٍ ؓ قَالَتْ: مَرَّ بِي رَسُولُ اللهِ ذَاتَ يَوْمٍ فَقُلْتُ: يَارَسُولَ اللهِ قَدْ كَبِرْتُ وَضَعُفْتُ أَوْ كَمَا قَالَتْ: فَمُرْنِي بِعَمَلٍ أَعْمَلُ وَأَنَا جَالِسَةٌ قَالَ سَبِّحِي اللهَ مِائَةَ تَسْبِيحَةٍ فَإِنَّهَا تَعْدِلُ لَكِ مِائَةَ رَقَبَةٍ تُعْتِقِينَهَا مِنْ وُلْدِ إِسْمَاعِيلَؑ وَاحْمَدِي اللهَ مِائَةَ تَحْمِيدَةٍ فَإِنَّهَا تَعْدِلُ مِائَةَ فَرَسٍ مُسْرَجَةٍ مُلْجَمَةٍ تَحْمِلِينَ عَلَيْهَا فِي سَبِيلِ اللهَ وَكَبِّرِي اللهَ مِائَةَ تَكْبِيرَةٍ فَإِنَّهَا تَعْدِلُ لَكِ مِائَةَ بَدَنَةٍ مُقَلَّدَةٍ مَتَقَبَّلَةٍ وَهَلِّلِي اللهَ مِائَةً قَالَ ابْنُ خَلَفٍ: أَحْسِبُهُ قَالَ: تَمْلَأُ مَابَيْنَ السَّمَاءِ وَاْلاَرْضِ وَلاَيُرْفَعُ يَوْمَئِذٍ لِأَحَدٍ عَمَلٌ إِلاَّ أَنْ يَاْتِيَ بِمِثْلِ مَاأَتَيْتِ. قلت:رواه ابن ماجه

واسانيدهم حسنة مجمع الزوائد ١٠ /١٠٨ ورواه الحاكم. وقَالَ: قُولِي: لاَ إِلهَ إِلاَّ اللهُ لاَ تَتْرُكُ ذَنْباً وَلاَيَشْبَهُهَا عَمَلٌ. وقَالَ: هذا حديث صحيح الاسناد ووافقه الذهبي:١ /٥١٤

ஹஜ்ரத் உம்முஹானீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ஒரு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் என்னை கடந்துசென்ற பொழுது, யாரஸூலல்லாஹ்! நான் வயது முதிர்ந்து பலவீனமானவளாகிவிட்டேன். நான் உட்கார்ந்த நிலையிலேயே செய்யும்படியான ஏதேனும் ஓரு செயலை எனக்குச் சொல்லித்தாருங்கள்'' என்று கேட்டேன். சுப்ஹானல்லாஹ் என்று நூறு தடவை சொல்லுங்கள், ஹஜ்ரத் இஸ்மாயில் (அலை) அவர்களின் சந்ததிகளில் நூறு அடிமைகளை உரிமைவிட்டதற்குச் சமமான நன்மைகள் கிடைக்கும். அல்ஹம்துலில்லாஹ்' என நூறு முறை கூறுங்கள், கடிவாளமிட்ட சேனையுடன் நூறு குதிரைகளை அல்லாஹுதஆலா வின் பாதையில் சவாரி செய்யக் கொடுத்ததற்குச் சமமான நன்மைகள் கிடைக்கும். அல்லாஹு அக்பர்' என்று நூறு முறை சொல்லுங்கள், தன் கழுத்தில் குர்பானியின் பட்டி அணிவிக்கப்பட்ட நூறு ஒட்டகங்களை அறுப்பதற்குச் சமமான நன்மைகள் கிடைக்கும். லாஇலாஹ இல்லல்லாஹ்' என்று நூறு முறை சொல்லுங்கள். அதன் நன்மை வானம் பூமிக்கிடையில் உள்ள பகுதியை நன்மைகளால் நிரப்பிவிடும். மேலும், அந்நாளில் உமது செயலையும் உம்மைப் போன்று செயல்பட்டவரின் செயலையும் தவிர வேறு யாருடைய செயலும் அல்லாஹுதஆலா விடம் ஏற்கப்பட்டதாக ஆகமுடியாது'', என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: ஹாகிம்

கவலை நீங்க கடன் நிறைவேற ஓத வேண்டிய துஆ
*******************************************
ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ஒரு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுக்குள் வந்தபோது அபூஉமாமா என்னும் அன்ஸாரித் தோழர் இருக்கக் கண்டார்கள். அபூஉமாமா! தொழுகை அல்லாத நேரத்தில் பள்ளியில் (தன்னந்தனியாக) உட்கார்ந்திருக்கக் காண்கிறேனே! என்ன செய்தி?'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க, யாரஸூலல்லாஹ், என்னைக் கவலைகளும், கடன்களும் சூழ்ந்துள்ளன' என்று ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள். உமக்கு ஒரு துஆவைக் கற்றுத்தரவா? அதை நீர் ஒதினால் அல்லாஹுதஆலா  உமது கவலையை நீக்கிவிடுவான், கடனை அடைத்து விடுவான் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், யாரஸூலல்லாஹ், அவசியம் கற்றுத் தாருங்கள்', என்று ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் வேண்டினார்கள். நீர் காலையிலும், மாலையிலும்
(اَللّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبُنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ) )
யால்லாஹ்! நான் கவலை, துக்கத்தை விட்டும் உன்னைக் கொண்டு பாதுகாப்பு வேண்டுகிறேன், இயலாமை, சோம்பலைவிட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன், கஞ்சத்தனம், கோழைத்தனத்தை விட்டும் பாதுகாப்பு வேண்டுகிறேன், நான் கடன் சுமையில் மூழ்குவதைவிட்டும், மக்கள் என் மீது ஆதிக்கம் செலுத்துவதை விட்டும் உன்னுடைய பாதுகாப்பை வேண்டுகிறேன் என்ற துஆவை ஓதி வருவீராக! என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் காலை, மாலையில் இந்த துஆவை ஓதி வந்தேன். அல்லாஹுதஆலா  என் கவலையை நீக்கினான், என் கடன் அனைத்தையும் நிறைவேற்றினான்' என்று ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நூல்: (திர்மிதீ)

குறிப்பாக இதுபோன்ற திக்ருகளையும் துஆக்களையும் இந்த சிறப்பிற்குரிய துல்ஹஜ் மாதத்தில் அதிகம் ஓதி வரவேண்டும்.

4) இந்த நாட்களில் தர்மம் அதிகமாக செய்ய வேண்டும்.
*******************************************
اتقوا النار ولو بشق تمرة
ஒரு பேரிச்சம்பழத்தின் (பிய்த்து அதில்)ஒரு சின்ன துண்டையாவது தர்மம் செய்து நரக நெருப்பை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி)

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَمَا زَادَ اللهُ عَبْدًا بِعَفْوٍ، إِلَّا عِزًّا، وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ اللهُ» (صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தர்மம் பொருளாதாரத்தில் எவ்வித குறைவையும் ஏற்படுத்துவதில்லை.

தன் விவசாயத்தில் மூன்றில் ஒரு பாகத்தை தர்மம் செய்த காரணத்தால் அவருடைய தோட்டத்திற்கு மட்டும் விசேஷமாக மழை பொழிந்த சம்பவம் ஸஹீஹ் முஸ்லிமின்  ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

இன்று விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் போனது தர்மம் குறைந்து விட்ட காரணத்தினாலேயாகும்.

5) மேலும் இந்த துல்ஹஜ் ஆரம்ப நாட்களில் தக்பீர் அதிகம் சொல்ல வேண்டும்.

6) குர்பானி என்ற உன்னதமான அமலை நிறைவேற்ற வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் அவைகளைப் பற்றி வரும் வாரத்தில் விரிவாக கூறப்படும்.

குர்பானி கொடுப்பவர் கவனத்திற்கு
****************************************
ﻭﻋﻦ ﺃﻡ ﺳﻠﻤﺔ ﻗﺎﻟﺖ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺇﺫا ﺩﺧﻞ اﻟﻌﺸﺮ ﻭﺃﺭاﺩ ﺑﻌﻀﻜﻢ ﺃﻥ ﻳﻀﺤﻲ ﻓﻼ ﻳﻤﺲ ﻣﻦ ﺷﻌﺮﻩ ﻭﺑﺸﺮﻩ ﺷﻴﺌﺎ» ﻭﻓﻲ ﺭﻭاﻳﺔ «ﻓﻼ ﻳﺄﺧﺬﻥ ﺷﻌﺮا ﻭﻻ ﻳﻘﻠﻤﻦ ﻇﻔﺮا» ﻭﻓﻲ ﺭﻭاﻳﺔ «ﻣﻦ ﺭﺃﻯ ﻫﻼﻝ ﺫﻱ اﻟﺤﺠﺔ ﻭﺃﺭاﺩ ﺃﻥ ﻳﻀﺤﻲ ﻓﻼ ﻳﺄﺧﺬ ﻣﻦ ﺷﻌﺮﻩ ﻭﻻ ﻣﻦ ﺃﻇﻔﺎﺭﻩ» . ﺭﻭاﻩ ﻣﺴﻠﻢ
துல்ஹஜ்ஜின் முதல் பிறை துவங்கி விட்டால் குர்பானி கொடுப்பவர் நகம், முடி முதலியவற்றை குர்பானி கொடுக்கும் வரை எடுக்கக் கூடாது.

காரணம் என்ன?
*******************
துல்ஹஜ் பிறை பார்த்தலிருந்து குர்பானி கொடுக்கும்வரை முடி, நகத்தை வெட்டக்கூடாது என்பதன் காரணம் என்னவென்றால் குர்பானி பிராணியின் ஒவ்வொரு உறுப்பும் குர்பானி கொடுப்பவருடைய ஒவ்வொரு உறுப்புக்கு பகரமாகும். உடலின் எந்த பகுதியும் ரஹ்மத் இறங்கும்போது குர்பானியின் ரஹ்மத்தை விட்டும் மறைந்து பாக்கியமிழந்து போய்விடக்கூடாது. எனவேதான் நபி( ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்டார்கள்.
( நூல்: ஃபதாவா ரஹீமிய்யா)

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த சிறப்பிற்குரிய நாட்களில் அதிகமான நல் அமலகளைச் செய்து இறைவனின் திருப்தியையும் அருளையும் பெறக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக! ஆமீன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.