உழ்ஹிய்யாவின் சட்டங்களும்
தியாகத் திருநாள் சிந்தனையும்
****************************
இஸ்லாமிய மார்க்கத்தில் இரண்டே இரண்டு
பெருநாட்கள் உள்ளன. அவைகளில் ஒன்று நோன்புப் பெருநாள் மற்றொன்று ஹஜ்ஜூப் பெருநாள்
இவ்விரண்டு பெருநாட்களும் தியாகத்தை நினைவூட்டும் வகையில் அமைந்தவையாகும். இந்த
வகையில் ஹஜ்ஜூப் பெருநாளில் முஸ்லிம்கள் மட்டுமின்றி மற்ற சமயத்தவர்களாலும்
பெரிதும் மதிக்கப்படுகின்ற இப்றாஹீம் (அலை)அவர்களின் தியாகத்தை ஒவ்வொரு ஆண்டும்
நினைவுபடுத்தும் வகையில் தகுதியுடைய முஸ்லிம்கள் பலிப் பிராணியை அறுத்து பலியிட
வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இதன்படி முஸ்லிம்கள் வருடா வருடம்
கடைபிடிக்க வேண்டிய குர்பானியைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
இதன் அடிப்படையில் குர்பானியின் சட்டங்களில் சிலவற்றை தங்களின் கவனத்திற்கு
கொணர்கிறேன்.
உழ்ஹிய்யாவின் வரலாறு
********************************
قال الله تعالي : فَلَمَّا بَلَغَ مَعَهُ
السَّعْيَ قالَ يا بُنَيَّ إِنِّي أَرى فِي الْمَنامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ
ماذا تَرى قالَ يا أَبَتِ افْعَلْ ما تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شاءَ اللَّهُ مِنَ
الصَّابِرِينَ (102) فَلَمَّا أَسْلَما وَتَلَّهُ لِلْجَبِينِ (103) وَنادَيْناهُ
أَنْ يا إِبْراهِيمُ (104) قَدْ صَدَّقْتَ الرُّؤْيا إِنَّا كَذلِكَ نَجْزِي
الْمُحْسِنِينَ (105) إِنَّ هذا لَهُوَ الْبَلاءُ الْمُبِينُ (106) وَفَدَيْناهُ
بِذِبْحٍ عَظِيمٍ (107) وَتَرَكْنا عَلَيْهِ فِي الْآخِرِينَ (108) سَلامٌ عَلى
إِبْراهِيمَ (109) كَذلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (110) إِنَّهُ مِنْ عِبادِنَا
الْمُؤْمِنِينَ (الصافات : 102 - 111)
37:102. பின் (அம்மகன்)
அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன்.
இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே
செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில்
நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”
37:103. ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
37:104. நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
37:105. “திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு
நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
37:106. “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
37:107. ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.
37:108. இன்னும்
அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
37:109. “ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!
37:110. இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.
37:111. நிச்சயமாக அவர்
முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.
உழ்ஹிய்யா(குர்பானி) என்றால் என்ன?
***************************************
அரபு மொழி அகராதியின்படி நன்பகல் நேரத்தில்
பலிப்பிராணியை அறுப்பதற்கு உழ்ஹிய்யா எனப்படும். எனினும் மார்க்க வழக்கப்படி உழ்ஹிய்யா என்பது பெருநாள் அன்று அல்லாஹ்வின்
நெருக்கத்தை பெறும் எண்ணத்தில் ஒட்டகம், மாடு, ஆடுஆகியவற்றில் அறுக்கப்படும் பிராணிக்கே உழ்ஹிய்யா எனப்படுகின்றது.
உழ்ஹிய்யாவின் சட்டம் என்ன?
***********************************
உழ்ஹிய்யா கொடுப்பது ஹனஃபி மத்ஹபின்படி
வாஜிப் ஆகும். ஷாஃபிஈ மத்ஹபின்படி அது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்.
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
. உம் இறைவனை
தொழுது, குர்பானியும்கொடுப்பீராக! (அல்குர்ஆன் - 108 : 02 )
5558- عَنْ أَنَسٍ قَالَ ضَحَّى
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ،
فَرَأَيْتُهُ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا يُسَمِّي وَيُكَبِّرُ،
فَذَبَحَهُمَا بِيَدِهِ.
அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.நபி(ஸல்)
அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கிடாக்களைக்குர்பானிகொடுத்தார்கள்.
அவர்கள் தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு
அல்லாஹ்வின்பெயர் கூறி,தக்பீர் (அல்லாஹூ அக்பர் - அல்லாஹ் மிகப்
பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை பார்த்தேன். (புஹாரி,முஸ்லிம்)
1589- عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ
قَالَ أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ
عَشْرَ سِنِينَ يُضَحِّي.
قَالَ أَبُو عِيسَى: هَذَا حَدِيثٌ حَسَنٌ.
நம்முடைய நபியவர்வகள் மதீனாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் ஒவ்வொரு ஆண்டும் குர்பானி கொடுத்தார்கள். ( திர்மிதி)
இந்த நபிமொழி நபியவர்கள் எந்த ஆண்டும்
குர்பானி கொடுக்காமல் இருந்ததில்லை எனக்கூறுகிறது. இவ்வாறு தொடர்ந்து வழமையாக நபி(
ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்திருப்பது.குர்பானி வாஜிப் என்பதின் மீது
அறிவிக்கிறது.
مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ فَلَا
يَقْرَبَنَّ مُصَلَّانَا
"
رواه أحمد في "المسند "
வசதியிருந்தும் குர்பானி கொடுக்காதவர்
நம்முடைய தொழும் இடத்திற்கு வரவேண்டாம் என்று நபி( ஸல்) கூறியுள்ளார்கள்
உழ்ஹிய்யாவின் நிபந்தனைகள்.
***********************************
குர்பானி கொடுப்பதற்கென சில நிபந்தனைகளை
இஸ்லாம் வகுத்துள்ளது. அந்நிபந்தனைகள் காணப்படும் முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பது
அவசியம். அவைகளில்
1. குர்பானி கொடுப்பவர் முஸ்லிமாக இருக்க
வேண்டும். முஸ்லிம் அல்லோதோரின் மீது குர்பானி கடமை இல்லை.
2. பருவ வயதை அடைந்தவராகவும்,புத்தி சுவாதீனமுள்ளவராகவும் இருக்க வேண்டும். இதன்படி எவர் பருவ வயதை
அடையவில்லையோ, புத்தி சுவாதீனமுள்ளவராக இல்லையோ அவர்கள்
மீது குர்பானி கடமை இல்லை.
3. உழ்ஹிய்யா கொடுப்பதற்கான பொருளதார சக்தி
பெற்றவராக இருக்க வேண்டும். இதன்படி துல்ஹஜ் பிறை 10, 11, 12 ஆகியநாட்களில்
வாழ்க்கைக்குரிய அத்தியாவசிய தேவைகள் போக 87: 1/2 கிராம் தங்கம் அல்லது612:1/2 கிராம் வெள்ளி அல்லது அதன் பெறுமானமுள்ள
ரூபாய்களை பெற்றிருப்பவர்மீதும். இந்தளவு பெறுமானமுள்ள வணிகப் பொருட்களை
பெற்றிருப்பவர் மீதும்.மேலும் இந்த அளவு பெறுமானம் உள்ள அன்றாட தேவையை விட
கூடுதலான பொருட்களை பெற்றிருப்பவர் ஒவ்வொருவரின் மீதும் குர்பானி கடமையாகும்.
ஜகாத் கடமையாவதற்கும். குர்பானி
கடமையாவதற்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா?
***************************************
ஆம் இருக்கிறது... ஜகாத்துடைய அடிப்படை
நிஸாபு ஓர் ஆண்டு கையிருப்பில் இருந்தால்தான் கடமையாகும்.
ஆனால் துல்ஹஜ் பிறை 10.11.12 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் ஜகாத்
உடைய நிஸாப் அளவிற்கு தங்கம் வெள்ளி,பணம்,வியாபாரப் பொருட்கள்,கைவசம் இருந்தால் உடனே குர்பானி
கடமையாகிவிடும்.
எந்தெந்த பிராணிகளை உழ்ஹிய்யாவாக கொடுக்க
வேண்டும்?
*********************************************
ஒட்டகம், மாடு, செம்மறி ஆடு அல்லது வெள்ளாடு ஆகிய இம்மூன்று வகையான பிராணிகளில் ஏதேனும்
ஒன்றினைஉழ்ஹிய்யாவாக கொடுக்க வேண்டும்.
وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا
لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ
الْاَنْعَامِ فَاِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا
وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ۙ
இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து
அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச்
செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக)
ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
(அல்குர்ஆன் : 22:34)
இவ்வசனத்தில் இடம் பெறும்''அல்அன்ஆம்"" எனும் வார்த்தை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை எடுத்துக் கொள்ளும். மேலும் நபி
(ஸல்) அவர்களும்,அவர்களின் தோழர்களும் இம்மூன்று வகைப்
பிராணிகளைத் தவிர மற்றவை எதனையும் அவர்களின் வாழ்நாளில் குர்பானிக்காக
கொடுத்ததில்லை.
ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமா?
*******************************************
ஷாஃபிஈ மத்ஹபில் ஒரு ஆட்டை ஒருவர் தமக்கும், தம் குடும்பத்தினர்களுக்காகவும் குர்பானியாக வழங்கலாம்.
1587- حَدَّثَنِي يَحْيَى بْنُ مُوسَى
حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ
حَدَّثَنِي عُمَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: سَمِعْتُ عَطَاءَ بْنَ يَسَارٍ
يَقُولُ سَأَلْتُ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ كَيْفَ كَانَتِ الضَّحَايَا عَلَى
عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: كَانَ
الرَّجُلُ يُضَحِّي بِالشَّاةِ عَنْهُ وَعَنْ أَهْلِ بَيْتِهِ فَيَأْكُلُونَ
وَيُطْعِمُونَ حَتَّى تَبَاهَى النَّاسُ فَصَارَتْ كَمَا تَرَى.
قَالَ أَبُو عِيسَى: هَذَا حَدِيثٌ حَسَنٌ
صَحِيحٌ. وَعُمَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ هُوَ مَدَنِيٌّ وَقَدْ رَوَى عَنْهُ
مَالِكُ بْنُ أَنَسٍ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ
وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ وَاحْتَجَّا بِحَدِيثِ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ضَحَّى بِكَبْشٍ فَقَالَ: ((هَذَا عَمَّنْ
لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي)). وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ تُجْزِئُ
الشَّاةُ إِلاَّ عَنْ نَفْسٍ وَاحِدَةٍ وَهُوَ قَوْلُ عَبْدِ اللَّهِ بْنِ
الْمُبَارَكِ وَغَيْرِهِ مِنْ أَهْلِ الْعِلْمِ.
ஏனெனில் நபி (ஸல்) அவர்களின்காலத்தில் ஒருவர்
ஒரு ஆட்டை தமக்கும், தமது குடும்பத்தாருக்கும் குர்பானியாக
கொடுப்பார். பின்னர் (அதனை) அவரும் உண்ணுவார் மற்றவர்களுக்கும் உண்ணக் கொடுப்பார்
என்று அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னுமாஜா,திர்மிதி)
ஹனஃபி மத்ஹபின் பிரகாரம் ஒரு குடும்பத்தில்
எத்தனை பேர் தனித்தனியாக இந்த நிஸாபின் அளவிற்கு செல்வத்தை பெற்றுள்ளார்களோ அத்தனை
பேரின் மீதும் குர்பானி தனிப்பட்ட முறையில் கடமையாகும்.
ஒவ்வொருவரும் தனித்தனியாக ஓர் ஆடு அல்லது
மாட்டில் பங்கு வைத்து குர்பானி கொடுக்க வேண்டும்.
குடும்பத்தில் அனைவருக்கும் ஓர் ஆடு
போதுமாகாது. அதேசமயம் ஒருவர் மீது மட்டும் குர்பானி கடமையாகி மற்றவர் மீது
கடமையாகவில்லை என்றால் ஒரு ஆடு போதுமாகிவிடும். அவர் தனக்கு கொடுக்கும்
குர்பானியில் கடமையில்லாத மற்றவர்களையும் நன்மையில் சேர்த்துத் கொள்ளலாமே தவிர கடமையில் அறவே சேர்த்துக் கொள்ள முடியாது. ஒரு
குடும்பத்திற்கு ஓர் ஆடு என்ற நபிமொழிக்கு நம்முடைய இமாம்கள் இவ்வாறு தான்
விளக்கமளித்துள்ளார்கள்.
மேலும் ஒரு மாட்டை அல்லது ஒரு ஒட்டகத்தை
எழுவரின் சார்பில் குர்பானியாக கொடுக்கலாம்.
1584- عَنْ جَابِرٍ قَالَ نَحَرْنَا مَعَ
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ
عَنْ سَبْعَةٍ وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ.رواه الترمدي
ஜாபிர் (ரழி) அவர்கள்கூறினார்கள்.
ஹுதைபிய்யாவின் வருடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு ஒட்டகத்தை ஏழுவரின்
சார்பாகவும், ஒருமாட்டை ஏழுவரின் சார்பாகவும்
(குர்பானிக்காக)அறுத்தோம். (திர்மிதி)
குர்பானி பிராணியில் கவனிக்கப்பட வேண்டிய
முக்கிய நிபந்தனைகள்
*************************************
1. குர்பானி பிராணி மார்க்கம் நிர்ணயித்துள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்.
இதன்படி ஒட்டகமாக இருப்பின் அது ஐந்து வயதை நிரம்பியதாகவும், மாடாக இருப்பின் இரு வயதை நிரம்பியதாகவும், வெள்ளாடாக
இருப்பின் ஒரு வயது நிரம்பியதாகவும், செம்மறியாடாக
இருப்பின் ஒரு வருடமோ அல்லது ஆறு மாதங்களோ பூர்த்தியானதாக இருக்க வேண்டும்.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
5194- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ
حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ: قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((لاَ تَذْبَحُوا إِلاَّ
مُسِنَّةً إِلاَّ أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ)).
ஓர் ஆண்டு பூர்த்தியான ஆட்டையே குர்பானி
கொடுங்கள். அது கிடைக்காத போதுசெம்மறியாட்டில் (ஆறு மாதத்திற்கு மேல்)ஒரு
வயதிற்குட்பட்டதை அறுத்து குர்பானி கொடுங்கள். (முஸ்லிம்)
இந்த நபி மொழியில்இடம் பெறும் ''முஸின்னஹ்"" என்பதற்கு ஒட்டகமாக இருப்பின் ஐந்து வயது நிரம்பியது
என்றும், மாடாக இருப்பின் இரண்டு வயதுநிரம்பியது
என்றும், ஆடாக இருப்பின் ஒரு வயது நிரம்பியது என்றும்
பொருளாகும்.
5197- عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ
الْجُهَنِيِّ قَالَ قَسَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فِينَا ضَحَايَا فَأَصَابَنِي جَذَعٌ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ
أَصَابَنِي جَذَعٌ. فَقَالَ: ((ضَحِّ بِهِ)).
உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்கள்கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே
குர்பானிப் பிராணிகளைப் பங்கிட்டார்கள். அப்போது எனக்கு(எனது பங்காக) ஒரு
வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி ஒன்று கிடைத்தது. நான் அல்லாஹ்வின் தூதரே! ஒரு
வயதுக்குட்பட்ட வெள்ளாடு தான் எனக்குக் கிடைத்தது என்று சொன்னேன். அதற்கவர்கள் அதை
நீர் குர்பானி கொடுப்பீராக என்று கூறினார்கள். (முஸ்லிம்)
2. ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இதன்படி குர்பானிப் பிராணிகள் தெளிவான
குருடாகவோ, தெளிவான நொண்டியாகவோ, தெளிவான நோயுற்றதாகவோ, நன்கு மெலிந்ததாகவோ இருக்கக் கூடாது.
கண் குருடானவைகளை. ஒற்றைக்கண் பார்வை
உள்ளவைகளை. மூன்றில் ஒரு பாகம் அல்லது அதைவிட கூடுதலாக பார்வை அற்றவைகளை குர்பானி
கொடுப்பது கூடாது.
காது அறுபட்ட ஆடு மாடுகள்
*********************
மூன்றில் ஒரு பாகம் அல்லது அதைவிட கூடுதலாக
காது அறுபட்டவைகளை குர்பானி கொடுப்பது கூடாது. பிறப்பிலேயே இரு காதுகள் இல்லாத
வைகளையும்.ஒரு காது இல்லாதவைகளையும் குர்பானி கொடுப்பது கூடாது
விதை அடிக்கப்பட்ட பிராணிகள்
***********************************
விதை அடிக்கப்பட்ட பிராணிகளை குர்பானி
கொடுப்பது கூடும் என்பது மட்டுமல்ல அது சிறந்ததுமாகும். நபியவர்களும்
விதையடிக்கப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுத்துள்ளார்கள்.
எப்பொழுது குர்பானி கொடுக்க வேண்டும்?
**********-******************************
ஹஜ்ஜூப் பொருநாள் தொழுகையை தொழுது
முடித்ததிலிருந்து துல்ஹஜ் பிறை 12
அன்று சூரியன்
மறையும் வரை குர்பானிகொடுக்கலாம்.
5562- حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا
شُعْبَةُ حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ قَيْسٍ سَمِعْتُ جُنْدَبَ بْنَ سُفْيَانَ
الْبَجَلِيَّ قَالَ شَهِدْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ
النَّحْرِ فَقَالَ: ((مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَلْيُعِدْ مَكَانَهَا
أُخْرَى، وَمَنْ لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ))
ஜூன்துப் இப்னு ஸுஃப்யான் அல்பஜலீ
(ரழி)அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் பிறை 10)நாளில் இருந்தேன். அப்போது அவர்கள் பெருநாள் தொழுவதற்கு முன்பே (குர்பானிப்
பிராணியை) அறுத்து விட்டவர் அதன் ஸ்தானத்தில் அதற்கு பகரமாக வேறொன்றை
(தொழுகைக்குப் பின்)அறுக்கட்டும்.(குர்பானிப் பிராணியை) அறுக்காமல் இருப்பவரும்
அறுக்கட்டும் என்று கூறினார்கள்.(புஹாரி)
ஜூபைர் இப்னு முத்இம் (ரழி) அவர்கள்
கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அய்யாமுத் தஷ்ரீக்"
(துல்ஹஜ் பிறை 10,11,12. ஒவ்வொரு நாளிலும் (குர்பானிப் பிராணியை)
அறுக்கலாம். (அஹ்மத்) எனினும் ஹஜ்ஜூப் பெருநாள் அன்று பெருநாள் தொழுகையை தொழுத பின்
குர்பானி கொடுப்பதே மிகச் சிறந்ததாகும்.
5560-عَنِ الْبَرَاءِ رَضِيَ اللَّهُ
عَنْهُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ
فَقَالَ: ((إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ مِنْ يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ،
ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ، فَمَنْ فَعَلَ هَذَا فَقَدْ أَصَابَ سُنَّتَنَا،
وَمَنْ نَحَرَ فَإِنَّمَا هُوَ لَحْمٌ يُقَدِّمُهُ لأَهْلِهِ، لَيْسَ مِنَ
النُّسُكِ فِي شَيْءٍ)). فَقَالَ أَبُو بُرْدَةَ يَا رَسُولَ اللَّهِ ذَبَحْتُ
قَبْلَ أَنْ أُصَلِّيَ، وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ. فَقَالَ:
((اجْعَلْهَا مَكَانَهَا، وَلَنْ تَجْزِيَ أَوْ تُوفِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ))
பராஃ(ரலி) அவர்கள் கூறினார்கள் "நாம்
முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன்பின்னர் (இல்லம்) திரும்பி அறுத்துப்
பலியிடுவோம். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையைப் பேணியவராவார்" என்று
நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (புஹாரி)
குர்பானி இறைச்சியை பங்கிடும் முறை
******************************************
குர்பானி கொடுப்பவர் அதன் இறைச்சியை மூன்று
பங்குகளாக பிரித்து ஒரு பங்கை தமக்கும், மற்றொரு பங்கை
உறவினர்கள், நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்கவும், இன்னொறு பங்கை ஏழைகளுக்கு தர்மமாக கொடுப்பது மிகச் சிறந்த பங்கீட்டு
முறையாகும்.மேலும் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைப்பதும்
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.
குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை.
*************************************
ﻭﻋﻦ ﺃﻡ ﺳﻠﻤﺔ ﻗﺎﻟﺖ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ: «ﺇﺫا ﺩﺧﻞ اﻟﻌﺸﺮ ﻭﺃﺭاﺩ ﺑﻌﻀﻜﻢ ﺃﻥ ﻳﻀﺤﻲ ﻓﻼ ﻳﻤﺲ ﻣﻦ ﺷﻌﺮﻩ ﻭﺑﺸﺮﻩ ﺷﻴﺌﺎ» ﻭﻓﻲ ﺭﻭاﻳﺔ
«ﻓﻼ ﻳﺄﺧﺬﻥ ﺷﻌﺮا ﻭﻻ ﻳﻘﻠﻤﻦ ﻇﻔﺮا» ﻭﻓﻲ ﺭﻭاﻳﺔ «ﻣﻦ ﺭﺃﻯ ﻫﻼﻝ ﺫﻱ اﻟﺤﺠﺔ ﻭﺃﺭاﺩ ﺃﻥ ﻳﻀﺤﻲ ﻓﻼ ﻳﺄﺧﺬ
ﻣﻦ ﺷﻌﺮﻩ ﻭﻻ ﻣﻦ ﺃﻇﻔﺎﺭﻩ» . ﺭﻭاﻩ مسلم
துல்ஹஜ்ஜின் முதல் பிறை துவங்கி விட்டால்
குர்பானி கொடுப்பவர் நகம், முடி முதலிவற்றை குர்பானி கொடுக்கும் வரை
எடுக்காமல் இருப்பது முஸ்தஹப்பாகும். இவையாவும்
குர்பானி கொடுப்பவர் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும்.
துல்ஹஜ் ஆரம்ப நாட்களை விடவும் அய்யாமுத்
தஷ்ரீக் உடைய நாட்கள் சிறப்பு வாய்ந்ததாகும்.
«969» حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ
عَرْعَرَةَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ عَنْ مُسْلِمٍ الْبَطِينِ
عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: ((مَا الْعَمَلُ فِي أَيَّامِ الْعَشْرِ
أَفْضَلَ مِنَ الْعَمَلِ فِي هَذِهِ)). قَالُوا وَلاَ الْجِهَادُ قَالَ: ((وَلاَ
الْجِهَادُ، إِلاَّ رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ
بِشَيْءٍ)).
.இப்னு
அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
'(துல்ஹஜ்) பத்து
நாள்களில் செய்யும் எந்த நல்லறமும் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் செய்யும் எந்த
நல்லறத்தையும் விடவும் சிறந்ததல்ல' என்று நபி(ஸல்)
கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா?' என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'தன்உயிரையும்
பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன்
செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி
இந்த நாட்களில் தக்பீர் அதிகம் சொல்ல
வேண்டும்.
******************************************
صحيح البخاري - (2 / 20)
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: " وَاذْكُرُوا
اللَّهَ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ: أَيَّامُ العَشْرِ، وَالأَيَّامُ
المَعْدُودَاتُ: أَيَّامُ التَّشْرِيقِ " وَكَانَ ابْنُ عُمَرَ، وَأَبُو
هُرَيْرَةَ: «يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ العَشْرِ يُكَبِّرَانِ،
وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا» وَكَبَّرَ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ خَلْفَ
النَّافِلَة
(22:28)
வசனத்தில் அறியப்பட்ட நாட்களில் இறைவனை திக்ரு செய்யுங்கள் என்பது துல்ஹஜ் பத்து நாட்களாகும் என்று
இப்னு அப்பாஸ் ரலி கூறுகின்றார்கள்.
இப்னு உமர்(ரலி ) யும் ,அபூஹீரைரா (ரலி) யும் துல்ஹஜ் மாதத்தில் முந்தைய பத்து நாட்களில் கடை வீதிக்கு சென்றால் தக்பீர் சொல்வார்கள் அதை பார்த்து மக்களும் சொல்வார்கள் நஃபிலான தொழுகைக்கு பிறகும் முஹம்மது பின்
அலி (ரஹ்) அவர்கள் தக்பீர் சொல்வார்கள்.
صحيح البخاري - (2 / 20)
وَكَانَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ،
«يُكَبِّرُ فِي قُبَّتِهِ بِمِنًى فَيَسْمَعُهُ أَهْلُ المَسْجِدِ، فَيُكَبِّرُونَ
وَيُكَبِّرُ أَهْلُ الأَسْوَاقِ حَتَّى تَرْتَجَّ مِنًى تَكْبِيرًا» وَكَانَ ابْنُ
عُمَرَ «يُكَبِّرُ بِمِنًى تِلْكَ الأَيَّامَ، وَخَلْفَ الصَّلَوَاتِ وَعَلَى
فِرَاشِهِ وَفِي فُسْطَاطِهِ وَمَجْلِسِهِ، وَمَمْشَاهُ تِلْكَ الأَيَّامَ
جَمِيعًا» وَكَانَتْ مَيْمُونَةُ: «تُكَبِّرُ يَوْمَ النَّحْرِ» وَكُنَّ
«النِّسَاءُ يُكَبِّرْنَ خَلْفَ أَبَانَ بْنِ عُثْمَانَ، وَعُمَرَ بْنِ عَبْدِ
العَزِيزِ لَيَالِيَ التَّشْرِيقِ مَعَ الرِّجَالِ فِي المَسْجِدِ»
மஸாயில்:
*************
துல்ஹஜ் மாதத்தில் பிறை 9 ம் நாள் பஜ்ரிலிருந்து 13
ம் நாள் அஸர்
வரை தனியாக தொழுதாலும் , இமாம் ஜமாஅத்தாக தொழுதாலும், முஸாபிராக இருந்தாலும் ஆண்கள் மிதமான சப்தத்துடனும்
பெண்கள் சப்தமின்றியும் ஒவ்வொரு
பர்ளு
தொழுகைக்கு பின் தக்பீர் ஒரு முறை சொல்வது வாஜிப் ஆகும். மூன்று முறை சொல்வது
முஸ்தஹப்பு ஆகும்.
தக்பீரே தஷ்ரீக் எதனால் கடமையாக்கப்பட்டது?
***********************
ஹழ்ரத் இப்ராஹீம் ( அலை) அவர்கள் ஹழ்ரத்
இஸ்மாயீல் அலை அவர்களை அறுப்பதற்காக படுக்க வைத்தபோது அல்லாஹுதஆலா ஹழ்ரத்
ஜிப்ரயீல்( அலை)அவர்களை பித்யாவை எடுத்துச் செல்லும்படி கூறினான். ஜிப்ரயீல் அலை
பித்யாவை கொண்டு வருவதற்குள் எங்கே இப்ராஹீம் அலை அவர்கள் மகனை அறுத்து
விடுவார்களோ என்ற பயத்தில் ஜிப்ரயீல் அலை அவர்கள் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
என்று கூறிக்கொண்டே சென்றார்கள். ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் இந்த சப்தத்தை
கேட்டதும் அதை சுபச் செய்தியாக எண்ணி லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று
கூறினார்கள். அதைக்கேட்ட ஹழ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்கள் தமக்குப் பதிலாக வேறு
பித்யா வந்துவிட்டதை அறிந்து அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து என்று
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.
(நூல்: ஃபதாவா
ரஹீமிய்யா 2/89)
அரஃபா நாளில் நோன்பு நோற்பது.
************************************
5927عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ
اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ
عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصَّوْمَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ،
وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ المِسْكِ( صحيح
البخاري:)
நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்
கூறுவதாக)கூறினார்கள். ஆதமுடைய மக்களின் ஒவ்வொரு செயலும் அவனுக்கே உரியது.
நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியது. நானே அதற்கு கூலி
வழங்குவேன். நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மனமிக்கதாகும்.
(புஹாரி: 5927)
عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صِيَامُ يَوْمِ عَرَفَةَ، إِنِّي أَحْتَسِبُ
عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي
بَعْدَهُ» ترمدي : 749
அரஃபாவின் நோன்பு அதற்கு முன்னுள்ள ஓர் ஆண்டு, மற்றும் பின்னுள்ள ஓர் ஆண்டின் குற்றங்களை அழித்து விடும். (திர்மிதி: 749)
குறிப்பு : அரஃபா உடைய நாளில் ஹாஜிகள்
அல்லாதவர்களே நோன்பு நோற்க வேண்டும்.
2688- عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ
الْحَارِثِ أَنَّ نَاسًا تَمَارَوْا عِنْدَهَا يَوْمَ عَرَفَةَ فِي صِيَامِ
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بَعْضُهُمْ هُوَ
صَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ لَيْسَ بِصَائِمٍ. فَأَرْسَلْتُ إِلَيْهِ بِقَدَحِ
لَبَنٍ وَهُوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ بِعَرَفَةَ فَشَرِبَهُ.( مسلم)
2066. உம்முல் ஃபள்ல்
(ரலி) அவர்கள் கூறியதாவது: ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”அரஃபா” நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்களா” என்று நபித்தோழர்களில் சிலர் சந்தேகம் தெரிவித்தனர். (அன்றைய தினம்) நாங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அரஃபாவில் இருந்தோம். அரஃபாவிலிருந்த
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பாலிருந்த ஒரு கிண்ணத்தை நான்
கொடுத்தனுப்பினேன். அதை அவர்கள் அருந்தினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13. நோன்பு
قَالَتْ عَائِشَةُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ
اللَّهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ وَإِنَّهُ لَيَدْنُو
ثُمَّ يُبَاهِي بِهِمُ الْمَلاَئِكَةَ فَيَقُولُ مَا أَرَادَ هَؤُلاَءِ))رواه مسلم
2623. அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும்
நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். ”இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?” என்று
(பெருமிதத்தோடு) கேட்கிறான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 15. ஹஜ்
குறிப்பு: அரஃபா நாள்
என்பது துல்ஹஜ் பிரை 9 ம் நாளாகும் எனவே பிறை பார்க்கப்பட்டதை
கவனித்து இந்த நாள் மாறுபடலாம். ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் தங்கும் நாளை உலகில்
உள்ள அனைவருக்கும் அரஃபா நாள் என்று முடிவு செய்யக்கூடாது.
தியாகத் திருநாள் சிந்தனை.
******************************
قَالَ إِنَّ أَعْظَمَ الْأَيَّامِ عِنْدَ
اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى يَوْمُ النَّحْرِ ثُمَّ يَوْمُ الْقَرِّ
"மிகச்
சிறப்பிற்குரிய நாள் அது துல் ஹஜ்ஜின் பத்தாம் நாளும் பதினொன்றாம் நாளுமே
ஆகும்" என நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.
என அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்ன் குர்த் ரலி
அவர்கள் . நூல் அபூ தாவூத்1502 & முஸ்னத் அஹ்மத் 19075
புத்தாடை ஸுன்னத் அது இஸ்லாமிய வட்டத்தில்
இருக்கனும்.
صحيح البخاري 948 أَنَّ عَبْدَ اللَّهِ
بْنَ عُمَرَ، قَالَ: أَخَذَ عُمَرُ جُبَّةً مِنْ إِسْتَبْرَقٍ تُبَاعُ فِي
السُّوقِ، فَأَخَذَهَا، فَأَتَى بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، ابْتَعْ هَذِهِ تَجَمَّلْ بِهَا
لِلْعِيدِ وَالوُفُودِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ: «إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ» فَلَبِثَ عُمَرُ مَا
شَاءَ اللَّهُ أَنْ يَلْبَثَ، ثُمَّ أَرْسَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجُبَّةِ دِيبَاجٍ، فَأَقْبَلَ بِهَا عُمَرُ، فَأَتَى
بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ يَا رَسُولَ
اللَّهِ: إِنَّكَ قُلْتَ: «إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ» وَأَرْسَلْتَ
إِلَيَّ بِهَذِهِ الجُبَّةِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ: «تَبِيعُهَا أَوْ تُصِيبُ بِهَا حَاجَتَكَ»
948. அப்துல்லாஹ்
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக்
குளிராடை ஒன்றை உமர்(ரலி) எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்; பெருநாளிலும் தூதுக்குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக்
கொள்ளலாம்' என்று கூறினார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இது (மறுமைப்)பேறு அற்றவர்களின் ஆடையாகும்' எனக்
கூறினார்கள். சிறிது காலம் கடந்தது. பிறகு நபி(ஸல்) அவர்கள் பட்டுக் குளிராடை
ஒன்றை உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதை எடுத்துக் கொண்டு
உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். 'இறைத்தூதர்
அவர்களே! இது (மறுமைப்) பேறு பெறாதவர்களின் ஆடை எனக் கூறிவிட்டு இதை எனக்குக்
கொடுத்தனுப்பியுள்ளீர்களே' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்'இதை நீர் விற்றுக் கொள்ளும்! அல்லது இதன் மூலம் உம் தேவைகளை பூர்த்தி செய்து
கொள்ளும்!' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 13.இருபெருநாள்கள்
குறிப்பு : நடிகர்களின்
மாடலை தெரிந்து எடுப்பது தவிர்க்க வேண்டும்.
லோஹிப் என்று பேண்ட் இடுப்புக்கு கீழே
போடுவது, ஷார்ட் சர்ட் என சஜ்தாவின் போது உடல்
தெரியும் படியாக அணிவது கூடாது.
ஆண்களை ஈர்க்கும் மெல்லியதாக விதத்தில்
அணிவது கூடாது .
இறுக்கமாகவோ / மறைக்க வேண்டிய பாகம்
வெளிப்படும் விதத்தில் அணிவது கூடாது.
ஈத்கா வர அனுமதித்த நபி (ஸல்) அவர்கள்
மஸ்ஜிதுக்கு வராமல் இருப்பதே மிகச் சிறந்தது என்றார்கள்.
سنن أبي داود 480 - عَنْ ابْنِ
عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا
تَمْنَعُوا نِسَاءَكُمْ الْمَسَاجِدَ وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ
உங்கள் பெண்களை மஸ்ஜித் வரவேண்டாம் என தடுக்க
வேண்டாம். ஆனாலும் அவர்களுக்கு தொழுகுவதற்கு சிறந்த இடம் அவர்களின் வீடு தான்
(மஸ்ஜித் அல்ல). என நபி ஸல் கூறினார்கள் . அறிவிப்பாளர் இப்னு உமர் ரலி அவர்கள்.
நூல் அபூ தாவூத் 480 + முஸ்னத் அஹ்மத் 5468
عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، قَالَتْ: كُنَّا
نَمْنَعُ جَوَارِيَنَا أَنْ يَخْرُجْنَ يَوْمَ العِيدِ، فَجَاءَتِ امْرَأَةٌ،
فَنَزَلَتْ قَصْرَ بَنِي خَلَفٍ، فَأَتَيْتُهَا، فَحَدَّثَتْ أَنَّ زَوْجَ
أُخْتِهَا غَزَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثِنْتَيْ
عَشْرَةَ غَزْوَةً، فَكَانَتْ أُخْتُهَا مَعَهُ فِي سِتِّ غَزَوَاتٍ، فَقَالَتْ:
فَكُنَّا نَقُومُ عَلَى المَرْضَى، وَنُدَاوِي الكَلْمَى، فَقَالَتْ: يَا رَسُولَ
اللَّهِ، أَعَلَى إِحْدَانَا بَأْسٌ إِذَا لَمْ يَكُنْ لَهَا جِلْبَابٌ أَنْ لاَ
تَخْرُجَ؟ فَقَالَ: «لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا،
فَلْيَشْهَدْنَ الخَيْرَ وَدَعْوَةَ المُؤْمِنِينَ» قَالَتْ حَفْصَةُ: فَلَمَّا
قَدِمَتْ أُمُّ عَطِيَّةَ أَتَيْتُهَا فَسَأَلْتُهَا: أَسَمِعْتِ فِي كَذَا
وَكَذَا؟ قَالَتْ: نَعَمْ بِأَبِي، وَقَلَّمَا ذَكَرَتِ النَّبِيَّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا قَالَتْ: بِأَبِي قَالَ: " لِيَخْرُجِ العَوَاتِقُ
ذَوَاتُ الخُدُورِ - أَوْ قَالَ: العَوَاتِقُ وَذَوَاتُ الخُدُورِ، شَكَّ أَيُّوبُ
- وَالحُيَّضُ، وَيَعْتَزِلُ الحُيَّضُ المُصَلَّى، وَلْيَشْهَدْنَ الخَيْرَ
وَدَعْوَةَ المُؤْمِنِينَ " قَالَتْ: فَقُلْتُ لَهَا: الحُيَّضُ؟ قَالَتْ:
نَعَمْ، أَلَيْسَ الحَائِضُ تَشْهَدُ عَرَفَاتٍ، وَتَشْهَدُ كَذَا، وَتَشْهَدُ
كَذَا
980. ஹஃப்ஸா(ரலி)
அறிவித்தார்.
நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும்
இடத்திற்குச் செல்வதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக்
கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின்
இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக வந்த
செய்தியை அறிவித்தார். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா) நபி(ஸல்) அவர்களோடு தம்
கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தவராவார்.
உம்மு அதிய்யா கூறினார்:
'நாங்கள்
போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளிகளைக் கவனிப்போம்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள்
தொழுகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா? எனக் கேட்டேன்.
அதற்கு, 'அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை
அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களுடைய
பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உம்மு அதிய்யா(ரலி) '(என்னிடம்) வந்தபோது நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா? என கேட்டேன். அதற்கு 'என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்; ஆம்! கேட்டேன்'எனக் கூறினார்கள். இவர் நபி(ஸல்) அவர்களின்
பெயரைக் கூறும் போதெல்லாம்' என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்' என்பதையும் சேர்த்தே கூறுவார்.
'கன்னிப்
பெண்களும் மாதவிடாய் பெண்களும் (பெருநாள் அன்று) வெளியே சென்று நன்மையான
காரியங்களிலும் முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள்
தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு
ஒதுங்கி இருப்பார்கள்' என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக்
கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? (பெருநாள் தொழுகை
நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்) எனக் கேட்டபோது, 'மாதவிடாயுள்ள
பெண் அரஃபாவிலும் மற்ற (மினா,முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும்
செல்வதில்லையா?' என உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 13.இருபெருநாள்கள்
குறிப்பு : பெண்கள் ஈத்கா வரலாம் என்ற அனுமதி
வயது முதிர்ந்த பெண்களுக்கு மட்டுமே. எனவே இளம் பெண்களோ / பிறரால் கவரப்படும்
அழகுள்ள பெண்களோ ஈத்கா வருவது மக்ருஹ். ஏனெனில் இக்காலத்தில் பித்னா பஸாத் பெருகி விட்டதால்.
ஈத் தொழுகை சீக்கிரம் தொழுகனும். தாமதம்
கூடாது.
عَنِ البَرَاءِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَقَالَ: «إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ
مِنْ يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَرْجِعَ، فَنَنْحَرَ فَمَنْ فَعَلَ
فَقَدْ أَصَابَ سُنَّتَنَا»
951. பராஃ(ரலி)
அறிவித்தார்.
'நாம் முதலில்
தொழுகையை ஆரம்பிப்போம். அதன்பின்னர் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம்.
இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையைப் பேணியவராவார்'என்று நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 13.இருபெருநாள்கள்
குறிப்பு : தாமதம் செய்வது பற்பல சுன்னத்கள்
குழி தோண்டி புதைக்க காரணமாக அமையும். பல அசௌகரியம் ஏற்படும்.
அன்று முதல் செயல் ஈத் தொழுகையே.
இரண்டாவது குர்பானியே .
அதுவே முதல் உணவு .
ஈத் தொழுகைக்கு முன் பின் ஸுன்னத் தொழுகை
கூடாது.
عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى يَوْمَ الفِطْرِ رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ
قَبْلَهَا وَلاَ بَعْدَهَا، ثُمَّ أَتَى النِّسَاءَ وَمَعَهُ بِلاَلٌ،
فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلْنَ يُلْقِينَ تُلْقِي المَرْأَةُ خُرْصَهَا
وَسِخَابَهَا»
964. இப்னு
அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு
ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள்
பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம்
குறித்து அவர்களுக்கு நபி(ஸல்) விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்)
போடலானார்கள்.
சில பெண்கள் தங்களின் காதின் கம்மல்.,கழுத்து மாலையையும் போடலானார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 13.இருபெருநாள்கள்
தியாகத் திருநாளை குர்பானி உள்ளிட்ட
நற்காரியங்களால் அலங்கரித்து மார்க்க முறைப்படி நடந்து கொண்டு அல்லாஹ்வின் பேரருளை
அடைந்து கொள்வோமாக ஆமீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.