ஹஜ்ஜூம், உம்ராவும்.
-----------------------------------
قال الله تعالى :
--------------------
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي
بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى للعالمين🔹(3:96 )
قال رسول الله صلى الله عليه وسلم :
----------------------------------------------
«887» حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا
يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ رَجَاءٍ أَبِي يَحْيَى قَالَ: سَمِعْتُ مُسَافِعًا
الْحَاجِبَ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ سَمِعْتُ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((إِنَّ الرُّكْنَ
وَالْمَقَامَ يَاقُوتَتَانِ مِنْ يَاقُوتِ الْجَنَّةِ طَمَسَ اللَّهُ نُورَهُمَا
وَلَوْ لَمْ يَطْمِسْ نُورَهُمَا لأَضَاءَتَا مَا بَيْنَ الْمَشْرِقِ
وَالْمَغْرِبِ)) (رواه الترمذي)
முன்னுரை :
------------------
அல்லாஹ் தனது அர்ஷூக்கு நேர் கீழே கடல்
நுரைகளை ஒன்றிணைத்து பூமிப் பந்தின் தரைப் பகுதியை படைக்கத் துவங்கினான் அந்த இடத்தை பூமியின் முதல் வணக்க ஸ்தளமாக்கினான்.
திருமறை குர்ஆனில் அல்லாஹ் சொல்வது போல
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي
بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ🔹
(இறை
வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில்
(மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. (3: 96)
படைத்த இறைவனின் கட்டளைக்கிணங்க அவனது முதல்
இறை ஆலயத்தை தரிசிப்பதை முஃமின்களின் மீது மகத்துவமிக்க வணக்கமாகவும் ஆக்கி
வைத்துள்ளான். எல்லோருக்கும் வலியுறுத்தப்பட்ட கடமையாக அதை ஆக்காமல் அவனது
நியதிக்கிணங்க சக்தி பெற்றவர்களுக்கு மட்டும் கடமையாக்கியுள்ளான்.
ۗ وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ
مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا ۚ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ
الْعَالَمِينَ
இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில்
பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று
ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால்,
எவரேனும் இதை
நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) -
நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கிறான். (3:97)
என்கினும் ஆசிப்பவர்களுக்கு வசதி இல்லாத
நிலையிலும் அங்கு செல்வதற்கான வாய்ப்பை வழங்கி பேருபகாரம் செய்கிறான்... வசதியற்ற
நிலையில் கூட நிறைய ஏழைகள் ஹஜ்ஜுக்கும் ' உம்ராவுக்கும்
செல்வதை நாம் கண்ணுருகிறோம்.
மேலும் தன்னுடைய நிறைய அத்தாட்சிகளை அல்லாஹ்
அங்கே பதித்து வைத்திருக்கிறான். அங்கே உலக மனிதர்களுக்கு
அவன் பாதுகாப்பு உத்திரவாதத்தையும் அளிக்கிறான்.
فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَقَامُ إِبْرَاهِيمَ ۖ
وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا ۗ
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில்
நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்;.
ஹஜருல் அஸ்வத், மகாமே
இப்ராஹீம்.
--------------------------------------------------------------
887» حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا
يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ رَجَاءٍ أَبِي يَحْيَى قَالَ: سَمِعْتُ مُسَافِعًا
الْحَاجِبَ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ سَمِعْتُ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((إِنَّ الرُّكْنَ
وَالْمَقَامَ يَاقُوتَتَانِ مِنْ يَاقُوتِ الْجَنَّةِ طَمَسَ اللَّهُ نُورَهُمَا
وَلَوْ لَمْ يَطْمِسْ نُورَهُمَا لأَضَاءَتَا مَا بَيْنَ الْمَشْرِقِ
وَالْمَغْرِبِ)) (رواه الترمذي)
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
"ஹஜருல் அஸ்வதும்,மகாமே இப்ராஹீமும் சுவனத்தின் மாணிக்கக்
கற்களிலிருந்து உள்ளதாகும், அல்லாஹ் அதன் பேரொளியை போக்கி விட்டான்
அவ்வாறு அதன் பேரொளியை போக்க
வில்லையெனில் கிழக்குக்கும் மேற்குக்கும் (உலகெங்கும்)மத்தியில் அவ்விரண்டும்
பேரொளி வீசிக் கொண்டிருந்திருக்கும். (நூல் : திர்மிதீ )
886» حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا
جَرِيرٌ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ
عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
((نَزَلَ الْحَجَرُ الأَسْوَدُ مِنَ الْجَنَّةِ وَهُوَ أَشَدُّ بَيَاضًا مِنَ
اللَّبَنِ فَسَوَّدَتْهُ خَطَايَا بَنِي آدَمَ)).
قَالَ: وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
عَمْرٍو وَأَبِي هُرَيْرَةَ.
قَالَ أَبُو عِيسَى: حَدِيثُ ابْنِ عَبَّاسٍ
حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்
" ஹஜருல்அஸ்வத் பாலை விட மிக வெண்மையாக சுவனத்திலிருந்து இறங்கியது
மனிதர்களின் பாவங்கள் தாம் அதை கருமையடையச் செய்து விட்டது"
மனிதர்களின் பாவங்களை கவர்ந்திழுத்து அவர்களை
பரிசுத்தப் படுத்தும் தன்மையை அல்லாஹ் அதற்கு வழங்கி சிறப்பித்திருக்கிறான்.
இன்னும் துஆ ஏற்கப் படும் சிறப்பிற்குரிய
ஸ்தலங்கள் அங்கே நிறைய இருக்கிறது.
முல்தஜிம், கஃபாவின் வாயில், ருக்னே யமானீ, ஹதீம், மீஜாபுர் ரஹ்மத், கஃபாவின் திரை, மினா, அரஃபா, முஜ்தலிஃபா... என நிறைய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள்....
இவ்வளவு மகத்துவமிக்க இடத்திற்கு செல்லக்
கூடியவர்கள் அவசியமான சில விஷயங்களை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஹஜ்ஜூக்கும் ' உம்ராவுக்கும்
மத்தியில் உள்ள வேறுபாடுகள் என்னவென்றால்...
ஹஜ் என்பது ஹஜ்ஜினுடைய காலங்களான ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ் பிறை 10 க்குள் இஹ்ராம்
கட்டி துல்ஹஜ் மாதம் பிறை எட்டாம் நாளிலிருந்து பிறை பதிமூன்று வரை செய்யக் கூடிய
வணக்கங்களான...
பிறை 8 - ல் மினாவில்
தங்குவது, பிறை 9 - ல் அரஃபாவில்
தங்குவது, பிறை - 9 அரஃபாவுடைய
இரவிலிருந்து பிறை - 10 சூரிய உதயத்திற்கு முன்பு வரை முஜ்தலிஃபாவில்
தங்குவது, மினாவில் கல்லெறிவது, குர்பானி கொடுப்பது, தலை முடியை எடுப்பது கஃபாவில் கடமையான தவாஃப் செய்வது, சயீ செய்வது ,பிறகு மூன்று நாட்கள் மினாவில் கல்லெறிவது உள்ளிட்ட அமல்களுக்கு சொல்லப்படும்
பெயர்.
உம்ரா என்பது எல்லா காலங்களிலும் இஹ்ராம்
கட்டி கஃபாவை தவாப் செய்து பின்பு ஸஃபா மர்வாவில் சயீ செய்து தலை முடியைக்
களைவதற்கு சொல்லப்படும் பெயர்.
ஹஜ் இன்னும் உம்ராவின் பிரதி பலன்கள் :
-----------------
பாவம் நீங்கி பரிசுத்தம் ,வறுமை ஒழியும்...
1773 - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ
اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«العُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالحَجُّ
المَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الجَنَّةُ»
(صحيح البخاري )
1773. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்: ”ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள
பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.” என அபூ
ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (நூல் : ஸஹீஹுல் புஹாரி)
1820 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ
اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ
حَجَّ هَذَا البَيْتَ، فَلَمْ يَرْفُثْ، وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ
وَلَدَتْهُ أُمُّهُ» (صحيح البخاري)
1820. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்: ”மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், பாவமான பேச்சு செயல் எதுவும் செய்யாமல் இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று
பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார். என அபூ
ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
# குறிப்பு : “பாவமான பேச்சு செயல் எதுவும் செய்யாமல்” இது மிகப்
பயங்கரமான நிபந்தனை . பெரும்பாலும் ஹாஜிகள் தோற்று போகும் இடம் இதுவே இது மட்டுமே.
எனவே தங்கும் இடம் / வாகன வசதி பயண காலம் / நேரம் உணவு நேரம் எல்லாத்திலும்
கண்டிப்பாக பிரச்சினை வரும்.. ஏனெனில் கிட்டும் பரிசு சுவர்க்கம் அல்லவா. அதை
எளிதாக பெற முடியுமா . குறை கூறி திட்டுவதற்கு /
பேசுவதற்கு நியாயமான பல காரணங்கள் உண்டு என்றாலும் பொறுமையோடு மௌனம் காக்க
வேண்டும்.
وفي سنن الترمذي 738عَنْ ابْنِ مَسْعُودٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ"تَابِعُوا بَيْنَ
الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ كَمَا
يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ وَلَيْسَ
لِلْحَجَّةِ الْمَبْرُورَةِ ثَوَابٌ إِلَّا الْجَنَّةُ " (*1)
وفي المعجم الكبير للطبراني 11265 عَنِ ابْنِ عَبَّاسٍ بالإختصار
ஹஜ் & உம்ரா தொடர்ந்து
செய்யுங்கள் . இரும்பின் துருவை ,
தங்கத்தின்
அழுக்கை, வெள்ளியின் அழுக்கை நெருப்பு நீக்குவது போல்
இவ்விரண்டும் (-ஹஜ்&உம்ரா) வறுமையை நீக்கும் பாவத்தை விட்டும்
பரிசுத்தப் படுத்தும்.. (நூல் :திர்மிதி738 ,தப்ரானி11265 .)
ஹஜ்ஜூக்கு செல்வதற்கு முன் அவசியம்நாம்
தெரிந்து கொள்ள வேண்டியவை...
1.) ஹஜ்ஜை
அல்லாஹ்வுடைய திருப் பொருத்தத்தை நாடிச் செய்கிறேன் என்று நம்முடைய நிய்யத்தை சரி
செய்து கொள்வது.
فالحديث في باب الإخلاص، وإحضار النية هو حديث
أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب بن نفيل بن عبد العزى بن رياح بن عبد الله بن
قرط بن رزاح بن عدي بن كعب بن لؤي بن غالب القرشي العدوي -رضي الله عنه- قال: سمعت
رسول الله -صلى الله عليه وسلم- يقول: ((إنما الأعمال بالنيات، وإنما لكل امرئ ما
نوى، فمن كانت هجرته إلى الله ورسوله، فهجرته إلى الله ورسوله، ومن كانت هجرته
لدنيا يصيبها أو امرأة ينكحها، فهجرته إلى ما هاجر إليه))
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக உமர் ரலி
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
" அமல்கள்
எண்ணங்களைக் கொண்டே கவனிக்கப்படுகிறது . மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள் யாவும்
எண்ணங்களைக் கொண்டே கிடைக்கிறது... (நூல் : புகாரீ)
2.)தல்பியாவை நன்கு
மனனம் செய்து கொள்ள வேண்டும் ஏனென்றால் ஹஜ்ஜினுடைய சிறந்த அமலே தல்பியாதான்.
2527 - وعن ابن عمر قال : سأل رجل رسول
الله - صلى الله عليه وسلم - فقال : ما الحاج . قال : الشعث التفل فقام آخر ، فقال
: يا رسول الله أي الحج أفضل قال : العج والثج ، فقام آخر فقال : يا رسول الله ما
السبيل قال : زاد وراحلة( رواه في شرح السنة وروى ابن ماجه في سننه إلا أنه لم
يذكر الفصل الأخير
நபி ( ஸல்) அவர்களிடம் வந்த ஒருவர் ஹாஜிகளில்
யார் சிறந்தவர் என கேட்டார் அதற்கு நபியவர்கள் தலை விரி கோளமாகவும், நறுமணம் பூசாமலும் இருப்பவர் ( அலங்காரமில்லாதவர்)என்றார்கள் ஹஜ்ஜினுடைய சிறந்த அமல் எது ?என்று கேட்ட போது தல்பிய்யாவை உரக்கச் சொல்வதும், அதிகம் இரத்தத்தை ஓட்டுவதும் (குர்பானி தருவது )தான் ஹஜ்ஜினுடைய சிறந்த அமல் என்றுகூறினார்கள்.
5915- عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ
عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يُهِلُّ مُلَبِّدًا يَقُولُ: ((لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ
شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ
شَرِيكَ لَكَ)). لاَ يَزِيدُ عَلَى هَؤُلاَءِ الْكَلِمَاتِ.( صحيح البخاري
)
5915. இப்னு உமர்(ரலி)
அறிவித்தார். இறைத் தூதர்(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக
இஹ்ராம் கட்டிய போது) தலை முடியைக் களிம்பு தடவிப் படிய வைத்தவர்களாக, “லப்பைக்க,அல்லாஹும்ம லப்பைக்க, லப்பைக்க லாஷரீ(க்)க, ல(க்)க லப்பைக்க, இன்னல்ஹம்த வந்நிஅமத்த ல(க்)க வல்முல்(க்)க,லா ஷரீ(க்)க
லக்க“ என்று கூறக் கேட்டேன் இந்த
வார்த்தைகளை விட அதிகமாக அவர்கள் எதையும் கூறவில்லை. (பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன். இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்.
இணையில்லாதோனே!உனக்கே எல்லாப் புகழும்.அருட்கொடையும் ஆட்சியும் உனக்கேஉரியன உனக்கு இணையானவர் எவருமில்லை).
தல்பியாவை கூறிய நிலையில்
---------------------------------------------------
எழுப்பப்படுபவர்...
---------------------------
1266- عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ
اللَّهُ عَنْهُمَا قَالَ بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ إِذْ وَقَعَ مِنْ رَاحِلَتِهِ
فَأَقْصَعَتْهُ- أَوْ قَالَ فَأَقْعَصَتْهُ- فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي
ثَوْبَيْنِ، وَلاَ تُحَنِّطُوهُ وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّ اللَّهَ
يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا)) ( صحيح البخاري )
1266. இப்னு
அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில்
அல்லாஹ்வின் தூதருடன் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர், தன்னுடைய வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டார்; அது அவரின் கழுத்தை முறித்துவிட்டது. (அப்போது நபி(ஸல்)அவர்கள் “அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி
இரண்டு ஆடைகளால் கஃபனிடுங்கள்;
அவரின் உடலுக்கு
நறுமணம் பூச வேண்டாம்; அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்: ஏனெனில்
(இஹ்ராம் அணிந்திருந்த) அவர் கியாமத்நாளில் தல்பியா (லப்பைக் அல்லஹும்மலப்பைக்...
என்று) சொல்லிக் கொண்டிருப்பவராக
எழுப்பப்படுவார்”எனக் கூறினார்கள்.
ஹஜ்ஜூ எல்லா வணக்கங்களை விட ஒரு தனித்துவம்
வாய்ந்த வணக்கம் இந்த பயணம் எல்லா பயணங்களை விட ஒரு தனித்துவம்
வாய்ந்த பயணம். நம் முன்னோர்கள் ஹஜ்ஜூடைய பயணம் உறுதி செய்யப்பட்டு விட்டால்
அப்பொழுதிருந்தே அதிகம் அல்லாஹ்வை நெருங்க ஆரம்பிப்பார்கள்.
இந்த பயணம் வாழ்க்கையில் வெற்றி தோல்வியை
நிர்ணயிக்கின்ற பயணம்.
இந்த பயணத்தில் பயணத் தயாரிப்புகள் எவ்வாறு
அவசியமோ அதே போல இறை அச்சமும் அவசியம்...
ُஅல்லாஹ் திருமறையில் தக்வா என்னும்சாதத்தை எடுத்துக் கொள்ளும்படிகூறுகின்றான்.
وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ
التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ
மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச்
சித்தப்படுத்தி வைத்துக்
கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி
வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது),தக்வா (என்னும்
பயபக்தியே) ஆகும்;எனவே நல்லறிவுடையோரே!
எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 2:197)
2 . இஸ்திஃபார் செய்வது...
------------------------------------
கறைபடிந்த நம் உள்ளங்களை தூய்மைப்
படுத்துவதற்கு முதலாவதாக அதிகம் இஸ்திஃபார் செய்ய வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது நூறு முறையாவது
இஸ்திஃபார் செய்யனும்.குழந்தைகளிடம் நமக்காக பாவமன்னிப்பு தேடும்படி சொல்ல வேண்டும்
உமர் ( ரலி) அவர்கள்
குழந்தைகளைக் கண்டால் தமக்காக பாவ மன்னிப்பு கேட்கும்படி கூறுவார்களாம் ஏனென்றால்
நீங்களெல்லாம் பாவமற்றவர்கள் உள்ளம் தூய்மையானவர்கள் என்பார்களாம்.
அபூஹூரைரா ( ரலி) அவர்களும்இவ்வாரே
குழந்தைகளைக் கண்டால் தமக்காக இஸ்திஃபார் செய்யும்படி கூறுவார்கள்.
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ؔ
اِنَّهٗ كَانَ تَوَّابًا
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து)
தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக -
நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக்
கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 110:3)
1145-صحيح البخاريِّ عَنْ أَبِي
هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ: ((يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى
السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ مَنْ
يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ
يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ))
1145. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள். “நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்
வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன்.யாரேனும்
என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக்
கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்“ என்று கூறுவான்“. எனஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
3 . நல்ல அபிப்பிராயம் கொள்வது,
குரோதம்
கொள்ளாதிருப்பது.
-------------------------------------------------
நம் உள்ளத்தை சுத்தப்படுத்தக் கூடிய
காரியங்களில் மூன்றாவது எல்லா மனிதர்களைப் பற்றியும் நல்ல அபிப்பிராயம் கொள்ள
வேண்டும் உள்ளத்தில் பொறாமை இருக்கக் கூடாது. பிறரை விட தம்மை பெரிதாக
கருதக்கூடாது.
1569- وعن أَبي هريرة رضي الله عنه: أنَّ
النَّبيَّ صلى الله عليه وسلم قَالَ: ((إيَّاكُمْ وَالحَسَدَ؛ فَإنَّ الحَسَدَ
يَأكُلُ الحَسَنَاتِ كَمَا تَأكُلُ النَّارُ الحَطَبَ)) أَوْ قَالَ: ((العُشْبَ))
( رواه أَبُو داود)
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக
அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் "பொறாமை கொள்வதை விட்டும் உங்களை
நான் எச்சரிக்கிறேன். நிச்சயமாக பொறாமையாகிறது நன்மைகளை தின்று விடும் நெருப்பு
விறகைத் தின்பது போல அல்லது புல்லைத் தின்பதைப் போல என்று கூறினார்கள்.
6706- حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ
مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ حَدَّثَنَا دَاوُدُ- يَعْنِي ابْنَ قَيْسٍ- عَنْ أَبِي
سَعِيدٍ مَوْلَى عَامِرِ بْنِ كُرَيْزٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((لاَ تَحَاسَدُوا وَلاَ
تَنَاجَشُوا وَلاَ تَبَاغَضُوا وَلاَ تَدَابَرُوا وَلاَ يَبِعْ بَعْضُكُمْ عَلَى
بَيْعِ بَعْضٍ وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا. الْمُسْلِمُ أَخُو
الْمُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يَخْذُلُهُ وَلاَ يَحْقِرُهُ. التَّقْوَى
هَاهُنَا)). وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلاَثَ مَرَّاتٍ: ((بِحَسْبِ امْرِئٍ مِنَ
الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ
حَرَامٌ دَمُهُ وَمَالُهُ وَعِرْضُهُ)).
5010. அல்லாஹ்வின்
தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்: பொறாமை கொள்ளாதீர்கள் (பிறரை அதிக விலை கொடுத்து
வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம்
கொள்ளாதீர்கள்.பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்
போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக,)அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய்
இருங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம்
சகோதரருக்கு அநீதியிழைக்கவோ,
அவருக்குத்
துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம்
(தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக்
கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும்
மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை
தடை செய்யப்பட்டவையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ்
முஸ்லிம்)
எனவே புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் யாரைப்
பற்றியும் தவறான அபிப்பிராயம் கொள்வதுபோன்ற காரியங்களை விட்டும் உள்ளத்தை
தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் நமக்கு யாருடனாவது பகைமை இருந்தாலும்
அதை சரி செய்து கொள்ள வேண்டும் அவருடன் உண்டான பகைமையை நீக்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாமா இப்னு தைமிய்யா( ரஹ்) அவர்களுக்கு
ஒரு எதிரி இருந்தார் .அவர் இறந்த நேரத்தில் இப்னு தைமிய்யாவிடம் சில மனிதர்கள்
வந்து உங்களின் எதிரி இறந்து விட்டார் இனி நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம் என்றார்கள்
.அதற்கு இப்னு தைமிய்யா அவர்கள் எந்த ஒரு முஸ்லிமுடைய மரணத்தைக் கண்டும்
சந்தோஷமடையக்கூடாது எனக் கூறி விட்டு மரணித்தவரின் இல்லம் சென்று அவரின்
பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறிவிட்டு மேலும் சொன்னார்கள் நீங்கள் கவலைப்பட வேண்டாம்
என்னை உங்கள் தந்தையைப் போன்று நினைத்துக் கொள்ளுங்கள் உங்களின் எந்த தேவையானாலும்
என்னிடம் சொல்லுங்கள் என்றார்களாம்.
எனவே நாம் யாருக்காவது நாவினாலோ கரத்தினாலோ
ஏதாவது துன்பம் இழைத்திருந்தால் அதற்காக உளப்பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்
ஏதோ ஹஜ்ஜூக்குச் செல்கிறோம் என்ற ஃபார்மாலிடிக்காக கேட்கக் கூடாது.
4 . இந்த ஹஜ்ஜூடைய
பயணம் முடிவானது முதல் நாம் செய்ய வேண்டிய நான்காவது காரியம் நம் இபாதத்துக்களை
அதிகமாக்குவது.
----------------------------------------------------------
நஃபிலான தொழுகை நோன்புகளை நோற்கவேண்டும்
தஹஜ்ஜத் தொழுகையை வழமையாக்க வேண்டும்.ஆனால் நாம் விருந்து போடுவதற்குரிய ஏற்பாடு
செய்வதிலும் அனைவர்களையும் விருந்துக்கு அழைக்கும் ஏற்பாட்டிலும் ஈடுபட்டு
ஃபர்ளுகளைக் கூட விட்டு விடுகின்றோம்.
ஹஜ்ஜை கடமைக்கு செய்யாமல் அல்லாஹ்வின்
பொருத்தத்தை முன் வைத்து செய்யப் பட வேண்டும்.
5 . பயணத்தின் மாண்பை அறிவது.
*****************************************
ஹஜ்ஜூக்கு முன்னால் நாம் செய்ய வேண்டிய
ஐந்தாவது காரியம் இந்த பயணத்தினுடைய மாண்பை அறிவது.
நாம் எப்படிப்பட்ட பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்
இது டூர் செல்கின்ற இடமல்ல இறைக் காதலை வெளிப்படுத்தும் இடமாகும்.
அறியாமைக் காலத்தில் கூடதாய்மார்கள்
குழந்தைக்கு பாலூட்டும் போது மக்காவின் மகிமையைக் கூறி பாலூட்டுவார்களாம்.
ஆரம்ப காலத்தில் இந்த பயணம் எவ்வளவு
கடினமானதாக இருந்தது எவ்வளவு சிரமப்பட்டு மக்காவிற்கு சென்றார்கள் இன்று
இப்பயணத்தை அல்லாஹ் எவ்வளவு எளிதாக்கி வைத்துள்ளான் என்பதை விளங்கி நன்றி செலுத்த
வேண்டும்.
இந்த பயணத்தில் கஷ்டம் என்பது ஹஜ்ஜினுடைய
அம்சங்களில் ஒன்று எந்த சிரமமுமின்றி ஹஜ் செய்ய முடியாது. எல்லா நபிமார்களும்
ஹஜ்ஜில் சிரமப்பட்டுள்ளார்கள் பெருமானாரின் ஒட்டகமே ஹஜ்ஜில் காணாமல் போயிருந்தது.
நாம் அல்லாஹ்விடம் இந்த பயணத்தை இலேசாக்குவாயாக! என்று துஆ செய்து கொண்டே இருக்க
வேண்டும். குறிப்பாக ஹஜ்ஜினுடைய ஐந்து நாள் அல்லாஹ்வினுடைய கையில் தான்
இருக்கிறது. நாம் திட்டமிட்டபடி அங்கு நடக்காது அல்லாஹ் என்ன நாடியிருக்கிறானோ அது
தான் நடக்கும்.
பாகிஸ்தானைச் சார்ந்த அல்லாமா ஜூல்பிகார்
அஹ்மத் சாஹிப் தாமத் பரகாத்துஹூ அவர்கள் தாங்களின் ஹஜ்
விளக்க பயானில் கூறிய ஒரு சம்பவம்...
அரபு நாட்டில் எண்னை வளம் கண்டுபிடிக்கப்படாத
காலத்தில் அரபுலகில் கடுமையான வறுமைஇருந்தது ஹஜ்ஜூக்கு வரக்
கூடியவர்களிடம் அரபு நாட்டு குழந்தைகள் சாப்பாடு வாங்கி சாப்பிடுவார்கள். அவ்வாறு
ஒருமுறை பாகிஸ்தானைச் சார்ந்த ஒரு பெரியவரும்அவரின் துணைவியாரும் ஹஜ்ஜூக்கு சென்றபொழுது
அவர்களிடம் ஒரு அரபு சிறுவன் சாப்பிட்டு வந்தான் ஏழுமாத காலம் அவர்கள் அங்கு
தங்கிய பிறகு ஊருக்குச் செல்ல நாடுகிறார்கள் அப்பொழுது அந்த சிறுவனை அழைத்து
நாங்கள் நாளை ஊருக்குச் செல்கிறோம் என்று சொன்ன பொழுது அவன் முகம் மாறிவிட்டது
கவலை தென்பட்டது அதனைகண்ட பெரியவர் தம்பிஎங்களுடன் பாகிஸ்தான்
வருகின்றாயா?எனக்கேட்டார் அங்கு வந்தால் எனக்கு என்ன
தருவீர்கள் என்றான் அதற்கு அப்பெரியவர் உணவு தருவோம் உடை தருவோம் விளையாட்டுப்
பொருட்கள் தருவோம் என்றார் அதனைக் கேட்டவுடன்அந்தச் சிறுவன் நீங்கள் என்ன
கொடுத்தாலும் அல்லாஹ்வின் இல்லம் இந்த புனித கஃபா அங்கு இருக்குமா?இருக்காதே! அல்லாஹ்வின் இல்லம் இருக்கும் இவ்வூரை விட்டு
ஒருபோதும் வரமாட்டேன் எனக்கு எவ்வளவுசிரமங்கள் வந்தாலும் சரி என்றான். சிறுவனுக்கு
இருக்கும்இறையில்லத்தின் மீதுள்ள அன்பைப் பாருங்கள். ஆகவே இப்படிப்பட்ட மகத்துவமிக்க இறையில்லத்தைக் காணச்செல்கிறோம் என்கின்ற
உணர்வு வரவேண்டும் அதன் மகிமையை புரிந்துகொள்ள வேண்டும்.
6 . பயண ஒழுக்கங்கள்.
-------------------------------------
ஒரு முஸ்லிம் ஒவ்வொரு செயலையும் எப்படிச்
செய்ய வேண்டும் என்று மார்க்கம் நமக்கு கற்றுத் தறுகிறது. அந்த அடிப்படையில் நாம்
நடந்து கொள்ள வேண்டும்.
முதலாவதாக ஹஜ் சம்மந்தமான விஷயங்களை தெரிந்து
கொள்வதற்கு ஆயத்தமாக வேண்டும்.
ஹஜ்ஜூக்கு முன்னால் தேவையில்லாத சிரமங்களை
நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. வெளியூருக்கு பிரயாணம் செய்து அனைவர்களிடமும்
சொல்லவேண்டும் என்று சிரமம் மேற்கொள்ள வேண்டாம் முடிந்தளவு உள்ளூரில் இருந்து
ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஹஜ்ஜூக்கு முன்னால் முடிந்தளவு விருந்துகளை
தவிர்த்துக் கொள்வது நல்லது. ஹஜ்ஜூக்கு முன்னால் நிறைய பேர் விருந்து
போடுகிறார்கள் அதில் மிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறார்கள் பெருமானாரின் சுன்னத்
என்னவென்றால் பயணத்திலிருந்து திரும்பிய பின் விருந்து கொடுப்பது தான்
சுன்னதாகும்.
ஹஜ்ஜின் சில சட்டங்கள்...
-----------------------------------------
மாதவிடாய் நிலையிலும் பெண்கள் இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்.
عن جابر قال ......فَخَرَجَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَخَرَجْنَا مَعَهُ حَتَّى أَتَيْنَا ذَا
الْحُلَيْفَةِ فَوَلَدَتْ أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ مُحَمَّدَ بْنَ أَبِي بَكْرٍ
فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ
أَصْنَعُ فَقَالَ اغْتَسِلِي وَاسْتَذْفِرِي بِثَوْبٍ وَأَحْرِمِي (رواه ابوداود )
அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவி அஸ்மா பின்த்
உமைஸ் (ரலி) அவர்கள் முஹம்மது என்று மகனை பிரசவித்து இருந்தார்கள். இவர்களுக்கு
நபி ஸல் அவர்கள் "நீ குளித்து விட்டு இஹ்ராம் நிய்யத் செய்" என்று
சொன்னார்கள். (நூல் அபூ தாவூத்)
இஹ்ராமுக்கு பின்பு மாத
விடாய் வந்தாலும் இஹ்ராமில் தொடரலாம். ஆனால் தவாப் ஸயீ மட்டும் கூடாது. இவ்விரண்டையும் சுத்தமான பின்பு தான் செய்ய வேண்டும்.
صحيح البخاري 1785عن جَابِر بْن
عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَهَلَّ وَأَصْحَابُهُ بِالحَجِّ، وَلَيْسَ مَعَ أَحَدٍ مِنْهُمْ هَدْيٌ
غَيْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَطَلْحَةَ، وَكَانَ عَلِيٌّ
قَدِمَ مِنَ اليَمَنِ وَمَعَهُ الهَدْيُ، فَقَالَ: أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَّ النَّبِيَّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذِنَ لِأَصْحَابِهِ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً،
يَطُوفُوا بِالْبَيْتِ، ثُمَّ يُقَصِّرُوا وَيَحِلُّوا إِلَّا مَنْ مَعَهُ
الهَدْيُ، فَقَالُوا: نَنْطَلِقُ إِلَى مِنًى وَذَكَرُ أَحَدِنَا يَقْطُرُ،
فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَوْ
اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ، وَلَوْلاَ أَنَّ
مَعِي الهَدْيَ لَأَحْلَلْتُ»، وَأَنَّ عَائِشَةَ حَاضَتْ، فَنَسَكَتْ المَنَاسِكَ
كُلَّهَا غَيْرَ أَنَّهَا لَمْ تَطُفْ بِالْبَيْتِ، قَالَ: فَلَمَّا طَهُرَتْ
وَطَافَتْ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَتَنْطَلِقُونَ بِعُمْرَةٍ وَحَجَّةٍ
وَأَنْطَلِقُ بِالحَجِّ؟ فَأَمَرَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ أَنْ
يَخْرُجَ مَعَهَا إِلَى التَّنْعِيمِ، فَاعْتَمَرَتْ بَعْدَ الحَجِّ فِي ذِي
الحَجَّةِ. وَأَنَّ سُرَاقَةَ بْنَ مَالِكِ بْنِ جُعْشُمٍ لَقِيَ النَّبِيَّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِالعَقَبَةِ، وَهُوَ يَرْمِيهَا،
فَقَالَ: أَلَكُمْ هَذِهِ خَاصَّةً يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «لاَ، بَلْ
لِلْأَبَدِ»
ஸஹீஹ் புகாரி 1785. ஜாபிர் இப்னு
அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும்
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) மற்றும் தல்ஹா(ரலி) ஆகிய இருவரைத் தவிர
வேறு யாரிடமும் குர்பானிப் பிராணி இல்லை. யமனிலிருந்து அலீ(ரலி) குர்பானிப்
பிராணியுடன் வந்தார்கள். ”நபி(ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம்
அணிந்தார்களோ அதற்காகவே நானும் அணிந்தேன்!”என அவர்கள்
கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணி கொண்டு வராதவர்களிடம், இதை (ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறும் வலம் வந்து (தவாஃப் செய்து)
தலைமுடியைக் குறைத்து, இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும்
கட்டளையிட்டார்கள். (மக்கள் சிலர்) ”நம் இன
உறுப்பில் விந்து சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் (மனைவியுடன் கூடிய பின்
உடனடியாக) நாம் மினாவுக்குச் செல்வதா?” என்று பேசிய
செய்தி,நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியதும் அவர்கள் ”(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்ய அனுமதியுண்டு என) நான் இப்போது அறிந்ததை முன்
கூட்டியே அறிந்திருந்தால் நான் குர்பானிப் பிராணி கொண்டு வந்திருக்க மாட்டேன்; நான் குர்பானிப் பிராணி மட்டும் கொண்டு வந்திருக்கவில்லையாயின்
இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்!” என கூறினார்கள்.
மேலும், ஆயிஷா(ரலி) அவர்களுக்கு மாதவிடாய்
வந்திருந்தது. எனவே அவர்கள்,
”இறையில்லம்
கஅபாவை வலம் வருவதைத் தவிர,ஹஜ்ஜின் மற்றெல்லா வழிபாடுகளையும்
நிறைவேற்றினார்கள். மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் கஅபாவை வலம்வந்தார்கள்.’ மேலும் ஆயிஷா(ரலி) ”இறைத்தூதர் அவர்களே! நான் ஹஜ்ஜை மட்டும்
நிறைவேற்றிவிட்டுச் செல்ல. நீங்கள் (எல்லோரும்) ஹஜ்ஜையும் உம்ராவையும்
நிறைவேற்றிவிட்டுச் செல்கிறீர்களா?” என
(ஏக்கத்துடன்) கூறியதும், நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ
பக்ரை, ஆயிஷா(ரலி) அவர்களுடன் (உம்ரா செய்திட
இஹ்ராம் அணிவதற்காக) தன்யீம் என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள்.
ஆயிஷா(ரலி) ஹஜ் செய்த பின், துல்ஹஜ் மாதத்திலேயே உம்ராவையும்
நிறைவேற்றினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில்
கல்லெறிந்து கொண்டிருந்தபோது அவர்களைச் சந்தித்த சுராக்கா இப்னு மாலிக் இப்னு
ஜுஃஷும்(ரலி) ”இறைத்தூதர் அவர்களே! இது (ஹஜ் மாதத்தில்
உம்ரா செய்வது) உங்களுக்கு மட்டுமுள்ள தனிச் சட்டமா?” எனக்
கேட்டதற்குவர்கள், ”இல்லை! இது எப்போதைக்கும் உரியதே!” என்று பதிலளித்தார்கள்.
صحيح البخاري -1786 عن عَائِشَة رَضِيَ اللَّهُ
عَنْهَا، قَالَتْ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ مُوَافِينَ لِهِلاَلِ ذِي الحَجَّةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ،
وَمَنْ أَحَبَّ أَنْ يُهِلَّ بِحَجَّةٍ فَلْيُهِلَّ، وَلَوْلاَ أَنِّي أَهْدَيْتُ
لَأَهْلَلْتُ بِعُمْرَةٍ»، فَمِنْهُمْ مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَمِنْهُمْ مَنْ
أَهَلَّ -[5]- بِحَجَّةٍ، وَكُنْتُ مِمَّنْ أَهَلَّ بِعُمْرَةٍ، فَحِضْتُ قَبْلَ
أَنْ أَدْخُلَ مَكَّةَ، فَأَدْرَكَنِي يَوْمُ عَرَفَةَ وَأَنَا حَائِضٌ،
فَشَكَوْتُ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
فَقَالَ: «دَعِي عُمْرَتَكِ، وَانْقُضِي رَأْسَكِ وَامْتَشِطِي، وَأَهِلِّي بِالحَجِّ»،
فَفَعَلْتُ، فَلَمَّا كَانَتْ لَيْلَةُ الحَصْبَةِ، أَرْسَلَ مَعِي عَبْدَ
الرَّحْمَنِ إِلَى التَّنْعِيمِ. فَأَرْدَفَهَا، فَأَهَلَّتْ بِعُمْرَةٍ مَكَانَ
عُمْرَتِهَا، فَقَضَى اللَّهُ حَجَّهَا وَعُمْرَتَهَا، وَلَمْ يَكُنْ فِي شَيْءٍ
مِنْ ذَلِكَ هَدْيٌ، وَلاَ صَدَقَةٌ، وَلاَ صَوْمٌ ⚪
1786. ஆயிஷா(ரலி)
அறிவித்தார். ”(துல்கஅதாவை பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ்
பிறையை எதிர் நோக்கியவர்களாக,
நாங்கள்
நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் ”உம்ராவுக்கு (மட்டும்) இஹ்ராம் அணிய விரும்புகிறவர் உம்ராவுக்காக (மட்டும்)
இஹ்ராம் அணியட்டும்;ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிய விரும்புகிறவர்
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணியட்டும்! நான் குர்பானிப் பிராணியைக் கொண்டு
வந்திராவிட்டால் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் அணிந்திருப்பேன்!”என்றார்கள். சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தனர்; மற்றும் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தனர். நான் உம்ராவுக்காக இஹ்ராம்
அணிந்தவர்களுள் ஒருத்தியாக இருந்தேன். மக்காவில் நுழைவதற்கு முன் எனக்கு மாதவிடாய்
ஏற்பட்டது. மாதவிடாயுள்ள நிலையிலேயே அரஃபா நாளையும் அடைந்தேன். நபி(ஸல்)
அவர்களிடம் (இதுபற்றி) நான் முறையிட்டபோது, ”உன்னுடைய
உம்ராவைவிட்டுவிட்டு, தலையை அவிழ்த்து வாரிக் கொள்! மேலும்
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்!” என்றார்கள்.
நான் அவ்வாறே செய்தேன். முஹஸ்ஸபில் தங்கும் இரவு வந்தபோது, என்னுடன் அப்துர் ரஹ்மானை தன்யீம்வரை நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள்.
அப்துர்ரஹ்மான் தம் ஒட்டகத்தின் பின்னால் என்னை ஏற்றினார். விடுபட்ட உம்ராவுக்குப்
பகரமாக மற்றொரு உம்ராவுக்காக நான் இஹ்ராம் அணிந்தேன்.
”அல்லாஹ்
ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றித் தந்தான்”என்று அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
”இதற்காக, ஆயிஷா(ரலி) குர்பானியோ, தர்மமோ,நோன்போ
பரிகாரமாகச் செய்யவில்லை!” என்று மற்றோர் அறிவிப்பாளர் ஹிஷாம் இப்னு
உர்வா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(ஸஹீஹ் புகாரி)
புனித ஹஜ் என்றாலும் கூட மஹ்ரமின்றி
-------------------------------------------------------------------
பயணம் கூடாது .
---------------------------
صحيح البخاري 3006 عَنِ ابْنِ عَبَّاسٍ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ: سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، يَقُولُ: «لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ، وَلاَ تُسَافِرَنَّ
امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ»، فَقَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ
اللَّهِ، اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا، وَخَرَجَتِ امْرَأَتِي
حَاجَّةً، قَالَ: «اذْهَبْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ»
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ”ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன்
மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய
வேண்டாம்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒருவர் எழுந்து, ”இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில்
கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப்
புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், ”நீ போய் உன்
மனைவியுடன் ஹஜ் செய்”என்று கூறினார்கள்.
(ஸஹீஹுல் புஹாரீ
)
தன் தந்தையுடன் ஹஜ் என்றாலும் கணவனின் அனுமதி
இன்றி கூடாது . அவ்வாறு ஒரு ஸஹாபி பெண்மணி கணவனின் சொல்லை மனதார ஏற்றதின் பலன்
முழு உம்மத்துக்கு கிட்டியுள்ளது.
صحيح البخاري 1782 عن ابْن عَبَّاسٍ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
لِامْرَأَةٍ مِنَ الأَنْصَارِ، - سَمَّاهَا ابْنُ عَبَّاسٍ فَنَسِيتُ اسْمَهَا -:
«مَا مَنَعَكِ أَنْ تَحُجِّينَ مَعَنَا؟»، قَالَتْ: كَانَ لَنَا نَاضِحٌ،
فَرَكِبَهُ أَبُو فُلاَنٍ وَابْنُهُ، لِزَوْجِهَا وَابْنِهَا، وَتَرَكَ نَاضِحًا
نَنْضَحُ عَلَيْهِ، قَالَ: «فَإِذَا كَانَ رَمَضَانُ اعْتَمِرِي فِيهِ، فَإِنَّ
عُمْرَةً فِي رَمَضَانَ حَجَّةٌ» أَوْ نَحْوًا مِمَّا قَالَ
ஸஹீஹ் புகாரி 1782. இப்னு
அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களில் ஒருவரிடம்... ”இப்னு அப்பாஸ்(ரலி) அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். நான் அதை மறந்துவிட்டேன்!” என அவரிடமிருந்து அறிவிக்கும் அதா(ரஹ்) கூறினார்.. ”நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை?”எனக்
கேட்டார்கள். அதற்கவர், ”எங்களிடம் இருந்த, தண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் இன்னாரின் தந்தையும் அவரின் மகனும்
(என்னுடைய கணவரும் மகனும்) ஏறிச் சென்றுவிட்டனர்; இன்னொரு
ஒட்டகத்தைவிட்டுச் சென்றுள்ளனர்;அதன் மூலம் நாங்கள் தண்ணீர் எடுத்துக்
கொண்டிருக்கிறோம்!” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ”ரமளான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில், ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்!” எனக்
கூறினார்கள்; அல்லது அது போன்ற கருத்தைக் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தவ்ஃபீக் வேண்டும்
*****************************************
எந்த காரியத்தை நாம் செய்வதானாலும் அல்லாஹ்வுடைய உதவி தவ்ஃபீக் இருக்கவேண்டும் அது இருந்தால்
தான் அந்த காரியத்தைச் செய்ய முடியும் அதிலும்
குறிப்பாக ஹஜ் உடைய காரியத்தில் அல்லாஹ்வின் தவ்ஃபீக் இல்லாமல் அதைச் செய்ய
முடியாது நாம் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டாலும்
அரஃபாவில் தங்கினால் தான் ஹஜ் உறுதியாகும்.எனவே அரஃபாவில் தங்கும் வரை யா அல்லாஹ்!
எனக்கு ஹஜ்ஜூடைய பாக்கியத்தை கொடு என்று துஆச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.
அல்லாஹ்விடம் ஹஜ் உம்ரா செய்ய வேண்டும் என்ற
உண்மையான ஆசைகளையும், ஆர்வங்களையும் மனதில் வைத்து இறைஞ்சி துஆ செய்தால் அல்லாஹ் அவனது பெரும் கிருபையால் அதை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை
நமக்கு ஏற்படுத்தித் தருவான்...
அல்லாஹ் அந்த பாக்கியத்தை பெற்றவர்களுக்கு
அதன் முழு நன்மைகளையும் தந்து,
அந்த
பாக்கியத்தை எதிர்நோக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அதை இலகுவாக்கி
எல்லோரிடமிருந்தும் அந்த அமலை ஏற்றுக் கொள்பவனாக ஆமீன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.