வியாழன், 23 ஆகஸ்ட், 2018

பேரிடர்கள் தரும் பாடம்


பேரிடர்கள் தரும் பாடம்
*************************
قال الله تعالى :
-----------------
إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم

قول النبي صلي الله عليه وسلم :
---------------------------------------
وَعَنْ أَبي هُريَرةَ ، عن النَّبِيِّ قَالَ: تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ جَهْدِ الْبَلاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَماتَةِ الأَعْدَاءِ
متفقٌ عَلَيْهِ

முன்னுரை :
புகழனைத்தும் உலகை படைத்து பரிபாலனம் செய்யும் ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுக்கே, மேலும் அல்லாஹ்வின் சலாத்தும் சலாமும் இறுதித் தூதர் முஹம்மத் நபி ஸல் அவர்கள் மீதும் அவர்களின் பரிசுத்த குடும்பத்தார்கள் சத்திய ஸஹாபாக்கள் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக ஆமீன்.

ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மனித இனத்தை படைத்து அவர்கள் எல்லோருக்கும் ரிஜ்கிற்கு தான் பொறுப்பேற்றிருப்பதாக கூறுகிறான்.

وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا ۚ كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ

இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.
(அல்குர்ஆன் 11: 6)

அல்லாஹ் தனக்கு எந்த ஒன்றும் கடமையாக இல்லாத போதும் தன் பொறுப்பை மிகச் சரியாக நிறைவேற்றி வருகிறான் ஆனால் அடியார்கள் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் மாறு செய்கிற போது சமயங்களில் அல்லாஹ் அவர்களை சோதிக்கிறான்.
அந்த சோதனைகளிலிருந்து அவனைத் தவிர வேறு யாரும் நம்மை காப்பாற்ற முடியாது.

لَهٗ مُعَقِّبٰتٌ مِّنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖ يَحْفَظُوْنَهٗ مِنْ اَمْرِ اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْۤءًا فَلَا مَرَدَّ لَهٗ‌ وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ‏ 
(மனிதன் எந்நிலைமையிலிருந்த போதிலும்) அவனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய (பாதுகாப்புக்காக மலக்குகள்) பலர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு அவனை பாதுகாக்கின்றார்கள். மனிதர்கள் (தங்கள் தீய நடத்தையை விட்டு) தங்களை மாற்றிக்கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களுக்குப் புரிந்த அருளை) மாற்றி விடுவதில்லை. அல்லாஹ் யாதொரு வகுப்பாரையும் வேதனை செய்ய நாடினால், அதனைத் தடுப்பவர்கள் ஒருவரும் இல்லை; அவர்களுக்கு உதவி செய்பவர்களும் அவனையன்றி வேறு   யாரும் இல்லை.
(அல்குர்ஆன் : 13:11)

மழை ரஹ்மத்தா? அழிவா?
****************************
அல்லாஹ் இந்த பூமியை தனது அருள் மழையால் செழிப்பாக்கி வைக்கிறான் பூமியின் மிக முக்கிய நீராதாரமாக மழை இருக்கிறது திருமறை குர்ஆனில் வருகிறது.

وَهُوَ الَّذِي أَرْسَلَ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ ۚ وَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا

இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.
(அல்குர்ஆன்- 25: 48)

لِنُحْيِيَ بِهِ بَلْدَةً مَيْتًا وَنُسْقِيَهُ مِمَّا خَلَقْنَا أَنْعَامًا وَأَنَاسِيَّ كَثِيرًا
இறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம்; நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம்.(25:49)

மழை இல்லாததால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு விளைச்சல் இல்லாமல் விளைநிலங்கள் வீடுகளாகவும்,விற்பனை நிலங்களாகவும் மாறிப் போனதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சூழல்களை நாம் கண்டிருக்கிறோம். மழை வேண்டி மழைத் தொழுகைகளும், பிரார்த்தனை கூட்டங்களும் நடத்தப்பட்டது.
தண்ணீரின் அவசியம் கருதி காவிரி நீரைப் பெற பற்பல போராட்டங்கள் நடைபெற்றது . இப்போது மழை பெய்து காவிரியில் கரை புரண்ட தண்ணீர் கரையோர வீடுகளை சூழ்ந்து மக்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத வெள்ளத்தால் மக்கள் நிவாரண முகாம்களில் தவிக்கும் நிலைமைகளை நாம் காண்கிறோம்.

பூமியை செழிக்கச் செய்யும் அருள் மழை சமயங்களில் அழிவையும் ஏற்படுத்தி விடுகிறது இறைவன் நாடினால் ரஹ்மத்தை லஃனத்தாகவும் மாற்றி விடுவான். சில வருடங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தில்  "கேதார்நாத்" என்ற கோயில் நகரம் பெரும் மழையால் அழிவுக்குள்ளானது.
சென்னை வெள்ளம் மக்களை திணரடித்தது. இப்போது  அல்லாஹ் கேரளாவில் பெரும்  மழையை இறக்கி  அவர்களுக்கு பெரும் சோதனையாக்கி உள்ளான்.

14 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால்  சிதைந்து போனது. 2405 அடி உயரம் கொண்ட  இடுக்கி அணை 26 வருடங்களுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 40 அணைகள் நிரம்பி வழிகிறது. கட்டுக்கடங்காத வெள்ளத்தால் மக்கள் வீடிழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கொச்சின், வயநாடு, பாலக்காடு ஆகிய நகரங்கள் இதுவரை சந்திக்காத பெரும் வெள்ளச் சேதத்தை சந்தித்துள்ளது. 35- இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடு வாசல்களை இழந்துள்ளனர். அரசாங்கத்தின் மேலோட்ட கணக்கின் படி 400 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். மழை தொடர்ந்த வண்ணமுள்ளது. இந்தியாவில் சங்பரிவாரங்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் தவிர்த்து மற்ற எல்லா மாநில முதல்வர்களும் கேரள மக்களுக்காக  நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்கள்
எனினும் மீட்புப் பணியும், நகரங்களின் மீழ் கட்டமைப்பும் மிகப் பெரிய சவாலான பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கேரளா பழைய நிலைக்கு திரும்ப ஒரு வருடத்திற்கும் மேலாகும் என்று அதன் முதல்வர் பினராயி விஜயன் கவலை தெரிவிக்கிறார்.  இன்னும் சரியான  உணவின்றி நிவாரண முகாம்களில் தவிக்கும் மக்களின் நிலைமைகள் குறித்து சொன்னால் அது மிகப் பரிதாபகரமாகவே இருக்கிறது. ஆலுவா,சாலக்குடி,செங்கன்னூர், ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய நகரங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எந்த(நீர் தேக்கங்கள்) அணைகள் மக்களின் வாழ்க்கைத் தேவைக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறதோ அவைகளே அவர்களின் வாழ்க்கையை நாசம் செய்யும் காரணிகளாக மாறும் இக்காட்சி குர்ஆன் கூறும் வரலாற்று நிகழ்வை நினைவுபடுத்துகிறது. ஆம் வளம் மிக்க ஸபா நகரம் அம்மக்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் வாழ்ந்ததால் "இரம்" அணைக்கட்டு உடைந்து  வெள்ளத்தால் எழில் மிகு தோட்டங்கள், பசுமையான சுற்றுச் சூழல்கள் எல்லாம் அழிந்து பயனற்றுப் போனது.
அது போன்று தான் தனது எழில் மிகு தோற்றத்தால் சுற்றுலா பயணிகளை கவர்ந்த 'கடவுளின் தேசம்' என்று வர்ணிக்கப்பட்ட கேரளாவும் மழை வெள்ளத்தாலும், அணைக் கட்டுகளிலிருந்து நிரம்பி வழியும் வெள்ள பாதிப்புகளாலும் நிலைகுலைந்து போயிருக்கிறது.

لَقَدْ كَانَ لِسَبَإٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ ۖ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ ۖ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ ۚ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ

நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன "உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்" (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது).
(அல்குர்ஆன் 34:15)

فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ

ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.    (34:16)

ذَٰلِكَ جَزَيْنَاهُمْ بِمَا كَفَرُوا ۖ وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورَ

அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை, நாம் கொடுத்தோம். (நன்றி மறந்து) நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா?  (34:17)

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வர யோசிக்கும் அளவு பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு குற்றங்கள் சமீப காலமாக இந்தியாவில் பெருகி வருகிறது.  அதிலும் ஆட்சியில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்களே அந்த குற்றங்களில் ஈடுபடுவது மகா கேவலமாக உள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் கேரளாவில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. மேலும் இறைவனின் கிருபையால் வளமான வாழ்க்கை கொடுக்கப்பட்ட அம்மக்கள் இது நிரந்தரமாக இருந்து விடும் என்ற எண்ணத்தில் இருந்திருப்பார்கள்...ஆனால்  உலகில் எதுவும் நிரந்தரமில்லை என்ற எச்சரிக்கையை அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்தி விட்டான். இது உலக மக்களுக்கு படிப்பினையாக உள்ளது.

எப்படியானாலும் மழை அல்லாஹ்வின் மிகப் பெரும் அருட்கொடையாகும். அதை நாம் வெறுக்க முடியாது. நமக்கு தேவையில்லை என்றாலும் நம்மை சுற்றி வாழும் மக்களுக்கு அவசியம் என்பதால் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். மழை அதிகமாகி அழிவை ஏற்படுத்துகிற போது...
"اللهم حوالينا ولا علينا"
அல்லாஹ்வே இம்மழை எங்கள் மீது நேராக பொழிய வேண்டாம்.
எங்களை சுற்றி(யுள்ள காடு கறைகளில்) பொழிய செய்வாயாக.
என்று துஆ செய்திட வேண்டும். ஏனெனில் மழையின் பாதிப்புகளை விட .வறட்சியால் ஏற்படும் பாதிப்புகள் மிகப் பெரியது. எனவே மேலே சொன்ன முறையில் துஆ செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது நமக்கு கடமையாகும்.
*********************************************
வெள்ள பாதிப்பால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் கேரள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வது நமக்கு கடமையாகும். அரசாங்கம், சமூக  அமைப்புகள்  ஜமாஅத்கள் சார்பில் செய்யப்படும் உதவிகள் ஒரு புறமிருக்க தனி மனித உதவியும் அவசியம்.

6قالَ - تَعالى -: ﴿ إِنَّ اللهَ مَعَ الَّذِينَ اتَّقَوا وَالَّذِينَ هُم مُحسِنُونَ ﴾ [النحل: 128]،

அல்லாஹ் இறையச்சமுடைய உபகாரம் செய்யும் நல்லடியார்களோடு இருக்கிறான்.

وقالَ - سُبحانَهُ -: ﴿ هَل جَزَاءُ الإِحسَانِ إِلاَّ الإِحسَانُ ﴾ [الرحمن: 60].
நல்லுபகாரத்திற்கான பிரதிபலன் நல்லுபகாரமன்றி வேறு உண்டா?

ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ

பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும். (-Sura Al-Balad, Ayah 17)

அல்லாஹ்வின் உதவி வேண்டுமா?
***************************************
அல்லாஹ்வின் உதவியை எல்லோரும் விரும்புகிறோம் ஆனால் அது கிடைப்பதற்கான வழியை தவற விடுகிறோம்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَـنْصُرُوا اللّٰهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ اَقْدَامَكُمْ‏ 
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.
(அல்குர்ஆன் : 47:7)

‌  وَلَيَنْصُرَنَّ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ  اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ‏ 
அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 22:40)

அல்லாஹ்வுக்கு  உதவி செய்வது எப்படி?
*******************************************
அவனுடைய மார்க்கத்திற்கும் அவனுடைய படைப்பிற்கும் உதவுவதுதான் அல்லாஹ்விற்கு நாம் உதவுவதாக கருதப்படும்.

6721- ٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي. قَالَ يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ. قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلاَنًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي. قَالَ يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ. قَالَ أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلاَنٌ فَلَمْ تُطْعِمْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِي. قَالَ يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ اسْتَسْقَاكَ عَبْدِي فُلاَنٌ فَلَمْ تَسْقِهِ أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي)).
5021. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), ”ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?” என்று கேட்பான். அதற்கு மனிதன், ”என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்என்று கூறுவான். மேலும் அல்லாஹ், ”ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லைஎன்பான். அதற்கு மனிதன், ”என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்என்று கூறுவான். மேலும் ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லைஎன்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், ”என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்என்று கூறுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்

وفي الحَديثِ: أنَّهُ - علَيه الصَّلاةُ والسَّلامُ - قالَ: ((ارحَموا مَن في الأرضِ يَرحَمْكُم مَن في السَّماءِ)) (رواه البخاري)

"பூமியில் உள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள் வானத்தில் உள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்"

، وقالَ - علَيه الصَّلاةُ والسَّلامُ -: ((والَّذي نَفسي بيدِه، لا يَضَعُ اللهُ رَحمَتَهُ إلا عَلَى رَحيمٍ))، قالوا: كُلُّنا يَرحَمُ، قال: ((لَيسَ بِرَحمة أحَدِكُم صاحِبَهُ، يَرحَمُ النّاسَ كافّة))
(رواه الطبراني)

"என் உயிர் எவன் கைவசமுள்ளதோ அந்த இறைவனின் மீதாணையாக அல்லாஹ் இரக்கமுள்ளவர்களின் மீதே தவிர யாருக்கும் கருணையை தருவதில்லை என்று நபிகள் நாயகம் ஸல் கூறியபோது ஸஹாபாக்கள் யா ரசூலல்லாஹ நாங்கள் எல்லோரும் இரக்கமுள்ளவர்கள் தாமே என்றார்கள். அதற்கு நபியவர்கள் உங்களுடைய தோழர்களுக்கு இரக்கம் காட்டுவது மட்டுமல்ல எல்லா மனிதர்களின் மீதும் இரக்கம் காட்டிட வேண்டும் என்று பதில் கூறினார்கள்.

عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: "الخلق كلهم عيال الله وأحب خلقه إليه أنفعهم لعياله "

هذا الحديث رواه البزار والطبراني في معجمه، ومعنى "عيال الله" فقراء الله ; فالخلق كلهم فقراء الله تعالى، وهو الذي يعولهم ; ويشهد لهذا الحديث ما رويناه في مسند الشهاب عن عبد الله بن عباس رضي الله عنهم، عن النبي صلى الله عليه وسلم أنه قال "خير الناس أنفعهم للناس"

எனவே பாதிக்கப்பட்டவர்கள் யாராயினும் இரக்கம் காட்டி உதவி புரிந்திட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு துஆ செய்திட வேண்டும்.
*******************************************
நம்முடைய பிரத்தியேகமான துஆக்களில் அவர்களை நினைவு கூற வேண்டும்.
குனூதே நாஜிலா ஓதி தொழ வேண்டும்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நமக்கு இதை நடைமுறைப்படுத்தி காட்டியுள்ளார்கள்.

மேலும் ஆபத்துகள் வராமல் பாதுகாக்கும் துஆக்களை ஓதிக் கொள்ள வேண்டும்.

وَعَنْ أَبي هُريَرةَ ، عن النَّبِيِّ قَالَ: تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ جَهْدِ الْبَلاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَماتَةِ الأَعْدَاء
ِ(متفقٌ عَلَيْهِ)

قوله: (جهد البلاء): الجَهد بالفتح هو كل ما يصيب المرء من شدة ومشقة، وبالضم ما لا طاقة له بحمله، ولا قدرة له على دفعه .

قوله: (درك الشقاء) الدَّرَك: اللحوق والوصول إلى الشيء، والشقاء، هو الهلاك، أو ما يؤدي إلى الهلاك، وهو نقيض السعادة .

قوله: (سوء القضاء): ما يسوء الإنسان ويحزنه، ويوقعه في المكروه من الأقضية المُقدَّرة عليه .

قوله: (شماتة الأعداء): فرحة الأعداء ببلاء يُصيب العبد([2]) .

الشرح:
كان النبي صلى الله عليه وسلم يُكثر من هذا الدعاء، وأمر به أيضاً فدلّ على شدّة أهمّيته، والعناية به لما احتواه من عظيم الاستعاذات، وشمولها، في أهمّ المهمّات، في أمور الدين والدنيا والآخرة .
அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
أعوذُ بِاللَّهِ مِنْ جَهْدِ الْبَلاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَماتَةِ الأَعْدَاء
" சிரமத்தை ஏற்படுத்தும் துன்பங்களிலிருந்தும், அழிவை அடைவதிலிருந்தும், கெட்ட விதிகளிலிருந்தும், எதிரிகள் ஏளனமாக பார்க்கும் பாதிப்புகளிலிருந்தும் பாதுகாப்பாயாக "
என்று அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள் . எந்பதாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செய்வதோடு அழிவுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள துஆக்களையும் கற்றுத் தந்துள்ளார்கள். முந்தைய சமூகங்கள் அழிக்கப் பட்ட வரலாற்று காரணங்களையும் கூறி நம்மை படிப்பினை பெறச் செய்தார்கள்.

٦٩ - عن عبدالله بن عمر - رضي الله عنهما - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: ((اللهم إني أعوذ بك من زوال نعمتك، وتحوُّل عافيتك، وفُجاءة نقمتك، وجميع سخطك)) (رواه مسلم)

அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக " யா அல்லாஹ்! உன் அருட்கொடை நீங்குவதிலிருந்தும், உன்
(நீ வழங்கிய) ஆரோக்கியம் மாறிப் போவதிலிருந்தும், திடீரென்று உன் வேதனை வருவதிலிருந்தும், உன்னுடைய  அனைத்து கோபங்களிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்"

ஆக்குபவனும் அழிப்பவனும் அல்லாஹ் ஒருவனே! எனவே அவனுக்கு அஞ்சி நடந்து கொள்வோம். நடந்து விட்ட காரியங்களிலிருந்து படிப்பினை பெறுவோம். இனிமேல் நடக்க இருக்கிற காரியங்கள் நலவாக அமைய அல்லாஹ்விடம் துஆ செய்து கொள்வோம்.
வல்ல ரப்புல் ஆலமீன் நம்மை முன்பிருந்தும், பின்னாலிருந்தும்,வலது புறமாகவும், இடது புறமாகவும், மேலிருந்தும், கீழிருந்து பூமியில்  இழுக்கப் படுவதை விட்டும் பாதுகாப்பானாக ஆமீன்...!

اللهم لا مانع لما أعطيت، ولا معطي لما منعت ،ولا راد لما قضيت، ولا ينفع ذا الجد منك الجد .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.